Maranthupo en maname 19
மறந்துபோ என் மனமே(1) – 9:
அவன் போன் எடுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து செல்ல, என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டே இருந்தாள் நந்தினி.
“அங்க இருந்தா கூட ஏதாவது பண்ணலாம். இங்க யாரையும் தெரியாது எல்லாம் புதுசு. யாரை குறைகூறுவது?”
“இங்க இருப்பது ஒரு வகைல நல்லது அம்மாவுக்கு என் வாழ்க்கை இப்படி ஆனது தெரியாமலே இருக்கட்டும்”
“அவளாவது அங்க நிம்மதியா இருக்கட்டும். என்னவானாலும் அம்மாவுக்கு தெரியாம பாத்துக்கணும்” என்று பல சிந்தனைகளுடன் எப்போது தூங்கினாள் என்று தெரியாமல் காலை தாமதமாக விழித்தெழுந்தாள் நந்தினி.
ஃபிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தபோது மாடியில் அவன் அறை மூடி இருந்தது. இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று டீ போட சென்றவளை காலிங் பெல் முதலில் அழைத்தது. கதவை திறக்க வெளியே ஆண்ட்டி.
“என்ன ரெடி ஆகீடீங்களா. எங்க அவன்?” என்று வீட்டினுள் வர “அவர் இன்னும் தூங்கறார் போல” என்றாள் நந்தினி.
“தூங்கறாரு போலயா??? ஏன் உனக்கு தெரியாதா? எங்க தள்ளு” என்று சொல்லிட்டு ரூமிற்குள் செல்ல “அவரு மேல ரூம்ல இருக்காரு” என்றாள் நந்தினி.
இருவரும் தனியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டு ஒரு அனுதாப பார்வை பார்த்தவர் “சரி நீ போய் அவனை கூட்டிட்டு வா” என்றார்.
“அதுவந்து நான் போய்…” என்று நந்தினி தயங்க “என்ன தயக்கம். கோ அன்ட் வேக் ஹிம் அப். லன்ச்சுக்கு ரெடி ஆகவேன்டாமா?” என்றார் பார்வதி சற்று அழுத்தமாக.
நந்தினி கதவை திறக்க அவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.
“ஓ அப்போ தூங்கலையா?” என்று நினைத்திக்கொண்டு சிறிதாக செரும அவன் திரும்பினான்.
“ஆண்ட்டி வந்துருக்காங்க. உங்கள வரசொன்னாங்க” என்று சொன்னதற்கு அவன் வருகிறேன் என்பது போல் தலையசைத்தான்.
அவள் திரும்பி செல்லும்போது “நான் உன்ன திரும்ப கூப்பிடறேன். நான் உன் கார் எடுக்க வரமுடியாதுன்னு நினைக்கறேன். ஆண்ட்டி லன்ச்க்கு அவங்க வீட்டுக்கு கூப்டுருக்காங்க” என்று சொல்ல,
சுஷீலாவா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு கீழே வந்தாள்.
“ஸாரி ஆண்ட்டி, நைட் கொஞ்சம் அசதியா இருந்துச்சு. கொஞ்ச நேரம் முன்ன தான் எழுந்தேன். ஒரு 15 மினிட்ஸ் குடுங்க. நாங்க வந்துடறோம்” என்றான்.
“ஏம்மா நீ ரெடி தான. அவன் மெதுவா வரட்டும். நீ வா” என்று அழைக்க, அவள் சற்று தயங்கியபடி அவனை பார்த்தாள்.
“அவன ஏன் பாக்கற? நீ வா” என்று சொல்ல அவள் “ஒகே ஆண்ட்டி” என்றாள்.
இருவரும் வீட்டுக்கு செல்ல, அங்கே ஒருவர் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க, “ஹி இஸ் விக்ரம். மை ஹஸ்பண்ட்”
“விக்ரம் ஷி இஸ் நந்தினி, ராம் ஓட வைஃப்” என்று அறிமுகம் செய்ய இருவரும் ஹலோ பகிர்ந்து கொண்டார்கள்.
“ராம் நல்ல உழைப்பாளி. அவனை ரொம்ப நாலா தெரியும் எனக்கு. ஹாப்பி மேரீட் லைஃப்” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைத்தார்கள்.
“சரி நீ வா நம்ம கிச்சன்ல போய் பேசுவோம்” என்று சொல்லி நந்தினியை அழைத்து சென்றார் பார்வதி.
“இங்க கிளைமேட் எப்படி இருக்கு, சென்னைல 20deg கம்மியா இருக்காதே” என்று பேச்சை தொடங்கினார்.
“ஆமா ஆண்ட்டி. கிளைமேட் கொஞ்சம் ட்ரய் தான் அங்க. இங்க ரொம்ப குளுருது. ஊட்டி கொடைக்கானல் விட குளுருது இங்க” என்று ஆர்வமாய் பேச ஆரம்பித்தாள்.
” நீங்க சென்னையா ஆண்ட்டி?” என்று கேட்டாள்.
“ஆமா. சென்னை ஆலந்தூர்ல வீடு. IIT ‘ல எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பண்ணேன்” என்று சொல்ல மிகைப்புடன் பார்த்தாள் நந்தினி.
“சூப்பர் ஆண்ட்டி. நீங்க ஒர்க் பண்ணீங்களா?” என்று வினவினாள் ஆர்வமாக.
“ஆமா இங்க வந்து கொஞ்ச நாள் விக்ரமோட கேட்டர்பில்லர்ல வேல பாத்தேன். ஃபேமிலி லைஃப்னு பிஸி ஆயிட்டதால போறத நிறுத்ட்டிட்டேன்” என்றார் பார்வதி.
“எனக்கும் ஒர்க் பண்ணனும்னு ஆசை. பட் இங்க எப்படினு தான் தெரில” என்று வருத்தமாக சொன்னாள்.
“இப்போதான் வந்துருக்க கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கெல்லாம். பிரஸ்ட் நீயும் ராமும் லைஃப் ஸ்டார்ட் பண்ணுங்க” என்று சொன்னவுடனே அவள் முகம் சுருங்கியது.
அதை உணர்ந்த பார்வதி டாபிக்கை மாற்றினார். “சரி உனக்கு வேறென்ன பிடிக்கும்?” என்று கேட்க “எனக்கு டான்ஸ்னா உயிரு. அனா பர் சியூ (pursue) பண்ணமுடில” என்று வருத்தத்துடன் சொன்னாள்.
“அப்படியா சூப்பர்! நம்ம கம்யூனிட்டில தீபாவளி செலிப்பிரேஷன்ஸ் நடக்கும். நீ டான்ஸ் ஆடுவியா” என்று கேட்டார்.
“அயோ நான் போய் எப்படி. இப்போ தான் வந்துருக்கேன்” என்று கூச்சப்பட, “ஹ்ம்ம் யு ஹவ் டு கம் அவுட் அஃப் யுவர் ஷய்நெஸ் (you have to come out of your shyness)” என்று சொல்லும்போது “பாரு பாரு” என்று கூப்பிட்டிகொண்டு கிச்சன் உள்ளே வந்த க்ரிஷ் நந்தினியை பார்த்தவுடன் அப்படியே நின்றான்.
