Preethi S Karthikமறந்துபோ என் மனமே - 1

Maranthupo En Maname1-1

மறந்துபோ என் மனமே(1) – 1

எல்லாம் முடிவடைந்தது. அவள் சம்மதம் கேட்காமலே. ஒரு போட்டோவிலும் சிறு புன்னகை இல்லை.

உறவினர்கள் அவர்கள் வந்த வேலையை சரியாக செய்தனர், கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு. ஒருவர் கூட ஒரு நிமிடம் என்னிடம் என் சம்மதம், என் விருப்பத்தை கேட்கவில்லை.

“நந்தினி” என்ற ஒரு சத்தம் பலமாக அழைக்க கண்கள் திறந்திருந்தும் விழித்தெழுந்தேன், மன ஓட்டத்திலிருந்து.

என் அம்மா கத்த, நான் அவர் பக்கம் திரும்பினேன். அவர் சாஸ்திரிகளை பார்க்கச்சொல்லி கண்ணசைத்தார். “அம்மா கனவு கண்டது போதும் இந்த மாலையை உன் ஆம்பளையான் கழுத்துல போடு” என்றார் சாஸ்திரிகள்.

மாலையை வாங்கிக்கொண்டு திரும்பினேன். அவன் வாட்ட சாட்டமாக அமர்ந்திருந்தான். மாலையை போட்டுவிட்டு திரும்பினேன் முகம் கூட பார்க்காமல். அடுத்த அரை மணி பல சடங்குகள். கழுத்தில் மஞ்சள் கயிறு.

அவன் கையை சுற்றி என் நெற்றியில் குங்குமம் வைத்தான். பின் மெட்டி அணிவித்து சில சடங்குகள். என் உயிரை ஏன் இப்படி வாங்குகிறார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.

அம்மாவின் சந்தோஷம் மறுபக்கம். ஒரு வழியாக எல்லா சடங்குகளும் முடிந்தன. இரவு எட்டி பார்க்க

“நந்தினி நீ ரூம்க்கு போய் ரெடி ஆயிட்டு வாம்மா” என்றார் என் மாமியார் புன்னகையுடன். ப்ராச்சி , சுபா என்னை பின்தொடர்ந்தார்கள்.

“ஹே உன்னோட பிரச்சனை என்ன நந்து. அவரும் அவர் குடும்பமும் நல்லவங்க போல தான் இருக்காங்க. எனக்கு எதுவும் தப்பா தெரில. யு மஸ்ட் அக்ஸப்ட் தி லைப் வித்தவுட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்” என்றாள் என்னுடைய வடநாட்டு தோழி ப்ராச்சி. பதிலுக்கு அவளை ஒரு பார்வை பார்த்தேன்.

“சும்மா என் எதிர்பார்ப்பு, என் கடமைனு உளறிட்டு இல்லாம நிஜத்துக்கு வா. ஆண்ட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால, கல்யாணம் சீக்கரம் முடிவு பண்ணிட்டாங்க. அதிலென்ன தப்பு இருக்கு” என்றாள் சுபா.

நான் பதில் பேசும்முன் என் அத்தை உள்ளே அழையா விருந்தாளியாக. “ஏன்டி மா உங்களுக்கு வீட்டுக்கு நேரம் ஆகலையா. நீங்க கிளம்புங்க நான் பாத்துக்கறேன்” என்றார் என் தோழியரிடம்.

“இது தான் உன் வாழ்க்கை. யு மஸ்ட் அக்ஸப்ட் அன்ட் மூவ் ஆன். நாளைக்கி உன்கிட்ட நான் பேசறேன்” என்றாள் ப்ராச்சி. தலையசைத்தேன். சுபா என் கன்னத்தில் முத்தமிட்டு, ஆல் தி பெஸ்ட் கூறி இருவரும் வெளியேறினார்கள்.

அத்தை எதோ பேசிக்கொண்டே என்னை முதல் இரவுக்காக தயார் செய்தார். அம்மா உள்ளே வந்தாள் ஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு.

“அண்ணி, உங்கள அண்ணா கேட்டுட்டு இருந்தார். நீங்க போங்க. நான் அவளை அனுப்பி வைக்கிறேன்” என்றாள் அம்மா.

“இவருக்கு வேற வேலையே இல்ல. சரிடி நீ பக்குவமா நடந்துக்கோ. பாத்து அனுப்பிவைடி வனஜா” என்றாள் என்னிடமும், அம்மாவிடமும். பிடிக்காத புன்னகையுடன் தலையாட்டினேன். அவர் வெளியே செல்ல

“அம்மா எனக்கு இது வேணாம்மா. அவருகூட இதுவரைக்கும் பேசக்கூட இல்ல. இப்படி திடீர்னு அனுப்பினா நான் என்ன செய்வேன்” என்றேன் அழுதபடி.

“ஏன்டி இப்படி இருக்க? இனி இதுதான் உன் வாழ்க்க. எத்தன நாள் உன் கல்யாணம் நல்ல படியா நடக்கணும்னு வேண்டிட்டேன்னு உனக்கே தெரியும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவங்களா இருகாங்க”

“அதுனால நீ மூஞ்ச தூக்கி வெச்சுக்கிட்டாலும் ஒன்னும் பெருசா எடுத்துக்கல. அவங்கள ஏதாச்சும் நினைச்சுக்க வெச்சுடாத. அப்பா இல்லாம தப்பா வளர்த்துட்டேன்னு நினச்சுடுவாங்க. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்” னு முடிக்கறதுக்குள்ள அம்மாக்கு அழுகை தாங்கல.

அம்மாவை கட்டிட்டு நானும் அழ ஆரம்பிச்சுட்டேன். “அழாதமா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்றாள் அம்மா. “சரி மா. நீ பீல் பண்ணாத. நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிமுடிக்கும் முன்

“நந்தினி” னு ஒரு சத்தம். “உன் மாமியார் தான் கண்ண துடைச்சுக்கோ” என்றாள் அவசர அவசரமாக. “என்ன அம்மாவும் பொண்ணும் பேசிட்டு இருக்கீங்க” என்றார் என் புது அத்தை ஸ்ரீமதி.

“ஒன்னும் இல்லைங்க. நல்ல படியா நடந்துக்கோனு சொன்னேன்” என்று கண் துடைத்துக்கொண்டே அம்மா சொல்ல,

“நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாங்க. இந்த காலத்து பொண்ணுங்க சோ சோசியல் . US போய்ட்டா அவங்க இரண்டுபேரும் தான். அட்ஜஸ்ட் ஆய்டுவாங்க” என்று சொல்லிட்டு என்னை பார்த்து “ரெடியாமா” என்றார் சிரித்துக்கொண்டே.

நான் தலை அசைத்தேன். “இந்தா இத பிடி” என்று அந்த மினி ஜக்கை (mini jug) அம்மா குடுக்க,

இருவரும் என்னை அழைத்துக்கொண்டு ஒரு அறையினுள் அனுப்பினார்கள்.

உள்ளே படுக்கை நிறைய பூக்கள். அருகில் சில பழங்கள். யாரும் இல்லை என்பது போன்று நிசப்தம். ஜக்கை டேபிள் மேல் வைக்கும் போது, உள்ளே கதவு திறக்கும் சத்தம்.

வேஷ்டி அட்ஜஸ்ட் செய்துகொண்டு சற்று தலையை நிமிர்த்தியபடி ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்த ராம் என்னை பார்த்தான்!!!

3 thoughts on “Maranthupo En Maname1-1

  • Saro Kumaran

    எதனால உங்களோட மத்த storya படிக்க முடியவில்லை. படிக்கனும்னா நான் என்ன பண்ணனும்

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved