Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 21

பசுமையின் புத்துணர்ச்சி – 5(1)

“அங்கயிருந்து எப்படி உங்க லைப் ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்லுங்க மேடம்” என்றான் ஆதவன்.

மிதுலா, தன் வாழ்க்கையின் முன்னேற்ற பக்கங்களான பசுமை பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். 

———————

மிதுலா தயக்கத்தை பார்த்த சக்தி “மிது. தமிழ் ஸார் ஆரம்பிச்சு பாதியிலே விட்ட ப்ராஜெக்ட் தான் அங்கன்வாடி ப்ராஜெக்ட். அவருக்காக இந்த வேலையே எடுத்து செய்யணும்ன்னு நினச்சேன். ஆனா அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கல”

“போன மாசம் இந்த டே கேர் பிராண்ட் கிளோஸ் பண்ண போறதா கேள்விப்பட்டேன். பட் எப்படி ப்ரொசீட் பண்றதுன்னு இருந்தேன்”

“ஏன்னா என்னோட இந்த வேல, அம்மாவோட கனவு. நான் பெரிய ஆளா வரணும்ன்னு ஆசைப்பட்டாங்க. என்னால இந்த டே கேர் ப்ராஜெக்ட்ல எப்படி இறங்க முடியும்ன்னு யோசிட்டு இருந்தேன்”

“ஆனா கடவுள், இதுக்கு நீ சரிவரமாட்டடா சக்தி… கரெக்ட்டான ஆளா நான் காட்டறேன்னு சரியான நேரத்துல உன்ன என் கண்ணுல காட்டிட்டாரு” சீரியஸாக ஆரம்பித்து கண்ணடித்து முடிக்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.

சிறிது நேரத்தில் பாண்டிச்சேரியை அடைந்தனர் இருவரும். NGO அலுவலகத்துக்குச் சென்ற இருவரையும் பார்த்து அங்கிருந்தவர்கள் நிற்க, வேலை செய்யும் அனைவரையும் அழைத்தான் அவனின் அறைக்கு. அங்கே வக்கீலும் இருந்தார்.

அனைவரும் மிதுலாவைப் பார்க்க, ஒரு சிலர் கண்டுகொண்டனர் அவளை.

“இவங்க தான் ஜோசப் ஸார் பேத்தி மிதுலா. இன்னும் கொஞ்ச நாள்ல… இவங்க தான் அவர் இடத்துல இருந்து எல்லாத்தையும் பாத்துக்கப்போறாங்க” என்று தெரியாத சிலருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது.

வக்கீல் அவளிடம் நலம் விசாரித்துவிட்டு, சில ஆவணங்களை நீட்டினார். அவள் என்ன என்பது போல் சக்தியை பார்க்க, “அஃபிஷியலா பொறுப்பேத்துக்கறதுக்கான டாக்குமெண்ட்ஸ்” என்றான்.

அவன் அவரிடம் “இவங்க சென்னைல இருப்பாங்க ஸார். கொஞ்சம் அங்க வேல இருக்கு. இங்க எப்பவும்போல மேனேஜர் பாத்துக்கட்டும். ஏதாச்சும்ன்னா என்ன கூப்பிடுங்க. நான் மிதுலாவை கூட்டிட்டுவறேன்” என சொல்லிவிட்டு அவளை அவள் தாத்தா உட்கார்ந்திருந்த இடத்திற்கு அழைத்துச்சென்று உட்காரச்சொன்னான்.

அவள் சற்று தயக்கத்துடன் அங்கு உட்கார, அவளின் பக்கத்தில் டேபிள் மேல் சாய்ந்து நின்றுகொண்டு முக்கியமான சில கோப்பைகளைக் காட்டினான்.

அவள் அது எதையும் கவனிக்காமல் அவனையே பார்க்க, அவன் என்ன என்பதுபோல் கேட்டான்.

“நான் மூணு வாரம் கழிச்சு இதெல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?” புருவங்களை உயர்த்தி கேட்க “சிம்பிள். ஆஃபீஸ உன்னோட ரூம்க்கு மாத்திடுவேன். ஆனா… இன்னும்மா மூணு வார கணக்கெல்லாம் நம்பற?” புன்னகையை அடக்கிக்கொண்டு கேட்க, அவனை முறைத்தாள்.

