Maranthupoenmaname1-6
மறந்துபோ என் மனமே(1) – 6
என்ன செய்வதென்று தெரியாமல் ஆண்ட்டிக்கு போன் செய்தான்.
“சொல்லுடா. வீட்டுக்கு வந்துட்டயா? ரொம்ப பாவமா இருக்காடா அந்த பொண்ணு” என்றவரிடம்
“ஆண்ட்டி கொஞ்சம் அவ வீட்ல என்ன செய்றானு பாக்க முடிமா? நான் கூப்பிட்டேன் அவளை ஆனா போன் எடுக்கல” என்று சொல்ல
“டேய் நீ எங்கடா இருக்க இப்போ?” என்று அதட்டி கேட்க
“அதுவந்து நான் சிக்காகோலா (Chicago) இருக்கேன் ஆண்ட்டி. Sue போலாம்னு சொன்னதால” என்றவனை குறுக்கிட்டு
“அட பாவி நீ இன்னும் திருந்தலயா, உன்ன…”
“இவளோ டிலே ஆகும்னு நினைக்கல ப்ளீஸ் நீங்க கொஞ்சம் பாக்கறீங்களா”
“சரி. சரி நான் திரும்ப கூப்பிடறேன்” என்று கட்செய்த்துவிட்டு ராம்
வீட்டு மெயின் டோர் பக்கம் சென்றார். காலிங் பெல் அடிக்க அவள் வரவில்லை. இரண்டு முறை ட்ரை செய்தபிறகு பதில் இல்லாததால் ராம்கு போன் செய்ய ராம் ஒரு வினாடி விடாமல் அட்டென்ட் செய்தான்.
“அவள பாத்திங்களா ஆண்ட்டி?” என்று பதட்டத்துடன் கேட்க
“அவ கதவை திறக்க மாட்டேங்கற. ஏன் இப்படி பண்ற ராம்? இன்னிக்கு தான் வந்துருக்கா. இன்னிக்கே அவள தனியா விட்டுட்டு போணுமா?” என்றார் கோவமாக.
“ஆண்ட்டி அது வந்து”
“நீ சீக்கரம் வா. ஐ காண்ட் ஸ்டான்ட் ஹியர் அன்ட் கீப் ரிங்கிங் தி பெல். யாருக்காச்சும் சந்தேகம் வந்ததுன்னா தேவையில்லாத ப்ரோப்லேம். கம் ஃபாஸ்ட்” என்று அழைப்பை துண்டித்தார்.
ராம் மிகுந்த பதட்டத்துடன் டேபிள் வர “ஆர் யு ஒகே? மொதல்ல சாப்பிடு” என்றாள் Sue.
“Sue, வி ஹவ் டு ஸ்டார்ட் நௌவ். ஆண்ட்டி கால் பண்ணாங்க. நந்தினியை பாக்கபோனாங்க போல, பட் அவ கதவை திறக்கலை. சோ நம்ம கிளம்பலாம்” என்றான் பதற்றம் நிறைந்த நிலையில். Sue முகம் மாறியது.
“கொஞ்சமாவது சாப்பிடலாம்ல” என்றாள். “ஐ காண்ட் ஈட் நௌவ். நீ சாப்பிடல. குட். கிளம்பலாம்” என்றான் அவள் பக்கம் கூட திரும்பாமல் பில் கட்ட.
இருவரும் காரில் ஏற எதுவும் பேசாமல் 80 டு 100MPH ஸ்பீட்டில் 100 நிமிடத்தில் Peoria வந்தடைய
“ராம் கேன் யு ட்ரோப் மீ அட் மை ஹோம்? என்னோட கார் பார்க்ல இருக்கு” என்றாள் Sue. நைட் 10.30 மணி என்பதால் தனியாக விட மனதில்லாமல் அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டான்.
“முடுஞ்ச நாளாகி காலைல வரையா? என்னோட கார் எடுக்க” என்று கேட்க ராம் தலையசைத்தான். அவள், அவன் விண்டோ பக்கம் வந்து அவன் கழுத்தை கட்டி “சி யு” என்றாள்.
அவன் பெரிதாக ஆர்வம் காட்டாமல் “bye” கூறிவிட்டு காரை கிளப்பினான். அடுத்த பத்து நிமிடம். வீட்டை அடைந்தான். கார் பார்க் செய்துவிட்டு வீட்டை நோக்கி வேகமாக சென்றான்.
“அய்யோ அவள் டோர் பூட்டாமல் இருந்தா பரவாயில்லையே” என்று நினைத்துக்கொண்டு அவனிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறக்க முயற்சிக்கும்போது போன் கால் வந்தது. Sue’விடம் இருந்து. அவன் எடுக்கவில்லை.
“தேங்க் காட். கதவு திறந்துடுச்சு” என்று நினைத்தபடி பெரு மூச்சு விட்டு உள்ளே சென்றான். மறுபடியும் கால் வந்தது.
“இவளை என்ன செய்ய” என்று முணுமுணுத்துக்கொண்டு போனை எடுத்தான். ஆண்ட்டி போனை செய்தார்கள். போன் எடுத்து அவர்கள் பேசும்முன்,
“ஆண்ட்டி ஐ ஜஸ்ட் ரீச்ட் ஹோம். அவளை பாத்துட்டு கால் பண்றேன்” என்றான்.
“சரிடா, பாத்துட்டு கால் பண்ணு” என்று போனை வைத்தார். ராம் பதட்டத்துடன் அவள் ரூமுக்குள் செல்ல, அவள் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்.
அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். அவளை நோக்கி சென்று பார்த்த போது அவள் கட்டிலில் சலனமில்லாமல்!!
