Preethi S Karthikமறந்துபோ என் மனமே - 1

MaranthupoEnManane15

மறந்துபோ என் மனமே(1) – 5

ராம் என்று மகிழ்ச்சியுடன் Sue பின்னே வந்து அவனை கட்டிக்கொள்ள, அவன் தன்னை அவளிடம் இருந்து விடுவித்து கொண்டான்.

sue அவனிடம் ஆங்கிலத்தில் அர்ச்சனையை ஆரம்பித்தாள்.

“ராம் நான் உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன். எனக்கு இதை எப்படி உன்னால பண்ண முடுஞ்சுது ?” என்று ஷர்ட் பிடித்து உலுக்கினாள்.

“Sue ப்லீஸ். நான் இங்க இருந்தப்பவே என்னோட நிலைமைய உன்கிட்ட சொன்னேன். ஐ நோ இட் ஹர்ட்ஸ். இந்தியா போகறதுக்கு முன்னாடியே உன்கிட்ட சொன்னேன் இனி இது சரிவராதுனு. எஸ், ஐ டிட் லவ் யூ. பட் இப்போ …” என்றவனை குறுக்கிட்டாள்

“வாட் ??? ஐ டிட் லவ் யூ??? அப்படினா?… இப்போ என்ன மறந்துட்டு உன்னோட வைஃப்வ லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட… இல்ல?” கோவமாக கேட்டாள்.

“ஐம் சோ ஸாரி. நம்மளோட இந்த ரிலேஷன்ஷிப் இதுக்கு மேல எடுத்துட்டு போறது பெரிய தப்பு. அது உங்க ரெண்டு பேருக்கும் நான் செய்ற துரோகம்”

“என்னால அவகூட சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரில. அதுவும் உன்ன மறந்துட்டு. எல்லாமே கைய மீறி போனமாதிரி இருக்கு. ” என்றான் Ram. “eஎன்கூட பேசறதை நிறுத்திடுவயா ராம் ?” என்றாள் ஏக்கத்தோடு.

“மொதல்ல நம்ம எப்படி நல்ல நன்பர்களா இருதோமோ அப்படியே இனியும் இருக்கலாம் sue உன்ன இனியும் நான் கஷ்ட படுத்த விரும்பல” என்றான் சலனமில்லாமல்.

“என்னால உன்ன எப்படி மறந்துட்டு இருக்க முடியும்னு தெரில ராம்” என்று இறுக்கத்துடன் கண்ணீரோடு கூறினாள்.

“ஆல் ரைட் நாம நைட் டின்னர் சாப்பிட எங்கயாச்சும் போலாமா?” என்று அவளை dடைவர்ட் செய்ய கேட்க “இண்டியன் கார்டன்” என்றாள் மலர்ச்சியுடன் சாப்பிட அவனுடன் செல்வதை நினைத்து.

வீட்டில் இருந்த நந்தினியை நினைத்து சற்று தயங்க “என்ன ஆச்சு ?” என்று Sue கேட்க “ஒன்னுமில்ல , போயிட்டு சீக்கரம் வந்துடலாம்” என்றான் நந்தினியை மனதில் நினைத்து.
————–
“கல்யாண பேச்சு sஸ்டார்ட் பண்ணதிலிருந்து ஒரு tடைம் கூட பேசல. அப்போ இத மறைக்க தான் பேசல. இது தெரியாம அம்மா அவரு ரிசர்வ்ட் டைப்பா இருப்பாரு அதான் பேசலானு வேற”

“அத்தையோட சொந்தம். so அம்மா பெருசா எடுத்துக்கல போல. ஒன்னும் புரியாத இந்த ஊருக்கு கூட்டி வந்துட்டா பிரச்னை இல்லனு எல்லாம் அமைதியா முடுச்சுட்டாங்க”

“நான் யார்ட்ட சொல்லுவேன். அப்பா போனதுக்கப்பறம் அம்மா என்னசொன்னாளோ அதையே கேட்டுட்டேன்”

“எனக்கு Fine Arts படிக்கணும்னு ஆசை ஆனா அம்மா பைனான்ஸ்னு சொன்னா. அவ கஷ்ட படக்கூடாதுனு சரினு சொன்னேன்”

“பரதநாட்டியம் அரங்கேற்றம் பண்றேன்னு சொன்னேன். பின்னாடி கல்யாணத்தபோ ஆட்டக்காரி, வீட்டுக்கு அடங்கமாட்டானு சொல்லி வேணாம்னு சொல்லிடுவாங்கனு சொல்லிட்டா”

“அவங்ககூட பக்கத்துலயே கல்யாணத்துக்கப்பறம் இருந்துக்கறேன்னு சொன்னேன். ஆனா இந்த அத்தை கேக்காம இத முடிவு பண்ணாங்க”

“இப்படி எல்லாரும் அவங்க நினச்சபடி பண்ணிட்டு, என்ன நான் நினச்சபடி வாழ விடல. இப்போ தனியா நான் இங்க இருக்கேன்” என்று அழுது கொண்டிருந்தாள்.
—————–
“லாஸ்ட் டைம் வந்தப்ப லாம்ப் (lamb ) இல்லனு சொல்லிட்டாங்க. இப்போ ஆர்டர் பண்ணவா?” என்று Sue கேட்க “லாம்ப் செய்ய நேரமாகுமே. வேறுஏதாச்சும் ஆர்டர் பண்றயா?” என்றான் மறுபடியும் நந்தினியை நினைத்துக்கொண்டு.

Sue அதை புரிந்துகொண்டு “உம்ம்ம். என்கூட டைம் ஸ்பென்ட் பண்ண பிடிக்கலையா?” என்றாள் வருத்தத்துடன்.

“சரி நீ ஆர்டர் பண்ணு. நான் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான்.

“டைம் ஆகும்னு சொல்லலையே. என்ன பண்றானு தெரில. கால் பண்ணலாமா? சரி” என்று டயல் செய்ய போன் எடுத்தான் ஆனால் கால் வந்தது. Sue’விடமிருந்து. அவன் கோபத்துடன் திருப்பி வர “என்ன ஆச்சு உனக்கு. கொஞ்ச நேரம் என்ன விட மாட்டியா?” என்றான் சிடுசிடுவென.

“ஹே உனக்கு என்ன ஆர்டர் பண்ணனும்னு கேக்க தான் கால் பண்ணேன். ஏன் வித்யாசமா நடந்துக்கற இன்னிக்கி? இந்த மாதிரி நீ மூஞ்ச காட்டினதே இல்லையே” கேட்டாள் சற்று ஆதங்கத்துடன்.

“சாரி. நீயே ஏதாச்சும் ஆர்டர் பண்ணு” என்றான்.

“உனக்கு பிரியாணி பிடிக்கும்ல அதே சொல்லிடறேன் ” என்று ஆர்டர் சொல்லிவிட்டு “ராம் நீ முன்ன மாதிரி இல்ல. இந்த மாதிரி இரிடேட் ஆனதே கிடையாது” என்று சொல்ல “ட்ராவல் ஜெட் லாக்கா (jet lag ) இருக்கும்” என்று இஷ்டமில்லாமல் பொய் சொன்னான் அவளிடம்.
——-
“அட்லாஸ்ட் ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கி லாம்ப் சாப்பிடறேன். பிரியாணி எப்படி இருக்கு?” என்று கேட்க அவன் நந்தினியை பற்றி யோசித்துக்கொண்டிருந்தான்.

“ஹலோ. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றாள் அழுத்தமாக.

“ஆர் யு ஒகே. யு டோன்ட் சீம் டு பி நார்மல். என்ன ஆச்சு?” என்று அவள் கேட்க “தெரில. ட்ராவல்ல இருந்ததால ஒரு மாதிரி பெரட்டுது இதோ வந்துடறேன்” என்று சொல்லிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான்.

“அவகிட்ட பேசியே ஆகணும். அவளை தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாது. ஆண்ட்டி Sue பத்தி சொன்னப்பவே அவகிட்ட sue பத்தி சொல்லியிருக்கனும் இல்ல அவக்கூடவே இருந்துருக்கனும் ” என்று நினைத்தவன் வீட்டு நம்பருக்கு அடித்தான்.

15 வினாடிகள். முழு ரிங் சென்றது. யாரும் எடுக்க வில்லை. Voice mail’க்கு சென்றது.

மறுபடியும் tட்ரை செய்தான். பதில் இல்லை. சற்றே பதட்டமடைந்தான் நந்தினியை நினைத்து!!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved