maranthupo en maname1-1819
மறந்துபோ என் மனமே(1) – 18&19
அவள் கண்கள் கலங்கின.
“சரி அழுதது போதும். சீர் அப்” என்று அவன் சொல்ல “எனக்கு என்ன சொல்லனு தெரில. தேங்க்ஸ் ரொம்ப சின்ன வார்த்தை” என்றாள் கண்களில் நன்றியுடன்.
“ஓகே ஓகே. போதும் வா இங்க ஒரு கான்டீன் இருக்கு. நிறைய வெரைட்டி அஃப் இந்தியன் ஃபூட்ஸ் இருக்கும். போய் ஏதாவது சாப்பிடலாம் வா” என்று சொல்லி அவளையும் எழுப்ப, இருவரும் சற்று நேரம் கோவிலில் கழித்துவிட்டு கார் ஏறினர்.
“யு ஹவ் மேட் மை டே. ரொம்ப தேங்க்ஸ்” என்றாள். “எதுக்கு இவளோ தேங்க்ஸ். நீ இந்தியால இருந்திருந்தா உங்க வீட்ல பூஜ பண்ணிருப்பாங்க. இங்க பண்ணமுடியலயேனு ஃபீல் பண்ணுவனு தெரியும். அதான்” என்றான்.
அவள் கண்கள் கலங்கியவரே “இத நான் எதிர்பார்க்கவே இல்ல. அதுவும் நீங்க கூப்டுபோவீங்கன்னு” அவள் சொல்ல அவன் மெல்லிதாக சிரித்தான்.
“இவரு மாறிட்டாரா? எப்படி ஒரே நாள்ல மாறுனாரு. நேத்து தான் அவங்கள கூட்டிட்டு வெளிய போனாரு. இன்னைக்கு என்னை. இல்ல நான் பாவம்னு நினச்சு செய்றாரா” என்று அவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினாள்.
அவள் ஏதோ நினைத்துக்கொண்டிருப்பதை பார்த்தவன் புரிந்துகொண்டான் அவனுடைய மாற்றத்தை பற்றி தான் யோசிக்கிறாள் என்று.
“நேத்து நான் Sue’வ பாக்கப்போறதுக்கு முன்னாடி தெளிவா முடிவெடுத்துட்டு தான் போனேன்” என்று நினைத்துக்கொண்டவன் மனதில் அவன் Sue’விடம் பேசியது அவனுக்கே மறுபடியும் ஒலித்தது.
“நான் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அழிக்க விரும்பல. ரெண்டு பேரோடயும் பேசிட்டு சுத்திட்டு இருந்தா, அது நான் செய்ற பெரிய துரோகம்”
“நான் உனக்கேத்தவன் கிடையாது Sue. யு டிசெர்வ் அ பெட்டெர் லைஃப். நீ திரும்ப திரும்ப காயப்படறத என்னால பாக்க முடில”
“உன்னோட நினைவுகளை என்னால முழுசா கண்டிப்பா அழிக்க முடியாது. நீ எப்பவுமே என்னையோட நினைவுல இருப்ப. என்னோட ஃபிரஸ்ட் லவ்”
“சிலசமயம் சிலபேருக்கு மனசுக்கு பிடுச்சவங்களோட வாழ்க்கையை அமைச்சுக்க முடியாம போய்டும். அதுமாதிரிதான் நாம ரெண்டு பேரும். நம்ம விதி”
“நான் உனக்கு தகுதியானவன் இல்ல Sue. ஐ டிண்ட் லிவ் அப்டு யுவர் எக்ஸ்பெக்டேஷன்ஸ். உனக்காக ஒரு நல்ல வழக்கை கண்டிப்பா காத்திருக்கு. யு டிசெர்வ் தி பெஸ்ட் நாட் மீ”
“நான் பேச பேச அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சாப்பிடும் போது பாதியிலேயே போய்விட்டாள். திரும்ப அவளை கூப்பிட்டு நாமே அடித்தளம் போட வேண்டாம்னு அவளோட ஃபிரன்ட்கிட்ட வீட்டுக்கு வீட்டுக்கு போய் சேந்துட்டாளாணு கேட்டு தெருஞ்சுட்டேன். தெரிந்தோ தெரியாமலோ என்னால நந்தினி பாதிக்க பட்டுருக்கா”
“அண்ட் இது தான் என்னோட டெஸ்டினி. நானும் அத புருஞ்சுட்டு வாழ்க்கையோட ஒத்துப்போய் வாழனும்”
“ஓவர்நைட்ல மாற முடியாது பட் நான் ட்ரை பண்றேன். கொஞ்சம் கொஞ்ச மாற” அவன் நினைவோட்டத்திலிருந்து நிகழ்வுக்கு வந்து நந்தினியை பார்த்த போது அவள் கண்ணசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
“இத்தன நாளா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று சீட் மேலே இருந்த அவள் கையை மெதுவாக அவன் கைக்குள் வைத்தவாறு, அவ்வப்போது அவளையும் சாலையையும் பார்த்துக்கொண்டே
“இனிமே என்னால உன்ன சந்தோஷமா வைத்திருக்க முடியுமோ இல்லையோ பட் கஷ்டப்படுத்தாம பாத்துக்கறேன்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
நிலாவே வா பாட்டு பிளேயரில் வர கூட அவனும் ஹம் செய்துகொண்டே டிரைவ் செய்தான்.
அவள் தூக்கத்திலிருந்து மெதுவாக விழித்தெழுந்தாள்.
“அப்படியே தூங்கிட்டேன் போல” அவள் சொல்ல “ஹ்ம்ம், ஆனந்தமா தூங்கின” என்றான் புன்முறுவளுடன். “ரொம்ப நாள் கழிச்சு” என்றாள் எதார்த்தமாக.
அது அவனை உறுத்த “என்னாலதான் நீ கஷ்டப்பட்ட இவளோ நாள் ஐம் ஸாரி” என்றான். “ஐயோ ஸாரி நான் அப்படி மீன்(mean) பண்ணல” என்று சொல்ல அவன் திரும்பி அவளை பார்த்து
“ஐம் ஸாரி அண்ட் ஐ மீன் இட் (I’m sorry and I mean it)” சொல்லிவிட்டு திரும்பி டிரைவ் செய்தான்.
அவளால் நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. இது இப்படியே தொடருமா என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாட இருவரும் மௌனமாய் கண்களில் பிணைந்தனர்.
Chapter 19:
“உங்க கை இப்போ பரவலயா” என்று அவள் கேட்க “ஹ்ம்ம் வலி பெருசா இல்ல” என்றான் பதிலுக்கு.
“இனி இப்படி அவசரமாலாம் பண்ணாதீங்க. நல்லவேள பெருசா ஒன்னும் ஆகல. கிச்சனுக்கு நீங்க போக வேண்டாம். அதான் நான் இருக்கேன்ல” என்றாள்.
ஏதோ அந்த வார்த்தை நெருடலாக இருக்க “கிரிஷ் என்கிட்டே சொல்லிட்டு இருந்தான். உனக்கு வேளைக்கு போனும்னு ஆசை இருக்குனு. நான் அதுக்கான EAD, SSN அரேன்ஜ்மெண்ட்ஸ் நாளைக்கே ஸ்டார்ட் பண்றேன். க்ரிஷே ஹெல்ப் பண்ணுவான். இதை நான் முன்னாடியே பண்ணிருக்கனும்.” என்றான்.
என்னசொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு தேங்க்ஸ் தவிர. அவள் சொன்னவுடன் அவன் சிரித்துக்கொண்டே டிரைவ் செய்தான்.
“EAD இருக்கறதுனால வேல பண்ணியே ஆகணும்னு இல்ல. உன்னோட இஷ்டம். எனக்கு எந்த ப்ரோப்லமும் இல்ல” என்றான்.
அவள் மௌனமாக அவனை பார்த்து நன்றி என்பதுபோல புன்னைகைத்தாள். பின்னே ப்ளேயர் இப்போது சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல். நீண்ட நேர மௌனத்தை அவன் கலைத்தான்.
“உனக்கு ஏதாச்சும் தேவனா தயங்காம கேளு” என்று சொல்ல அவள் சரி என்பதுபோல் தலையசைத்தாள்.
இப்போது நீ ஒரு காதல் சங்கீதம் பாட்டு வர, இருவரும் மௌனமாக இருந்தாலும் அவ்வப்போது பேசிக்கொண்டனர் கண்களாலே. சிறிதுநேரத்தில் இருவரும் வீட்டை வந்தடைந்தனர்.
——
லேட்டா ஈவினிங் ஆனது. அவன் எப்போதும் அவன் அறையிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை அவன் கிழே வெகு நேரம் கழித்தான்.
அவள் தனிமையை மறந்தாள் இன்று. அவள் கிச்சனுக்குள் சமையலுக்கு காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்க காலையில் அவனுக்கு காயமேற்பட்டது, அவனின் அருகாமை, கோவிலில் அவனது நடவடிக்கை நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது.
அதுவே முதல் முறை அவனை மிக அருகாமையில் பார்த்தது. அவனின் ஸ்பரிசம், அவனின் ஆழ்ந்த பார்வை, ஆளுமை, கோவிலில் அவனின் அரவணைப்பு என்று அந்த நினைவுகள் வந்தவண்ணம் இருந்தது.
“இதுபோல எண்ணங்கள் இதுவரை எனக்கு வந்ததில்லை. என்கூட சரியா பேசுனதில்ல. ஆனா காலைலருந்து கொஞ்சம் சகஜமா பேசுறாரு. அதுனாலயோ?” அவனின் நினைவு வரும்போது அவனை பார்க்கும் போதெல்லாம் அவன் லேப்டாபில் மூழ்கிருந்தான்.
அவள் கனவோட்டம் எங்கெங்கோ சென்றது. அவளால் அவனெதிரே நின்று வேலை பார்க்க முடியாமல் சமயலறையில் இருந்து வெளியே வந்தவள் “எனக்கு கொஞ்சம் தல வலிக்குது. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சமைக்கவா” என்று கேட்க
“ஹே ஆர் யு ஒகே? என்னாச்சு திடீர்னு” என்று லேப்டாபை வைத்துவிட்டு அவளருகே வர, அவன் அருகில் வருவதை பார்த்து சற்று விலகி “இல்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்” என்று சொல்லிட்டு அவள் ரூமிற்கு சென்றாள்.
அவனுக்கு புரியவில்லை. “என்ன ஆச்சு?” என்று கேக்க அவள் ரூமிற்குள் செல்ல, அவள் கைகளையும் கால்கைகளையும் குறிக்கியாவரே படுத்திருந்தாள்.
“என்ன ஆச்சு நந்தினி? ஆர் யு ஆல்ரைட்? சொன்னா தான எனக்கு தெரியும்” என்று கேட்டுக்கொண்டே அவள் கட்டில் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.
“இல்ல… ஒன்னும் இல்ல… கொஞ்சம் முடில அதான்” என்று வார்த்தைகள் தடுமாறி எழ முயல அவன் தடுத்து அவளை படுக்க வைத்தான்.
“டோன்ட் ஸ்ட்ரெஸ் யுவர்ஸெல்ப்” என்று சொல்லிட்டு அவள் தலையை தொட்டு பார்த்தான் காய்ச்சலா என்று. அவள் உடனே கொஞ்சம் தள்ளிகொண்டாள்.
அதை உணர்ந்து “சரி நீ கொஞ்சம் நேரம் தூங்கு. நான் போறேன்” என்று சொல்லிட்டு வெளியே வந்தான் ஒன்றும் புரியாமல்.
——
“அவருகிட்ட வந்தா எனக்கு ஏதோ ஆகுது. இதை எப்படி நான் அவர்கிட்ட சொல்றது? டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணனும். திரும்ப ஏமாற்றங்களை தாங்க முடியாது” என்று அவள் முகத்தை முழங்கைகளால் மூடி கொண்டாள்.
——
“நார்மலா தான் இருந்தா திடீர்னு என்ன ஆச்சுனு தெரில. கிட்ட போனாலே தள்ளி போரா. என்னனும் சொல்ல மாட்டேங்கறா” என்று நினைத்தவன் “சரி அவ ரெஸ்ட் எடுக்கட்டும். நம்ம போய் ஏதாவது செய்வோம்” என்று கிச்சனுக்குள் சென்றான்.
“ஹ்ம்ம் வெஜிடேபெல் கிச்சடி. செஞ்சுடுவோம்” என்று அவனுக்குள் பேசி கொண்டு செய்ய ஆரம்பித்தான்.
அதே நினைவலைகள் அவனுக்குள்ளும். அவன் காயத்தை பார்த்து அவள் பதறியது. ரத்தத்தை பார்த்து துடித்தது. அவள் மென்மையான கைகளால் அவனுக்கு முதல் உதவி செய்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது திடீரெனெ அவனுக்கு அந்த நொடி மனதில் ஒன்று தோன்றியது.
“ஒருவேளை அவளுக்கும் இதெல்லாம் ஞாபகம் வந்து நான் அவளை விறைக்க பார்த்தது அவளுக்கு தவறாகதோன்றி இருக்குமோ” என்று நினைத்தவன்
“இத்தன நாள் அவளோட சரியாய் கூட பேசல. கிட்ட அவ வந்த உடனே அவள அப்படி பார்த்ததை தப்பா எடுத்துருப்பாளோ. சலன பட்டுட்டேன்னு நினைச்சாலோ? நான் அவள டேக்கன் ஃபோர் க்ராண்டட் (‘Taken for granted’) நினச்சுட்டேன்னு நினைக்கறாளோ? ச்ச” என்று நொந்துகொண்டான்.
