ThaniperunThunaiye-44
தனிப்பெரும் துணையே – 44
ப்ரியாவின் கலக்கத்தை பார்த்த மருத்துவர்… “லைஃப்ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணணும் இசை. அது சரியா இருந்தாலே பாதி சரி ஆகிடும். கூடவே மெடிகேஷன்ஸ். பட் முடிவு உங்க கைல தான்” என்றார்.
ப்ரியா, “என்ன முடிவு டாக்டர்” புரியாமல் கேட்க… “இளன் பத்தி முழுசா தெரிஞ்சப்புறமும் அவர் கூட வாழணுமா வேணாமான்னு” என்று நிறுத்த… ப்ரியா முகத்தில் வெற்றுப்புன்னகை.
“உங்க பையனுக்கு இப்படி ஒரு ப்ராப்லம் இருந்தா இப்படி தான் நீங்க யோசிப்பீங்களா டாக்டர்? எல்லாம் சரி ஆகி அவன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கமாடீங்க?” கூர்மையா வந்தது அவள் வார்த்தைகள்.
ஆனால் அவரோ புன்னகைத்தார். “யு கைஸ் ஆர் ரியலி மேட் ஃபோர் ஈச்அதர்” அவர் முகத்தில் ஆச்சர்யம் கலந்த புன்னகை.
‘இப்போது இதெதற்கு?’ என்பதுபோல ப்ரியா பார்த்தாள். அவர் மறுபடியும் ஒரு ரெகார்டிங் அவள் பார்ப்பதற்கு போட்டுவிட்டார். அதில் செழியன் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறான்.
“இளன் நீங்க நினைக்கறதுபோல இது ரொம்ப பயங்கரமாக வியாதி கிடையாது. இந்த ப்ராப்லம்’ல இருந்து வெளிய வந்து சந்தோஷமா வாழறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க தெரியுமா? கண்டிப்பா நீங்களும் உங்க இசையும் சந்தோஷமா இருப்பீங்க” என்று அவர் முடியவில்லை.
“ஏன் டாக்டர் இசை இடத்துல உங்க பொண்ணு இருந்தா… அவங்க என்னைப்போல ஒருத்தனோட ஆயிசு முழுசும் வாழ ஒத்துப்பீங்களா? யாரோ ஒரு பொண்ணு தானே? அதுனால என்ன வேணா சொல்லலாம்” அவன் கோபத்துடன் ஏளனமாக பேச…
“ஒரு சாதாரணமான அப்பாவா இருந்தா எப்படி யோசிச்சிருப்பேன்னு தெரியல இளன். பட் ஒரு மனநல மருத்துவர் அப்பாவா… கண்டிப்பா, எல்லா பாசிடிவ்ஸ் நெகடிவ்ஸ் சொல்லி அவங்களையே முடிவு எடுக்க சொல்வேன். தேவைப்பட்டா உதவி செய்வேன்” அவர் வயது… அவர் தொழில்… அவர் அனுபவம்… அங்கு பேசியது.
செழியன் இருந்த மனநிலை… அவனை யோசிக்கவெல்லாம் விடவில்லை. “வேணாம் டாக்டர். நான் இசைக்கு வேண்டாம். ஷி டிசேர்வ்ஸ் எ பெட்டெர் லைஃப்” என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.
“என் தப்பு. நான் அமைதியா இருந்திருந்தா அவ அந்த ஷிவாவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பா. என்னாலயே அவ சந்தோஷம் போச்சு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” கண்ணீருடன் அவன் பேசியதை திரையில் பார்த்த ப்ரியாவிற்கு ஒருபுறம் கோபம் ஒருபுறம் கண்ணீர்.
‘இவனை விட்டுவிட்டு எப்படி வேறொருவனை திருமணம் செய்துகொள்வேன் என நினைத்தான்’ என்று கோபம் வந்தாலும், ‘தனக்காக அவன் சிந்தும் கண்ணீர்… வருத்தம்’ அவளை கண்கலங்கச்செய்தது.
“இசை, நீங்க கேட்ட கொஸ்டின்’க்கு என்னோட அன்ஸர்” என்ற மருத்துவர்…
“இளன் போல தான் என் பையனும். ரொம்ப ஸ்டூடியஸ். நான் இந்தியன் ஆர்மி’ல டாக்டர்’ரா இருந்தேன். சோ லைஃப் மோஸ்டலி அங்கதான் எனக்கு. என்னோட பையன் நல்லா படிச்சு, நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி, IITல பேச்லர்ஸ் ஜாயின் பண்ணான்”
“பட் என்ன ஆச்சுன்னு தெரியல… எதுனால ஸ்ட்ரெஸ்னு தெரியல. தப்பான முடிவெடுத்து எங்களை விட்டுட்டு போய்ட்டான். பார்டர்’ல எவ்வளவோ பேர காப்பாத்தின என்னால, என் பையன காப்பாத்த முடியாம போய்டுச்சு”
“அப்போ தான் இதுபோல நிறைய ஸ்டுடென்ட்ஸ் IIT’ல தப்பான முடிவை எடுக்கறாங்கனு கேள்விப்பட்டேன். ஸ்டடீஸ்’ல ஸ்ட்ரெஸ் வரலாம். இன்டெர்னல் பாலிடிக்ஸ்’னால ஸ்ட்ரெஸ் இருக்கலாம். என்ன வேணா இருக்கலாம்… பட் அதுக்கு தீர்வு தற்கொலை இல்ல”
“ஆர்ம்ட் ஃபோர்ஸ் (armed force) ஒரு நாட்டுக்கு எவ்ளோ முக்கியமோ, அதுபோல தான் ஸ்டுடென்ட்ஸ்… வரும் தலைமுறையும் நாட்டுக்கு முக்கியம்னு தோணுச்சு. நாப்பது வயசுல Psychiatry படிச்சு, இப்போ இந்த IIT’ல சர்வீஸ்’ல இருக்கேன்” அவர் சாதாரணமாக சொன்னார். ஆனால் ப்ரியாவிற்கு ஒரு தந்தையாக அவரின் வலி புரிந்தது.
அவர் தொடர்ந்தார்.
“இதுபோல பிரச்சனைல வர்ற ஸ்டுடென்ட்ஸ் பத்தி அவங்க டிபார்ட்மென்ட்’ல விசாரிப்போம். அதுபோல இளன் பத்தி விசாரிச்சப்ப… யு நோ வாட். ஒருத்தர் கூட எந்த ஒரு சின்ன நெகடிவ் விஷயமும் சொல்லல இளன் பத்தி”
“இதுவரை IIT பாம்பே மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்ல இதுபோல ஒரு ஸ்டுடென்ட் பார்த்ததில்லனு தான் சொன்னாங்க. மாஸ்டர்ஸ் ஃபுல் டைம் பண்ணியிருந்தா கண்டிப்பா யூனிவர்சிட்டி டாப்பர் இளன் தான் சொன்னாங்க”
“அவர் HOD… இந்த விஷயம் கண்டிப்பா லீக் ஆகாது. இளன் கண்டிப்பா பழையபடி மாறணும். அவரோட டாக்டரேட் முடிக்கணும். அதுக்காக அவங்க வெயிட் பண்றதா சொன்னார். இதுவரை நான் பண்ணின கவுன்செல்லிங்’ல இதுபோல ஒரு ஸ்டுடென்ட் feedback நான் கேட்டதில்லை. அதுனால தான் இந்த ஸ்பெஷல் கேர். அண்ட் இங்க வர்ற எல்லாருமே என் பசங்க மாதிரி தான் ட்ரீட் பண்ணுவேன்” என்றார் புன்னகையுடன்.
“தேங்க்ஸ் அண்ட் ஸாரி டாக்டர்” என்றாள் அவரை கடுமையாக பேசியதற்கு.
“நோ நோ டோன்ட் பி ஸாரி. இளன்க்கு ட்ரீட்மெண்ட் ரெண்டு வாரம் குடுக்கறதா யோசிச்சிருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” ப்ரியாவிடம் அவர் கேட்க…
“எனக்கு அவன் நல்லபடியா திரும்ப வந்தா போதும் டாக்டர்” என்றாள். இப்போது கொஞ்சம் தெளிவு வந்ததுபோல இருந்தது அவளுக்கு.
“ரெண்டு நாள் இங்க தான் எமர்ஜென்சி கேர்’ல இருந்தார். நீங்க சென்னை போனதுக்கப்புறம் என்னென்ன ஃபீல் பண்ணனாருனு தெரியணும்னு… அவரோட டைரி பேஜஸ் கேட்டுருந்தேன். அத எடுக்க தான் இன்னைக்கு மார்னிங் குமார் கூட வீட்டுக்கு போயிருக்கார்”
“குமார் சாப்பாடு வாங்க வெளிய போன டைம்ல நீங்க வந்துருப்பீங்க போல. அதுனால குமார திரும்ப வரவேண்டாம்னு சொல்லிட்டார். பட் இளன் வீட்ல இருந்து கிளம்பினப்ப, என்கிட்ட பேசணும்னு சொல்லி என்னையும் வரச்சொன்னார்” என்று டாக்டர் நிறுத்த…
அவளுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருத்தது. அதை மருத்துவரிடம் கேட்டாள்.
“நான் ப்ரெக்னன்ட்’டா இருக்கேன்னு தெரிஞ்சப்ப… அவன் முகத்துல சந்தோஷத்தை பார்த்தேன் டாக்டர். பட் எதுக்காக அபார்ட் பண்ண சொன்னான்? நான் நல்லா இருக்கணும்னு தான் அந்த முடிவும்மா?” அவளுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கியது ‘அவன் பேசிய பேச்சை நினைத்தபோது’.
“அதுவும் ஒரு காரணம். கொஞ்சம் பதட்டத்தோட தான் இளன் பேச ஸ்டார்ட் பண்ணார்…” என்றவர் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
****************
காலை ‘ப்ரியா கர்பமாக இருக்கிறாள்’ என்று தெரிந்தவுடன்… முதலில் செழியனுக்கு மனதில் சொல்லமுடியாத சந்தோஷம். ஆனால் மறுபடியும் திடீரென சில எண்ணங்கள் வந்தது…
ஒன்று, கூகிளில் பைபோலார் டிசாடர் குறித்து செழியன் பார்த்தபோது… அது மரபுவழி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று படித்திருந்தான். அப்போது ‘தனக்கு என்று குழந்தை பிறந்தால் அதற்கும் வந்துவிடுமோ’ என்ற பயம் அவனுள் பரவியது.
மற்றொன்று, ப்ரியாவிற்கு குழந்தை என்று வந்துவிட்டால் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள யோசிப்பாள். அதுபோல ஒரு நிலைமையில் அவளை நிறுத்தக்கூடாது என்று நினைத்தான்.
மனதை கல்லாக்கிக்கொண்டு, ” அபார்ட் பண்ணிடு” என்றான். அதை சொல்லும்போது அவனுள் ஏற்பட்ட வலியின் அளவு அவனால் டாக்டரிடம் சொல்லமுடியவில்லை.
அதை அவன் சொன்ன நொடி, கன்னத்தில் பலமாக ப்ரியாவின் கை பதிய, ‘உன்னை கஷ்டப்படுத்தியதற்கு, காயப்படுத்தியதற்கு எத்தனை முறை நீ அடித்தாலும் நான் தாங்குவேன்’ என்று அவன் மனதில் நினைக்க…
ப்ரியா, ” இப்போ சொல்ற… அப்போ எங்க போச்சு புத்தி” என்று சொன்னபோது, அன்று இருவருக்குள் நடந்த கூடல் நினைவிற்கு வந்தது.
அவனுடைய பிறந்தநாளில் அழகான தாம்பத்தியம் அரங்கேறிய தருணம்… ஆனால் அதெல்லாம் இப்போது வெறும் கானல் நீர். ஏதாவது சொல்லி அவளை காயப்படுத்தி… கலைக்கவைத்துவிட வேண்டும் என நினைத்து… அவள் மனம் புண்படும்படி பேசினான்.
அதை கேட்டவுடன் ப்ரியாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம், ஆற்றாமை அவனை வதைத்தது.
செழியன் மருத்துவரிடம்… “அவளுக்கு இந்த குழந்தை வேணாம் டாக்டர். என்னால அவ பட்ட கஷ்டம் போதும். அடுத்த தலைவலி வேண்டாம் டாக்டர்” என்று புலம்பினான் செழியன்.
“இங்க பாருங்க இளன். கூகிள்ல நிறைய தகவல் இருக்கும். அதெல்லாம் மைண்ட்’ல போட்டுட்டு ரொம்ப யோசிக்காதீங்க” என்று அவர் பேச பேச, “புரியாம பேசாதீங்க டாக்டர். இசைக்கு இந்த குழந்தை வேண்டாம். எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா அவ மறக்கணும் டாக்டர்” என்றவன் தலையை பிடித்துக்கொண்டு… “எனக்கு இதெல்லாம் யோசிச்சா மண்டையே வலிக்குது” என்றான்.
அவனுக்குத் தேவை இப்போது மன அமைதி. அதற்கு தேவையான மருந்தை தந்தார். அவனும் ஆழந்த உறக்கத்திற்கு சென்றான்.
***********************
காலை நடந்ததை ப்ரியாவிடம் மருத்துவர் சொல்ல, ப்ரியா மனதில்… ‘எந்த ஒரு இடத்திலும் அவனுக்காக என்று அவன் யோசிக்கவில்லை. தனக்காக மட்டுமே யோசித்துள்ளான்’ என்று நினைக்கும்போது… அவள் கண்கள் மறுபடியும் கலங்கியது.
“ரொம்ப ஹை IQ இருக்கவங்க சிலபேருக்கு, இதுபோல சில மனநல பிரச்சனைகள் வரும். அதுபோல இருக்கவங்க எல்லாத்தையும் ரொம்ப யோசிச்சு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவாங்க. இளன் அவரோட மாற்றங்கள் பத்தி, கூகிள்’ல பார்த்தப்பவே அவருக்கு பைபோலார் இருக்குமோனு நினச்சுருக்கார். எதுனால பைபோலார்னு பார்த்தப்ப தான்… இந்த பிரச்சனை மரபுவழி வர வாய்ப்பு இருக்குனு பார்த்துருக்கார்”
“அது நிஜமா டாக்டர்?” ப்ரியா பயத்துடன் கேட்டதுபோல தெரியவில்லை அவருக்கு. தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் கேட்டதுபோல இருந்தது.
“எல்லாமே நம்ம வாழ்க்கை முறை பொறுத்துதான் இசை. பைபோலார் இருக்கற பேரன்ட் பசங்களுக்கு கண்டிப்பா வரும்னு எந்த ஒரு ரிசெர்ச்’சும் சொல்லல. நல்லதே நினைங்க. நல்லதே நடக்கும்” என்றார் புன்னகையுடன்.
ப்ரியாவும் மெலிதாக புன்னகைத்து… “நான் இளா மாதிரியெல்லாம் ரொம்ப யோசிக்கமாட்டேன் டாக்டர். வர்றத ஃபேஸ் பண்ணணும். அவ்ளோதான்” என்றாள். அவளின் இந்த தெளிவு அவருக்கு பிடித்தது.
“ஓகே தென். அப்போ நாளைல இருந்து இளாக்கு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணலாம். ட்ரீட்மெண்ட்’க்கு ஒத்துழைப்பாருனு நினைக்கறேன்… பார்ப்போம்… அண்ட் உங்ககிட்ட நான்… அவர் சொன்ன எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு இப்போதைக்கு சொல்லவேண்டாம். எல்லாம் சரி ஆகட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றார்.
ப்ரியாவும் புன்னகையுடன் தலையசைத்தாள். மனதில் சின்ன நம்பிக்கை முளைவிட்டது அவளுக்கு!

What a detailing sis.. Marvelous.. The effort you put is outstanding.. Really a splendid story I have ever read
Thank you so much da 🙂
Excellent narration 👌👌
Nalla Vela …Doctor isai Ku oru hope kuduthurukaru..
2perum avanga partner kaga think panranga..made for each other than..
Thanks a lot dear 🙂
Super ma.. i like the positivity in Isai’s words and true love for her in Ila’s words,. They r definitely made for each other
Thanks a bunch dear 🙂
Excellent writing.. nalla research panni detailed ah ezhudhurkinga.. very nice.. padichutea irukanum pola iruku.. 😀
Awwwe thank you so much da 🙂
Excellent narration dear 🥰 isai very strong hope illa will recover soon
Thanks much dear 🙂
Vera level narration ji. Very nice, kandipa nallathuthan nadakum, Dr. Sonaa madiri made for each other’s than.
Awwe thanks alot dear 🙂
Ila sekirama gunam aganum kadavulae
Aagiduvaan da 🙂
Seekiram sari aaidanum aandava…
Aagidum da 🙂
That postivity ❤️❤️
Thanks a lot dear 🙂
Excellent narration… Every detail crisp and clear..
Thanks much dear 🙂
Superb writeup… 👍… waiting for illa to get well
Thank you so much dear 🙂
Namakkaga oruthar think panrathu yevalo periya gift ❤️ sema sema da… Oru oru Chinna Chinna details um perfect 😀
Thank you so much da 🙂
Oh such emotional few chapters… wow
yeah Thanks a lot da 🙂