Marandhupo en maname1-12
மறந்துபோ என் மனமே(1) – 12
வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்து மங்களகரமாக இருந்தாள் நந்தினி.
அவனுக்காக அவள் காத்திருந்தாள். அவன் எப்போதும் போல் ஆபீஸ்க்கு ரெடி ஆகி கீழே வந்தான்.
“ஹாப்பி தீவாளி” என்றாள் நந்தினி. அவளை பார்த்தவுடன் சற்று அசந்தேபோனான் என்று சொல்ல வேண்டும். புடவையில் சிலைபோல தெரிந்தாள் அவனுக்கு.
ஒரு நொடி அவளை ரசித்ததோடு அவன் தன்னிலைக்கு வந்தான்.
“ஓ இன்னிக்கி தீவாளில… ஹாப்பி தீவாளி” என்றான். “இந்தாங்க ஸ்வீட் செய்தேன்” என்று கொடுக்க அவன் வாங்கிக்கொண்டு ஓ, நீ செஞ்சயா” என்று கேட்டுக்கொண்டே சாப்பிட்டான்.
“ஹ்ம்ம்” என்றாள் அவள். “நல்லா இருக்கு… எதுக்கு உன்ன கஷ்டப்படுத்திக்கிட்டு. இண்டியன் ஸ்டோர் போன கிடைக்கும்ல. பட் இது இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கு” என்று சொன்னவுடன் அவளுக்கு ஒரே பூரிப்பு.
சாப்பிட்டு முடித்தவுடன் ஆஃபீசிற்கு புறப்பட்டான். “இங்க கோவில் ஏதாவது இருக்கா?” என்று கேட்டாள். இருக்கு பட் வீக்டேல எனக்கு கொஞ்சம் கஷ்டம்” என்று சொன்னான். அவள் எதுவும் பேசவில்லை.
—–
“காரை கிளப்பி ஆஃபீஸிக்கு புறப்பட்டான். கடைசியா நான் வீட்டில தீபாவளி கொண்டாடி 2 வருடங்களுக்கு மேல இருக்கும். எல்லாம் பிடிச்சுருந்து நடந்திருந்தால் இது எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி. வாழ்க்கை எப்படி போகுமோ என்ற வருத்தம் இருந்தாலும் அவ அத வெளிய காட்டாம நடந்துக்கறா. ஒரு டைம் கூட என்னோட பழையவாழ்கைய சுட்டிக்காட்டினதில்ல” என்று நினைத்துக்கொண்டான்
—–
ஸ்வீட் எடுத்துக்கொண்டு ஆண்ட்டி வீட்டுக்கு சென்றாள் அவர்களுக்கு கொடுக்க. காலிங் பெல் அடித்தவுடன் கதவு திறந்தது. அங்கே க்ரிஷ் நின்றான்.
“ஹே க்ரிஷ் ஹாப்பி தீவாளி” என்று ஸ்வீட் கொடுக்க “ஹாப்பி தீவாளி Nandy” என்றான் ஸ்வீட் எடுத்துக்கொண்டே.
“ஆண்ட்டி எங்க?” என்று கேட்க. “அம்மா அப்பா கோவிலுக்கு போயிருக்காங்க” என்றான்.
“ஓ அப்படியா? நீங்க போகலையா?” னு அவள் கேட்க “என்னால சீக்கரமாலாம் எந்திரிக்க முடியாது. அதான் மண்டே பொய்க்கலாம்னு விட்டுட்டேன்” என்றான்.
“சூப்பர். நீங்க மண்டே ஆஃபீஸ் பார்ட்டிக்கு போகலையா” என்று கேட்டாள். “எனக்கு அங்க யாரையும் பெருசா தெரியாது. அதுவில்லாம இப்போ போறதுக்கு இஷ்டம் இல்ல” என்றவன் “நீ போறயா பார்ட்டிக்கு?” என்று கேட்டான்.
“அங்க எல்லாரும் புதுசு எனக்கு. நான் போய் என்ன பண்ணப்போறேன்? அவரு கூப்பிட்டா பாப்போம்” என்றாள்.
“ஆல்ரைட். நீ அங்க போலனா, என்கூட கோவிலுக்கு வந்துடு” என்று சொன்னான். “ஹ்ம்ம் பாப்போம். சரி ஆபீஸ் இன்னைக்கு போலயா?” என்று கேட்டாள்.
“இல்ல Nandy. இன்னிக்கி எனக்கு வீக் ஆஃப்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன் ” இரு, நான் உனக்கு குடிக்க ஜூஸ் எடுத்துட்டுவரேன்” என்று சொல்லிட்டு, எடுத்துவந்து கொடுத்தான்.
“நாளைக்கி ப்ரோக்ராம்க்கு ப்ரிப்பர் பண்ணிட்டயா நாங்கெல்லாம் உன்னோட டான்ஸ் பாக்க வெயிட் பண்றோம்” என்று சொல்ல “ப்ரிப்பரேஷன்லாம் பெரிசா இல்ல. கொஞ்சம் நாள் முன்னாடி, ஆஃபீஸ்ல ஒருடைம் டான்ஸ் ஆடினேன். அதே பாட்டுக்கு இப்போவும் ஆடலாம்னு இருக்கேன்” என்றாள்.
“ஓ நீ கல்யாணத்துக்கு முன்னாடி வேல பாத்துட்டு இருந்தயா? அப்படின்னா உனக்கு இங்க ரொம்ப போர் அடிக்குமே?” என்று கேட்டான்
“ஐயோ கரெக்ட். ஃபீலிங் டெரிபிலி போர்ட்” என்றாள் “என்ன கைன்ட் ஆஃப் ஜாப் அது?” என்று கேட்க “நான் கார்பொரேட் பைனான்ஸ்ல ஒர்க் பண்ணேன்” என்றாள்.
“ஓ சூப்பர், இங்கயும் வேலைபாக்கணும்னு இருக்கா?” என்று அவன் கேட்க “பட் அதுக்கு ஏதோ ப்ரோசிஜர் இருக்காமே. EAD சம்திங். அவர தொந்தரவு பண்ணவேண்டாம்னு விட்டுட்டேன்” என்றாள்.
“தட்ஸ் ரைட். யு நீட் EAD டு ஒர்க். யோசிப்போம். அதுவுமில்லாம இங்க பைனான்ஸ் கோர்ஸ் பண்ணனும்னு நினைக்கறேன்” என்று சொல்ல “ஹ்ம்ம். பாப்போம் நடக்கறது நடக்கட்டும்” சொல்லிட்டு கொஞ்ச நேரம் இருவரும் பேசிவிட்டு அவள் வீடு திரும்பினாள்.
——-
சனிக்கிழமை சாயங்கால நேரம் ஆக இருக்க, அனைவரும் கம்யூனிட்டி ஹாலில் இருந்தனர். நந்தினி ஆண்ட்டி பக்கத்திலேயே இருந்தாள். டார்க் ப்ளூ அனார்கலி மற்றும் பெரிய கம்மல் அணிந்து ஒரு தேவதையை போல் இருந்தாள்.
வாசலை பார்த்துக்கொண்டே ராம் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தாள். க்ரிஷ் அருகில் வருவதை பார்த்த பார்வதி, “வாடா இங்க இரு நான் போய் ரெஃப்பிரேஷ்மென்ட் வந்துடுச்சான்னு பாத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார்.
“ஹே கோர்ஜியஸ் (gorgeous). ரொம்ப அழகா இருக்க இன்னிக்கி” என்று அருகில் வந்து க்ரிஷ் சொல்ல சிறிதாக புன்னகைத்து ” தேங்க யு ” என்றவள் திரும்ப வாசலை பார்த்தவண்ணம் இருந்தாள். “லூக்கிங் ஃபோர் ராம்?” க்ரிஷ் கேட்க, “ஹ்ம்ம், அவரு வரேன்னு சொல்லிருந்தாரு. அதான் பாத்துட்டு இருக்கேன்” என்றாள் ஆர்வமாக.
அவள் அவன் வருகைக்காக ஆவலாக இருந்ததை புரிந்து கொண்ட க்ரிஷ், “சரி நான் ஒரு ரெண்டு நிமிஷத்துல வரேன் என்று சொல்லிவிட்டு வெளியே போய் போன் எடுத்து டயல் செய்தான். “ராம், எங்க இருக்க?…….. எப்போ ஃபங்க்ஷன்னுக்கு வர?…….. வாட்???……… உங்க உனக்காக அவ வெயிட் பண்ணிட்டு இருக்கா. இது ரொம்ப தப்பு ராம்………. டாம்மிட் ….” போனை வைத்துவிட்டு கோவமாக உள்ளே சென்றான்.

Sema sema krish hero vangiduvan polarukey preethi😆🥰
Hehehehe 😄 Part of MEM has more to talk about Krish dear🤩🤩 He is more likable than Ram 😄