Maranthupo en maname1-3
மறந்துபோ என் மனமே(1) – 3
“என்னால Sue’வ எப்படி மறக்க முடியும்? இப்போ அவட்ட பேசினப்ப கூட எனக்கு பேச வார்த்த வரல. ஷி ஃபெல்ட் பிட்ரேய்ட் (betrayed)”
“உன்கிட்ட Sue பத்தி எப்படி சொல்வேன். இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லனு எப்படி சொல்வேன்?”
“ஐம் ஸ்டக் பிட்வீண் எமோஷன்ஸ் (I’m stuck between emotions). எனக்கு இந்த லைப் எப்படி எடுத்துட்டு போறதுன்னு தெரில.உன்னைவிட்டு வானு Sue சொல்ற . அதா நான் எப்படி பண்ண முடியும்?”
“எனக்கும் ஒரு தங்க இருக்கா. அவ லைப் இப்படி ஆனா என்னால இல்ல என் வீட்ல தாங்குவாங்களா?”
“அம்மா உனக்கு டிபென்டண்ட் விசா எடுக்கணும் முடிவா சொல்லிட்டாங்க.. நாளைக்கே ஆஃபீஸ் போய் வேலைய ஸ்டார்ட் பண்ணுனு சொல்றாங்க. L2 எடுக்கறது அவளோ கஷ்டம் இல்ல”
ஆனா, உன்ன அங்க கூட்டிட்டு போனா , Sue எப்படி எடுத்துப்பா?” நாளை முதல் கணவன் மனைவியா எப்படி வாழ்க்கையை நடத்தப்போறோம் என்ற நினைப்புடன் இருவரும் கண்ணசந்தனர்.
—–
படுக்கையை விட்டு எழ மனதில்லாமல் கண் விழித்தாள் நந்தினி. புடவை சரிசெய்துகொண்டு திரும்பி பார்த்தாள். சோபாவில் டீ கப்புடன் ராம் மொபைல் பார்த்து கொண்டு இருந்தான்.
இவள் எழுந்தது தெரிந்தவுடன் அவன் அவளை ஏறிட்டு சிறிதாய் புன்னகைக்க, அவளிடமும் சிறிய புன்னகை.
“ஸாரி ரொம்ப டையர்ட்டா இருந்துச்சு.. அதான் லேட் ஆயிடுச்சு” என்றாள் நந்தினி. “ஹே கம் ஆன். இதுக்கெல்லாம் ஸாரியா. நீ ஃபிரெஷ் ஆயிட்டு வா. இந்தா, அம்மா இத உங்கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு புடவையை நீட்டினான். அதை வாங்கி கொண்டு அவள் தயாராக சென்றாள்
——
“நம்ம மண்டபத்த இப்போ காலி பண்ணிட்டு வனஜா உன் வீட்டுக்கு போய்டலாம்” என்று வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
ரூம் கதவை திறந்து வெளியே சென்றவளை, அவள் அம்மா திருஷ்டி எடுக்க, அத்தை “ஏன்டி நல்ல நடந்துக்கிட்டயா அவன்ட்ட” என்றாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகையுடன் நின்றாள். “நீ மாப்பிள கூட பேசிட்டு இரு. நான் போய் எல்லாம் ரெடி பண்றேன் மண்டபம் காலி பண்ண” என்று சொல்லிட்டு போய்விட்டார் அவள் அம்மா .
அவளின் புது அத்தை சிரித்துக்கொண்டே அருகில் வந்து “நந்தினி அவன் ஏதோ உன்னோட டாக்குமெண்ட்ஸ் வேணும்னு சொல்றான், அதெல்லாம் உன்கிட்ட இருக்கானு கன்ஃபிர்ம் பண்ணிக்கோ” என்றவர் ராமிடம் அழைத்து சென்றார்.
——
“ஐ நீட் ஸம் ஆஃ யுவர் டாக்குமெண்ட்ஸ். விசா ப்ரோஸஸ் பண்ண. நான் உனக்கு வாட்ஸ்ஆப் பண்றேன்” என்றான்.
“என்னோட நம்பர் வெச்சுக்கிட்டே ஒரு தடவைகூட பேசணும்னு தோணல கல்யாணத்துக்கு முன்னாடி!” என்று அவள் நினைக்க அடுத்த இரு வினாடிக்குள் மெசேஜ் வந்தது.
இருவரும் வேறேதும் பேசவில்லை. இருவரும் போனில் பிஸி ஆனார்கள்.
இவ்வாறே தினங்கள் போக அந்த நாள் வந்தது. அந்த நாள் வந்தது. இந்தியாவில் இருந்து கணவன் மனைவியாக பயணிக்கும் நாள்!
அவள் அம்மா அவளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்க “வனஜா அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க நீங்க கவல படவேண்டாம்” என்றாள் ஸ்ரீமதி, ராமின் அம்மா.
அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு விரும்பா பயணத்தை துவக்கினர் கணவன் மனைவியாக!!
