Maranthupo en maname1-10
மறந்துபோ என் மனமே(1) – 10:
“பாரு என்ன இன்னிக்கி ஸ்பெஷல் பாரு?” என்று கேட்டுக்கொண்டு கிச்சன் உள்ளே வந்த க்ரிஷ்
நந்தினியை பார்த்தவுடன் சற்று நின்றான். உடனே கவரும் முகம். இதுவரை அவன் அங்கே பார்த்திடாத லட்சணம்.
“வாடா” சொல்லி அவன் கற்பனை ஓட்டத்தை தடுத்தார் பார்வதி.
“நந்தினி, இவன் தான் என் சன் க்ரிஷ். டேய், ஷி இஸ் நந்தினி, ராமோட மனைவி” என்று சொல்லிமுடிக்கும் முன்
“வாட்….? ராம்’ஸ் வைஃப்? அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? Gosh!” என்று குழப்பமாக கேட்டான்.
நந்தினிக்கு சற்று சங்கடமாக இருந்தது. அதை உணர்ந்த க்ரிஷ் அவனைப்பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
“நான் க்ரிஷ். லா க்ராட் (Law grad). ராம் என்னோட நல்ல ஃபிரண்ட் பட் என்கிட்டே உங்க கல்யாணத்த பத்தி சொல்லல” என்று சொல்லும்போது ஹாலில் இருந்து சத்தம்.
“பார்வதி” என்று விக்ரம் அழைத்தார். “நீங்க பேசிட்டு இருங்க நான் வந்துடறேன்” என்று வெளியே சென்றார் ஆண்ட்டி.
“தென் எப்போ வந்தீங்க?” என்று கேட்க “நேத்து வந்தோம்” என்று சொல்லிவிட்டு பார்வதியின் பின் அவளும் வெளியேறினாள்.
“உம்ம்ம். ரொம்ப அடக்கம் (submissive)” என்று நினைத்துகொண்டு அவனும் ஹாலுக்கு வந்தான். அங்கே ராம், விக்ரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஹே ராம், என்ன நீயும் மாட்டிட்டாயா கல்யாணம் பண்ணிட்டு? சொல்லவே இல்ல” என்று க்ரிஷ் கிண்டல் செய்ய
“இல்லடா எல்லாமே சீக்கரம் முடுஞ்சுது” என்று மழுப்பினான்.
“நந்தினி உம்ம்ம் நந்தினி ரொம்ப சைலன்ட் உன்னமாதிரி இல்ல” என்று அவளை வம்புக்கு இழுக்க ராமிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“விக்ரம், லாஸ்ட் வீக் தீவாளி செலிப்ரேஷன்ஸ் பத்தி பேசுனோம்ல யு நோ வாட்? நந்தினி டான்ஸ் ஆடுவாளாம். சோ அவள ஆட வெச்சுடலாம்” என்று சொன்ன ஆண்ட்டி கண்ணடித்து நந்தினியை பார்த்தார்.
“ஐயோ நானா, வேணாம் ஆண்ட்டி. கொஞ்ச நாள் ஆச்சு நான் டான்ஸ் ஆடி” என்று வெட்கப்பட “அந்த கவலையெல்லாம் வேணாம். நாங்க இருக்கோம்ல” என்று ஆண்ட்டி சொல்ல, அவள் ராமை பார்த்தாள். அவனிடம் எந்த ஒரு சலனமும் இல்லை.
அதை பார்த்தவள் முகம் வாடி போனது. “ஆமா, இந்த டைம் பாரு தான் செக்ரெட்ரி, சோ ஹர் டெஷிஷன் ஐஸ் ஃபைனல்” என்று க்ரிஷ் கிண்டல் செய்தான்.
ராம் அமைதியாக இருப்பதை பார்த்த விக்ரம் “ராம், நந்தினியை இலினாய் ரிவர் கூட்டிட்டு போ. இப்போ சீசன் நல்ல இருக்கும். ஆர் ஒரு ரோட் ட்ரிப் போங்க. என்ஜாய் யுவர் ஹனிமூன். நான் லீவு ஆப்ரூவ் பண்றேன்” என்றார் விக்ரம் சிரித்துக்கொண்டு.
ராம் சற்று அசௌகரியதுடன் நான் உங்ககிட்ட சொல்றேன் சர் தேவப்படறப்ப” என்றவன்,
“அன்ட் நாளைக்கு நான் ஆஃபீஸ்க்கு ரிப்போர்ட் பண்றேன்” என்று சொல்ல “எஸ் எஸ் நமக்கு ஒரு இம்போர்ட்டண்ட் ஒர்க் வந்துருக்கு” என்று பேச்சு தொடர
“ஓ மை காட். உங்க ஆஃபீஸ் பேச்சை ஆஃபீஸ்ல வெச்சுக்கோங்க. இங்க வேண்டாம்” என்று க்ரிஷ் முகம் சுளித்தான்.
“அதானே, வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் பார்வதி.
“ஆண்ட்டி நீங்க உக்காருங்க. நான் சர்வ் பண்றேன்” என்று நந்தினி சொல்ல “உக்காரு எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் பார்வதி.
“எஸ், நாமளே போட்டுட்டு சாப்பிட்டுக்கலாம்” என்று சிரித்தான் க்ரிஷ்.
—————-
ராம் ஆஃபீஸிற்கு லீவ் முடிந்து ரிப்போர்ட் செய்ய தயாரானான்.
“நான் ஆஃபீஸ் கிளம்பறேன். உனக்கு ஏதாவது வேணுமா?” என்று கேட்க “கொஞ்சம் ரேஷன், காய்கறி வாங்கணும். நான் லிஸ்ட் மெசேஜ் பண்ணவா?” என்று கேட்டாள் நந்தினி.
“ஓகே. இன்னிக்கி நான் கொஞ்சம் லேட்டா வந்தாலும் வருவேன். நீ சாப்பிட்டு தூங்கு. எனக்காக வெயிட் பண்ண வேணாம்” என்று ராம் சொல்லிவிட்டு ஆஃபீஸிற்கு புறப்பட்டான்.
நந்தினி லிஸ்ட் மெசேஜ் செய்ய ராமிடம் இருந்து “ஒகே நான் வரப்ப வாங்கிட்டு வரேன். பட் டைம் ஆகும்” என்று ரிப்லை வந்தது. “நைட் சாப்பிட வருவீங்களா?” என்று நந்தினி கேட்க
“ரொம்ப வேல இருக்கு. சோ தெரில. எனக்கு எதுவும் செய்ய வேணாம்” என்று பதில் அனுப்பினான்.
“வீட்ல சாப்பிட கூட பிடிக்கல. இது போல இன்னும் எவளோ நாள் நடக்க போகுதோ” என்று நொந்துகொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் போன் கால் அடித்தது. அவள் அம்மாவிடமிருந்து. “ஹலோ அம்மா, எப்படி இருக்க. டேப்லெட்லாம் ஒழுங்கா சாப்பிடறயா?” என்று நந்தினி கேட்க
“நான் நல்ல இருக்கேன் எனக்கென்ன? அண்ணா அவருவீட்டுல இருக்க சொன்னாரு. அங்க இருந்து தான் பேசறேன். நீ எப்படி இருக்க? மாப்பிள்ள நல்லா பாத்துக்கறாரா? நீ நல்லா நடந்துக்கறயா?” என்று கேட்டார்
“நல்லா பாத்துக்கறாருமா. சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்லும்போது தொண்டை அடைத்தது நந்தினிக்கு.
“பக்குவமா நடந்துக்கோமா. அவரு மனசு நோகாம பாத்துக்கோ” என்று சொல்லும்போது
“நான் எவளோ நொந்தாலும் அவரை கஷ்டப்படுத்தாம இருக்கனும் இல்லையா?” அவள் மனதில் நினைத்துக்கொண்டாள்.
“ஏம்மா ஏதும் பேசமாடீங்கற?” என்று அவள் அம்மா கேட்க “இல்லமா அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாத” என்று இருவரும் சிறுது நேரம் பேசிவிட்டு வைத்தனர்.
———–
நந்தினிக்கு வீட்டில் போர் அடித்ததால் அவளே கடைக்கு போக முடிவெடுத்தாள். மேப் பார்த்தாள், அது .5 மைல் என்றது. சற்று தயக்கத்துடன் புறப்பட்டாள்.
மெயின் கேட்டில் இருந்து வெளியே சென்றவுடன் ஒரே குழப்பம். மேப் காட்டிய வழியில் நடக்க, நான்கு ரோட் வந்தது.
எப்படி கடப்பது என்று யோசிக்கும் போது கார் ஒன்று அவள் அருகில் நின்றது. அவள் திரும்பிப்பார்க்க, அதன் விண்டோ இறங்க உள்ளே க்ரிஷ்!!!

Krish partha traingle love start agumpola thonuthey..hayayo preethi🥰
Super preethi.. as of now.. ore suspense continuing.. aduthu ennavairukkum.. krish oda entry??
Thanks much Veena 🙂