“மிது… வரவர நீ ரொம்ப முறைக்கற… பக்கத்துல தான் மசூதி இருக்கு. ஒரு எட்டு எட்டிட்டு வரலாமா” கேலியாக கேட்க, சிரிக்கவந்தவள் சட்டென ஏதோ நினைவுகளில் முகம் மாற, “என்னாச்சு மிது” கேட்டான் அவளிடம் .

“அங்கதானே அந்த ஆளோட டிரஸ்ட் இருக்கு” அவ்வளவு கோவம் முகத்தில்.

“வா போலாம்” என்று அவன் நகர “எங்க?” அவள் கேட்குமுன் அறையை விட்டு வெளியேறியிருந்தான். அவள் பின்னே செல்ல, அவளை அந்த ட்ரஸ்டுக்கு அழைத்துச்சென்றான்.

“எதுக்கு சக்தி இங்க இப்போ?” அவள் கேட்ட எதுவும் அவன் காதுகளில் விழவில்லை.

உள்ளே அவளை அழைத்துச் செல்ல, எல்லோராலும் போற்றப்படும் அந்த மாமனிதன் அறையில் உட்கார்ந்திருந்தான். இவன் உள்ளே செல்லவும், “அட வாப்பா சக்திவேல்” நட்புடன் அழைத்தான் அந்த கிழவன்.

தற்போது NGO இவனின் கண்காணிப்பில் இருப்பது தெரியும். எனவே இந்த மரியாதை. அவன் உள்ளே வந்த சிலநொடிகளில் மிதுலாவும் உள்ளே நுழைந்தாள்.

அவளை சக்தியுடன் பார்த்த அந்த மாமனிதன் அதிர்ந்து எழ, “உட்காரு மிது” என்று அவளை உற்காரவைத்துவிட்டு அறையை நோட்டம் விட்டான்.

அந்த மாமனிதனுக்கு என்னவென்று புரியாமல் நிற்க, சக்தி அங்கே ஜன்னல் திரை தொங்கவிடப்பட்டிருந்த கம்பியை இழுத்தான். அதுவும் கையோடு வந்தது.

அந்த மாமனிதன் பதறிப்போக “இந்தா பிடி” என்று மிதுலாவிடம் சக்தி நீட்ட, அவளுக்கும் புரியவில்லை.

அவள் சக்தியை பார்க்க “பிடி மிது. நீ தானே சொன்ன… ‘ரெண்டாவது டைம் வந்தப்ப இந்த ஆள் பேசின பேச்சுக்கு ஒரு கட்ட இருந்துருந்தா போட்டு தொவச்சுருப்ப’ன்னு. அதுக்குத்தான் பிடி” என சொல்ல, புன்னகையுடன் அவளும் வாங்கிக் கொண்டாள்.

சக்தி அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

மாமனிதனுக்கோ ‘அனைத்தும் இவனுக்கு தெரிந்துவிட்டது. இவள் யார் இவனுக்கு’ பல கேள்விகள் தோன்ற, மிதுலா எழுந்து தன்னிடம் வருவதைப் பார்த்து பீதியடைந்து, பதட்டத்துடன் பின்னே செல்ல, வெற்றிப்புன்னகையுடன் நெருங்கினாள் மிதுலா.

அன்று அவன் அவளை நெருங்கும்போது ஏற்பட்ட அவஸ்தையில் துவண்ட மனம், இன்று அவனின் பயத்தில் வெற்றி கொண்டது.

அவன் அருகில் சென்ற மிதுலா… “அன்னைக்கு வாய் கூசாம என்ன கூப்பிட்டல. உனக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டேன். அந்த நினைப்பு இருந்திருந்தா நீ என்கிட்ட கேட்டுருப்பியா?” கிழவனால் பதில் சொல்ல முடியவில்லை.

” எங்க ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான் இருக்கும். அட்லீஸ்ட் என்ன நெருங்கினப்ப உன் பொண்ணு ஞாபகம் வந்துருக்கலாம். வரலல?” அசிங்கத்தில் முகத்தை தாழ்த்திக்கொண்டான்.

“அதெல்லாம் பத்தாதுன்னு, நான் அடுத்த நாள் வந்தப்ப உனக்கு ‘திரும்பத்திரும்ப செய்யனும்’ன்னு இருக்குன்னு சொன்ன. அப்போக்கூட உனக்கு உன் பொண்ணு ஞாபகம் வரலல?”

