உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -Prologue
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – Prologue
வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, பருவமழை சரியான நேரத்தில் தென்னிந்திய மாநிலங்களை பெருமழையால் குளிர்வித்துக்கொண்டிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருந்த அந்த அழகான மலைக் கிராமம், முழுவதுமாக நனைந்து மண்வாசனையுடன் ரம்மியமாக ஒருபுறம் காட்சியளித்தாலும்…
ஏற்கனவே கொரோனா தொற்று பலமாக, பரவலாக பாதிப்பைத் தந்திருக்க, இம்மழையால் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவு, மக்களை வீட்டிலேயே முடங்கச்செய்தது. அதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது.
ஆங்காங்கே மலைச்சரிவில் அமைந்திருந்த ஒரு வீட்டில்… வீசி அடிக்கும் காற்றுக்கு இணையாக அலைபாயும் மனதுடன், குழந்தைகள் மழையில் குதூகலித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள் திவ்யபாரதி.
மழை மற்றும் இம்மலை என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது, அதை ரசிக்கும் மனநிலையில் சுத்தமாக இல்லை.
அதே நேரம், மும்பையில் ஒரு மருத்துவமனையில் அடித்துப் பெய்யும் அதே பருவமழையை ஆயாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜிவ் கிருஷ்ணன்.
மழையை ரசிக்கும் அவளின் முகமே நினைவுகளாய் மனக்கண்ணில் நிழலாடியது. புன்னகை அரும்ப காத்திருக்க, அதை தடுக்கும் விதமாக அவனுக்கு அழைப்பு வந்தது. அதில் அவன் கேட்ட செய்தியால் ஆயாசமான மனநிலை மாறி, அதிர்ந்து விழித்தான்.
யார் இவர்கள்?! பார்ப்போம்!!!
