Maranthupo en maname1-78
மறந்துபோ என் மனமே(1) – 7 & 8:
“ஒருவேளை உடம்பு முடிலயோ? அதான் போன் ரிங், காலிங் பெல் சத்தம் கேட்கலையோ?” என்று நினைத்து கொண்டு அவளை மெதுவாக உலுக்கினான். அவள் எழும்பவில்லை.
அவன் அழுத்தமாக உலுக்க, அவள் தூக்கம் மெலிதாய் கலைந்து மெல்ல கண் திறந்தாள்.
அவனை அருகில் பார்த்தவுடன் விறுக்கென்று எழ, அவன் அவளிடம் “ஹே பரவால்ல படுத்துக்கோ. ஆர் யு ஒகே?” என்று கேட்டவன் அவள் கண்கள் வீங்கி போய் இருந்ததை பார்த்து கஷ்டமாக இருந்தது. அழுது அழுது வீங்கி போய் இருந்தது.
“ஒன்னும் இல்ல கொஞ்சம் டையர்ட்’டா இருந்துச்சு தூங்கிட்டேன்” என்றவளிடம் “எதாவது சாப்பிட்டயா?” என்று கேட்டான்.
“இல்ல பசிக்கல. எதுவும் வேணாம். உங்களுக்கு எதாவது ப்ரிபர் பண்ணவா?” என்று கேட்டுக்கொண்டு எழ முயற்சித்தவளை அவன் தடுத்தான்.
“நான் சாப்பிட்டேன். நீ இரு. நான் என்ன இருக்குனு பாத்துட்டு ஏதாச்சும் செய்றேன்” என்று சொல்ல “அய்யோ வேணாம். எனக்கு பசிக்கல. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்றாள்.
“தட்ஸ் ஒகே. நானும் சரியா சாப்பிடல. நூடுல்ஸ் இருக்குனு நினைக்கறேன். நீ இரு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். ராம் டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, காலிங் பெல் சத்தம் கேட்டது.
அவன் கதவை திறக்க “டேய் நீ கூப்பிடுவேன்னு பாத்தா கூப்பிடவே இல்ல. அவ எப்படி இருக்கா?” என்று ஆண்ட்டி உள்ளே வந்தார். வந்தவர் நந்தினி எங்கே என்று கேட்க ராம் அவளின் ரூமை காட்டினான்.
“ஐயோ, ஆண்ட்டி வந்து கதவை தட்டினது, நான் போன் பண்ணதெல்லாம் நந்தினிட்ட சொல்லலைனு ஆண்ட்டிட்ட சொல்லலையே” என்று ஆண்ட்டியை தடுக்க, ரூமுக்குள் போகும் முன்
“ஏன்டிமா. என்ன ஆச்சு உனக்கு? நான் பயந்தே போய்ட்டேன். உடம்பு ஏதாச்சும் முடிலயான்னு” கேட்டுக்கொண்டிருக்க நந்தினிக்கு ஒன்றும் புரியாமல் “என்னாச்சு ஆண்ட்டி?” என்று கேட்டாள்.
“ஏன்டா நீ ஒன்னும் கேட்கலையா அவட்ட?” என்று ராம் பக்கம் திரும்பினார். “இல்ல ஆண்ட்டி. அவ ஆல்ரெடி டையர்ட்’டா இருந்தா அதான் கேட்கல” என்று சொல்லிட்டு “நான் போய் டீ எடுத்துட்டுவரேன்” என்று அங்கிருந்து சென்றான்.
“ராம் உன்ன கூப்பிட்டிருப்பான் போல. நீ போன் எடுக்கல. பயந்துட்டு என்ன கூப்பிட்டான். நானும் காலிங் பெல்லாம் அடிச்சு பாத்தேன் நீ வரல. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம் உனக்கு என்னாச்சோனு” என்று ஆண்ட்டி சொல்ல, ராம் டீ போட்டுட்டு ரூம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.
“சாரி ஆண்ட்டி. ரொம்ப டிப்ரெஸ்ட்’டா (depressed) இருந்துச்சு. இன்சோம்னியா (Insomnia – தூக்கமின்மை கோளாறு) வேற எனக்கு. தனியா இருக்கப்ப பேனிக் அட்டாக் (Panic attack) வந்துடுச்சுனா என்ன செய்யனு, ரெண்டு தூக்கமாத்திரை எடுத்துட்டேன். அதான் நல்லா தூங்கிட்டேன். உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சாரி ஆண்ட்டி” என்றாள்.
“அது ஒகே. ஏன் கண்ணெல்லாம் வீங்கிருக்கு. அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சா?” என்று கேட்க அவள் கண்கள் மறுபடியும் கலங்கி “ஆமா ஆண்ட்டி. எனக்கு அம்மா மட்டும் தான். கஷ்டமா இருக்கப்ப அவங்க பக்கத்துல இருப்பாங்க. இப்போ யாரும் இல்ல.” என்றாள்.
ராம் குற்ற உணர்ச்சியுடன் “ச்ச. கண்டிப்பா என்னால தான் அவ கஷ்ட பட்டுருக்கா. என்ன நம்பி இங்க வந்துருக்கா. நான் போய் இப்படி” என்று நொந்து கொண்டான்.
ஆண்ட்டி கண்துடைத்து விட்டுவிட்டு “இனி அப்படி சொல்லாத. நான் ராம்லாம் இருக்கோம்ல. உனக்கு என்ன வேணுமோ எங்ககிட்ட சொல்லு”
“அவன் ஏதாச்சும் சொன்னானா என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கறேன்” என்று சொல்லும்போது ராம் ரூம்க்குள் வந்தான்.
“ஆண்ட்டி டீ குடிங்க” என்று நீட்டினான். “ஓ மை காட், உன் டீயா எனக்கு வேணாம்” என்று சொல்ல நந்தினி சின்னதாக சிரித்தாள்.
“குட். சிரிச்சா அழகா இருக்க. சிரிச்சுட்டே சந்சதோஷமா இருக்கனும். நீங்க குடிங்க. நாளைக்கு சண்டே நம்ம வீட்டுக்கு லஞ்ச்க்கு வந்துடுங்க நோ எக்ஸ்க்யூஸஸ்” என்று சொல்லிட்டு ஆண்ட்டி சென்றவுடன்
“நான் தூங்கிட்டேன். நீங்க கால் பண்ணீங்கனு சொன்னாங்க. எனக்கு கேட்கல. ஸாரி” என்று அவள் சொல்ல “ஐம் ஸாரி டூ” என்றான் ராம். அவள் எந்த விஷயத்துக்கு இந்த ஸாரி என்பது போல் பார்த்தாள்.
அத்தியாயம் – 8:
“நீ ஆண்ட்டிட்ட சொல்லிட்டுருந்தத கேட்டேன். உனக்கு கஷ்டமா இருக்கப்ப பக்கத்துல யாரும் இல்லனு. நான் இருந்துருக்கனும் உன்கூட. ஸாரி இந்த டீய குடுச்சுட்டு இரு நான் நூடுல்ஸ் ரெடி ஆயிடுச்சான்னு பாத்துட்டுவரேன்” என்று வெளியே சென்றான்.
“இவரை புரிஞ்சுக்கவே முடியல. ஒரு தடவை கூட என்கிட்ட சரியா பேசல ஆனா நான் போன் எடுக்கலைனு பயந்துட்டாரு. இப்போ சாப்பாடு செய்றேன்னு சொல்றாரு”
“அவர்கிட்ட ஆண்ட்டி சொன்ன பொண்ண பத்தி கேக்கலாமா? அட்வான்டேஜ் எடுத்துகுறேனோனு நினைப்பாரா?”
“ரெடி ஆயிடுச்சு சாப்பிடலாமா” என்று ராம் கேட்டவுடன் நினைவிற்கு வந்து எழுந்தாள்.
“காய்கறி எதுவும் வீட்ல இல்ல சோ ப்லைன் நூடுல்ஸ் தான்” என்று சொல்லி அவளுக்கு பரிமாற அவனும் கொஞ்சம் எடுத்து போட்டு கொண்டான்.
அவள் தயங்கி தயங்கி பேச முயற்சித்தாள்.
ஒரு பக்கம் பயம் மறுபக்கம் இது அவள் வாழ்க்கைனு தைரியம் வரவழைத்து கொண்டு ஆரம்பித்தாள்.
“நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டிங்களே?” என்று நந்தினி ஆரம்பிக்க. அவன் சாப்பிட குனிந்த தலையை தூக்கி “ஹ்ம்ம்” என்றான்.
“நீ அவளை பத்தி தான் கேக்கப்போறனு நினைக்கறேன். உன்கிட்ட எதுவும் மறைக்க கூடாது” என்று நினைத்துக்கொண்டான்.
“ஆண்ட்டி உங்ககிட்ட யாரையோ மறக்க சொன்னாங்களே அது யாருனு…” என்று இழுத்தாள்.
ராம் மனதில் “ஹ்ம்ம், எனக்கு எங்க எப்படி ஸ்டார்ட் பண்ணறதுனு தெரில. இருந்தாலும் மொதல்ல இருந்து சொல்ல போறேன்” என்று நினைத்தவன் ஆரம்பித்தான்.
“விக்ரம் சார், பார்வதி ஆண்ட்டி ஓட ஹஸ்பண்ட் 1990’s இங்க வந்தாங்க. அவங்க வந்த கொஞ்ச நாள்ல அவங்க ரிலேட்டிவ் வெங்கி சாரையும் வரவெச்சுட்டாங்க”
“அவங்களும் இங்க தான் இருந்தாங்க. வெங்கி சர் நியூ ரோல்க்காக Deerfield போய்ட்டாரு அவங்க பொண்ண இங்க விட்டுட்டு. அவரு பொண்ணு தான் சுஷீலா. பிறந்தது வளர்ந்தது எல்லாமே இங்கதான்”
“நான் இங்க டூ இயர்ஸ் முன்னாடி வந்தேன். அப்போ தான் அவ க்ராட் (grad) முடுஞ்சுருந்தா”
“நான் வெங்கி சார அவங்கவீட்டுக்கு போய் பாக்கும்போது, சுஷீலாவையும் பாத்துருக்கேன். என்ன அவளுக்கு பிடிச்சுருந்துதுனுட்டு, போனவருஷம் என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணா. ஆரம்பத்துல நான் பெருசா எடுத்துக்கல. பட் போக போக எனக்கும் அவளை பிடிச்சது. இந்த Feb நானும் ப்ரொபோஸ் பண்ணினேன்”
“அவ அம்மா அப்பா ஒகே சொல்லிட்டாங்க. பட் நான் அம்மாட்ட சொன்னப்ப அவங்களுக்கு சுத்தமா பிடிக்கல. எவ்வளவோ கன்வின்ஸ் (convince) பண்ண ட்ரை பண்ணேன். நோ யூஸ்”
“அப்போ தான் அங்க கல்யாண பேச்சை ஸ்டார்ட் பண்ணாங்க. வேணாம்னு சொன்னேன். கேக்கல. ரெண்டு மூணு பொண்ணு பாத்தாங்க. பட் அவங்க சீக்கரம் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அப்போ தான் சித்தி வழியா உன்வீட்ல பேசுனாங்க”
“உங்க அம்மாக்கு ஹெல்த் ப்ரோப்லம் இருந்தது அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு. ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம் பிக்ஸ் (fix) பண்ணிட்டாங்க”
“Sue, நான் நிச்சயதார்த்துக்கு போலனா டவுட் வந்து ஸ்டாப் ஆயிடும்னு ஐடியா கொடுத்தா. அதுவும் சரியா பட்டதால நான் அங்க வரல”
“பட் நான் இல்லாமலே முடிஞ்சிடுச்சு. நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் ஒரு வாரம் தான் இருந்துச்சு. என்னால முடிஞ்ச வர ட்ரை பண்ணேன் இத ஸ்டாப் பண்ண”
“உன் நம்பர் கேட்டேன். உன்கிட்ட பேசலாம்னு. ஆனா அம்மா உங்கிட்ட பேச முடியாத மாதிரி பண்ணிட்டா”
“Facebook, LinkedIn’ல உன் நேம் போட்டெல்லாம் சர்ச் பண்ணி பாத்தேன். நிறைய ஸஜஷன்ஸ் (suggestions). கண்டு பிடிக்க முடில. நம்பி சித்தி பையன் (நந்தினி ’s மாமா பையன்) ட்ட FB’ ல கேட்டப்ப ரெண்டு நாளைக்கு அப்பறம் அவன் கொடுத்தான். பை தட் டைம், ஐ ஸ்டார்டட் அன்ட் வாஸ் ஃபிளையிங் ஃபிரம் ஹியர் (By that time I started and was flying from here)”
“இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் சொன்னா உன் லைஃப் என்னவாகும்னு ஒரு உறுத்தல். எல்லாம் முடுஞ்சது” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவள் கண்களில் கண்ணீர்.
“Sue’வ என்னால மறக்க முடில. இந்த லைஃப்ல அட்ஜஸ்ட் ஆகவும் முடில. உண்மைய சொல்லணும்னா இப்பகூட அவள பாத்துட்டு தான் வரேன்” என்றான்.
“நீங்க இன்னும் அவங்கள லவ் பண்ணுறீங்களா?” என்று அழுதுகொண்டே அவள் கேட்க
“என்னால மறக்க முடில” என்றவனின் போன் அடித்தது. அவன் அவளை பார்க்க அவள் புரிந்துகொண்டாள் அது Sueவிடம் இருந்து என்று!!!!

cud feel the pain🙄😷😪 life is uncertain always!! Super preethi❤
Awwe ❤️❤️ True da…