தனிப்பெரும் துணையே – 5
தனிப்பெரும் துணையே – 5
நன்றாக கண்களை திறந்து பார்க்க…
‘ என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்? நீ கேட்டனா சொல்லலாம்னு இருந்தேன்’ என்றிருந்தது முதல் மெசேஜ்.
‘பை தி வே ஐ டின்ட் டெல் திஸ் டு எனிவொன். பெருமையா சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல. ஐ காட் அ வெரி பேட் ஸ்கோர் ஃபோர் மை ப்ராஜெக்ட். அந்த நினைப்புலயே இருந்துட்டேன்’ என்றது அடுத்த குறுஞ்செய்தி.
இதுபோதாதென்று இரண்டு மிஸ்ட் கால் வேறு. அதைப் பார்த்ததும் இனம் புரியாத ஒரு சந்தோஷம். தன்னுடைய கோபம் அவனுக்கு தெரிந்துள்ளது. பேச முயன்றுள்ளான் என்பதை நினைத்து.
‘ஒரு பேப்பர் தானே. போகுது போ… அண்ணி தான் சொன்னாங்க நீ டாப்பர்’னு. போனதை நினச்சு ஃபீல் பண்ணாம, செலிப்ரேட் வாட் யு ஹவ் அச்சிவ்ட். கம் ஆன்’ என்று பதில் அனுப்பினாள்.
அனுப்பிய அடுத்த நொடி ‘தேங்க்ஸ்’ என பதில் வந்தது. இன்னமும் முழித்திருக்கிறானா… ஒருவேளை தன் பதிலுக்காக காத்திருப்பானோ என்று மனம் யோசிக்க…
‘ஹுக்கும். எங்க அவன் அக்காவை பத்தி சொல்லாம போய்டுவயோன்னு ரிப்ளை பண்ணிருக்கான். நீ வேற’ மானசீகமாக மண்டையில் குட்டியது மூளை.
இருப்பினும் அவன் பதில் அனுப்பியது மிகவமும் நிறைவாக இருந்தது.
நாட்கள் மெதுவாக நகர்ந்தது. அவளும் பெற்றோருடன் சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்றுவிட்டாள்.
கவிதாவுடன் பேசும் வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் அவனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வப்போது அவனுக்கு மெசேஜ் மட்டும் அனுப்புவாள். பெரும்பாலும் ஒரு வார்த்தை பதிலே வந்தது.
‘அவன் என்ன செய்கிறான்’ என்று எதுவும் பெரிதாக தெரியவில்லை.
அப்படி இருக்க… ஒரு நாள், அகிலன் தன் அம்மாவிடம் கவிதாவிற்கு வயிற்றுவலி அதிகமாக இருப்பதாக சொல்லி வெந்தயக்களி செய்துகொடுக்க சொல்ல, அவர் அதை ப்ரியாவிடம் கொடுத்தனுப்பினார்.
ப்ரியாவும் கல்லூரி முடிந்து நேராக சென்னையில் அகிலன் வீட்டிற்கு வர நினைத்திருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கவிதாவின் அப்பா ஸ்வாமிநாதனுக்கு உடல் நிலை சரியில்லாம போக, அகிலனும் கவிதாவும் ஆஃபிஸில் இருந்து நேராக காஞ்சிபுரத்தில் உள்ள அவள் அப்பாவை பார்க்க சென்ற போது, அகிலன் ஒரு ரிப்போர்ட்’டை அங்கேயே மறந்து வந்துவிட்டான்.
அதை எடுத்துக்கொண்டு வார இறுதியில் வந்திருந்தான் செழியன். அன்றே ப்ரியாவும் வருவதாக இருந்தது. இருவருக்கும் தெரியாது மற்றவரின் வருகை குறித்து.
மாலை நேரம் நெருங்கும்போது அகிலன் ப்ரியாவை அழைத்துவந்தான்.
அவள் அறை மேல் தளத்தில் இருக்க… “என்ன கொரியர் சர்வீஸ் பண்ண வெச்சுட்டயேடா அண்ணா. ஒழுங்கா லீவைஸ் ஜீன் (levis jean) எடுத்துகுடுக்கற. நீ ஒன்னு அண்ணி ஒன்னு. இல்லை இல்ல நான் அண்ணிகிட்ட வேற கேட்டுக்கறேன்… அண்ணி மேல இருக்காங்களா…” என்று அண்ணனிடம் வாயாடிக்கொண்டு மேலே செல்ல…
அங்கே கவிதாவுடன் செழியனை பார்த்த ப்ரியா ஒரு நொடி அதிர்ந்தாள். கடைசியாக கல்யாணத்தில் பார்த்தது. சொல்லத்தெரியாத பல உணர்ச்சிகள் மனதில். படபடப்பும் ஒட்டிக்கொண்டது.
அவன் முகத்தை பார்க்க ஏதோ ஒரு தயக்கம்… ஆனால் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் வேறு. பின் கவிதாவும் அங்கே இருப்பதைப் பார்த்து சட்டென சுதாரித்துக்கொண்டு…
“ஓ… உங்க பாசமலர் வந்துருக்காங்களா… ஹ்ம்ம்… இருக்கட்டும் இருக்கட்டும்… இந்தாங்க பிடிங்க. வெந்தயக்களி” என்று கவிதாவிடம் கொடுத்தவள்…
“அண்ணி கொஞ்சம் டீ கிடைக்குமா… ஒன்றர மணிநேர ட்ராவல். ரொம்ப தல வலி” என கெஞ்சலாகக் கேட்க, கவிதா புன்னகையுடன்… “சீக்கிரம் ரெஃப்பிரஷ் ஆகிட்டுவா. போட்டு வெக்கறேன்” என்றாள்.
ப்ரியா ரெஃப்பிரேஷ் செய்துகொள்ள அவளறைக்குள் சென்றவுடன், இதயம் கொஞ்சம் வேகமாகவே துடித்தது.
‘ஏன் அவனைப்பார்த்தும் தனக்குள் இப்படி ஒரு மாற்றம்? ஒருவேளை அவனை மனம் விரும்புகிறதோ!’ என நினைக்கையில் அதை ஏற்கவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை.
எப்படி ஒருவனிடம் பழகாமல் அவன் மேல் விருப்பம் வரும்? என அவள் யோசிக்க… ஒருவர் மேல் விருப்பம் வருவதற்கு கன நொடி போதும் என பதில் தந்தது அவள் மனசாட்சி.
அதே யோசனையில் ரெஃப்பிரேஷ் ஆகி வெளியே வர, அவள் வருவதைப்பார்த்து புன்னகைத்தான். முதல் முறை அவன் மனமார, ஆழ்ந்து, உணர்ந்து புன்னகைத்தாதாக தெரிந்தது.
மறுபடியும் அவளுக்குள் ஒரு தடுமாற்றம், படபடப்பு. அதை இன்னமும் கூட்டுவதுபோல அவன் பேசும் சத்தம் இப்போது கேட்டது.
“ஹலோ… என்ன சௌண்டே காணம்? நான் பேசிட்டே இருக்கேன். கேட்குதா உனக்கு? மெசேஜ்ல மட்டும் தான் பேசுவயா?” என்று குறும்பாக புருவத்தை உயர்த்தி புன்னகையுடன் கேட்க… தலையே சுற்றியது அவளுக்கு.
‘எது… இவன் என்னை கிண்டல் பண்றானா? மொதல்ல இவன் இவ்ளோ பேசுவானா? சிரிப்பானா? அதுவும் ஆள கவிழ்க்குற புன்னகை? பின் அந்த வசீகரமான முகம்…’ இப்படி அவள் யோசிக்க, அவள் முகம் பிரதிபலித்ததோ, அதிர்ச்சியை.
ஏதோ பேய்யை பார்ப்பதுபோல அவளையும் அறியாமல் அவள் பார்க்க, கவிதாவின் “ப்ரியா” என்ற அழைப்பு அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது.
“வரேன் அண்ணி” என்றவள் அவனைப் பாராமல் அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
டீ குடித்துக்கொண்டே மறுபடியும் யோசனையில் மூழ்கினாள்.
‘நோ. இது சும்மா infatuation. அவ்ளோதான். கொஞ்ச நாள்ல போய்டும். இதுக்கு தேவையில்லாம விருப்பம் அப்படி இப்படினு பேரு வைக்க வேணாம். ஒரு ரெண்டு மூணு வாரம் இல்ல ஒரு ரெண்டு மூணு மாசம் பேசாம இருந்தோம்ன்னா இந்த ஃபீலிங்ஸ்’லாம் வராது’ என நினைத்துக்கொண்டாள்.
கொஞ்சம் தெளிவு பிறந்ததுபோல இருந்தது.
சாதாரணமாக இருக்க முற்பட்டாள். உணவு சாப்பிட செழியன் வந்தபோது, எதையும் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து சகஜமாக சிரித்துப்பேசி, கேலி செய்துகொண்டிருந்தாள்.
அவன் முகம் கொஞ்சம் மாறி இருந்தது. அதை பொருட்படுத்தாமல் இருந்தாள்.
அப்போது கவிதா தம்பியிடம் ‘இன்னமும் வைத்துக்கொள்’ என்று சொன்னபோது, பழைய துடுக்குத்தனம் வந்தது ப்ரியாவிற்கு.
‘எங்கண்ணன் நெப்போலியனா’ என என கேட்டது நினைவிற்கு வர… ஹாலில் இருந்த அகிலனிடம் “அண்ணா இங்க பாரேன் கிழக்கு சீமையிலே படம் ஓடுது” என்று ப்ரியா சொன்னவுடன்…
முகம் இறுக சட்டென எழுந்தான் செழியன். அதைப்பார்த்து ஒரு சில நொடிகள் அதிர்ந்தாள் ப்ரியா. கவிதா என்னவாயிற்று என யோசிக்கும்முன், அகிலன் ப்ரியாவை அங்கிருந்து வரச்சொன்னான்.
செழியனை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அங்கிருந்து சென்றாளே தவிர, அவனின் நடவடிக்கை குறித்து தான் யோசித்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை மேலே அவன் நன்றாக பேசியது தன் கற்பனையோ, தன் பிரம்மையோ என்று கூட நினைக்கத்தோன்றியது.
எதுவாகினும் இப்போது இதுபோல உணர்வுகளுக்கு இடம் தரக்கூடாது. படிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும் பின்… முதுகலை படிப்பு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டுமென்பதே என தனக்குத்தானே அறிவுரைகள் கூறிக்கொண்டாள்.
அதற்கேற்ப அடுத்த சில வாரங்கள் எந்த ஒரு குறுஞ்செய்தியும் அவள் அனுப்பவில்லை. அவனும்.
ஆனால் அவன் ஞாபகம் வராமல் இருக்கவில்லை. தினமும் ஏதானும் ஒன்று செய்கையில் அவன் ஞாபகம் வந்துவிடும். கைகள் அவனுக்கு மெஸேஜ் செய்ய பரபரத்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள்.
வாரங்கள் மாதங்களாக, அகிலனும் வேலை விஷயமாக துபாய் சென்று திரும்பியிருக்க… கவிதாவும் அகிலனும் சேர்ந்து முதன்முதலாக விடுமுறைக்கு சென்றிருந்தனர். அதில் சில புகைப்படங்களை அவளுக்கு அனுப்பியிருந்தனர்.
‘கவிதா சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் நிச்சயம் சந்தோஷப்படுவான்’ என நினைத்து அவனுக்கு அனுப்ப, அது அவனை அடையவில்லை. திரும்பவும் அனுப்ப, அதே நிலை.
யோசனையோடு தயக்கத்துடன் அவன் எண்ணை அழைக்க, அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதைக் கேட்டவள் கண்களிலோ அவளையும் மீறி கண்ணீர் வந்தது.
சொல்லாமல் எண்ணை மாற்றிவிட்டான் என்ற கோபம். இவனை எண்ணியா இத்தனை நாட்கள் இருந்தோம் என்ற ஏமாற்றம்.
அவனிடம் இனி பேசமுடியாதே என்ற வருத்தம் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அழுகையாக வெளிவந்தது.
‘யாரிடம் கேட்டு எப்படி அவன் எண்ணை வாங்குவது’ என யோசித்தாலும் அவளின் சுய மரியாதை அதை ஏற்க மறுத்தது. இனி அவனை நினைக்கக்கூடாது என தனக்கே அறிவுரை கூறிக்கொண்டாலும் மனம் கேட்கவில்லை.
இப்படியாக நாட்கள் வேகமாக கழிய, கவிதா கர்பமாகிவிட்டாள் என்ற நல்ல செய்தி வந்தது. செங்கல்பட்டில் இருந்து சென்னை வந்தனர் ப்ரியாவும் அவள் அம்மா அப்பாவும்.
கவிதாவின் முகமே காட்டியது அவளின் சந்தோஷமான வாழ்க்கையை. அதை காட்டிலும் அகிலன் பார்த்து பார்த்து அவளுக்காக செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தாள் ப்ரியா.
தனக்கு இதெல்லாம் என யோசிக்கும்போது செழியனின் முகமே வந்தது. மறுபடியும் அவள் மனம் வாடியது.
கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்துகொண்டு இருக்கையில், ஒரு நாள்… அவள் முன்னே வந்து நின்றான் செழியன்!
அவனைப் பார்த்த தருணம்… கண்கள் பரபரத்து, இதயம் படபடத்து, கைகால்கள் மரத்து, அப்படியே நின்றாள்!