“இனி வேற பொண்ண இப்படி பாக்கறப்ப, இல்ல கூப்பிடறப்ப உன் பொண்ணு ஞாபகம் வருமா?… இல்ல உன் பொண்ணயே தப்பா தான் பாப்பயா?” கத்தியின் முனை போல் வந்தது ஒவ்வொரு வார்த்தையும்.

“ஐயோ வேணாம். இப்படி பேசாத” காதுகளை மூடிக்கொண்டான்.

அவன் கைகளை பிரித்துவிட்டவள் “இன்னைக்கு போய் உன் பொண்ண பாக்கறப்ப என் ஞாபகம்… நான் பேசினது ஞாபகம் வரும்ல? அப்போ உன் பொண்ண எப்படி பாப்ப? என்ன பாத்த மாதிரியா?”

“உன் போட்டோவ உங்க வீட்டுக்கு அனுப்ப ஒரு நிமிஷம் போதும் எனக்கு”

“அப்படி நான் அனுப்பி, அத உன் பொண்ணு கண்ல பட்டுச்சுன்னா, உன்கிட்ட கூட வர பயப்படுவா” நேராக அவன் கண்களை பார்த்துச்சொன்னவள்

“ஏன்டா… என்ன சொன்ன நீ? இந்த தொழில் பண்ணவ தானே. ஏதோ கண்ணகி மாதிரி பேசற’ன்னு சொன்னல… நீ சொன்னாலும் சொல்லனாலும் உன்கூட படுக்கறதுக்கு முன்னாடி வர நான் கண்ணகி தான்டா. நானா ஏத்துக்கிட்டு எவன்கூடவும் படுக்கல”

“இந்த தொழில் செய்றவங்கள்ல முக்காவாசிப் பேர் விருப்பமில்லாம தான் செய்றாங்க”

“ஒரு துப்புரவுத் தொழிலாளி, சாக்கடைக்குள்ள இறங்கி, கழிவை நீக்க வேலை செய்வாங்க, அவங்க உயிரைப் பணயம் வெச்சு. அதுபோல சாக்கடை புத்தியுடையவங்க சிலபேர் அவங்க சந்தோஷத்துக்காக எங்கள மாதிரி ஆளுங்ககிட்ட வருவாங்க. எங்களுக்கு விருப்பமில்லனாலும் ‘கழிவுங்கிற அவங்க ஆசைய’ போக்க, எங்களையே பணயம் வெச்சு, திருப்பி அனுப்புவோம்”

“இது யார் மேல தப்பு? சாக்கடை புத்தியுள்ள மிருகங்களா? இல்ல அந்த கழிவை விருப்பமேயில்லாம பூசிக்கிற நாங்களா? த்தூ… இதெல்லாம் போய் உன்கிட்ட சொல்றேனே… நீயே ஒரு சாக்கடை…”

“உன்ன அடிச்சு வெளிக்காயம் மட்டும் தர்றதுல இஷ்டமில்லை. இனி நீ பொண்ணுங்கள  தப்பா பாத்தாலோ, அவங்களுக்கு பிடிக்காம படுக்க கூப்பிட்டாலோ, உன் பொண்ண கூப்பிடறதா நினச்சிக்கோ” என்றவள் அந்த கம்பியை கீழே போட்டுவிட்டு “வா சக்தி போலாம்” என்று வெளியேறினாள்.

கிழவனை கேவலமாக பார்த்துவிட்டு சக்தியும் அவள் பின் வெளியேறினான்.

சில நிமிடங்களில் இருவரும் காரில் ஏறினார். மிதுலாவின் மனது லேசானது. ஏதோ ஒரு நிறைவு.

பக்கத்தில் இருந்த சக்தி அவளையே பார்த்திருந்தான். இந்தச் சின்ன வயதில் என்ன ஒரு முதிர்ச்சி? அவளின் இந்த வெளிப்பாடு அவனை மிகவும் ஆச்சர்யப்படித்தியது. கண்ணிமைக்காமல் பார்த்தான் அவளை. வித்யாசமாகத்தெரிந்தாள்…

தன் தாய், கணவன் போன பின், சொந்தங்களால் தூற்றப்பட்டபோதும், நிமிர்வுடன் அவர்களை எதிர்க்கொண்டு, தன்னை வளர்த்தது…

எத்தனையோ முறை, தரம்தாழ்த்தி பேசியவர்களை கிழித்துத்தொங்கவிடவேண்டும் என்று தான் சொன்னபோதெல்லாம், அப்படி செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம். நாம் நாமாக இருப்போம் என்றுவிடுவார்.

கோபப்படுவதாலோ, இல்லை பழிதீர்ப்பதாலோ, என்ன கிடைத்துவிடும்? போனது திரும்பவருமா? என்பார். அதனாலேயே கோவத்தை முற்றிலுமாக விட்டிருந்தான்.

இன்று தாயை போலவே மிதுலா பேசியது, அவனை அவளின்புறம் மொத்தமாக இழுத்தது.

முதல் முறை கண்கள் அவள் நடவடிக்கைகளை ரசிக்க ஆரம்பித்தது. தான் செய்வது சரியா… தவறா… என்ற விவாதம் நடக்கும்முன், தன்னையே குலுக்கிக்கொண்டு பார்வையைத் திருப்பினான்.

“சக்தி நான் பண்ணது சரிதானே?” அவனைப் பார்த்து கேட்க, “ஹ்ம்ம்” என்றான் அவளை பாராமல். அவனால் அவள் கண்களை எதிர்கொள்ளமுடியவில்லை.

மனதில் ஆயிரம் கேள்விகள்? தன் எண்ணம் ஏன் தறிகெட்டு போகிறது என்று. அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்.

“சென்னை தானே போறோம் சக்தி?” என்று கேட்கும்போது தான், அவன் செய்ய நினைத்தது நினைவிற்கு வந்தது. “இல்ல மிது. உன் வீட்டுக்குப் போறோம். நாளைக்கு சென்னை போலாம்” என்றான்.

“ஐயோ வீட்டுக்கா… வேணாம்” என்றாள் அவசரமாக.

“இல்ல கண்டிப்பா போனும்”

“உயிரை வாங்காத சக்தி… எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாப்பாங்க” எரிச்சலுடன் அவள் சொல்ல

“யார் எப்படி பாத்தா நமெக்கென்ன. உன் வீட்டுக்கு நீ போற அவளோ தான்” என்றான் விடாமல். யார் கண்ணிலாவது பட்டுவிட்டால்? இத்தனை நாள் எங்கே சென்றாய் என கேட்டால்… என்ன சொல்வது? என யோசிக்க, சில நிமிடங்களில் அவள் வீடும் வந்தது. 

காரிலிருந்து இறங்க மிகவும் தயங்க, அவள் கையைப்பற்றி, வெளியே வரச்செய்தான்.

அந்த பறந்து விரிந்திருந்த வாயில் அவளுக்கு நிறைய ஞாபகங்களை நினைவூட்டியது. அவள் தாய், தந்தை அங்கே நிற்பதுபோல் மாயை. சக்தியின் கைகளை இறுக பிடித்துக்கொண்டாள்.

அவள் அப்படியே நிற்க, கதவைத்திருந்து உள்ளே அழைத்துச்சென்றான். வைத்தது வைத்தபடி சுத்தமாக இருந்தது வீடு.

அவள் சுற்றியும் முற்றியும் பார்க்க “ரெண்டு நாளைக்கு ஒரு தடவ கிளீன் பண்ண சொல்லிருக்கேன். தமிழ் ஸார் ஆசை எப்பவாச்சும் நிறைவேறாதா…? நீ வரமாட்டியான்னு” அவள் அவனைப் பார்க்க, அவன் படியேறி மேலே இருந்த அறைக்கு அழைத்துச்சென்றான்.

அந்த அறை முழுவதும் அவள் மற்றும் அவள் தாயுடன் இருக்கும் வரைபடங்கள். அவள் தந்தை வரைந்தது.

“நீ இல்லாதப்ப, ஆண்ட்டியும் போனதுக்கப்பறம், அவர் இந்த ரூமே கதின்னு இருந்தாரு” சக்தி சொல்ல….

ஒவ்வொரு படங்களையும் பார்த்தாள். ஒரு மூலையில் இருந்த அவர்கள் குடும்பப்படத்தைப் பார்க்க, கட்டுக்கடங்காமல் கண்ணீர் தாரைதாரையாகக் கொட்ட, கட்டுப்பாடுகள் தகர்த்து அருகே சென்று கதறி அழுதாள்!!!

———————

இதை மங்கை மற்றும் ஆதவனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது கண்கள் கலங்கியது மிதுலாவிற்கு.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved