அகம் புறம் – விமர்சனங்கள்
வணக்கம் தோழமைகளே!
இந்த பகுதியில் கடந்த வருடம் மார்ச் டு ஜூலை 2021 எழுதிய என் கதையான அகம் புறம் நாவலுக்கு கிடைத்த விமர்சனங்களை கம்பைல் செய்திருக்கிறேன்.
Writer Charithraa:
Preethi’s : அகம்-புறம்..!
—————————–
கதை எழுதுவதற்கும், காமத்தில் கூடுவதற்கும் என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?
ஒற்றுமை: இரண்டிற்குமே ஆவலுடன் கூடிய ஆரம்பமும், திருப்தியான ஒரு Climax-உம் தேவை. நடுவில் நடப்பதெல்லாம் சம்பந்தப்பட்ட இருவரின் ரசனையை பொறுத்தது. (I Mean, The Writer & the Reader)
வேற்றுமை: முன்னது-ஊரறிய உலகறிய செய்வதில்தான் ஆனந்தம். பின்னது-இரண்டே இரண்டு பேர் மட்டும்…, ஹிஹிஹி.!
இதை எதற்கு இப்போது..? ஒரு நிமிஷம்….!! ப்ரீத்தியை பற்றி சொல்லி விடுகிறேன். Then we will come back here.!
ப்ரீத்தி – நேரம் கிடைக்கையில் எல்லாம் எதையேனும் எழுதுவதை வழக்கமாக கொண்டவொரு சராசரி குடும்பப்பெண்.
She had a Story in her Mind.
“நாவல்தானே..? அதுல என்ன புதுசா இருக்கப்போவது? ஒரு ஹீரோ + ஹீரோயின், நடுல கொஞ்சம் காதல், கசமுசா சென்டிமென்ட் & குடும்பம், நடுல ஏதாவது சாவு, இல்லனா “ஆண்டிஹீரோ/ஆட்டிடியூட் ஹீரோயின்”னு ஸ்டீரியோ டைப்ல விஜய் டிவி கணக்கா இழு இழு இழுன்னு இழுத்து, ஆஹா..என்னவொரு நாவல் எழுதிருக்கோம்ல..ன்னு சுய அரிப்புக்கு சொறிஞ்சுக்கற கதையா இருக்கும்…!” என்போருக்கு….
Stop Stop Stop.! அதுவல்ல இது.
தான் கண்ணால் பார்த்த “மாற்றுப்பிறவி”களின் அசாதாரண வாழ்க்கைமுறை, அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சொல்லொணாத் துயர்கள் இவற்றையெல்லாம் கொஞ்சம் Compile செய்து, அதை வெறும் “சென்டிமென்டல் பேத்தல்” கதையாக கொடுக்காமல், அவர்களுக்கேற்படும் ஹார்மோன் பிரச்சனை முதற்கொண்டு பாலியல் இச்சை வரை அத்தனைக்கும் முறையான அறிவியல்/மருத்துவ ஆலோசனை பெற்று, நிறையவே வாசித்து, and on top of all, சில திருநங்கை/திருநம்பி-களோடு ஆத்மார்த்தமாய் பழகி, எல்.ஜி.பி.டி உள்பட நிறைய அறிவியல் உள்ளீடுகள், நிறைய தேடிப்பெற்ற உதாரண விஷயங்கள் என்று தனது “அகம்-புறம்” நாவலில் வடித்திருக்கிறார்.
அதுவா சிறப்பு…? ப்ச்ச்…Nah…!!
ஏற்கனவே இரு குழந்தைகைளின் தாயாயிருந்தும், மூன்றாவதாய் இக்கதைக்கருவை ஏழு மாதங்களாய் சுமந்து, and probably தனது கேரக்டர்களான பாலா,சத்யா,அருண்,கெளதம் இவர்களுடனே வாழ்ந்து, அந்த “மாற்றுப்பிறவி”களின் வலியை உலகுக்கு சொல்லும் முயற்சிக்காக தன் குடும்பத்துக்கான நேரம், குழந்தைகளுக்கான ஈடுபாடு, தனது மாதாந்திர/நிரந்தர உடல் உபாதைகள் என இவர் இழந்தது ஏராளம்.
அதுவா சிறப்பு…? ப்ச்ச்… Nah..Nah…!!
விக்னேஷ் கார்த்திக்கின் சமீபத்திய திரைப்படமான “திட்டம் இரண்டு-Plan B”இன் கதைக்கரு, காட்சியமைப்பு யாவும் (Especially, படத்தில் சூர்யா-கதையில் பாலா இவர்களது திருமண காட்சி) தனது அகம்-புறம் படைப்போடு ஒட்டியிருந்தும், சில இடங்களில் அதை தாண்டியும் இருந்தும், அதை வெளியில் சொல்லாது அடுத்த படைப்பில் இருக்கிறார்.
அதுதான் சிறப்பு.
விக்னேஷ் கார்த்திக்/ப்ரீத்தி இருவருமே மாற்றுப்பாலின சமூகத்துக்கான விஷயத்தை தெளிவாக, ஆணித்தரமாக, வேறு வேறு கதைக்களத்தில் வேறு வேறு Medium மூலமாய் சொல்லியிருக்கிறார்கள். திட்டம் இரண்டிற்காக விக்னேஷ் கார்த்திக்கை எவ்வளவு பாராட்டினோமோ(என் முந்தைய பதிவை பார்க்கவும்), அதே அளவும், கொஞ்சம் அதற்கும் முன்பும் ப்ரீத்தியையும் பாராட்டியிருக்க வேண்டும்.
நீங்கள் அவளை(ரை) பாராட்டிக்கொள்ளுங்கள். நான் கொஞ்சம் திட்ட வேண்டியிருக்கிறது.
Irrespective of Name/Reach/Gender, ஆகச்சிறந்த ஒரு விஷயத்தை எழுதவேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், தைரியமாய் எழுதித் தொலையுங்கள். அதை தைரியமாய் வெளி உலகுக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் நான் முதல் பாராவில் சொன்னது போல, நல்ல கதை எழுதுதல் என்பதன் ஆனந்தம், அதை ஊரறிய உலகறிய தைரியமாய் செய்வதில்தான் இருக்கிறது. தனியே செய்து ஆனந்தம் கொள்வதற்கு பெயர், வேறு.
அப்படியல்லாது..,
“இல்ல… மாற்றுப்பாலினம், மாதவிடாய், எல்.ஜி.பி.டி, பெடோ எதிர்ப்பு,மெண்டல் எபிலிட்டி, ஆன்டி-சூஸைடல், ஆல்டெர்னேட்டிவ் திங்கிங் இதப்பத்திலாம் எழுத ஆசைதான், ஆனா எதிர்ப்பு வருமோ? ஒத்துக்க மாட்டாங்களோ? வேணான்னு சொல்வாங்களோ?ன்னு பயமா இருக்கு..அதான் யார்கிட்டயும் அவ்வளவா வெளிப்படுத்தல…!” என்று அடுத்தவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால்…
உட்கார்ந்து “ஸ்ரீராமஜெயம்” தான் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.
அதையும் மீறி மற்றவர் சொல்லுக்கு பயப்படும்/செவிகொடுக்கும் படைப்பாளிகள், மாந்தருக்குத்தான், அன்றே எங்கள் அய்யா பெரியார் எழுதி வைத்து விட்டுப் போனார்.
அவர் சொன்னார்-
இவர் சொன்னார்-என
எதையும் நம்பி
அறிவிழந்து போகாது-
எவர் எதைச் சொன்னாலும்
அதையுன்
பகுத்தறிவால்
எண்ணிப்பார்ப்பாய்…!!
—————————————-
Writer Praveena Thangaraj:
கதை. பாலா-கௌதம் திருமணத்தில் ஆரம்பித்து, பாலா-சத்யா திருமணத்தில் நிறைவை தந்து இருக்கின்றார்.
சாரி நிறைய நாள் எடுத்துகிட்டேன் படிக்க. நிறைய இதுபோல அழுத்தமான நிறைவான கதைகளை படைக்க என் மனமார்ந்த
———————————————–
I read this story few weeks ago(until 2am). Had some interesting conversation with my youngest daughter who is a great supporter of LGBTQ. Indeed one of a “Not-To-Be-Missed_Story”
It is a very sensitive topic and one that needs a careful approach. I remember choking up tears in many places yet could not put down the laptop. Story was very gripping. I could easily see how much effort and research you would have put up to pen that story. I love stories with a different approach or handling, one that leaves a reader totally awe-struck yet satisfied. Best Wishes for writing more and more such compelling stories.
——————————————
கதை!!!..சாதாரண கணவன், மனைவி விஷயம் தானே என நாம் நினைக்கலாம்!!!.. ஆனால் உணர்வுகள் அவரவர் அனுபவித்தால் தானே தெரியும்!!!.. அப்படி ஒவ்வொருவரின் உணர்வுகளை சொல்லிய விதம் அசத்தல்!!!.. இருவேறு மனிதர்களை இணைத்த விதம்!!!.. ரயில் நிலையக் காட்சியில் சொல்லிய நிதர்சனம், உணர்வுகள் மனதை கனக்க செய்தது!!!… திக் திக் நிமிடங்கள் கதை என்பதை மறந்து அவர்களுக்காக கடவுளிடம் வேண்டவும் வைத்தது!!!.. இருவரின் வலிகளையும், வாழ்வின் நிலையையும் பகிர்ந்து கொண்ட காட்சிகள்!!.. இன்னும் அந்த காட்சிகள் கண்முன் நிற்பது போன்ற உணர்வு!!!.. அவர்களின் வாழ்வில் ஒரு நாள் என்பதே எவ்வளவு போராட்டம், ஏக்கம் என்பதை சொல்லும் வரிகள் அபாரம்!!!… சத்யாவின் கடல் நீரில் கால் நனைக்கும் ஏக்கம் சொன்ன இடம் கண்ணீரை தடுக்க முடியவில்லை!!!… செந்தில் போன்ற மனிதர்களின் செயல்கள், சொற்கள், பார்க்கில் குழந்தையின் தாயின் வார்த்தைகள், டெலிபோன் பூத் அருகே நின்ற மனிதர்கள் கிண்டல்கள், துணிக்கடைக்கு சென்ற போது பார்த்த பார்வைகள் என அனைத்தும் நமக்கு சாதாரணமாக தெரியலாம்!!!.. அவர்களை பார்த்துவிட்டு, சொல்லிவிட்டு நாம் கடந்து சென்றுவிடலாம்!!.. மறந்தும் விடலாம்!!!.. அதன் பின்னான அவர்களின் உணர்வுகள், விரக்திகள், வாழ்வையே வெறுக்கும் நிலை என அனைத்தும் உணர்த்திய விதம் சொல்ல வார்த்தைகளே இல்லை!!!.. தனக்கு வரும் மாற்றங்களை நினைத்து அவர்களே குழம்பி இருந்த நிலையில் அவர்களுக்கு நடந்த துன்பங்களும், துயரங்களும் எத்துனை கொடூரமானவை!!!! அதுவும் அந்த மருத்துவரை நினைத்து சிரிப்பதா??.. அழுவதா???… கோவம் கொள்வதா தெரியவில்லை!!!… அந்த புரோக்கர் போன்ற மனிதர்கள் வாழவே தகுதியற்றவர்கள்!!!.. இவர்களை போன்றவர்களுக்கு மஞ்சுமாவின் பாதுகாப்பும், ரூபினியின் உறுதுணையும், அருண் போன்ற ஆத்மார்த்த நட்புகளும் கிடைப்பது வரமே!!!.. ரூபினியின் சேலை வாங்கி கொடுக்கும் அன்பு, சத்யா மீதான உரிமையான கோவங்கள் அழகு!!!.. மஞ்சுமாவின் அன்பும் அசத்தல்!!!!… எந்நிலையிலும் விட்டுப் போகாத அருணின் நட்பு பிரமிக்க வைத்தது!!!… எத்துணை போராட்டங்களிலும், துயரங்களிலும், மனம் தளர்ந்த போதிலும் அவர்களின் விடாமுயற்சியும், மன உறுதியும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. அவர்களின் பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அவர்களை பற்றிய, அவர்களுக்கான பல தகவல்கள், சமூகத்திற்கான பல விழிப்புணர்வையும், மருத்துவ, அறிவியல் ரீதியான தகவல்களையும் கதையின் போக்கில் சொல்லிய விதத்தில் எங்கும், எதிலும் கதையின் போக்கும், சுவாரஸ்யமும் குறையவில்லை!!!.. கனமான விஷயங்களையும் விடாமல் ஆர்வத்தோடு படிக்க வைக்கும் உங்களின் எழுத்து நடை அபாரம்!!!… உணர்வுகளை சொல்லும் பல வரிகள் அபாரமாக இருந்தது!!!.. அதுவும் நிதர்சனத்தை சொல்லும் வரிகள் அசத்தல்!!!.. இப்படி ஒரு கதைக்கருவை எவ்வித தொய்வும் இன்றி ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்டு சென்ற விதம் கதையோடு ஒன்று வைத்து கதைமாந்தர்களோடு வாழவும் வைத்தது!!!…கடைசிக் காட்சி அவர்கள் வாழ்வில் மட்டுமில்லாது அவர்களை போல் ஏங்கும் அனைவரின் வாழ்விலும் நினைவாகவே ஆசை!!!.. உணர்ந்தவை அனைத்தையும் சொல்ல முடியலை!!!.. ஆனால் கதையின் என்றும் நினைவில் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!… இக்கதையை படித்த பின் எனக்கு தோன்றியது, கொடுப்பதனால் நாம் பெரியவர்களும் இல்லை, வாங்குவதால் அவர்கள் சிறியவர்களும் இல்லை!!!.. அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழவிடாமல் பார்வைகளாலும், சொல்லாலும், செயலாலும் செய்யும் பாவத்திற்க்கான பிராயச்சித்தமே அவை(இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)!!!. இன்னும் இதுபோன்ற பல அருமையான படைப்புகள் படைக்க வாழ்த்துகள் கா
Murugesan Laxmi
சகோதரி. எனக்கு தெரிந்த வகையில் தமிழில் திருநம்பி, திருநங்கையை ஹீரோ – ஹீரோயினாக எழுதிய முதல் கதை என நினைக்கிறேன். ( வேறு கதைகள் உண்டா? )
சகோதரி ப்ரீத்தி S.கார்த்திக் அவர்களுக்கு,
திட்டம் இரண்டு, அகம் புறம் இரண்டிலும் ஒற்றமை உள்ளதாக சில நண்பர்கள் சொன்னார்கள் என்ற தன்னிலை விளக்க பதிவு ஒன்று போட்டு இருந்தீர்கள். ஒரு விளக்கம் தரனும் என நினைக்கிறேன்.
நண்பர்கள் எப்படி அப்படி சொன்னார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் இரண்டு படைப்பையும் சரியாக கவனிக்கவில்லையோ என்ற கவலை வருகிறது. முதலில் திட்டம் இரண்டில் படைப்பாளியின் தோல்வியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கதாநாயகியின் மேல் தோழமையாக இருந்தவள், அவள் மேல் திடீர் என காதல் கொண்டு, அவளை அடைய ஆணாக மாறுகிறாள். அங்கே அவளுடைய உணர்வை படிபடியாக சொல்ல தவறியுள்ளார் இயக்குநர். அதேபோல் திடீர் என திருநம்பி உணர்வு வராது. பிறப்பில் இருந்து வளர வளரவே அந்த உணர்வு பலப்படும். படத்தில் திடீர் என உணர்வு வருவது, இயக்குநரின் புரிதல் இன்மையை காட்டுகிறது. படத்தின் முடிவை சரியாக சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, முடிவு அதில் நாம் தலையிட கூடாது என ஜால்ஜாப்பு முடிவை தந்து இருப்பார். அங்கே ஹீரோயின் மார்க்கெட், படத்தின் வெற்றி, தயாரிப்பாளரின் வற்புறுதல் என எதோ குறிக்கிட்டு உள்ளது. ஆனால் உங்களின் அகம் புறம் நாவல் வேற விதம். முடிவை மிகவும் தெளிவாக சொல்லி விதத்தில் உங்கள் படைப்பின் மேல் இருந்த நம்பிக்கை மற்றும் புரிதல், அதற்கான தேடல் என உங்கள் உழைப்பை பாராட்டவேண்டும். மற்றபடி இரண்டு விஷயத்தில் கொஞ்சமே ஒற்றுபோகிறது. 1. நாவலின் துணை பாத்திரங்களான அருண் – ரூபிணி திருமணத்தை முடித்து இருக்கலாம். அவர்களின் தனிப்பட்ட முடிவு என சொல்லியுள்ளீர்கள் ( ஒருவேளை இவர்களை தனி நாவலாக எழுத எண்ணமா? சகோ). மற்றபடி டிரிமெண்ட் சற்றேசற்று ஒற்று போகிறது. ( உலக முழுவதும் இதானே டிரிமெண்ட் வரும். அங்கேயும் உங்கள் விளக்கம் அருமையே). மற்றபடி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் சகோதரி. படைப்பாளியின் முழுபுரிதலோடு படைக்கப்பட்ட நாவல் அகம்புறம் நாவல் என்பதை தெளிவாக சொல்லமுடியும். ஆகையால் எந்த கலக்கமும் தேவையில்லை என்பதே என்(ங்களின்) எண்ணம்.
வாழ்த்துகள்
சகோதரி.
இந்த கதைக்கு நீங்கள் போட்ட உழைப்புக்கு மிக பெரிய பாராட்டுக்கள்.. மேலும் இது போல நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்
..👏🏻👏🏻👏🏻💐💐
மனதை மிகவும் பாதித்த கதை.. வெளியே வரமுடியவில்லை..
Romba nalla irunthuchu sis story.vithyasamana kathai kalam miga arumai.solla varthaigal ilai . Preethi அவர்கள் எழுதிய கதை. வித்தியாசமான கதை களம். மனதை தொட்ட கதை. Pl try it friends.
Saranya Geetha
கதை பெயர்: அகம் புறம்
நாவலாசிரியர்: Preethi S Karthik
(இந்த கதையை படிக்க தூண்டியது Jeya Lakshmi Karthik அக்கா review தான்.. ரொம்ப நன்றி கா😍😍😍)
முதலில் இப்படியொரு அருமையான படைப்பை எழுதியதற்கு நன்றிகள் அக்கா😘😘😘😘. கதையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. ❤️❤️❤️❤️அவ்ளோ உண்ரவுபூர்வமான கதை. திருநங்கைகள் (ம) திருநம்பிகளுக்கு இந்த சமூதாயத்தில எவ்ளோ வலியோடு வாழ்க்கையை கடந்து வராங்க அப்படினு பல உண்மை தகவல்களை வைச்சு சொல்லி இருந்தீங்க.. படிக்க படிக்க எதோ ஒரு வலி..💔💔💔💔ஏன் சமூதாயம் இப்படி இருக்குனு ஒரு பிம்பம்..😣😣 இந்த கடவுள் ஏன் இப்படி படைத்தாருனு ஒரு அதங்கம்🥺🥺🥺🥺 எனக்கு இருந்தது.
சத்யா, பாலா கதாபாத்திரம் வழியே அவர்களின் உணர்வுகள்..☺️அவர்கள் கடந்த வலிகள்..😣அவர்களுக்கு ஒரு வாழ்வு வேண்டும் என்ற கருத்தை🤩 என அனைத்தும் அழகாக வெளிபடுத்தி இருக்கிங்க..🥰🥰🥰🥰
அருண்😎 அந்த கேர்கடர் ரொம்ப பிடிச்சிருந்தது. பாலாவுக்காக அவன் செய்த உதவிகள்😀.. அவ என்னவென்று புரியாமல் தவிக்கும் போது பக்கபலமாக இருந்தது🙂🙂.. எல்லாம் அருமை..😘😘😘
அப்புறம் ரூப்ஸ்(ரூபினி)😍😍 இந்த கேரக்டரால தான் கொஞ்சம் என் அழுகை மட்டுபட்டதுனு சொல்வேன்😁😁😁.. அவ படபடப்பு பேச்சா இருக்கட்டும்.. அருணோடு சண்டை போடுறது எல்லாம் ரொம்ப பிடித்தது.😚😚😚😚😚
கௌதம்🧒 நீங்க சொன்ன மாதிரி அவன் நல்லவனும் இல்வை கெட்டவனும் இல்லை..😏 அவனின் நிலை அப்படி அவனை செய்ய தூண்டியது☹️☹️. அவன் பாலவின் மருத்துவ கனவை மீண்டும் நினைவபடுத்தியது அருமை👍👍👍👍..
இந்த கதை படிக்கிறவங்க ஒவ்வொரு மனசுலேயும் ஒருவித தாக்கத்தை கண்டிப்பா ஏற்படுத்தும்னு நம்புறேன் 😊😊😊😊.. மிக மிக உணர்வுபூர்வமான சமூக கதை😎😍😍😍😍.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்அக்கா..❤️❤️❤️❤️❤️ இன்னும் இது போன்று பல படைப்புகளை தொடர்ந்து எழுதுங்கள்.. 💕💕💕💕💕💕
(முடிந்தால் கதையை வாசிச்சு பாருங்க அருமையான படைப்பு..🤗🤗)
நன்றி
சரண்யாகீதா❤️.
—————————————–
Chellam Zarina
செம யான கதை வித்தியாசமான கரு /தளமும் கூட Info வேற லெவல்.
Thank u ma.
பிரியா செல்வன்
Super sissy.. Indha story ku matum evlo research pannirupinga.. Nama mentality ah neraya mathikanum avanga feelings ah ela adhe unarvoda solirukinga over all super story sis. Next story ku waiting 😍
Bamini Arunachala Kani
அருமை..
கனவா…? நிஜமா…? என்று கேட்டு… முடிவு வாசகர் மனம் போல….என்பதற்கு வாசகியாய் எனது கருத்து….. (மருத்துவ முறைகள்) சாத்தியமெனில் அது நடக்கட்டும். நாமும் அதை நிஜம் என்றே நம்புவோம். ஆம்…அது நிஜம் தான்…நிஜமே தான்
இதில் எங்கே சமுதாய சீர்கேடு….சீர் என்று கூட சொல்லலாம். அவர்கள் குடும்பம் குழந்தை குட்டி என்று இயற்கையான், இயல்பான வாழ்க்கை வாழ்ந்து சமுதாயம் சீர் அமைய செய்வார்கள்.
Devi Raj
திருநங்கைகளை பற்றி கதைகளில் படித்து தான் தெரியும் அதன் பின்பு என் பார்வை மாறி விட்டது இப்ப திருநம்பி பற்றி உன் கதை மூலம் தான் தெரியும் வாழ்வில் அவர்கள் படும் துயரம், போராட்டம் மனதுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு இந்த பிறப்பில் அவர்கள் மீது என்ன தப்பு நாம் வாழ்த்தாவிட்டாலும் ஏசாமல் இருக்கலாமே இவர்களுக்கு உதவ எனக்கு சான்ஸ் கிடைத்தால் கட்டாயம் செய்வேன் இது மட்டுமே என்னால் முடிந்தது
Thadsajini
வாழ்க்கையில் போராட்டங்களை சந்திப்பவர்கள் மத்தியில் போராட்டமே என்பதையே வாழ்கையாக வாழ்பவர்களை இந்தச் சமூகத்தில் இருக்கும் நாம் இன்னும் இன்னும் அவமானத்தையும் வலியையும் பட்டினியையும்தான் கல்வி மறுப்பையும் இப்படிப்பட்டவையைதான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.யாராக இருந்தாலும் பட்டறிவு இருந்தாலும் கல்வியறிவு மிகமிக முக்கியம் .அது எப்போதுமே மூன்றாவது கையாக கூட வரும் வந்து அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவும்.என்னை பொறுத்தவரை மூன்றாவது பாலினம் என்பதே கிடையாது மனிதர்களாக பிறந்துவிட்டால் அவர்கள் ஆண் அல்லது பெண் பாலினம் தான்.சில உடற்கோளாறால் உடலில் மாற்றம் வந்தாலும் அவர்கள் இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் வருகிறார்கள்தானே பிறகு ஏன் அவர்களை மூன்றாவது பாலினம் என்று சொல்லிப்பிரித்து ஒதுக்கவேண்டும்.மாற்றங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.பிறப்பில் யாரும் யாரையும் விட உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது அவர்களின் நடத்தைகளே அதனை தீர்மானிக்கும்.இந்நாவலில் அழகான கதை மாந்தர்கள் அழகு என்பதைவிட மனிதர்களை புரிந்தகொள்ளக்கூடிய நபர்கள் அருண் சத்யா பாலா பாலா அம்மா அத்தை ரூபிணி போன்றோர் இருக்கிறார்கள் .இப்படிப்பட்ட மனிதர்களைக்கொண்ட ஆரோக்கியமான சமூகம் உருவாகவேண்டும் என்பது என்னுடைய ஏன் பலருடைய அவவாக இருக்கும் என்று நம்புகிறேன்.மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் சமூகம் வேண்டும் அங்கே அவரவர்க்கேற்ப பணம் காசு பொருட்கள் இருந்தாலும் மற்றவரிடம் அன்பு புரிதல் இருந்தால் அழகான சமூகம் இருக்கும்.கதையின் முடிவில் கதைமாந்தர்களின் சந்தோசம் நிம்மதிபோல் எல்லோருக்கும் கிடைக்கணும் இது கனவாகவோ நினைவாகவோ இருந்துவிடக்கூடாது உண்மையில் இப்படி நடக்கவேண்டும் அதற்கு இந்தச்சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரும் முதலில் தங்களை தாங்கள் திருத்திக் கொண்டு வாழப்பழகவேண்டும்.ஒருத்தருக்கு உதவிசெய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் புதைகுழியில் தள்ளாமல் இருந்தாலே போதும் உலகம் உய்யும்.சமூக உணர்வை தூண்டக்கூடிய நாவல் அது இன்னும் உங்கள் எழுத்து நடையில் இன்னும் மெருகேற்றி அழகாக படைத்திருந்தீர்கள்.வாழ்த்துகள்
.
Mareeshvishal
Akka.. Super. Nerya vishayangala therijikiten thirunambikal pathi.. Itha elutha nenga evlo effort potrupenga really Hats off to you akka… Epavume unga stories ena romba rasikavaikudhu akka..
Radha Saraswathi
இது ஏன் கனவா இருக்கணும். நிஜமாவே இருக்கட்டும் இவர்கள் மாதிரி சேர்வதால் சமுதாயம் ஒன்னும் கெட்டுப்போயிராது. ஏற்கனவே இங்க நல்லா இருக்குற மனிதர்களாலயே சமுதாய சீர்க்கெட்டுதான் போயிருக்கு. இவங்களால ஒன்னும்ஆயிடாது.
VinithaPriya
Wowwwww..samma finishing sis..Last la sonathu kanavaga illama nijamagavae irukatum sis..Vaani character pola nijathulayum neraya peru irukanga sis..Status paathu pazhagura kootam,status ah pakum bothu avangaluku kurai nirailam oru matter eh illa… Arumaya mudichiteenga kadhaya..Ithukaga neenga panina researches and hardwork ku kudos👍👍👍..
Poornima Kannan
Excellent baby❤️❤️❤️ Indha thadava en mudivu Sathya pakarathu nijama mattum irukanum apdingarathuthan da coz ithu aanukkum ponnukkum vara Udal sarndha uravu apdingaratha thandi oru extraordinary relationship itha samoogam accept panuthu panala athu vera but ithu oru azhagana Kadhal indha story ipdi mudinjathan ivanga relationship indha society ku oru nalla example ah iruku
Kayalvizhi Ravi
பாலா சொல்வது தான் புறம் கூறுபவர்களை ஒதிக்கி வைத்து நமக்காக நாம் வாழ்ந்தால் உண்டு. சத்யா தாய்மை மனதை புரிந்து அவளுக்காக தன்ஆன்மையை விட்டு கொடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது நிஜமாக இருந்தால் தான் சமுதாயத்தில் அவர்களும் ஒர் அங்கம். நல்வாழ்த்துகள் பா!👍👍👍👏👏👏💐💐💐💐💐
Dharanibai Sainathan
இது உண்மை, மனது, இதயம் எல்லோருக்கும் ஒன்று தான். சிந்தனை தான் வேறு. ஆனால் உன்சிந்தனை சமுதாயபுரட்சியை தூண்டுகிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்
. எனக்கும் ஒரு ஆசை கால் ஊனமுற்றாலும் உலகையே வலம் வரவேண்டும், மகாசமுத்திரங்களில் கால் நனைக்க வேண்டும். ஓரளவு நிறைவேறுகிறது. சென்ற வருடம் பசிபிக், இந்த வருடம் அட்லாண்டிக். நம் இந்து மகா சமுத்திரம் நினைக்கும் போது கன்யாகுமரி சென்று வருவேன். கடவுள் கருணை உள்ளவர். காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை.