Preethi S Karthikமறந்துபோ என் மனமே - 1

Maranthupo en maname1-11

மறந்துபோ என் மனமே(1) – 11:

“ஹே Nandy, எங்க தனியா போயிட்டு இருக்க?” என்று விண்டோ இறக்கி க்ரிஷ் கேட்க “என்னது Nandy’யா?” என்று நினைத்துக்கொண்டு “இங்க இண்டியன் ஸ்டோர்க்கு” என்றாள்.

K: “ராம் எங்க? சரி கெட் இன். நான் உன்ன ட்ரோப் பண்றேன்”

N: “தட்ஸ் ஒகே. எதுக்கு உங்களுக்கு கஷ்டம்? நானே போய்க்கறேன்”

K: “நான் கோல்ஃப் கோர்ஸ் போறேன். ஸ்டோர் போறவழிலதான் இருக்கு. எக்ஸ்ட்ரா எஃபோர்ட் எதுவும் இல்ல. வா போலாம்”

அவள் தயக்கத்தோடு பின் டோர் திறக்க சென்றாள். “நோ நோ. முன்னாடி வா. முன்னாடி சீட் ஃபிரீயா இருந்த, அதுலதான் உட்காரனும். அது இங்க ரூல்.” என்றான்.

சற்று தயங்கி வேறு வழியில்லாமல் ஆண்ட்டி மகன் என்பதால் ஏறி அமர்த்தாள். “இங்க சீட் பெல்ட் இஸ் ஆல்சோ இம்போர்டண்ட். இல்லாட்டி ஃபைன் கட்டணும்” என்றான்.

அவள் அணிந்துகொண்டு கண் மூடி திறப்பதற்குள் கடை வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லவளிடம் “நான்வேணா கூடவரவா?” என்று கேட்டான்.

“ஓ நோ தேங்க்ஸ். நான் பாத்துக்கறேன். யு கேரி ஆன்” என்றாள் அவள்.

“ஒகே என் நம்பர் எடுத்துக்கோ. உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா, ராம் இல்லனா, எனக்கு கால் பண்ணு. நான் பக்கத்துல இருந்தா, வில் ஹெல்ப் யு” என்று சொல்லிவிட்டு அவன் நம்பர் கொடுத்தான்.

“கண்டிப்பா… தேங்க்ஸ்” என்று நோட் செய்துகொண்டாள்.

பை சொல்லிவிட்டு அவன் காரை கிளப்ப அவள் கடையினுள் சென்றாள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு வழியாக மேப் உதவியுடன் வீட்டிற்கு வந்தாள்.

அவளிடம் ஒரு புது உணர்ச்சி ஏற்பட்டது. இனி இதற்காக அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று. ராமிற்கும் மெசேஜ் அனுப்பினாள் ரேஷன் வாங்கிவிட்டதாக.

“தனியா போனயா? எதுக்கு ரிஸ்க் எடுக்கற? நான் வரப்ப வாங்கிட்டு வந்துருப்பேனே?” என்று பதில் வந்தது.

“உங்கள இந்தவிஷயத்திலாவது தொல்லை பண்ணவேணாம்னு தான். அதுவும் இல்லாம இந்த இடத்த சுத்திபாக்கலாம்னு” என்று ரிப்லை செய்தாள். “ஹ்ம்ம்” என்று மட்டும் பதில் வந்தது.

“தப்பா எடுத்துட்டாரோ? அவருக்கு எதுக்கு தொல்லையா இருக்கனும்னு நினைச்சுத்தானே போனேன்” என்று நினைத்து கொண்டாள்.

————-

இரவு 10 மணி ஆனது. இன்னும் ராம் வீட்டிற்கு வரவில்லை. அவள் காத்திருந்து பார்த்துவிட்டு அப்படியே சோபாவில் கண்ணசந்தாள். அவன் 10.45’க்கு வந்தான்.

“காலிங் பெல் அடிக்கலாமா வேண்டாமா? ஒரு வேலை டேப்லெட் எடுத்துட்டு தூங்கிருப்பாளோ? எதற்கு டிஸ்டர்ப் செய்துட்டு” என்று அவனிடம் இருந்த சாவியை வைத்து திறக்க முயற்சித்தான் அது திறந்தது.

உள்ளே அவள் சோபாவில் படுத்திருந்தாள். அவள் அருகே சென்று அவளை எழுப்ப அவள் பரபரவென எழுந்தாள்.

“ஏன் இங்க படுத்திருக்க. உள்ள தூங்கவேண்டிதுதானே?” என்றான். “இல்ல நீங்க வந்தவுடனே சாப்பிடுவீங்களானு கேட்கலாம்னு முழுச்சுட்டு இருந்தேன். எப்படி தூங்கினேன்னு தெரில” என்றவள் “சாப்பிடறீங்களா?” என்று கேட்டாள்.

“எனக்கும் சேர்த்தா ப்ரிபர் செஞ்ச, நான் வேணாம்னு சொன்னேனே” என்று கேட்டான். “ஆமா. ஒருவேளை நீங்க சாப்டீங்கனா. அதுக்கு தான்” என்று பதில் சொல்ல

“சரி நான் போய் ரெஃப்பிரேஷ் ஆயிட்டு வரேன்” என்று சொல்லி மேலே போய் பத்து நிமிடம் கழித்து வந்தான். சாப்பிட உட்கார்ந்தவனுக்கு அவள் பரிமாறினாள்.

“நீ சாப்பிட்டயா?” என்று கேட்க “இல்ல அப்போ பசி இல்ல அதான் அப்பறம் சாப்பிடலாம்னு இருந்துட்டேன்” என்றாள்.

“வாட்?, வா நீயும் உக்காரு” என்று இன்னொரு பிளேட் எடுத்துவைக்க அவள் மனம் கொஞ்சம் லேசானது.

“நான் சாப்பிடலனா நீ அப்படியே தூங்கிருப்ப இல்லையா? டோன்ட் டூ தட். டைம்க்கு சாப்பிடணும்” என்று சொல்ல “நீங்களும் டைம்க்கு சாப்பிடணும் இல்லையா?” என்றாள். “ஹ்ம்ம் லோங் லீவு முடிஞ்சு வந்ததால ரொம்ப ஒர்க் இருந்துச்சு. அதான் லேட் ஆயிடுச்சு இன்னைக்கு” என்றான்.

இருவரும் சாப்பிட்ட பின் அவரவர் ரூம்களுக்கு சென்றனர்.

—–

“நான் வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கா, நான் அவகூட சரியா பேசறதில்லனு தெரிஞ்சும். நானோ அவள கஷ்டப்படுத்த மட்டும் தான் செய்றேன். ஆனா என்னால உடனே எப்படி எல்லாத்தையும் மறந்து அட்ஜஸ்ட் ஆக முடியும்”

—–

நான் சாப்பிட்டேனா இல்லையானு கேட்பாரோ மாட்டாரோனு நினச்சேன். ஆனா அவரு கேட்டுட்டாரு. அதுவே பெரிய சந்தோஷமா இருக்கு எனக்கு.

—–

இவ்வாறே சில நாட்கள் கடந்தன. ராம் அப்பப்போ தான் பேசினாலும், அவள் கம்ஃபோர்ட்டபெலாக இருக்க எல்லாம் செய்தான். பேச வேறு எவரும் இல்லாத காரணத்தால் ஆண்ட்டி, க்ரிஷ், மற்றும் அருகில் உள்ள சில பேரிடம் நன்றாக மிங்கில் ஆனாள் நந்தினி.

—-

ஒரு மதியம் அவளை பார்க்க ஆண்ட்டி வந்தார். “வர்ற வெள்ளிக்கிழம தீவாளி. சனிக்கிழம நம்ம கம்யூனிட்டி தீவாளி செலிப்ரேஷன்ஸ்டி. உன்னோட டான்ஸ் இருக்கு கண்டிப்பா” என்று சொல்லும்போது

“அய்யோ வேணாம் ஆண்ட்டி. பயமா இருக்கு” என்று தயங்கினாள். “நீ தான சொன்ன டான்ஸ் உனக்கு பிடிக்கும்னு. அப்பறம் என்ன? இன்னும் மூணு நாள் இருக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கோ. சரியா?” என்றார்.

“அவர்கிட்ட ஒரு வாட்டிகேட்டுக்கறேனே? அவரு ஒகே சொல்லிட்டாருன்னா ஆடறேன் ஆண்ட்டி” என்றாள்.

“அவன் என்ன சொல்ல போறான்? ஆடுனு தான் சொல்வான். அப்பறம் உன் இஷ்டம்” என்றவர் “அவன் ஆஃபீஸ்ல தீவாளி கெட் டுகெதர் வேற நெஸ்ட் வீக் இருக்கும். நீயும் அவனும் சேர்ந்து வரணும் ஒகே?” என்று கேட்க சரி என்பதுபோல் தலையசைத்தாள் நந்தினி.

——

இரவு வீட்டிற்கு வந்தவுடன் அவளிடம் குசலம் விசாரித்துவிட்டு படி ஏறி மேலே செல்லும்போது அவள் அவனிடம் “ஆண்ட்டி வந்தாங்க. இந்த சாட்டர்டே தீவாளி செலிப்ரேஷன்ஸ் இருக்குமாம். என்ன டான்ஸ் ஆடுவியான்னு கேட்டாங்க. உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்”

அதை கேட்டு இறங்கியவன் “ஹே உனக்கு ஒகேனா நீ ஆடு. இதெல்லாம் என்கிட்ட கேட்கணுமா என்ன? இட்ஸ் யுவர் விஷ். உனக்கு பிடிச்சத நீ பண்ணு.”என்றான். அவளுக்கு ஏதோ ஒரு சந்தோஷம்.

முதல் முறையாக அவளை அவள் இஷ்டத்திற்கு செய்யும்படி சொன்னதை கேட்டு

“தேங்க் யு” என்றவுடன் அவன் புன்னகைத்து “இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லனுமா” என்று புன்னகைத்தவன் “குட் நைட்” சொல்லிவிட்டு சென்றான். ரொம்ப நாள் கழித்து மகிழ்ச்சியுடன் தூங்க சென்றாள் மாத்திரை ஏதும் எடுக்காமல்!!!!

One thought on “Maranthupo en maname1-11

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved