Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -1A

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 1A:

காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனம். ஊழியர்கள் வந்த வண்ணம் இருக்க, காதை மொபைலுக்கு கொடுத்தபடி வந்துகொண்டிருந்தான் ராஜீவ் கிருஷ்ணன். உடன் வேலை பார்ப்பவர்களுக்கு ஆர்கே!

அளவான உயரம், உயரத்திற்கேற்ப உடற்கட்டு, ரெட்ரோ ஸ்டைல் ஃபுல் ரிம் ரேபன் ஸ்பெக்ஸ் என்று இருந்தவன் கண்களில் ஏனோ ஒரு சின்ன ஏமாற்றம் இழையோடியது. 

மொபைலில் எதிர் பக்கம் என்ன பேசினார்களோ, இவனின் பதில் ஒரு வார்த்தையை தாண்டவில்லை. அப்படியே நடந்தவன், அலுவலக லிஃப்டை அடைய, அங்கே இரண்டில் ஒரு லிஃப்ட் பழுதாகி இருந்ததால், ஏற்கனவே கூட்டம் காத்திருந்தது.  

ஏனோ காத்திருக்க மனமில்லாமல் பக்கத்திலிருந்த படியில் ஏற, பின்னாலேயே ஒரு பெண்ணின் பேச்சுக் குரல். திரும்பிப் பார்க்க தோன்றவில்லை, ஆனால் செவி மட்டும் அப்பேச்சினை தொடர்ந்தது.

“கமான் காயு! லைப் இஸ் ஃபுல் ஆஃப் சர்ப்ரைஸஸ்! நம்ம விருப்பப்பட்டது, எதிர்பார்த்தது போல நடக்கலைனா, அதை விட பெட்டரா வேற ஏதோ ஒன்னு நமக்காக காத்திருக்குனு நினைச்சுட்டு கடந்து போயிட்டே இருக்கணும். 

மோரோவர், நீ இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு இந்த விஷயம் அவ்ளோ வர்த் இல்ல. ஹி டோன்ட் டிசெர்வ் யூ. அதையே நினைச்சு வருத்தப்படாம, ஒழுங்கா வேலைல கவனத்தை திருப்பு. சரி, நான் இன்டர்வியூ முடிச்சுட்டு கால் பண்றேன்” 

படி ஏறியபடி பேசியதால் மூச்சிரைச்சலுடன் பேசி முடித்தாள். இதை கேட்டபடி படியேறிய ராஜீவ்வுக்கு அக்குரல் ஒரு அசரீரி போல, தனக்காகவே பேசியது போல… மனதை லேசாக்கியது. 

இப்போது திரும்பிப் பார்க்க மனதில் ஒரு உந்துதல். அவன் திரும்பும் சமயம், அவனுடைய தளமும் வந்திருக்க, அவனுடன் வேலை பார்ப்பவன், அவனை வழிமறித்தான். அப்பேச்சின் சொந்தக்காரி ராஜீவ்வை கடந்து ரிசெப்ஷன் சென்றடைந்தாள். அவளும் அத்தளத்திற்குத் தான் வந்திருப்பாள் போலும்! 

“டேய் ஆர்கே! ரொம்ப பண்ற டா… பார்த்தியா எவ்ளோ பேர் வந்திருக்காங்கனு? மொத்தம் இருவது கேண்டிடட்ஸ். தலையே சுத்துது. நீ இன்டர்வியூ பண்ண முடியாதுனு சொன்னதுனால, இப்போ நான் சிக்கிட்டேன். ப்ராஜக்ட் வேலை தலைக்கு மேல இருக்கு ஆர்கே” என வினய் பேசியதெல்லாம் ராஜீவ் கருத்தினில் பதிந்ததா என்று தெரியவில்லை.

கவனம் முழுவதும் கடந்து சென்றவளின் மேல் தான்! கண்கள் அவளையே பின்தொடர்ந்தது.

“டேய் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” வினய் சத்தத்தில் ராஜீவ் அவனைப் பார்த்தாலும், அவன் சிந்தையில் திடீரென ஏதோ பளிச்சிட்டது.

இன்டர்வியூ! அவளும் அதையே தான் சொன்னாளே! சம்பந்தமே இல்லாமல் இப்போது முகம் மலர புன்னகைத்தான் ராஜீவ்! 

ஒருவேளை எதிரில் பெண் இருந்திருந்தால் அவனின் புன்னகையை ரசித்திருக்கலாம். ஆனால் வினய்யோ வெட்டவா குத்தவா என்பதுபோல முறைத்தான்.

மறுபடியும் எட்டி ரிசப்ஷனை பார்த்த ராஜீவ், “நீ போ நான் வரேன்” வினய்யிடம் சொல்லிவிட்டு, ரிசெப்ஷனை நோக்கி நடந்தான். 

அப்போது ரிஷப்ஷனிஸ்ட், அப்பெண்ணிடம் பெயரைக் கேட்க… 

“திவ்யபாரதி” என்றாள் அவள். ராஜீவ் நடையை மெதுவாக்கினான். அவள் பெயர் துல்லியமாகக் காதில் விழுந்தது.

ரிசப்ஷனிஸ்ட், “யாரை பார்க்கணும் மிஸ் திவ்யபாரதி?” என்றபோது “மிஸ்டர் வினய்” என்றாள் திவ்யா. ராஜீவ் முகத்தில் புன்னகை அதிகமானது. கூடவே அவனின் நடையின் வேகமும்!

எதையோ முடிவெடுத்தவன் போல, நேராக சென்று நின்றது வினய்யின் இடத்தில். 

வினய் ஏற்கனவே இருந்த கடுப்பில் முறைக்க, “திவ்யபாரதி’ங்கற கேண்டிடேட் மட்டும் என்கிட்ட அனுப்பு டா” என்றான் ராஜீவ் மலர்ச்சி சற்றும் குறையாமல்.

அவனின் பேச்சில் முதலில் ‘ங்கே’ என வினய் திகைத்தாலும், “டேய் மச்சா யாருடா அது? சொந்தமா? அது தப்பாச்சே ஆர்கே” என்றான் அதே திகைப்பில்.  

“சொந்தம்னு சொன்னேனா வினய்?” 

“பின்னே?!” என்ற வினய்யின் கேள்விக்கு… ஒரு முறை  சற்று முன் நடந்ததை மனதில் நினைத்துப் பார்த்த ராஜீவ், புன்னகைத்தான். 

பின், “இப்போதான் பார்த்தேன்! சரி, அந்த பொண்ணு கூட இன்னும் ரெண்டு கேண்டிடட்ஸ் வேணா சேர்த்து அனுப்பு! பட், ஷி ஷுட் கம் டு மி! லாஸ்ட் ஆஹ் அந்த பொண்ண அனுப்பு டா!” என்ற ராஜீவ்… வினய்யின் தோள்தட்டி…

“இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. டென் தெர்ட்டி’க்கு மேல… ஓகே?” சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

வினய்யுக்கு ஆச்சரியம் தான். காரணம், ராஜீவ் இதுபோல நேர்காணல் எடுக்கவே மாட்டேன் என சொல்லியிருந்தான். இதற்கு முன் வார இறுதியில் நடந்த சில நேர்காணலுக்கு, தரவேண்டிய செட்டில்மென்ட் இழுபறியில் நிறுத்தி வைத்திருந்தனர் அவன் நிறுவனத்தில்.

இப்போது தானாகவே வந்து இப்படி சொல்பவனை விசித்திரமாக வினய் பார்த்தாலும், தன் வேலை கொஞ்சம் குறைந்தது என எண்ணி வேலையில் கவனம் செலுத்தினான்.

மேலும் ராஜீவ் மேல் அவ்வளவு நம்பிக்கை. இதுவரை எந்த ஒரு சின்ன பிளாக் மார்க் இல்லை. அதே நிறுவனத்தில் வேலை செய்து, இப்போது சீனியர் ப்ராஜக்ட் டெக்னிகள் ஹெட். எதையும் எளிதாக, அசாதாரணமாகக் கையாள்பவன். அனைவரிடமும் சகஜமாக பழகுவான், ஆனால் மெல்லிய எல்லைக்கோட்டுடன்! ஆதலால் அவன் கேட்டது வினய்யால் தவறாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ராஜீவ் அவன் இடத்திற்கு செல்லும் போது நேர்காணலுக்கு வந்தவர்களைப் பார்த்தபடி நடந்தான். அங்கே அவள்! ஆனால் முகம் காட்டாமல் மொபைலை பார்த்தபடி ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

ஆவலுடன் புன்னகைத்தபடி அவளைக் கடந்து தன் இருக்கைக்கு சென்றான்.

இது எதுவும் தெரியாத திவ்யா, மொபைலில் நேர்காணலுக்கு எடுத்துவைத்த சில குறிப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

ஒருவேளை இதில் தேர்வாகி இங்கு சேர்ந்தால், இது மூன்றாவது நிறுவனம். தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் தான் செய்த வேலைக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்காததால், இம்முடிவு! ஏற்கனவே அங்கே ராஜினாமா தந்தாகிவிட்டது. 

படிப்புக்குப் பின், விரும்பி மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தாள். வேலை என்று வந்துவிட்டால், அதற்கே முன்னுரிமை. அதை முடித்துவிட்டு தான் அடுத்தது என்ற குறிக்கோளை வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து கடைபிடிப்பவள். திறமைசாலி! 

ராஜீவ் கேட்டுக்கொண்டதன் படி முதலில் இருவரை அவனிடம் அனுப்பச்சொன்னான் வினய். கடைசியாக திவ்யபாரதி அனுப்பப்பட்டாள்.

சிறிய எதிர்பார்ப்பு ராஜீவ்வினுள்.

கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தவளை, தன் கண்ணாடி வழி ஒரு நொடி கண்ணிமைக்காமல் பார்த்தாலும்… “ப்ளீஸ்!” என்றான் எதிர் இருக்கையைக் காட்டி.

சிறிய புன்னகையுடன் உட்கார்ந்தவள் தன் ரெஸ்யூமேவை அவனிடம் கொடுத்தாள். 

அவள் வந்த… பின் அமர்ந்த விதத்தை வைத்து அவளின் குணங்களை யூகிக்க முயன்றான் ராஜீவ். அடுத்து அவள் தந்த ரெஸ்யூமை புரட்டியபடி கடைசி பக்கத்திற்கு வந்தவன் கண்களில் பட்டது… ‘திருமணமாகவில்லை’  என்கிற மறைமுகத் தகவல். 

அதை பார்த்ததும் உறுத்தாத புன்னகையுடன், ஓரிரு குறிப்புகளை மனதில் குறித்துக்கொண்டு, ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். 

அலட்டிக்கொள்ளாமல், திடமாக, தீர்க்கமாக பதில் சொன்னவளை ஏனோ இன்னமும் கேள்வி கேட்கவே அவனுக்கு தோன்றியது. போதாததற்கு, இதுவரை கேட்ட சில கேள்விகளுக்கு… அதில் வேலை பார்த்ததில்லை என்ற பதில் ஓரிரண்டிற்கு மட்டுமே அவளிடம் இருந்து வந்திருந்தது. 

ஆதலால், அடுத்து கொஞ்சம் சிரமமான, சிக்கலான கேள்வியை வேண்டுமென்றே கேட்டான். அவளின் அனுபவத்திற்கு கொஞ்சம் அதிகம் தான் என தெரிந்தும் கேட்டான். 

அவளும் யோசித்தாள், பின் பதில் தர முயன்றாள். ஆனால் ஏதோ ஒரு தொடர்பு தவறுவதாகவே இருந்தது. அவளின் ஒவ்வொரு பரிமாணத்தையும், எடுக்கும் சிரத்தையும் பார்த்தபடி இருந்தான். 

அவள் ‘தனக்கு பதில் தெரியவில்லை’ என்று செல்லும்முன்… அடுத்தடுத்த தொடர் கேள்விகளை அவன் கேட்க, அவளும் அசராமல் பதில் சொல்லிக்கொண்டே வர, அது முடிந்த இடம், முன்பு கேட்ட சிரமமான கேள்விக்கான பதில். 

அவள் தவறவிட்ட தொடர்பு இப்போது புரிந்தது. அது தெரிந்தவுடன் அவள் முகத்தில் திகைப்பு, அடுத்து புன்னகை. 

அவளின் அந்த புன்னகையில், ‘அவன் பதில் வரவழைத்துவிட்டானே!’ என்ற குழைவு இல்லை. ‘தனக்கு தெரியவில்லையே’ என்கிற சங்கடமும் இல்லை. ஒரு ஆச்சரியம் கலந்த புன்னகை. அது அவனை ஈர்க்காமல் இல்லை. 

“காட் இட்?” அவன் புருவம் உயர்த்த, ஆம் என அதே புன்னகையுடன் தலையசைத்தாள் அவள். 

அவன் கேள்வி கேட்கும் விதமும், பதிலை வெளிக்கொணரும் தன்மையும், அவளையும் லேசாக ஈர்த்து, அவனை கூர்ந்து பார்க்க வைத்தது. கொஞ்சம் வித்தியாசமாக அவளுக்கு தெரிந்தான் ராஜீவ்! 

10 thoughts on “உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -1A

  • Rachell Revathi Samuel

    Superb start ka😍😍
    First impression best impression than pola rendu perukume..
    Divya pesunathu RK ku sonna mariye irunthuchuna apo avan life yaro irunthurukanga polaye..
    Rajeev ketta question kulam answer varavachutan..
    Apo Divya kandipa ithe office la join panniruva.. 2 perum epdi sera poranganu pakalam..

  • Wow ka 🤩 New story ah…….. Super ka 🤩🤩 Evlo nal achu…….. Daily update kudunga 😁😁

    • Preethi S KarthikPost author

      Yes da new story 🙂 Weekdays I will try to give a chapter. Evening time site la post pannuven da 🙂

  • Abirami Praveen

    Awesome… What a flow preethi…could very well connect because of the name 😃.. Rajeev🥰.. I have met a HR with the same features

    • Preethi S KarthikPost author

      Woww Thats so cool <3 Happy you could connect da 🙂

  • Nivetha Varadaraju

    Asusual great start my dear. My most fav writer.. write more more moree.. ready to read.. all d very best for your great success da

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved