Preethi S Karthikமறந்துபோ என் மனமே - 1

maranthupo en maname1-13

மறந்துபோ என் மனமே(1) – 13

“Nandy, நான் ராம்க்கு கால் பண்ணேன். அவனால…. வர முடியாதுன்னு நினைக்கறேன்” என்று சொல்ல “ஹ்ம்ம்ம், இப்போ தான் மெசேஜ் பண்ணாரு” என்றாள் முகத்தை தொங்க போட்டுகொண்டு.

“உம்ம்ம் அவன் முக்கியமான ஆஃபீஸ் வேலையா இருக்கானாம் அதுதான். பட் அவன் உன்ன கண்டிப்பா டான்ஸ் ஆடணும்னு சொல்லிருக்கான்” என்றான்.

“அவரில்லாம எனக்கு ஆடணுமான்னு இருக்கு. நான் ஆண்ட்டிய கூப்பிட்டு சொல்லிடறேன். டான்ஸ் அவரில்லாம ஆட கஷ்டம்னு” என்று கண்கலங்கினாள்.

“கம் ஆன் Nandy சீர் அப். நீ இதுக்காக ப்ரசிட்டிஸ்லாம் பண்ணிருக்க. ரெடி கூட ஆயிருக்க. இந்த ரீசன்காகலாம் உனக்கு பிடுச்சத செய்யாம இருக்க கூடாது”

“இப்போ நீ முதலான அது அவனுக்கும் கஷ்டமா இருக்கும் இல்லையா? இப்போ என்ன? அவன் உன் டான்ஸ் பாக்கணும் ஹ்ம்ம்? நான் லைவ் கவர் பண்ணறேன் அவன் பாக்கறதுக்கு. ஹாப்பி? “என்று கேட்க, மனசில்லாமல் தலையசைத்தாள்.

“ஸ்மைல் அன்ட் பி ஹாப்பி Nandy. நான் ராம்க்கு கால் பண்ணு சொல்லிடறேன்” என்று சொல்லிவிட்டு ராம்க்கு போன் போட சென்றான்.

வெளியே சென்றவனை பார்த்த பார்வதி “அவளுக்கு என்ன ஆச்சு ஏன் உம்முனு இருக்கா?” என்று வினவினார். “ராம் வரலன்னு பீல் பண்ணுறா மா”

“ஏன் வரல அவன்?” என்று ஆண்ட்டி கேட்க, “அவன் சொன்னா ரீசன் சொன்னா நீ கடுப்பாய்டுவ. அவன் Sue கூட சிகாகோல இருக்கான். அவளுக்கு மண்டே ஃபங்க்ஷன்க்கு டிரஸ் வாங்க” என்று சொன்னவுடன் எரிச்சலாக பார்த்தார் ஆண்ட்டி.

“இன்னும் ஏன் டா அவன் இப்படி இருக்கான்?” என்று ஆண்ட்டி கோபப்பட

“அவ இது தான் கடைசி வாட்டினு கூப்டுருப்ப போல” என்றான்.

“இன்னும் எவளோ நாள் இப்படியே இருக்கபோறானோ. இதுவே லாஸ்ட் டைமா இருந்தா பரவால்ல” என்று முணுமுணுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

“ராம்….. அவ டான்ஸ் லைவ் கவரேஜ் பண்றேன். நீ பத்தண்ணா அவ கொஞ்சம் பெட்டெர்ரா ஃபீல் பண்ணுவா…… டான்ஸ் முடுஞ்சவுடனே கால் பண்ணி பேசு அவகூட…… தட்ஸ் பெட்டெர்……” போன்யை வைத்துவிட்டு உள்ளே சென்றான்.

“ராம்ட்ட சொல்லியாச்சு. சந்தோஷமா?” என்று கேட்க தலையசைத்தாள். சிறிது நேரம் கழித்து அவசர அவசரமாக ஆண்ட்டி வந்து “நந்தினி ரெடியா?” என்று கேட்க அவள் எழுந்தாள்.

“கம் ஆன் Nandy. ஐ நோ யு ராக். ஆல் தி பெஸ்ட்” என்றான் தம்பஸ் ஆப்புடன். அவள் சிறு புன்னகையுடன் சென்றாள் நடனமாட.

அவன் ஸ்டேஜ் முன்னே நின்று மொபைலில், அவள் நடனத்தை கவர் செய்ய தயாரானான்.

“ஓம் நமஷிவாய” என்ற பாடல் ஆரம்பமாக அவள் பாடலுக்கு உயிரோட்டம் தர தொடங்கினாள். அடுத்த 4 நிமிடம் அரங்கமே ஆழ்ந்து அவளுடைய நளினமான நடனத்தை பார்த்து ரசித்தது.

அவள் கண்கள் அங்கும் இங்கும் அழகாய் பார்த்து பாட்டிற்கு ஏற்றவாறு கைகளும், கால்களும் ஆடின. அவளுடைய முத்திரைககளையும் அடவுகளையும் பார்க்கும் ஒவ்வொருமுறையும் கை தட்டியவண்ணம் இருந்தனர் அரங்கில் அனைவரும்.

அவள் முடிக்கும் போது அரங்கமே எழுந்து கைதட்ட அவள் கண்கள் கலங்கியது.

அப்போதும் அவள் கண்கள் அவன் ஒருவேளை வந்திருப்பானோ என்று தேடியது. அவள் மேடையைவிட்டு இறங்கியவுடன் க்ரிஷ் ஓடிவந்து அவளிடம் கை குலுக்கி சூப்பர் என்றவாறே ஹக் (hug) செய்தான்!!

ஒரு நொடி அவள் தயங்க, அவன் சற்று பின் தள்ளி “ஓ ஐம் ஸாரி. யு டான்ஸ்ட் சோ வெள் Nandy. Out of the world” என்று சொல்லும்போது “சூப்பர் நந்தினி. எவளோ நளினமா ஆடின தெரியுமா. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல டான்ஸ் பாத்த பீல்” என்று கட்டி அணைத்தார் ஆண்ட்டி.

“தேங்க் யு ஆண்ட்டி, தேங்க் யு க்ரிஷ்” என்றாள்.

“ஹலோ, ஐம் ஜேசன். யு டான்ஸ்ட் சோ வெள்” என்று கை நீட்டினான் கைகுலுக்க, “தேங்க் யு” என்று சற்று தயக்கத்துடன் அவளும் நீட்டினாள்.

அவள் இருக்கைக்கு வரும் வரை பலரும் பாராட்டினர். அவள் ” தேங்க் யு” என்று கூறியவாறே இருக்கைக்கு வந்தாள்.

“இதுதான் எனக்கு முதல் முறை, இவ்ளோ கிளாப்ஸ் கிடைச்சது. ஆஃபீஸ்ல ஆடுனப்ப கூட சில பேரு இன்டெரெஸ்ட் காட்டல. ஆனா இங்க இவளோ பேரு. அவரு இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்” என்று யோசித்துக்கொண்டிருந்தவளை நந்தினி என்று உலுக்கினார் ஆண்ட்டி.

“என்ன ஆச்சு? கூப்டுட்டே இருந்தேன் கேக்கலையா?” என்று கேட்க “ஸாரி ஆண்ட்டி என்ன ஆச்சு?” என்றாள்.

“அந்த லேடி உன்ன பாராட்ட வந்தாங்க. நீ எங்கயோ பாத்துட்டு இருக்க” என்றார்.

“ராம் இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்ல ஆண்ட்டி” என்றாள் வருத்தமாக. இருவரும் பேசிக்கொண்டிருக்க அப்போது சரியாக க்ரிஷ் அங்கே வந்து “நீ ரொம்ப அழகா ஆடின Nandy. யு மஸ்ட் பி ஹாப்பி. இப்படி இருந்தா நல்லாவே இல்ல” என்று சொல்லும்போது அவன் போன் அடித்தது.

“ராம் தான் கால் பண்ரான் பிடி” மொபைலை குடுத்துவிட்டு அவன் அவ்விடத்திலிருந்து சென்றான்.

“ஹலோ” என்றாள் அவள் ஐம் வெரி சாரி” அவனின் குரல் தடுமாற “பரவால்ல. நீங்க இல்லனு தான் கஷ்டமா இருந்துச்சு” என்றாள் அவள். “நான் உன்கிட்ட பேசணும். வீட்டுக்கு சீக்கரம் வந்துடறேன்” என்றான்.

“ஹ்ம்ம்” என்றே பதில் சொன்னாள். “யு லுக் சோ ப்ரெட்டி அன்ட் உன்னோட டான்ஸ் டாப் கிளாஸ்.” என்று அவன் சொல்ல “தேங்க் யு” என்றாள்.

அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து நான் வீட்டுக்கு வந்துடறேன்… சீக்கரம்… பை” என்று சொல்ல அவளும் “பை” சொல்லிவிட்டு போன் கட் செய்தாள்.

——————

“அவகிட்ட எப்படியாவது உண்மைய சொல்லிடனும். நான் அவளுக்கு உண்மையா இருக்கனும்” என்று அவன் மனது அவளையே நினைத்துக்கொண்டிருந்தது.

2 thoughts on “maranthupo en maname1-13

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved