MaranthupoEnManame1-4
மறந்துபோ என் மனமே(1) – 4
23 மணிநேர பயணத்திற்கு பின் Peoria, Illinois’யில் உள்ள ராம் வீட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.
அது ஒரு பெரிய கம்யூனிட்டி. தனி வீடுகள் மற்றும் பெரிய லான்என அழகாக காட்சி அளித்தது. இலையுதிர் காலம் என்பதால் இன்னும் அழகாக தெரிந்தது நந்தினிக்கு.
அவன் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல அவள் பின்தொடர்ந்தாள். ஹால், கிட்சேன் , காட்டிய பின், க்ரௌண்ட் ஃபிலோர் பெட் ரூமை காட்டினான். “இந்த ரூம் நீ எடுத்துக்கோ. பாத்ரூம் உள்ளேயே இருக்கு . நான் மேல பெட்ரூம் use பண்ணிக்கறேன். சோ உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான் ஃபிரெஷ் ஆயிட்டு வரேன்” என்று சொல்லி வெளியே சென்ற ராம் திரும்பி
“உனக்கு எது வேணும்னாலும் தயங்காம கேளு ” என்று சொல்லிட்டு பட படவென படி ஏறி சென்றுவிட்டான்.
“இது எதிர்பார்த்தது தான். அங்கேயே ஒன்னும் பேசல இங்க வந்தப்பறம் மட்டும் மாறிடுமா” என்று நினைத்துக்கொண்டாள்.
கிளைமேட் கொஞ்சம் குளிராகவே இருந்தது. அவள் குளித்துவிட்டு ஃபிரெஷ் ஆனாள்.
“சமயலறைக்கு சென்று என்ன இருக்கு பார்க்கலாம்” என்று யோசித்துக்கொண்டு அவள் வெளியே வர ராம் சோபாவில் ரெடியாக உட்கார்திருந்தான்.
“இந்த கார்டு நீ வெச்சுக்கோ. ஏதாச்சும் வாங்கணும்னா யூஸ் பண்ணிக்கோ. இந்த பவுச்ல சில membership cards இருக்கு, கொஞ்சம் டாலர்ஸும். வெளிய போறப்ப எடுத்துக்கோ. கிச்சன்ல கொஞ்சம் rரேஷன் இருக்கு” என்றவனை குறுக்கிட்டாள் நந்தினி.
“இந்த இடத்துல எனக்கு எதுவும் தெரியாது. நான் எப்படி போய் வாங்கறதுனு தெரில” என்றவளை
“ஹ்ம்ம். ஈவினிங் டைம்ல யு கேன் ரோம் அரௌண்ட் . இங்க இந்தியர்கள் கொஞ்சம் ஜாஸ்தி. நீ அவங்களோட பேசி பழகிக்கோ. ஏதாச்சும் அவரசமா தேவப்பட்டுச்சுனா எனக்கு மெசேஜ் பண்ணு. ஐ வில் கெட் இட் ” என்று சொல்லும்போது காலிங் பெல் சத்தம்.
ராம் கதவை திறக்க “என்னடா ராம் இப்படி பண்ணிட்ட. ஜேசன் நீ யாரோடயோ வந்துருக்கனு சொன்னான். உன்ன என் பையன் போல பாத்துட்டேன். நீ என்னனா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கற ஒரு வார்த்த கூட சொல்லாம, தள்ளு” சொல்லிக்கொண்டே பார்வதி ஆண்ட்டி உள்ளே வந்தார்.
“நீதானா. தங்க விக்கிரகம் மாதிரி இருக்க. உன் பேரு என்னமா?” என்று நந்தினி இடம் கேட்க
“நந்தினி” என்றவள் மனதில் “அப்பா இந்த ஊரிலும் நம்ம ஆளுங்கள பாக்க நிம்மதியா இருக்கு”
“இவங்க பார்வதி ஆண்ட்டி. என்னோட பாஸ் ஓட மனைவி. பக்கத்துல தான் இருக்காங்க” என்று ராம் சொல்ல
“24 வருஷம் இங்க தான்” என்றார் பார்வதி ஆண்ட்டி.
“இன்னும் அவளையே நினைச்சுட்டு இல்லையே. பழசெல்லாம் மறந்துட்டு புதுசா லைப் ஸ்டார்ட் பண்ணு. இங்க வீட்ல என்ன இருக்குனு தெரில. நான் போய் ஸ்வீட் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிட்டு ஆண்ட்டி வெளிய போக, ராம் அவளை தயங்கி தயங்கி பார்த்தான்.
அவள் முகத்தில் குழப்பம் .. பதட்டம் .. பயம் ..
“நான் கொஞ்சம் வெளிய.. போயிட்டு.. வரேன்.. உனக்கு எதாவது வேணுமா” என்று தயக்கத்தோடு ராம் கேட்க “வேண்டாம்” என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் அவன் முகம் பார்க்க பிடிக்காமல்.
——————————-
“என்ன கேட்டேன் என்பதை என்னால நம்ப கூட முடில. ஆண்ட்டி அவளையே நினைச்சுட்டு இல்லையே கேட்டாங்களே”
“யாரது? யார்ட்ட கேக்கறது. இதுனாலதான் அவரு சரியா பேசறதில்லயா?”
“அப்போ இந்த கல்யாணம் எதுக்கு? நான் எதுக்கு இங்க?” என்ற கேள்விகளோடு கண் கலங்கி, மனம் தளர்ந்து நின்றாள். சிறிது நேரத்தில் மறுபடியும் காலிங் பெல் அடித்தது.
அவள் பார்ப்பதற்குள் பார்வதி ஆண்ட்டி உள்ளே வந்தார்.
“கதவ ஏன் திறந்தே வெச்சுருக்க. அவன் இல்ல?” என்று கேட்டுட்டே வந்த ஆண்ட்டி அவள் கண்களில் கண்ணீரை பார்த்துவிட்டு
“ஏம்மா அழற? எதாவது உன்ன சொல்லிட்டானா. ஏய் ராம் ஏன் அழறா இவ” என்று கேட்க
“அவரு இல்ல ஆண்ட்டி. வெளிய போய்ட்டாரு” என்றாள்.
“எங்க போனான் உன்ன தனியா விட்டுட்டு அவன்? நீ என் வீட்டுக்கு வா. அவன் வந்தஉடனே உன்ன கூப்பிட்டுக்க சொல்றேன்” என்று அவள் கண் துடைத்து சொல்ல
“இல்ல ஆண்ட்டி, என்னால உங்களுக்கு எதுக்கு சிரமம். எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்” என்றாள் நந்தினி.
“சிரமமெல்லாம் இல்லமா. உனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னா எடுத்துக்கோ. டின்னெர்க்கு வந்துடுவானா அவன்?” கேட்க,
“தெரில ஆண்ட்டி” என்றாள்.
“இந்த ஸ்வீட் அங்க வைக்கறேன் நீ எடுத்துக்கோ. கதவை கிளோஸ் பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொல்லிட்டு ஆண்ட்டி சென்றார்.
——————————
ராம் அந்த பார்க்குக்கு செல்ல, “ராம்” என்று மகிழ்ச்சியுடன் பின்னே வந்து அணைத்தாள் Sue!!!

Aaha attagasam.