Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 43

தனிப்பெரும் துணையே – 43

#trigger_warning (few places) #readers_discretion_advised

ப்ரியாவால் அவன் கோலத்தை பார்க்கமுடியவில்லை.

கண்களில் கண்ணீருடன்… “என்னண்ணா ஆச்சு இளாக்கு. ஏன் இப்படி படுத்துருக்கான்?” குமாரிடம் கேட்டாள்.

“செடேடிவ்ஸ் குடுத்துருக்காங்க ப்ரியா. ரொம்ப ஸ்ட்ரெஸ்ட் ஆஹ் ஃபீல் பண்ணிருப்பான் போல. நான் சொல்றத விட இதை டாக்டர் உன்கிட்ட சொன்னா கரெக்ட்’டா இருக்கும்னு தோணுது. இளாக்காக அவர் ஸ்பெஷல் கேர் எடுத்துக்கறாரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. இங்க ஹிரானந்தாணி’ல தான் இருக்காரு. வந்துடுவார்” என்றவன் மருத்துவரை அழைக்க செவிலியரிடம் சென்றான்.

ப்ரியா மூடப்பட்ட கதவு வழியே உள்ளே அவனை பார்த்தாள். உடல் முழுவதும் ஒரு வித பயத்தில் சில்லிட்டது. பல நாள் தூங்காதவன், தூங்குவதுபோல படுத்திருந்தான்.

‘ஏன் இளா என்கிட்ட சொல்லல எதுவுமே. நான் உன்ன விட்டு போய்டுவேன்னு நீ எப்படி நினைச்ச? கோபத்தோடு போனேன் தான். யார்மேலயுமே என்னால ரொம்ப நாள் கோபத்தை வெச்சுக்க முடியாதுடா. மனசு சரி ஆனாவுடனே வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள என்ன பண்ணி வச்சுருக்க?’ மனதில் ஒருவித வலி… அவனை அந்த நிலையில் பார்க்கும்போது.

சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்தார் IIT பாம்பே மருத்துவமனையின் மனநல மருத்துவர். கிட்டத்தட்ட அறுபதை கடந்த வயது.

“ஹலோ டாக்டர். இவங்க ப்ரியா. இளா’ஸ் வைஃப்” என்று அறிமுகப்படுத்தினான் குமார் ஹிந்தியில்.

“ஓ. இசை?” என்று அவர் புன்னகைக்க, ப்ரியா சின்ன தலையசைப்புடன்… “இசைப்ரியா” என்றாள்.

“தேங்க்ஸ் குமார் இவங்ககிட்ட தான் பேசணும்னு இருந்தேன்” மருத்துவர் சொன்னவுடன், குமார் “ஐ நோ டாக்டர். அவங்களும் இளா பத்தி தெரிஞ்சிக்க நினைக்கறாங்க” என்றவன் இருவரிடமும் சில நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டான்.

“சோ இசை. சொல்லுங்க ஹவ் ஆர் யு” என்று மருத்துவர் ஆரம்பிக்க, “டாக்டர் இளா’க்கு என்ன ஆச்சு?” அவளுக்கு அதுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

“சொல்றேன். பட் நீங்க ப்ரெக்னென்ட். ஐம் ஜஸ்ட் வரீட் அபௌட் யுவர் ஹெல்த். வீட்ல பெரியவங்க யாராச்சும் இருக்காங்களா?”

ப்ரியா வெற்றுமுகத்துடன்… “டாக்டர். எதாயிருந்தாலும் சொல்லுங்க. இளாக்கு எப்பவுமே நான் தான்” என்றாள் ‘என்னால் எதுவும் தாங்கிக்கொள்ளமுடியும்’ என்ற தொனியில்.

மருத்துவர் புன்னகையுடன், “அது தெரியுமே. அவர் சொன்னதுல, ஏன் நினைக்கறதுல கூட நீங்க மட்டும் தான் இருக்கீங்க. எப்பவுமே இசை புராணம்” என்றவுடன், ப்ரியாவின் கண்கள் கலங்கியது.

அவனிடம் ‘உன்னை காதலித்ததற்கு வருந்துகிறேன்’ என்று சொன்ன வாக்கியம் இப்போது ஈட்டியால் குத்தியதுபோல ஒரு உணர்வு அவளுள்.

“ஓகே இசை. இளன் ஒரு ரெண்டுநாள் முன்னாடி இங்க வந்தாரு அவர் எதுக்காக வந்தாருன்னு உங்களுக்கு தெரியுமான்னு தெரியல” என்றவர் சற்று நிறுத்தி… “சூசைடல் தாட்ஸ் வருதுன்னு சொல்லி வந்திருந்தார்” என்றதும் ப்ரியா அதிர்ந்து “டாக்டர்” என்று கத்த, திடீரென தலையை சுற்றியது அவளுக்கு.

உடனே அவர் அவளை ‘சாப்பிட்டாயா’ என்று சோதித்துவிட்டு கேட்க, அதை எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து “டாக்டர் இளா கண்டிப்பா அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டான் டாக்டர்” என்றாள் கண்ணீருடன்.

“ஸீ இசை. யு ஹவ் டு பி ப்ரேவ். இந்த சின்ன வயசுல அதுவும் இந்த மாதிரி நேரத்துல சொல்ல கஷ்டமா தான் இருக்கு பட் ஆப்ஷன்ஸ் இல்ல” என்றவர் செவிலியரை உணவு வாங்கிவரச்சொன்னார்.

அவளை வற்புறுத்து சாப்பிட சொல்ல, “உங்களுக்கு நேரம் ஆகிடும் டாக்டர். நீங்க சொல்லுங்க” என்றாள்.

அவளை உணவு உண்ண சொன்னவர், “இளன் என்னோட ஸ்பெஷல் கேர்’ல இருக்கார். சோ ப்ரப்ளம் இல்ல. நீங்க சாப்பிடுங்க” என்றவர், அவள் சாப்பிடும் வரை காத்திருந்துவிட்டு, பேச ஆரம்பித்தார்.

“ஹி இஸ் டிஃப்ரெண்ட். இதுபோல வர்றவங்க வாழ பிடிக்கலன்னு சொல்லுவாங்க இல்ல வாழணும்னு ஆச இருக்குனு சொல்வாங்க. இவரும் வாழணும்னு சொன்னார் அதுக்கான ரீசன் நீங்க தான்” என்று நிறுத்த, “என்கூட வாழணும்னு சொன்னானா டாக்டர்” கண்ணீருடன் அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்தார்.

ப்ரியா புரியாமல் பார்க்க, ” அவருக்காக வாழ விருப்பமில்லை. ஹி வான்ட்ஸ் யு டு பி ஹாப்பி. அவர் ஏதாச்சும் இதுபோல பண்ணிட்டு… அது உங்களால லைஃப்டைமுக்கும் மறக்க முடியாம போய்டுமாம். அவர் ஞாபகமாவே இருக்க வாய்ப்பு இருக்காம். அந்த வலிய உங்களுக்கு தரக்கூடாதாம். அவரை மறந்து நீங்க வேற வாழ்க்கை தேடிக்கணுமாம். அந்த ரீஸன்னால மட்டும் தான் வாழணும்னு சொன்னார்” அவர் கூறியவுடன், ப்ரியாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

“இதைமட்டும் ஒரு பத்து தடவைக்கு மேல சொல்லியிருப்பார். மொதல்ல அவரை நார்மல் பண்ணணும்னு மெடிகேஷன்ஸ் கொடுத்தோம். கொஞ்சம் செட்டில் ஆனப்பறம், அவரை பத்தி… எது அவரை ட்ரிக்கர் பண்ணிச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்க நினைச்சோம். ஹி வாஸ் சோ கோவாப்ரேட்டிவ். அவர் பெர்மிஷன்’னோட அந்த செஷன் ரெக்கார்ட் பண்ணினோம். அவரோட சின்ன வயசுல இருந்து நடந்தது எல்லாமே சொன்னார்” என்ற மருத்துவர், குறிப்பேட்டை பார்த்து…

“அவரோட அம்மா தவறினது, அப்புறம் அக்கா அவரை விட்டுட்டு போனது, ஸ்கூல்’ல எல்லாருமே அவரை தனியா ஒதிக்கிவெச்சது, அவரோட ஸ்கூல் டேஸ், அப்பறம் இந்துமதி ஃபிரெண்ட்ஷிப், காலேஜ், அப்புறம், அவங்க அக்காக்கும், ஃபிரெண்ட்க்கும் ஒரே சமயத்துல ஆன கல்யாணம், ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லாதது, உங்கள பார்த்தது, பழகினது, காதலிச்சது, கல்யாணம் பண்ணிட்டது, தென் உங்களுக்குள்ள வந்த ப்ராப்லம்ஸ், அவரோட பிஹேவியர் சேஞ்சஸ்ன்னு எல்லாமே சொன்னார். அதோட ரெக்கார்டிங்ஸ் இது. என்னோட தொழில் தர்மப்படி இதை உங்களுக்கு காட்டக்கூடாது. பட் ஐ வாண்ட் இளன் டு பி பேக். அது இப்போதைக்கு உங்களால மட்டும் தான் முடியும்” என்றவர் அவனிடம் நடந்த உரையாடலை போட்டு காட்டினார்.

ப்ரியா டைரியில் படித்ததுதான். ஆனால் அவன் பட்ட கஷ்டங்களை அவனே சொல்லும்போது மனம் துடித்தது.

டைரியில் படித்ததுவரை கண்ணீருடன் பார்த்தவள், அவள் சென்றவுடன் நடந்ததை அவன் சொன்னபோது, பதறிவிட்டாள்.

************************

ப்ரியா அவனை விட்டு சென்றவுடன், கிடத்தப்பட்ட பித்துப்பிடித்தவன் போல இருந்த செழியனுக்கு அடிக்கடி சில உருவங்கள் தெரிவதுபோலவே இருந்தது. பின் திடீரென கேட்கும் சத்தங்கள் அவனை பயப்படுத்தியது.

ப்ரியாவின் உடையை கையில் பற்றிக்கொண்டு, திடீரென சத்தம் கேடுக்கும்போதெல்லாம், சிலசமயம் கத்தியும், சிலசமயம் பயத்தில் வாயை மூடிக்கொண்டும் மூலையிலேயே உட்கார்ந்திருந்தான்.

ப்ரியாவின் ஞாபகம் நெஞ்சை அழுத்தியது. எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிவதுபோல இருந்தது.

அவளில் சிரித்த முகம், கோபமான முகம், என்று பலமுகங்கள் தெரிந்தாலும், கடைசியாக பயந்த முகம், அழுத முகம், அவன் முன்னே தெரிய, அந்த குரல் ‘உன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை’ என்று அவனை ஏளனம் செய்வதுபோல இருந்தது.

அவன் செய்யவேண்டிய ப்ராஜக்ட் மறந்து, சாப்பாடு மறந்து, தூக்கம் மறந்து, தன்னிலை மறந்து இருந்தவனுக்கு தலை உயிர்போவதுபோல வலித்தது.

யாரோ தலையில் கட்டையால் அடிப்பது போல உணர்வு. முன்பொருமுறை தூக்கமின்மை காரணமாக, மருத்துவரிடம் பரிசோதித்தபோது அவர் தந்த தூக்க மாத்திரை ஞாபகம் வர, அதை போட்டுகொண்டு தூங்க முயன்றான், ஆனால் அதுவும் உதவவில்லை.

அவனுக்கு நன்றாக தெரிந்தது. இதுவெல்லாம் மனநோயிற்கான அறிகுறிகள் என்று. உபயம் கூகிள்!

இதுபோல பயத்திலேயே அடுத்த இரண்டு நாட்களும் கழிய, அவனை தொடர்புகொள்ளமுடியாமல் குமார் வீட்டிற்கே வந்துவிட்டான்.

செழியனை பார்த்தவுடன் அதிர்ந்த குமார், ‘என்ன ஆயிற்று’ என்று கேட்க, எதுவும் சொல்லாமல் ‘உடல் சரியில்லை’ என்றான் செழியன். ப்ரியாவை பற்றி கேட்டபோது, ஊருக்கு சென்றுவிட்டாள் என்றான்.

வற்புறுத்தி, அவனை தன்னுடன் அழைத்துச்சென்றான் குமார். இதுவே முதல் முறை. இதுபோல மற்றொருவரின் இடத்திற்கு அவன் செல்வது. இதுவரை யாருடைய தேவையும் அவனுக்கு இருந்ததில்லை.

அடுத்த சில நாட்கள் குமாருடன் ஹாஸ்டலில் இருக்க, கொஞ்சம் மாற்றம் தெரிவதுபோல இருந்தது செழியனுக்கு.

அந்த சமயம் அவன் பலநாள் காத்திருந்த ஒரு பெரிய ரிசர்ச் நிறுவனத்தில் அவனுடைய ரிசர்ச் குறித்து ப்ரெசன்ட்டேஷன் செய்ய அழைப்பு வந்திருந்தது.

முதல் முறை வந்தபோது, செழியன் அதற்கு தயாராக இல்லை. இப்போது மறுபடியும் அவர்கள் அழைப்பு விடுக்க, ‘அவனால் முடியுமா?’ என்ற கேள்வி அவனுள்.

ஆனால் அவனுடைய டிபார்ட்மென்ட்’டில் அவனை கண்டிப்பாக கலந்துகொள்ள சொன்னார்கள். அதற்கு தயாராக, யோசனையுடனே வீட்டிற்கு அவன் வர, அந்த வீடே ஏதோ ஒரு பீதியை கிளப்பியது.

அந்த வீடு ப்ரியா இல்லாமல் ஏதோ சூனியம் சூழ்ந்த வீடு போல இருந்தது.

இப்போது எந்த குரலும் கேட்காதுபோல, எந்த உருவமும் தெரியாதுபோல உணர்ந்தான். அப்படியே இரவு தூங்கிவிட, திடீரென ப்ரியா பக்கத்தில் இருப்பதுபோல ஒரு உணர்வு.

ஆனால் அது வெறும் மாயை என்று தெரிந்ததபோது மனதில் அழுத்தம் மிகவும் அதிகமானது.

ஒரு முறை அவள் குரல் கேட்க, அவன் மனம் துடித்தது. ‘அவ்வளவு பேசி அனுப்பிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்து பேசுவாய்’ என்று நினைக்க, ஒரு உருவம் அவன் முன்னே வந்ததும், செழியனின் கண்கள் பயத்தை காட்டியது.

‘அவ பேசமாட்டா பார்க்கலாமா?’ என்று அது கேட்பதுபோல இருக்க… செழியன் பயந்தாலும், ‘இல்ல என் இசை பேசுவா’ என்று இல்லாத உருவத்துடன் பேசிவிட்டு, அவளை அழைக்க, ப்ரியா அழைப்பை எடுக்கவில்லை. பலமுறை அழைத்தான். பயனில்லை.

அந்த குரல் பலமாக சிரிக்க, “சிரிக்காத” என்று கத்தினான் செழியன். ஆனால் அந்த குரல் சத்தம் நின்றபாடில்லை. முதலில் கோவத்தில் கத்தினான். பின், அதனிடம் அழுது கெஞ்சினான் ‘சிரிக்க வேண்டாம்’ என்று.

தன்னிலை இப்படி ஆகிவிட்டதே என்ற எண்ணம் ஒருபக்கம்… தனக்கு பழையபடி யாருயில்லை என்ற எண்ணம் மறுபக்கம் அவனை உலுக்கியது.

ப்ரியாவின் புகைப்படத்தை பற்றிக்கொண்டு அவளையே பார்த்தான். ‘தன் வாழ்வை மாற்ற வந்தவள்’ என்ற ஆசை நிராசை ஆனதே என்ற ஏமாற்றம் அவனை முற்றிலுமாக உடையச்செய்தது. கத்தி அழுதான்.

அவள் குரல் கேட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் அவனை வலுவாக தாக்க, அவளை அழைத்தான். அழைப்பு அவளுக்கு செல்லவில்லை. ‘தன்னை வெறுத்துவிட்டாளோ???’ அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘அவளிடம் பேசியே ஆகவேண்டும்’ என நினைத்து தன் அக்காவை அழைத்தான். கவிதா மூலம் ப்ரியாவிடம் போன் சென்றது. ஆனால் அவள் பேசவில்லை.

‘அவள் மிகவும் எதிர்பார்த்த ப்ரெசென்ட்டேஷன் குறித்து சொன்னால் பேசுவாளோ’ என நினைத்து பேசினான். அதற்கும் பதில்லை. அவள் போனை வைத்துவிட்டாள்.

அவளின் இந்த மறுப்பு, இதயம் பிளந்துகொண்டு வெளியே வரும் வலி அவனுக்கு தந்தது.

மனதின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, திடீரென ஏதோ ஒன்று தன்மேல் ஊறுவதுபோல ஒரு உணர்வு. கைக்கொண்டு தட்டிவிட்டான். ஆனால் அது மேலும் மேலும் முன்னேறி கழுத்தை அடைந்ததுபோல உணர்வு.

பின் அது கழுத்தை நெரிப்பதுபோல உணர்ந்தவனால் மூச்சு விடமுடியவில்லை. ‘இசை… இசை என்கிட்ட பேசு இசை’ என்று பயத்தில் கத்தினான்… ஆனால் பேச்சு வரவில்லை.

‘அவளே உன்னிடம் பேசவில்லை… எதற்கு நீ உயிரோடிருக்கிறாய்’ என்ற குரல் அவனுக்குக் கேட்டது இப்போது.

மறுபடியும் அதே உறுத்தல் உடம்பில். அது கழுத்தை அடைந்தது… ஆனால் இப்போது அவனே தன் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தான். சுவாசக்குழாய் முட்ட, மூச்சு விடுவது சிரமாகும்போது, தன்னை தானே நெரித்துக்கொள்கிறோம் என்பது உணர்ந்து சட்டென கையை எடுத்தான்.

அவன் செயல் அவனுக்கு புரிய, கண்முன்னே ப்ரியாவின் சிரித்த முகம் தெரிய, ‘தான் எதாவது செய்துகொண்டால் அவள் நிலை?!’ என்று இப்போது யோசித்தான்.

மண்டை வெடிப்பதுபோல வலி. ‘தனக்கு எதுவும் ஆகக்கூடாது. தனக்காக அல்ல, ப்ரியாவிற்காக’ என முடிவெடுத்து… அடுத்து இதுபோல உணர்வு வரும்முன், அவசரமாக குமாரை அழைத்து உடனே வரச்சொன்னான்.

கதவை திறந்து வெளியில் பார்த்தபடி உட்கார்ந்தவன், மனதில் ஒன்றே ஒன்று தான்.

‘ப்ரியாவிற்காக வாழ். செத்தும் கெடுத்தான் என்றாகிவிடக்கூடாது. சைக்கோவை விட்டு பிரிந்து வந்த பெண்ணிற்கு, நல்வாழ்வு அவர்கள் வீட்டில் அமைத்துத்தருவார்கள். அகிலன் இதற்க்காவெல்லாம் அக்காவை வெறுக்கமாட்டான்’ என்று அளவுக்கு மீறி யோசித்துக்கொண்டிருக்கும்போது, குமார் வந்தான் பதட்டத்துடன்.

கல்லூரியின் எமெர்ஜெண்சி நம்பர் உதவியுடன் உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி சொன்னான்.

**********************************************

வீடியோவில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா குலுங்கி குலுங்கி அழுதாள். அவனின் ஒவ்வொரு கஷ்டத்தையும் அவனே சொன்னபோது, அதன் வலி அவன் கண்களில் தெரிந்தது.

“என்னாச்சு டாக்டர் அவனுக்கு ” என்றாள் கண்ணீர் மல்க.

“இளன் சொன்னது வெச்சு பார்க்கும்போது, அவருடைய சிம்ப்டன்ஸ் எல்லாம் வெச்சு பார்த்ததுல, அவருக்கு… பைபோலார் டிசாடர்” என்றதும்… அதிர்ச்சியில் ப்ரியா உறைந்துவிட்டாள்.

“எக்ஸ்ட்ரீம் எமோஷன்ஸ்… வலி, துன்பம், விரக்தி, பயம், சோகம் இதெல்லாம் டிப்ரஷன் உண்டாக்கும். காதல், உற்சாகம் பெருமை, எரிச்சல், அன்பு, மகிழ்ச்சி, இதுபோல விஷங்கள் ஹைபோ மேனியா இல்ல மேனியா’வை உண்டாக்கும்”

“சோ இதுபோல எல்லா ஃபீலிங்ஸ்’மே எக்ஸ்ட்ரீம் லெவல்ல இருக்கும். இது அவருக்கு எப்போ ஸ்டார்ட் ஆச்சுன்னு கரெக்ட் ஆஹ் சொல்ல முடியல. அவர் அம்மா இறந்தப்பவோ, அக்கா ஹாஸ்டல் போனப்பவோ, வந்துருக்கலாம். பட் அந்த டைம்ல… அவர் சின்ன பையன். சோ எப்படி ஃபீல் பண்ணாருன்னு இப்போ அவருக்கு சொல்ல தெரியல. பட் ஒரே டைம்ல அவரோட அக்கா கல்யாணம், ஃபிரிண்ட் இந்துமதி கல்யாணம்னு தெரிஞ்சப்ப, ரொம்பவே depressed ஆஹ் ஃபீல் பண்ணிருக்கார். அதனோட வெளிப்பாடு… எக்ஸாம்’ல சரியா peform பண்ண முடியாம போயிருக்கு. சுத்தமா பிளாங்க் அவுட் ஆயிடுச்சுபோல”

“அதே நிலைமைல இருந்தவர், உங்கள பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமா மறக்க, மாற ஆரம்பிச்சிருக்கார்”

“நார்மல்’லா எல்லாம் நடக்கற மாதிரி இருந்தப்ப, கொஞ்சம் அதிக வேலை எடுத்து செய்ய ஆரம்பிச்சபோது, தூக்கம் கெட ஆரம்பிச்சிருக்கு. ஒரு ஸ்டேஜ்’ல தூக்கம் சுத்தமாவே இல்ல. பட் அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல அவருக்கு. எந்த வேலையையுமே ஒரு எக்ஸ்ட்ரா ஜோஷ் ஓட செய்திருக்கார்”

“அந்த டைம்ல தான் உங்க கல்யாணம்… அங்க நடந்த சில விஷயங்கள் அவரை டிஸ்டர்ப் பண்ணிருக்கு. அந்த ஸ்டேஜ்’ல, அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் ஆகியிருக்கு. மே பி ஹைபோ மேனியா ஆர் மேனியா ஸ்டார்ட் ஆகியிருக்கலாம்”

“அதுக்கு சில பாயிண்டர்ஸ்… தூக்கம் சுத்தமா இல்லாம, எப்பவுமே ஒரு எனர்ஜியோட, ஓவர் ரொமான்டிக், தேவையில்லாம அதிக செலவு, சில தேவையற்ற ஆர் ரிஸ்கி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அதிகமா பேசாம இருந்தவர் ரொம்ப பேச ஆரம்பிச்சு, இண்ட்ரோவர்ட்’டா (introvert) இருந்தவர் சோஷியலைஸ் ஆகி friends circle form பண்ணி, அதிகம் கோபம் வராம இருந்தவர் தேவையில்லாம கோபப்பட்டு, அந்த கோபத்துனால வர்ற மிதமிஞ்சிய வார்த்தைகள், சம்மந்தமே இல்லாம இரிடேட் ஆகறது, அளவுக்கு அதிகமா யோசிக்கறது, தன்னால முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லனு ஃபீல் பண்ணறது… இந்த சிம்டம்ஸ் எல்லாம் இளன் கிட்ட இருந்துருக்கு”

அவர் கொஞ்சம் நிறுத்த… ப்ரியாவிற்கு தலையே சுற்றியது. அவனுடைய மாற்றங்கள் அனைத்தும் சாதாரணமாக நடந்துபோல, தனக்காக செய்தது போல இருந்தது அவளுக்கு. அவர் தொடர்ந்தார்.

“சோ இதுக்கப்புறம் இன்டென்சிட்டி அதிகமாக ஸ்டார்ட் ஆகியிருக்கு. இந்த நிலைமைல, சிலர் மத்தவங்கள ஹர்ட் பண்ணுவாங்க… சிலர் ஸெல்ஃப் ஹர்ட் பண்ணிப்பாங்க. இளன் ரெண்டாவது டைப். இந்த ஸ்டேஜ்ல அடுத்த ட்ரிகர், அவரை ‘சைக்கோ’ன்னு சொன்னது… யாருக்குமே ஹர்ட் ஆகற ஒரு வெர்ட் அது”

“அது அவரை ரொம்ப அதிகமாவே ட்ரிகர் பண்ணிருக்கு. அந்த டைம்’லயும் உங்க நிலையை பத்தி தான் அவர் யோசிச்சிருக்கார். ‘நீங்க நல்லாயிருக்கணும்… ஒரு சைக்கோவோட வாழ்றது கஷ்டம்’னு நினச்சுருக்கார். அதனோட வெளிப்பாடு, எதை சொன்னா அது உங்கள பாதிக்கும்ன்னு தெரிஞ்சு அதையே சொல்லி, அவரை உங்ககிட்ட இருந்து பிரிச்சிக்க முடிவுபண்ணி… அத சரியாவும் நடத்திட்டார்”

ப்ரியாவின் அழுகை நிற்கவில்லை.

“அந்த டைம்ல தான் ரொம்பவே எக்ஸ்ட்ரீம் லெவல்’க்கு போயிருக்கார். ஹலுசினேஷன், டெலூஷன்னு சொல்வாங்க. இல்லாத ஒன்ன இருக்கறதா நினைக்கறது… நம்பறது”

“அது கொஞ்சம் கொஞ்சமா அதிகம் ஆக ஆக, மைக்ரேன் அதிகமாக, மனஅழுத்தம் அதிகமாக, அடுத்த ஸ்டேஜ்… தற்கொலை எண்ணங்கள் (suicidal thoughts) வந்துருக்கு. அந்த ஸ்டேஜ்ல தான் அவர் இங்க வந்தார்”

“இங்க வந்ததுல இருந்து அவர் சொன்னது இதுமட்டும் தான் ‘நான் சாகக்கூடாது. வாழணும்… நான் ஏதாச்சும் பண்ணிட்டு, என் இசைய ஆயிசு முழுசும் கஷ்டப்படுத்தக்கூடாது'” என்று அவர் நிறுத்த… ப்ரியா முற்றிலுமாக உடைந்துவிட்டாள்.

“டாக்டர் என் இளா எனக்கு வேணும் டாக்டர். இதை க்யர் பண்ணிடலாம்ல?” அழுதபடி அவள் கேட்க… மூச்சை ஆழ இழுத்து மறுப்பாக அவர் தலையசைத்தவுடன், ப்ரியாவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

அவள் கதறி அழுக… “க்யர் பண்ண முடியாது பட் கேன் பி ட்ரீட்டபல் வித் லைஃப்லாங் மெடிகேஷன்ஸ் (can be treatable with lifelong medications)” என்று சொன்னவுடன், அவர் சொன்னதை நினைத்து வருந்துவதா… இல்லை நிம்மதி அடைவதா… என்று அவளுக்கே புரியவில்லை!

11 thoughts on “Thaniperum Thunaiye – 43

  • Indhu Sivaraman

    Oh God!!! Bipolar disorder ahh!! Paavam.. evlo kashta patrukan.. isai idha epdi handle Panna pora!?

  • Sowmya Vijay

    Acho poor Ila & Isai… pls preethi soga ending venaame 🙏🙏🙏

  • Abirami Praveen

    Isai mathiri ennakum thaliye suthidichu….. semma detailing… could feel his situation thru your excellent write up… Dei itha padicha appuram neenga Romba strain panikatheega nu solla thonuthu … free time la ezhuthunga… take care 😃

  • Agatha Banu Thomas

    OMG!!! Ila please unaku neeyae ivulo kastatha kudukanuma.. Isai paavam ena panuvalo.. thaeriyalae…

  • Suriya Prabha

    Idha edhirpakkala… Maaritaan nu ellam symptoms pinnadi ipdi oru reason ahhhh

  • Sumathi Muthu

    Wooow.. chezhiyan evlo azhaga love pannirukan.. but pavam 2 periaum seekiram santhosama iruka vaingapa …

  • Rachell Revathi Samuel

    Cha pavam chezhiyan…
    Bipolar disorder ah ..
    Ur narration awesome Dr..
    Felt heavy..
    Intha payan ivlo kasta padrane …
    Nan Kuda love nala than maritano nu patha ipdi depression nala ipdi maritane😰😰😰😰…
    Isai Nalla Vela thirumbi vantha..athan Ellam therinjuchu..
    Epdi handle Panna poralo…

  • Vidhya Natarajan

    Oh God..
    Watta writing.. Daily idheye solren nenekadhinga.. But evlo vaati sonnalum it won’t be enough.. Ur such a great writer..
    Story ipdi pogudhu apdi pogudhu nu I’m not able to comment coz I can’t come out of the love for ur writing..
    Be it love, hate, happiness or sadness every feel pierces our heart..
    Keep writing ….

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved