Preethi S KarthikShort Story

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ:

முன்னோட்டம்:

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. ஆண் தேவதைகளும் உள்ளனர் இந்த உலகில். தண்டனை கடுமையாக இல்லாவிடில் குற்றங்களை தடுப்பது சாத்தியமற்றது.

——

வெறிச்சோடி இருந்தது அந்த சாலை. நான் நடக்க முடியாமல் தள்ளாடினேன். கால்கள் தளர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு நொடியும் யுகங்கள் போல் நகர்தன. நான் எந்த இடத்தில் இருக்கிறேன். எங்கு சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி இங்கே வந்தேன். கூட துணைக்கு அந்த வெண்ணிலவு கூட இல்லையே இன்று.

இருட்டு என்றாள் பயம் தான் எனக்கு. அனால் இன்றுமுதல் என் வழக்கை இருட்டாகிவிட்டதோ. ஆக என் வழக்கை முழுவதும் பயத்துடன் கடக்க வேண்டும் அல்லவா. என்னுடைய இந்த நிலைக்கு யார் கரணம்? நானா?

சில மணி நேரம் முன்னர் வரை எப்படி குதூகலமாக இருந்தேன். என் கனவை நோக்கி சிட்டு குருவி போல் பறந்து கொண்டிருந்தேன். இப்போது? என் கனவு என் பெற்றோரின் கனவு எல்லாம் இந்த இரவில் கரைந்துவிட்டதோ. நான் எங்கே செல்லவேண்டும் இப்போது? மரணத்தை தழுவவா? இல்லை விதியை வெல்லவா?

மரணத்தை எட்ட என் மனம் ஒப்புமோ? என் பெற்றோரின் நிலை? நான் தான் அவர்கள் உலகம்.

விதி, இதை பற்று நான் யோசித்தது கூட இல்லை. யோசிப்பதற்கான தருணமும் வரவில்லை. ஆனால் இன்று என்னுடன் அதன் விளையாட்டு. அத்துடன் விட்டதா. என்னை வென்று விட்டதுபோல் ஒரு மாயை. விடமாட்டேன் என்னை வென்றதாக நினைக்கவும் விதியை நான் வெல்லாமல் விடமாட்டேன். துணிந்து எழுவேன். எழுந்து வெல்வேன்.

பாதை ஏன் என் கண்களுக்கு தெரியவில்லை. என்ன ஆகிறது எனக்கு. தலை சுற்றுவது போல் உணர்வு. நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் குருதி சுவடுகள். தள்ளாடினேன். இறைவா எல்லா வல்லமையும் எனக்கு தாராயோ. கால்கள் நிற்க முடியாமல் கீழே விழுந்தேன். கண்கள் மங்கியது. பாதி மயக்கம் போல் என்னை சுற்றி மங்கலாக தெரிந்தது.

ஏதோ ஒரு கார் சத்தம் அருகில் வந்து நின்றது. அய்யகோ மீண்டும் அவர்களோ? என்னிடம் எதுவும் மீதம் இல்லையே. இறைவா இந்த வெட்டவெளியில் நான் உன்னை கூப்பிடுவது கேட்கின்றதா. முன்னே நான் அழைத்தேன் என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்று என்று. நீ செவி சாய்க்கவில்லை. இப்போதாவது நீ கருணை காட்டுவாயோ?

யாரோ என்னருகில் பேசினார். “அண்ணா பாவம் என்னாச்சுனு தெரில. பக்கத்துல என் friend ஹாஸ்பிடல் இருக்கு. அதுல சேத்துடலாம்” என்று ஒரு குரல். அந்த இறைவன் குரலோ அது?

“எதுக்கு தம்பி நமக்கு இந்த வேலை. ஆபீஸ்ல தெரிஞ்சா பிரச்னை ஆயிடும். Night Shift வேற” மற்றொரு குரல். இது விதியின் குரலாகத்தான் இருக்க வேண்டும். என்னை மீண்டும் வீழ்த்த.

“இல்லனா. நான் பாத்துக்கறேன். மொதல்ல வண்டில ஏத்துங்க” என்று இருவரும் என்னை கைத்தாங்கலாக தூக்கினர். “தம்பி கீழாடை முழுதும் ரத்தமா இருக்கு”… “பார்த்தேன்னா. நம்மோட உதவி இப்போது இவங்களுக்கு மிகவும் முக்கியம்”

நீ தான் ஆண் தேவதையோ? அப்போது அந்த கொடியவர்கள் இருவரும் அரக்கர்களோ? அந்த தேவதை காரில் நான் கீழே விழாமல் பற்றிக்கொண்டிருக்க எனக்கு அரக்கர்கள் என்னை பற்றிக்கொண்டுதான் நினைவிருக்கு வந்தது. சிறுதூற பயணத்திற்கு பின் கார் நின்றது.

என்னை மருத்துவமனை உள்ளே stretcherறில் அழைத்துச்சென்றனர். அந்த தேவதை என்னருகே என்னுடன் வர நான் கைகள் கூப்பி “Thank you” என்றேன் வலுவற்ற குரலில்.

கூப்பிய கைகளை பற்றிக்கொண்டு “உனக்கு ஒன்றும் இல்லை. தைரியமா இரு” என்று என்னை அசுவாசப்படுத்துயது அந்த தேவதை. “போலீஸ்கு சொல்லிட்டயா” என்று மருத்துவர் தேவதையை கேட்க நான் மருத்துவரை பார்த்து கூப்பிய கையேடு “வேண்டாம் டாக்டர் ப்ளீஸ்” என்றேன் கண்ணீர் மல்க.

தேவையான மருத்துவ உதவிகளை செய்த பின் அந்த தேவதையை அழைத்த மருத்துவர் “Brutal Rape. ரெண்டு இல்லனா மூணு பேர். நீ கூப்பிட்டு வந்ததால போலீஸ்ட்ட சொல்லல விக்ரம்” …  “அந்த பொண்ணு போலீஸ் வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் அவங்க வீட்ல inform பண்ணிடறேன். Thanks, நண்பா for your help” இருவரும் பேசிமுடித்து சிறிது நேரத்தில்

என் அப்பா அம்மா வந்தனர். உலகமே இருண்டது போல் இருவரும் அழுதனர். என் உறுப்புகளில் சில ஸ்டிட்ச்கள். என்னால் முடியவில்லை இருப்பினும் எழுந்தேன். “நீங்க அழுகாதீங்க. நான் இன்னிக்கி NEET நல்லா எழுதிருக்கேன். கண்டிப்பா டாக்டர் ஆவேன்”

என்னையே கண்ணிமைக்கலாமல் பார்த்த இருவரும் என்னை தழுவி அணைத்தனர். என் தேவதை விக்ரம் கதவருகே நின்று என்னால் முடியும் என்பது போல் கைதட்டிக்கொண்டு.

நாட்கள் கடந்தன. வருடங்கள் கடந்தன. என்னுடைய இன்ப துன்பங்களில் அம்மா அப்பா மற்றும் விக்ரம் என் உயிர் தோழன் போல். நான் மிகவும் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது.

“மருத்துவ நண்பர்களே/கல்லூரி மாணவர்களே. உங்கள் அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நாம் எதற்கு இங்கு கூடியுள்ளோம்?”

“சமீப கருத்துக்கணிப்புப்படி நம் நாட்டில் ஒரு நாளிற்கு ஐந்துபேர் கற்பழிக்கப்படுகின்றனர். இது வெளியே வந்த சம்பவங்கள். வெளிவராமல் இன்னும் பல”

“ஏழு வருடம் முன்பு நானும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அனால் அந்த ஒரு நாள் என் வாழக்கையை புரட்டிப்போட்டது. Yes, I was a victim of rape and a survivor”

“என்னால் எழுந்து நிற்கமுடிந்தது அந்த துயரத்தில் இருந்து. அனால் சில பேரால் வெளிவரமுடியாமல் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். என்னால் அவர்களுக்கு என்ன உதவ முடியும் என்று யோசித்த பொது உதித்த எண்ணம் தான் இந்த Helpline. பாதிக்க பட்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்க என்னால் முடிந்த ஒரு உதவி.”

என்று நிறுத்திய பொது “உங்களை சீரழித்தவர்களை சும்மா விட்டுவிட்டீர்களா” என்று ஒரு குரல் கூட்டத்தில் இருந்து. அதற்கு நான் “கடவுள் தேவதை வடிவில் வந்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை தருவார். நான் அதை நம்புகிறேன்” என்று விக்ரமை பார்த்து சின்னதாக நன்றி என்பதுபோல் புன்னைகைத்தேன்.

சிறிது நேரம் பேசிமுடித்துவிட்டு கூட்டம் களைந்த பின் புறப்பட்டேன் என் தேவதையுடன்.

என் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு “நம்மால் முடிந்தவரை கண்டிப்பாக மற்றவர்களுக்கு உதவுவோம்” என்றார். என் நினைவு அப்படியே பின் நோக்கி சென்றது. என்ன ஆயிற்று அந்த அரக்கர்களுக்கு. ஆண்டவன் தேவதையை அனுப்பினானா?

ஆம், விக்ரமின் உதவியுடன் அந்த இருவரையும் நான் கண்டுகொண்டு அவர்களை மயக்குவித்து செய்தேன் “Castration”. என்னால் முடிந்தால் மற்ற பாதிக்க பட்டவர்களுக்கு இந்த உதவியை செய்வேன் என் தேவதையுடன்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved