Thaniperum Thunaiye – 46
தனிப்பெரும் துணையே – 46
‘என்ன காரியம் செய்யச்சொன்னேன். யாருமே இல்லை என்று நினைத்த எனக்கு கடவுள் விலை மதிப்பற்ற மூன்று ரத்தினங்களை அளித்துள்ளார். அவற்றை பொக்கிஷமாக பார்த்துக்கொள்ளவேண்டும்’ மனதில் நினைத்து ப்ரியாவை பார்த்தான்.
அவன் கண்களில் தெரிந்த பல பரிமாணங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் யூகிக்கமுடிந்தது.
அவன் குழந்தை வேண்டாம் என்று சொன்னதது அவனுக்கு ஏற்பட்ட பிராச்சனையால் தானே தவிர, அவனுக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தது. அவள் கர்பமானதை குறித்து சொல்லும்போதே அவனின் சந்தோஷத்தை முகத்தில் பார்த்திருந்தாள்.
“ஹார்ட் பீட் கேட்கணுமா” ஸ்கேன் செய்யும் பெண் கேட்க, இருவரும் பார்வையை அங்கே செலுத்தினர்.
பின் அந்த பெண் போட்டுக்காட்டியவுடன், அதில் கேட்ட துடிப்பை விட செழியனின் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தது. ப்ரியா ஆசையாக தன் வயிற்றை தொட்டுப்பார்த்தாள்.
“இதுதான் பேபீஸ்” என்று அந்த பெண் திரையில் காட்ட, இருவரும் ஆவலாக பார்த்தனர். ஒருவழியாக ஸ்கேன் எடுத்துவிட்டு வெளியே வர, சந்தோஷத்தின் மிகுதியில் இருந்தான் செழியன். ப்ரியாவும் தான், ஆனால் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
அவன் மனதில், ‘அவளை அப்படியே சினிமாவில் வருவதுபோல தூக்கி சுற்றவேண்டும்’ என்று நினைத்தாலும்… தன் நினைப்பை நினைத்து புன்னகைத்தவாறு… “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இசை. உன்னால… உன்னால மட்டும் தான்” என்றான் அவளுடன் நடந்துகொண்டே, அவள் முகம் பாராமல், கைகளை மட்டும் பற்றிக்கொண்டு…
“யாருக்கு கிடைக்கும் சொல்லு இதுபோல ஒரு வாழ்க்கை? இவ்ளோ பிரச்சனை எனக்கு இருக்குனு தெரிஞ்சு எனக்காக என்கூடவே இருக்கயே… உன்ன பிரியணும்னு நினைச்சது என்னோட முட்டாள்தனம். நிறைய இடத்துல நான் நானாவே இல்ல இசை. உன்ன நிறைய பேசியே கஷ்டப்படுத்திருக்கேன். ஸாரி மட்டும் சொல்லி இதை சரிசெய்யமுடியாது இசை” இப்போது அவளை பார்த்து சொன்னான்.
“இந்த நாலு வாரத்துல நிறைய கத்துட்டேன். இனி இன்னொருமுறை உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன் இசை” என்றான் பற்றியிருந்த அவள் கையை அவன் கைகளுக்குள் இருத்திக்கொண்டு.
அவள் மனக்கண்ணில் சிகிச்சைக்கு முன் அவன் எப்படி இருந்தான். பேசினான். இப்போது எப்படி மாறியுள்ளான் என்பதை ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. அமைதியாக வெளியில் அவனை அவள் பார்த்தாலும்… உள்ளுக்குள் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள்.
“உனக்கு என் மேல வருத்தம் அதுதான் பேச மாட்டேங்கற. நீயா பேசறவரை நான் வெயிட் பண்றேன். வேற யார் பேசலனாலும் பெருசாதெரியது… ஆனா நீ பேசலனா தாங்கிக்கமுடியாது இசை. ரொம்ப காக்க வச்சுடாத ப்ளீஸ்”
கவலையுடன் ஆரம்பித்து, கெஞ்சலுடன்… தவிப்புடன் பேசி, ஆசையுடன்… காதலுடன் முடித்தான்.
‘தனியாக இருக்கும் ஒருவனுக்குத்தான் தெரியும் மௌனத்தின் வலி’ அதை உணர்ந்து அவன் பேச, ப்ரியா அவனை பாராமல் அவன் பேசுவதை முழுவதும் கேட்டாள். எங்கே அவன் முகத்தை பார்த்தால் இத்தனை நாட்கள் கட்டுப்படுத்திய அழுகை வந்துவிடுமோ என்ற எண்ணம்.
அவளுக்கு ஆசையா அவனை இப்படி தவிக்க வைப்பதற்கு? பேசாமல் இருப்பது ஒரு தண்டனை அவளுக்கு… அதுவும் அவனிடம்.
மனதார காதலித்து, பல கனவுகளுடன் அவனையே கரம்பிடித்து, திருமணமான குறுகிய காலத்தில் எல்லையற்ற சந்தோஷத்தையும், மலைதாண்டிய வேதனைகளையும் வலிகளையும் அனுபவித்திருந்தாள்.
இருந்தும் அவன் மீண்டு வந்ததும் அவனுடன் வாழப்போகும் மீதி வாழ்க்கைக்காக, இந்த மருந்தை இருவரும் எடுத்துக்கொண்டாகவேண்டும் என மனதின் வலியை உள்ளுக்குளேயே புதைத்துக்கொண்டாள்.
“டாக்டர்ட்ட ரிப்போர்ட் கட்டலாமா?” கேட்டபடி அவன் பேசியதற்கு பதில் சொல்லாமல் முன்னே சென்றாள். அவனும் அமைதியாக சென்றான்.
ப்ரியாவின் உடல் மிகவும் பலவீனமாகவுள்ளது. கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். சத்தான உணவை தரவேண்டும் என்று மருத்துவர் அறிவுரைகளை கூறி அனுப்பிவைத்தார்.
“சென்னைல இருந்து ஏன் யாருமே வரல? போன் பேசினாங்களா? அவங்கள்ட்ட சொல்லிட்ட தானே?” அவளிடம் கேட்டுக்கொண்டே அவன் நடக்க, அவள் பதில் சொல்லவில்லை.
அவன் நின்று அவளை பார்த்து கேட்டவுடன், இல்லை என்று தலையசைத்தாள்.
“என்ன இசை… என்ன நினைப்பாங்க? என்கூட சேர்ந்து நீயும் மறைக்க ஆரம்பிச்சுட்ட… கெட்டு போய்ட்டன்னு நினைப்பாங்க. உடனே கால் பண்ணி சொல்லு” என்றான்.
ப்ரியாவிற்கு தேவையான மருந்துக்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்கள். ப்ரியா வீட்டில் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல, அவள் அம்மாவிடம் நல்ல திட்டு கிடைத்தது ‘இதெல்லாம் மறைக்கும் விஷயமா’ என்று.
லட்சுமியும் ஜெயராமனும் சொந்தத்தின் திருமணத்தில் இருந்தனர். அதனால் உடனே புறப்படமுடியவில்லை.
அகிலன், கவிதா, ஸ்வாமிநாதன், வெண்பா நால்வரும் அடுத்தநாள் விடியற்காலை புறப்பட்டு காலை வருவதாக சொன்னார்கள். லட்சுமியும் ஜெயராமனும் மாலை வருவதாக முடிவெடுத்தனர்.
அன்றைய இரவு, அவனே உணவு தயார் செய்து, இருவரும் சாப்பிட்டவுடன், இரண்டு படுக்கையையும் சேர்த்துப்போட்டான்.
ப்ரியா அவனை முறைக்க, அதை பொறுப்படுத்தாமல், வேலையிலேயே கவனமாக இருப்பதுபோல அவள் முறைப்பதை தவிர்த்துவிட்டான்.
இரவு மாத்திரைகளை போட்டுக்கொண்டு, “வா இசை படுப்போம்” என்று அவளையும் சாதரணமாக அழைத்தான்.
‘கள்ளன்’ மனதில் நினைத்தவாறு அவள் படுத்தவுடன், அவள் பக்கத்தில் படுத்த செழியன்… “இசை… பேச மாட்டயா…” கேட்டபடி அவள் பக்கம் திரும்பினான்.
அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பழைய பயமில்லை. ஆனாலும் பழைய துடிப்பு இல்லை.
மனதில் பல எண்ணங்கள்… அவளைக்குறித்து… அந்த எதையும் வெளிக்காட்டாமல் சிறிது நேரத்தில் அதே எண்ணங்களுடன் உறங்கிவிட்டான்.
ப்ரியா உறங்குவதுபோல கண்மூடி இருந்தவள், மெதுவாக கண்திறக்க, அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அவனை பார்க்க பார்க்க கண்ணீர் துளிர்த்தது. எப்படிப்பட்ட துயரங்கள், மன உளைச்சல்களை அனுபவித்தான். இப்போது இந்த நிம்மதியான உறக்கம்… அது அவளுக்கு நிறைவை தர, கண்களை துடைத்துக்கொண்டு அவன் கைவளைவிற்குள் ஒடுங்கிக்கொண்டாள்.
மனதில் ஒன்றே ஒன்றுதான். இது ஆயுளுக்கும் நிலைக்கவேண்டும். வேறெதுவும் வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு… பல நாட்களுக்கு பின் அவனின் அருகாமையில் நன்றாக… நிம்மதியாக உறங்கினாள்.
அடுத்தநாள் காலை அவனே முதலில் விழித்தெழுந்தான். தன்னை பற்றிக்கொண்டு உறங்கும் தன் மனைவியை ஆசையாக பார்த்தான்.
அவள் உறக்கம் தடைபடாமல் அவளை மென்மையாக கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் அந்த ஸ்பரிசத்தை ரசித்த செழியன், அவன் நெற்றியில் பலநாள் கழித்து முத்தமிட்டு, மணியை பார்த்தான்.
இன்னும் சில மணிநேரங்களில் சென்னையில் இருந்து வந்துவிடுவார்கள் என நினைத்து, காலை வேலைகளை பார்த்தான்.
மனதில் ஒரு முடிவு எடுத்திருந்தான். ‘தனக்கு நடந்ததை ப்ரியாவின் வீட்டில் கண்டிப்பாக சொல்லவேண்டும். இதுபோல விஷயத்தை மறைப்பது சரியில்லை. அதுவும் அவர்கள் பெண்ணின் வாழ்க்கை இது’ என்று நினைத்தான்.
ப்ரியாவும் தூக்கத்தில் இருந்து விழித்தெழ, “மார்னிங் இசை” என்றான் மலர்ந்த முகத்துடன் அவள் எதிரே உட்கார்ந்துகொண்டு.
அவள் சின்னதாக புன்னகைக்க, “HOD நேத்தே பார்க்கணும்னு சொன்னாரு. ஆனா போக முடியல. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன். நீ அவங்கள ரிஸீவ் பண்ணு, நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றவன், “காலைலைக்கு சமைச்சிட்டேன். நான் சாப்பிட்டேன், நீயும் ஒழுங்கா சாப்பிடணும்” என்றதும் ப்ரியா தலையசைத்தாள்.
தூக்க கலக்கத்தில் அவள் இருப்பதை பார்த்தவன், குனிந்து அவள் தலையோடு தலை முட்டி புன்னகையுடன் “சீக்கிரம் ஃபிரெஷ் அப் ஆயிட்டு சாப்பிடு. நான் வந்துடறேன்” சொல்லிவிட்டு புறப்பட்டான்.
அவன் சென்றவுடன் ப்ரியா இதழ் விரித்து புன்னகைத்தாள் அவன் செய்ததை நினைத்து.
அடுத்து கொஞ்ச நேரத்தில் அகிலன் கவிதா ஸ்வாமிநாதன் வீடு வந்து சேர்த்தனர். வந்ததும் ‘ஏன் சொல்லவில்லை’ என்று அவர்கள் குறைபட்டுக்கொள்ள… ப்ரியா அமைதியாக இருந்தாள் புன்னகையுடன். மனதில் அத்தனை கோபம்.
“ஏன்டா ஒரு மாதிரி இருக்க. ஏதாச்சும் பிரச்சனையா? செழியன் எங்க?” அகிலன் கேட்க… ப்ரியா வெற்றுப்புன்னகையுடன் “பரவால்லயேண்ணா என்னை பார்த்தே ஏதோ சரியில்லைன்னு சொல்ற. ஹ்ம்ம். பாவம் இளாக்கு தான் அதுபோல அவனை புரிஞ்சிக்க யாரும் இல்ல” என்றாள் கவிதாவையும் ஸ்வாமிநாதனையும் பார்த்தவண்ணம்.
மூவரும் ஒன்றும் புரியாமல் பார்க்க… “எனக்கு இவங்கள கேள்வி கேட்க உரிமை இருக்கானு தெரியல… உன்ன கேட்க உரிமை இருக்குனு நினைக்கறேன். ஏன்ண்ணா நானும் அண்ணியும் இணக்கமா இருக்கணும்னு ஆரம்பத்துல இருந்து என்னை அவங்ககிட்ட நல்லா பழக சொன்ன உனக்கு… அதுபோல நீயும் அவங்க தம்பிகிட்ட பழகணும்னு ஏன்ணா தெரியல?”
“அவன் ரிசெர்வட்’டா இருந்தா என்ன? நீ இல்லையேணா. நீ நல்லா சஜகமா பேசியிருக்கலாமே. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் சொல்வாங்களே. நீ நினைச்சுருந்தா பண்ணியிருக்கலாமேணா… ஆனா எனக்கு அவனை பிடிச்சிருக்குனு தெரிஞ்சவுடனே அவன்கிட்ட பேசின இல்ல? கல்யாணம் ஆனா மனைவி குடும்பமும் நம்ம குடும்பம்னு நினைக்கற ஆள் நீ. ஆனா அதுல இளாவும் இருக்கான்னு மறந்துட்டல”
“உன் ஃபிரண்ட் பானுக்கா இறந்தப்ப நீ எவ்ளோ டிப்ரெஷன்’ல இருந்த… அப்போ நாங்கெல்லாம் உன் கூட இருந்தோம்… முக்கியமா அப்பா அம்மா. ஆனா இளா நிலைமை என்னாச்சு தெரியுமாணா? எல்லாரும் பக்கத்துல இருந்தும், யாருமே அவனுக்குனு இல்லாத நிலைமை. நீ சொல்லணும்ணா அண்ணிகிட்ட… கூட பிறந்தவங்களும் முக்கியம்னு” அவள் உதடுகள் துடித்தது அழுகை வருவதற்காக.
இவர்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ செழியனின் நிலைமைக்கு காரணம் என்பதால் பேச ஆரம்பித்தாள். இதுவரை அண்ணனை நேராக கேட்ட ப்ரியா, அடுத்து மற்ற இருவரையும் மறைமுகமாக கேட்க ஆரம்பித்தாள்.
“சுத்தி ஆட்கள் இருந்தும்… அன்புனு ஒன்னு கிடைக்காம வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமாணா? அந்த வலிய இளா அனுபவிச்சான். இழக்ககூடாத வயசுல அம்மா போய்ட்டாங்க. கூடவே இருந்த அக்காவும் போய்ட்டா. அப்பான்னு ஒருத்தர் இருந்தார். ஒரு ATM மெஷின் போல. அந்த வயசுல பசங்களுக்கு தேவை பாசம். அதுவும் அம்மா இல்லாத பசங்களுக்கு அப்பா மட்டும் தான். ஆனா ஒன்னு இதுல இருந்து நாங்க கத்துக்கிட்டோம், ஒரு குழந்தையை எப்படி வளர்க்கக்கூடாதுனு” ஏளனமாக அவள் சொல்ல, ஸ்வாமிநாதன் முகம் இருண்டது.
“யார் பாசமும் கிடைக்காம, அம்மா அக்காவை இழந்து, ஸ்கூல்ல பசங்க ஒதுக்கிவச்சு… அந்த சின்ன வயசுல என்னன்னே சொல்லத்தெரியாத ஒரு மனஅழுத்தம் அவனுக்குள்ள. இதெல்லாம் யாருக்காச்சும் தெரியுமா?” அண்ணனிடம் பேசுவதுபோல பேசினாலும் ப்ரியாவின் கண்கள் ஸ்வாமிநாதனை மட்டுமே பார்த்தது.
“இதெல்லாம் கடந்து வர்றதே பெரிய விஷயம். இளா வெளிய வந்தான். அதுக்கப்புறம் இன்னொரு அடி. இதோ அண்ணி… இவங்கள கல்யாணம் பண்ணிட்டு நீ கூட்டிட்டுபோய்ட்ட. அவனோட க்ளோஸ் ஃபிரண்ட் அந்த பொண்ணும் போய்ட்டா. ரெண்டு பேர் வாழ்க்கையும் சரியில்லாம போச்சேனு அடுத்த மனஅழுத்தம். அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமாணா? சிவியர் டிப்ரெஷன். உனக்கு நாங்க இருந்த மாதிரி யாருமே இல்ல அவனுக்கு. அது டிப்ரெஷன்’னே தெரியாம இருந்திருக்கான். இதுல காமெடி என்னன்னா… அது கூட இருந்த அப்பாவுக்கும் தெரியல. கூட பொறந்த அக்காவுக்கும் தெரியல”
“ஆனா பாரேன் அவன் ரொம்ப ஸ்ட்ராங். இதையும் கடந்து வந்தான் எந்த ஒரு துணையும்… யார் துணையும் இல்லாம தனியாவே சமாளிச்சு வெளிய வந்தான். அடுத்த பிரச்சனை அவனுக்கு என் ரூபத்துல… கல்யாணம்ங்கற பேர்ல வந்துடுச்சு. அப்போ மாமா தன் பையன்னு கூட பார்க்காம மட்டம் தட்டி பேசினாரு”
“ஏன் மாமா… படிக்கறது அவ்ளோ பெரிய தப்பா? PhD அவ்ளோ சீக்கிரம் யாராலயும் படிக்க முடியாது மாமா. அவன் மாஸ்டர்ஸ்ல யூனிவர்சிடி செகண்ட்… தெரியுமா? சாதாரண யூனிவர்சிடில இல்ல… இந்தியாலயே ஒன் ஆஃப் தி டாப் காலெஜ்ஸ்ல… அதுவும் வேல பார்த்துட்டே படிச்சுட்டு. இவ்ளோ திறமையோட யாராச்சும் ஒருத்தங்களை சொல்லுங்க பார்ப்போம்? ஆனா நீங்க எப்படியெல்லாம் பேசினீங்க… அடுத்த பிரச்சனை அங்க ஆரம்பிச்சது” இதை சொல்ல சொல்ல தொண்டை அடைத்தது அவளுக்கு. தன்னை சமநிலை படுத்திக்கொண்டாள்.
“உங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணணும்… என்னை நல்லா பார்த்துக்கணும்னு வேலை எடுத்து பார்த்து பார்த்து… கொஞ்சம் கூட தூங்காம… அதுனால மனஉளைச்சல் அதிகமாகி… அது அவனை ரொம்ப பாதிச்சு… கடைசியா இப்போ ட்ரீட்மெண்ட்ல முடிஞ்சிருக்கு. அவன் எந்த நிலைமைல இருந்தான் தெரியுமா நான் இங்க வந்தப்போ??? இது எல்லாத்துக்கும் அவன் ஒரு துளிக்கூட ரீசன் கிடையாது. நம்ம மட்டும் தான். வேற யாரும் இல்ல… அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது நம்ம மட்டும் தான்” ப்ரியா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள். இத்தனை நாட்கள் கட்டுப்படுத்திவைத்தது இன்று வெளிவந்ததது.
இப்போது அகிலன் பேச்சற்று பார்த்தான் ப்ரியாவை. பேயடித்தாற்போல இருந்தாள் கவிதா. கிட்டத்தட்ட நெஞ்சுவலி வந்ததுபோல இருந்தார் ஸ்வாமிநாதன்.
அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் இருக்க, இதை அனைத்தையும் வெளியில் கண்கள் மூடி, சுவற்றில் சாய்ந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான் செழியன்!
இது அனைத்தும் அவன் மனதில் இருந்தது… அனைவரையும் கேட்கவேண்டும் என்று நினைத்தது… ஆனால் எப்பொழுதும்போல மனதில் அனைத்தையும் புதைத்துக்கொண்டான்.
ப்ரியா பேசியதை முழுவதும் கேட்டபின், இப்போது அவனிடத்தில் முன்புபோல மன அழுத்தம் இல்லை. மனம் முழுவதும் பிரம்மிப்பு மட்டுமே. தன் துணைவியை நினைத்து… தன்னில் சரிபாதியை நினைத்து… தன்னுடைய தனிப்பெரும் துணையை நினைத்து!

Great episode… Ella is back…very happy for him…. isai pinni pedal edithuta ma….👏🏻👏🏻
Awww thank you so much ❤️❤️
Great.. yeadho oru point la idhellam open ah keta dhan Illa mamasu relax agum.. adha Isai kekardhu dhan correct..
True dear ❤️❤️ thank you 😊
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Chance less Preethi your narration, all characters living lively.. very touching story… No words Preethi…. U r ultimate
Thank you so much dear ❤️❤️
He’s back to form .. understanding the partner is more important in life… Chezhiyan is gifted
Yes da thanks a lot ❤️❤️
Semma episode
Thanks much ❤️❤️
Chance less ka unga writing. Apa என dialogues… Awesome awesome..
Awwwe thank you so much dear ❤️❤️
Wow… Watta narration Preethi.. Tears are flowing… After reading every chapter u give the perfect satisfaction… Ur writing emotes feelings…
Ur a great writer….
Awww thank you so much ji❤️❤️❤️ means a lot to me 😊
Semma episode da… really padika padika namma valkailayum namma kaelvi kaekanum nu naenaikuravanagala yarachum kaeka matangala nu thonichi… fantastic…. very heart touching….
Aewww thank you so much dear ❤️❤️ so true …
Wow super episode dear, illa is back with normal, what he thinked to ask, isai has asked to the family members. But ithu thane oru kanavan manavi oda purithal😍😍😍❤❤❤❤👌👌👌👌
Thanks a lot ji ❤️❤️
Mudila da.. enaku Padikka Padikka alugaya varuthu.. ethachum oru time la yaarachum irunthurukalam la Ilaa ku..
Achacho sorry dear ☹️ yeah yarachum irundhirukalam ❤️
Awwww… enna oru episode.. vera level writing..
Thank you so much dear ❤️❤️
Super super 👍👍👍🙏🙏👌👌🤝🤝
Thank you dear ❤️❤️