அகம் புறம் – விமர்சனங்கள்

வணக்கம் தோழமைகளே!

இந்த பகுதியில் கடந்த வருடம் மார்ச் டு ஜூலை 2021 எழுதிய என் கதையான அகம் புறம் நாவலுக்கு கிடைத்த விமர்சனங்களை கம்பைல் செய்திருக்கிறேன்.

Writer Charithraa:

Preethi’s : அகம்-புறம்..!
—————————–
கதை எழுதுவதற்கும், காமத்தில் கூடுவதற்கும் என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?
ஒற்றுமை: இரண்டிற்குமே ஆவலுடன் கூடிய ஆரம்பமும், திருப்தியான ஒரு Climax-உம் தேவை. நடுவில் நடப்பதெல்லாம் சம்பந்தப்பட்ட இருவரின் ரசனையை பொறுத்தது. (I Mean, The Writer & the Reader)

வேற்றுமை: முன்னது-ஊரறிய உலகறிய செய்வதில்தான் ஆனந்தம். பின்னது-இரண்டே இரண்டு பேர் மட்டும்…, ஹிஹிஹி.!

இதை எதற்கு இப்போது..? ஒரு நிமிஷம்….!! ப்ரீத்தியை பற்றி சொல்லி விடுகிறேன். Then we will come back here.!

ப்ரீத்தி – நேரம் கிடைக்கையில் எல்லாம் எதையேனும் எழுதுவதை வழக்கமாக கொண்டவொரு சராசரி குடும்பப்பெண்.

She had a Story in her Mind.

“நாவல்தானே..? அதுல என்ன புதுசா இருக்கப்போவது? ஒரு ஹீரோ + ஹீரோயின், நடுல கொஞ்சம் காதல், கசமுசா சென்டிமென்ட் & குடும்பம், நடுல ஏதாவது சாவு, இல்லனா “ஆண்டிஹீரோ/ஆட்டிடியூட் ஹீரோயின்”னு ஸ்டீரியோ டைப்ல விஜய் டிவி கணக்கா இழு இழு இழுன்னு இழுத்து, ஆஹா..என்னவொரு நாவல் எழுதிருக்கோம்ல..ன்னு சுய அரிப்புக்கு சொறிஞ்சுக்கற கதையா இருக்கும்…!” என்போருக்கு….

Stop Stop Stop.! அதுவல்ல இது.

தான் கண்ணால் பார்த்த “மாற்றுப்பிறவி”களின் அசாதாரண வாழ்க்கைமுறை, அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சொல்லொணாத் துயர்கள் இவற்றையெல்லாம் கொஞ்சம் Compile செய்து, அதை வெறும் “சென்டிமென்டல் பேத்தல்” கதையாக கொடுக்காமல், அவர்களுக்கேற்படும் ஹார்மோன் பிரச்சனை முதற்கொண்டு பாலியல் இச்சை வரை அத்தனைக்கும் முறையான அறிவியல்/மருத்துவ ஆலோசனை பெற்று, நிறையவே வாசித்து, and on top of all, சில திருநங்கை/திருநம்பி-களோடு ஆத்மார்த்தமாய் பழகி, எல்.ஜி.பி.டி உள்பட நிறைய அறிவியல் உள்ளீடுகள், நிறைய தேடிப்பெற்ற உதாரண விஷயங்கள் என்று தனது “அகம்-புறம்” நாவலில் வடித்திருக்கிறார்.

அதுவா சிறப்பு…? ப்ச்ச்…Nah…!!

ஏற்கனவே இரு குழந்தைகைளின் தாயாயிருந்தும், மூன்றாவதாய் இக்கதைக்கருவை ஏழு மாதங்களாய் சுமந்து, and probably தனது கேரக்டர்களான பாலா,சத்யா,அருண்,கெளதம் இவர்களுடனே வாழ்ந்து, அந்த “மாற்றுப்பிறவி”களின் வலியை உலகுக்கு சொல்லும் முயற்சிக்காக தன் குடும்பத்துக்கான நேரம், குழந்தைகளுக்கான ஈடுபாடு, தனது மாதாந்திர/நிரந்தர உடல் உபாதைகள் என இவர் இழந்தது ஏராளம்.

அதுவா சிறப்பு…? ப்ச்ச்… Nah..Nah…!!

விக்னேஷ் கார்த்திக்கின் சமீபத்திய திரைப்படமான “திட்டம் இரண்டு-Plan B”இன் கதைக்கரு, காட்சியமைப்பு யாவும் (Especially, படத்தில் சூர்யா-கதையில் பாலா இவர்களது திருமண காட்சி) தனது அகம்-புறம் படைப்போடு ஒட்டியிருந்தும், சில இடங்களில் அதை தாண்டியும் இருந்தும், அதை வெளியில் சொல்லாது அடுத்த படைப்பில் இருக்கிறார்.
அதுதான் சிறப்பு.

விக்னேஷ் கார்த்திக்/ப்ரீத்தி இருவருமே மாற்றுப்பாலின சமூகத்துக்கான விஷயத்தை தெளிவாக, ஆணித்தரமாக, வேறு வேறு கதைக்களத்தில் வேறு வேறு Medium மூலமாய் சொல்லியிருக்கிறார்கள். திட்டம் இரண்டிற்காக விக்னேஷ் கார்த்திக்கை எவ்வளவு பாராட்டினோமோ(என் முந்தைய பதிவை பார்க்கவும்), அதே அளவும், கொஞ்சம் அதற்கும் முன்பும் ப்ரீத்தியையும் பாராட்டியிருக்க வேண்டும்.
நீங்கள் அவளை(ரை) பாராட்டிக்கொள்ளுங்கள். நான் கொஞ்சம் திட்ட வேண்டியிருக்கிறது.

Irrespective of Name/Reach/Gender, ஆகச்சிறந்த ஒரு விஷயத்தை எழுதவேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், தைரியமாய் எழுதித் தொலையுங்கள். அதை தைரியமாய் வெளி உலகுக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் நான் முதல் பாராவில் சொன்னது போல, நல்ல கதை எழுதுதல் என்பதன் ஆனந்தம், அதை ஊரறிய உலகறிய தைரியமாய் செய்வதில்தான் இருக்கிறது. தனியே செய்து ஆனந்தம் கொள்வதற்கு பெயர், வேறு.

அப்படியல்லாது..,

“இல்ல… மாற்றுப்பாலினம், மாதவிடாய், எல்.ஜி.பி.டி, பெடோ எதிர்ப்பு,மெண்டல் எபிலிட்டி, ஆன்டி-சூஸைடல், ஆல்டெர்னேட்டிவ் திங்கிங் இதப்பத்திலாம் எழுத ஆசைதான், ஆனா எதிர்ப்பு வருமோ? ஒத்துக்க மாட்டாங்களோ? வேணான்னு சொல்வாங்களோ?ன்னு பயமா இருக்கு..அதான் யார்கிட்டயும் அவ்வளவா வெளிப்படுத்தல…!” என்று அடுத்தவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால்…

உட்கார்ந்து “ஸ்ரீராமஜெயம்” தான் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.

அதையும் மீறி மற்றவர் சொல்லுக்கு பயப்படும்/செவிகொடுக்கும் படைப்பாளிகள், மாந்தருக்குத்தான், அன்றே எங்கள் அய்யா பெரியார் எழுதி வைத்து விட்டுப் போனார்.
அவர் சொன்னார்-
இவர் சொன்னார்-என
எதையும் நம்பி
அறிவிழந்து போகாது-
எவர் எதைச் சொன்னாலும்
அதையுன்
பகுத்தறிவால்
எண்ணிப்பார்ப்பாய்…!!
—————————————-

Writer Praveena Thangaraj:

கதை பெயர் : அகம் புறம்
ஆசிரியர் : Preethi S Karthik
மிக

அருமையான

கதை. பாலா-கௌதம் திருமணத்தில் ஆரம்பித்து, பாலா-சத்யா திருமணத்தில் நிறைவை தந்து இருக்கின்றார்.

ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கிய உணர்வு. பாலா கௌதம், சத்யா, ரூபினி மஞ்சுளா முக்கியமாக அருண் என்று அழகான வடிவம் கொடுத்து அனைவரின் வாழ்வை விரிவாக தெளிவாக எழுதியதற்கு பாராட்டுக்கள்.
திருநங்கை திருநம்பி இவர்களை சமூதாயம் பார்க்கும் பார்வை கொஞ்சம் மாற்றிக்க வைக்க உதவும். அவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதையான பார்வை சக உயிர் என்றதை தான்.
நல்ல கதையை தேடுவோர் நிச்சயம் மிஸ் பண்ணாதிங்க. காதல் கதை தான் வேண்டுமா… இதுல காதலா பார்ததா இதுவும் அழகான காதல் கதை. குடும்ப கதை.
எனக்கு படிக்கிறப்ப அத்தனை நிறைவு மனம் முழுவதும்.
நன்றி
பிரவீணா தங்கராஜ்.
—————————-
Writer Jeyalakshmi Karthik:
Transgender
இந்த வார்த்தையை கேட்டதும் சட்டுனு நம்ம மனசுக்கு வர்றது பெண்ணா மாறிய ஆண்கள் அதாவது திருநங்கைகள் தான். ஆனா ஆணா மாறிய பெண்களும் இருக்காங்க அவங்க தான் திருநம்பிகள். இப்படி பாலினம் மாறி இருக்கிற அவங்களை பார்க்கும்போது பல பேர் முகம் சுளிக்கிறத்தை பார்த்திருப்போம். ஆனா ஒரு நிமிஷம் அவங்க இடத்துல இருந்து யோசிச்சிருப்போமா? அப்படி அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு கூட்டுட்டு போய் காமிச்சிருக்காங்க ப்ரீத்தி.S. கார்த்திக்.
சும்மா மேம்போக்கா எதையும் எழுதாம அதுக்கு அவங்க எடுகிட்ட சிரத்தை கதையோட ஒவ்வொரு வரியிலும் தெரியுது. அவ்ளோ தகவல்கள். அதை அழகா கைக்குள்ள புகுத்தி, தகவலை சில இடங்களில் தகவலாகவே சில பாத்திரங்கள் மூலம் கொடுத்து, சிலவற்றை காட்சியமைப்பில் கொண்டு வந்து ரொம்ப நிறைவான ஒரு கதையை கொடுத்திருக்காங்க.
எனக்கு எப்பவும் நாம நேரம் செலவு செய்து வாசிக்கிற ஒரு புத்தகம் நமக்கு ஏதோ ஒரு வகையில் நேர்மறை எண்ணத்தை, புதிய தகவலை, இன்னும் இப்படி தேடி படிக்கணும் அப்படிங்கற ஆர்வத்தை கொடுக்கணும்னு நினைப்பேன். ஒரு புத்தகம் என்னைக்கும் ஒருவருக்கு நல்ல முதலீடா இருக்கணும். பொழுதுபோக்காவே இருந்தாலும் அதுனால நமக்கு ஒரு நல்லது கிடைக்கணும். அரை நாள் செலவு செஞ்சு ப்ரீத்தியால பல விஷயங்கள் தெரிஞ்சுகிட்ட திருப்தி எனக்கு.
திருநங்கை பத்தி நிறைய படிச்சிருப்போம் கேள்விப்பட்டிருப்போம், பல கதைகளும் இருக்கு. ஆனா திருநம்பிகள் பத்தி? இதுல பாலசரஸ்வதி பாலனா மாறும் ஒவ்வொரு தருணமும் அப்படியே மனசுல நின்னுச்சு. பாலசரஸ்வதியா படிக்கும் போது அவளாகவும், பாலனா படிக்கும் போது மனசு அதை அவனாகவும் தான் பார்த்துச்சு. அதே தான் சத்யாவுக்கும்.திருநங்கைகளின் வலி ஒவ்வொரு இடத்திலும் அவ்ளோ நிதர்சனமா தெரிந்தது.
அருண் மாதிரி நண்பர்கள் கிடைச்சா யாருக்குமே மனரீதியான பிரச்சனைகளில் இருந்து சீக்கிரம் வெளில வந்திடலாம்.
கௌதமோட அம்மா, பாலாவோட அம்மா எல்லாரும் ஒடுக்கப்பட்ட குடும்பப்பெண்களின் அடையாளம். மஞ்சுளா கதாபாத்திரம் அதிகம் பேசாத பாத்திரமாக படைக்கப்பட்டிருந்தாலும் அவ்வளவு அழுத்தமான பாத்திரம்.
கௌதம் பத்தி சொல்ல ஒன்னும் இல்ல. அவனைப்பத்தி அவங்க சொன்னதை நான் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்ருக்கேன். அது தான் பல ஆண்களோட மனநிலை.
ரூபிணி. அவளோட பாத்திரத்துக்கு அவங்க கொடுத்த காரணம் அபாரம். வெறும் transgender பத்தி மட்டும் சொல்லாம ஹார்மோனால் பிரச்சனையை பத்தியும் விரிவா கதையோட கொடுத்த விதம் அருமை.
நிறைய சொல்லணும்னு தோணுது. ஆனா இன்னும் நான் கதையோட, பாலாவோட, சத்யாவோட தான் பயணம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவங்களைப்போல உள்ளவங்க படுற கஷ்டத்தை பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி மனசை பிசையற ஒரு கதை. சூப்பர் மா.
வாழ்த்துக்கள்

சாரி நிறைய நாள் எடுத்துகிட்டேன் படிக்க. நிறைய இதுபோல அழுத்தமான நிறைவான கதைகளை படைக்க என் மனமார்ந்த

வாழ்த்துக்கள்

———————————————–

Writer Latha Sridhar (ஸ்ரீலக்ஷ்மி)
அகம் புறம்
திருநங்கைகள் பற்றி நிறைய கேள்விபட்டிருப்போம். ஆங்காங்கே நாம் பார்த்தும் இருப்போம். அவர்களைப் பற்றி நிறைய விஷயங்களைப் படித்தும் இருப்போம். இங்கே பிரீத்தி கார்த்திக் திருநங்கைகளோடு திருநம்பிகளைப் பற்றி இக்கதையில் எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே நிறைய பேர் இக்கதை பற்றிய விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.. நான் தனியா என்ன சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில வார்த்தைகள் நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
முதல் அத்தியாயமே மனதைப் பதற வைக்கிறது..
பாலாவுக்கு ஏன் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்ற கேள்விக்கானப் பதிலை தெரிந்து, அவனுக்கு நியாயம் செய்யாத கௌதம் மேல் முதலில் கோபம் வந்தாலும், பாலாவைப் போன்றவர்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இங்கே அதிகம் என உணர முடிகிறது. காலம் கடந்து தன் தவறை உணரும் கௌதமும் அப்படித்தான். கடைசியில் மனம் மாறி பாலாவை மருத்துவம் படிக்க தூண்டுவதும் அவனே. ஆனாலும் பாலாவை முதலில் புரிந்து கொண்ட அன்னையரை உண்மையில் பாராட்டணும்.
அடுத்து சத்யா இல்லையென்றால் பாலாவும் இங்கே இல்லை.. இப்படிப்பட்டவர்களின் வாழக்கை வீட்டை விட்டு வெளியே வரும் போது எங்கே முடியும் என்பதை ஓரளவுக்கு அனைவருக்கும் தெரியும் தான்.. தன்னைப் போல் பாதிக்கப்பட்டவளை சத்யா புரிந்து கொண்டு சமயத்தில் உதவுகிறாள்.
அதே சமயத்தில் அருண் மாதிரி நண்பன் கிடைக்க பாலா கொடுத்து வைத்திருக்கணும் . ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயத்திலும் பாலாவுக்கு ஆதரவாக நிற்கிறான்.
மஞ்சுளா அவங்க இல்லைன்னா சத்யாவும் இல்லை, ரூபியும் இல்லை. நிச்சயம் மஞ்சுளா மாதிரி சில நல்லவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் அவங்க வாழக்கையே போராட்டமா இருப்பதை படிக்க படிக்க மனசு பதறித்தான் போகுது.. இவர்களுக்கான விடிவு தான் என்ன?
அதிலும் செந்தில் மாதிரியான ஆட்களை என்ன சொல்ல? அவர்களும் நம்மை மாதிரி மனிதர்கள் தானே? எல்லோருக்கும் இருக்கும் உணர்வுகள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை ஏன் உணர மறுக்குகிறார்கள்? இவர்களை கடவுளாய் நினைத்து ஆசி வாங்குபவர்கள் மத்தியில் செந்திலை போன்றவர்கள் அவர்களை உயிரோடு கொல்லபவர்களில் ஒரு பாவி. சத்யா அதை உணர்ந்து உருகி மறுகுவது மனதை பிழிகிறது.. ப்ரீத்தியின் எழுத்துகள் வெகு சிறப்பு இங்கே.
ரூபி, அருண் நல்ல பொருத்தம்.
திருநங்கைகள், திருநம்பிகள் இவர்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.. இத்தனை கஷ்டங்களை கடந்து போராடி வாழும் அவர்களுக்கு நாம் செய்யக் கூடியது ஒன்றுதான், முகத்தை சுளிக்காமல் சக மனிதர்களாய் அவர்களை மதிப்பதுதான்.
‘கானல் நீளுமோ காட்சியாய் மாறுமோ’ திருநங்கைகள் பற்றிய ஒரு கதை ஆறு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் எழுதி இருந்தோம்… இவர்களைப் பற்றி தகவல்கள் அறிந்து எழுதிய போது மனசு பாரமா இருந்தது. அதுவும் கடைசி எபிசோட் படித்த போது கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது என்று படிச்சிட்டு சொன்னவங்க அன்று நிறைய பேர்.. இப்பவும் அந்த கதையை படிக்க நினைச்சா கஷ்டமா இருக்கும்.. அதே அளவு பாதிப்பை அகம் புறமும் இப்போது படித்த போது எனக்கு ஏற்படுத்தியது என்று தான் சொல்லணும்.
இதற்கு மேல் எனக்கு விமர்சிக்க தெரியல.
தன்னை ஆணாய் உணர்ந்த பாலாவையும், பெண்ணாய் உணரும் சத்யாவையும் இந்த உலகம் வாழ வைத்ததா?
இதற்கான பதிலை கதையை படிச்சி தெரிஞ்சிகோங்க ஃப்ரெண்ட்ஸ்.
பாஸிட்டிவா கதையை முடிச்சி இருப்பதற்கு பாராட்டுக்கள் பிரீத்தி. முடிவும் கனவல்ல, நிஜமாகவே இருக்கட்டும்.
வாழ்த்துகள் பிரீத்தி. நல்ல மாறுபட்ட சமூகக் கதை. பல தகவல்களைக் கொடுத்து இருக்கீங்க.. இதற்கு பின்னால் உங்கள் உழைப்பு தெரிகிறது. பொருத்தமான கதை தலைப்பு.
இக்கதையை, இவர்களின் வாழக்கை முறையை எழுதும் போது நீங்கள் மனதளவில் எவ்வளவோ பாதிக்கப்பட்டு இருந்ததை சொல்லி இருந்தீர்கள். நிச்சயம் அதற்கான பலன் எல்லாம் இக்கதையை படித்து ஒரு நாலு பேராவது உணர்ந்தால், அதுவே உங்களின் வெற்றி தான். எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில்
சில காரணங்களால் குறிப்பிட்ட கால நேரத்தில் கதை முடிக்க முடியாமல் வெற்றி வாய்ப்பை மிஸ் செய்திருந்தாலும், வெற்றிகரமாய் கதையை தொடர்ந்து எழுதி முடித்து அனைவர் மனதையும் உங்கள் உருக்கமான எழுத்தின் மூலம் வென்று விட்டீர்கள் மா.
இதுபோல இன்னும் நிறைய சமூக சிந்தனையோடு கூடிய கதைகளை நீங்கள் எழுத வாழ்த்துகள்..
————————————-
WriterVanipriya Raghunandan

I read this story few weeks ago(until 2am). Had some interesting conversation with my youngest daughter who is a great supporter of LGBTQ. Indeed one of a “Not-To-Be-Missed_Story”

It is a very sensitive topic and one that needs a careful approach. I remember choking up tears in many places yet could not put down the laptop. Story was very gripping. I could easily see how much effort and research you would have put up to pen that story. I love stories with a different approach or handling, one that leaves a reader totally awe-struck yet satisfied. Best Wishes for writing more and more such compelling stories.

——————————————

அனுஷா டேவிட்:
அகம் புறம் ~ Preethi S Karthik
தலைப்புக்கேற்ற கதை. புறதோற்றம் கண்டு யாரையும் புறக்கணிக்காமல் அகத்தை பாருங்கள் என்று அழகா சொல்லியிருக்காங்க. வித்தியாசமான கதைகளத்தை எடுத்ததோடு வார்த்தைகளை கவனமா யார் மனதும் புண்படாதவகையில் பார்த்து பார்த்து எழுதியிருக்காங்க. பிடித்ததே வார்த்தை தேர்வுகளும் உணர்வுகளை எதார்த்தமாகவே வெளிபடுத்தியிருக்கும் விதமே.
பொதுவாக திருநங்கைகள் பற்றி தெரிந்திருப்போம். இங்கு திருநம்பிகள் பற்றி சொல்லியிருக்காங்க. சில விஷயங்களைகேள்விபடும்போது கஷ்டமா தான் இருந்தது. அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடக்க எவ்வளவு மெனக்கடல் படுராங்கனு.
உடல் ஒரு விதமாகவும் உணர்வு ஒரு விதமாகவும் இருக்க இரண்டிற்கும் நடுவில் தவித்து கொண்டிருப்பவர்களை அரவணைக்காவிட்டாலும் விலக்காமல் இருக்கலாமே. அது அவர்கள் தவறு இல்லையே. இன்றளவும் நடக்கும் விஷயம் இது, ஏன் கேலி பேச வேண்டும் ஏன் எண் பெயரால் அழைக்க வேண்டும். பரந்த பூமியில் எத்தனை உயிர்களோ வாழ, தவறு செய்தவன்லாம் சுதந்திரமா வாழ, எந்த தவறும் இழைக்காத இவர்கள் சுதந்திரமாக பிடித்தபடி ஏன் வாழ கூடாது? ஏன் அவர்களை காயபடுத்த வேண்டும் அதில் என்ன கிடைக்கும்?
நேசம் என்பது என்ன என்று இன்றும் பலருக்கு புரிவதில்லை கௌதமும் புரிந்து கொள்ளாமல் தன் காதலை மட்டும் நினைத்து அடுக்கடுக்காக தவறு செய்ரான். உடலை விட உள்ளத்துக்கே முதலிடம் நேசம் தரும். உடல் கூடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இறுதியில் மனம் மாறியது ரொம்ப சந்தோஷம்.
பாலா என்ன கேரக்டர்யா தான்பட்ட ஒவ்வொரு கஷ்டத்தையும் கடந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய என்ன என்ன வழிகள் இருக்கோ அதை எல்லாம் முயற்சி செய்துதான் பாப்போமே என்று ஒவ்வொரு செயலிலும் வியப்பு தந்தான். சத்யாவை ஆறுதல் படுத்தி மனசை மாற்றி ஒவ்வொரு தடவையும் பக்கபலமாக இருந்தான். நல்லா ஊக்குவித்து தனியாக பிஸ்னஸ் செய்யும் அளவுக்கு கொண்டு வந்தான்.
சத்யா எத்தனை எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இன்னும் என்னால் கடந்துவர முடியும் என்னாலும் ஜெயிக்க முடியும் என்று காட்டிவிட்டாள். தானும் மற்றவர்கள் போல வெளியே போகனும் சாதாரணமா தன்னை மற்றவர்கள் பாக்கனும்னு ஆசபடுவதை சொல்லும்போது அவள் எந்தளவுக்கு வேதனை சுமந்திருக்கிறாள் என்பது தெரிகிறது.
அருண் மாதிரி ஒரு நல்லநண்பண் கிடைக்க பாலா கொடுத்து வச்சிருக்கனும். எல்லாவிதத்திலும் இறுதிவரை உறுதுணையாக இருக்கிறான். ரூப்ஸ் ஐ துணையாக தேர்ந்தெடுக்க வீட்டில் அதனால் எவ்வளவு மெனக்கடல் எடுக்க வேண்டும் என்று தெரிந்தும் அகம் ஒன்றைமட்டும் பார்த்து இவள்தான் என்று முடிவு செய்கிறான்.
பேரன்புக்கு ஏது தேவை என இரு உள்ளங்கள் அகத்தை மட்டும் கண்டு புறத்தை ஒதுக்கி மணமுடித்து தாய்மை அடைய செய்வது நிச்சயம் பேரன்பால் மட்டுமே சாத்தியம். கடைசி வார்த்தையை டெலிட் பண்ணிடுங்க சிஸ் நிச்சயம் இது கனவல்ல நிஜமாகவே இருக்கட்டும். எத்தனை எத்தனை அடிகள் எத்தனை எத்தனை வலிகள் கடந்து வந்து நிஜத்தை அடைகிறார்கள் பாலன் சத்யஶ்ரீ கவர்கிறார்கள். இதெல்லாம் கடந்து வாழ்ற வாழ்க்கை தான் காயபடுத்தரவங்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என்று நிரூபித்தார்கள்.
—————————————
Gowsalya Muthuvel:
திருமணத்தில் தொடங்கும் கதை!!!… அதில் தொடங்கும் பிரச்சினைகள்!!!.. பிரச்சினைகளின் விடையை தேடும் பயணத்தில் எண்ணற்ற உணர்வுகள், ஏக்கங்கள், காதல், நட்பு, குடும்பம் பேரன்பு என மிக நேர்த்தியாக, தெளிவாக பயணிக்கும்

அருமையான

கதை!!!..சாதாரண கணவன், மனைவி விஷயம் தானே என நாம் நினைக்கலாம்!!!.. ஆனால் உணர்வுகள் அவரவர் அனுபவித்தால் தானே தெரியும்!!!.. அப்படி ஒவ்வொருவரின் உணர்வுகளை சொல்லிய விதம் அசத்தல்!!!.. இருவேறு மனிதர்களை இணைத்த விதம்!!!.. ரயில் நிலையக் காட்சியில் சொல்லிய நிதர்சனம், உணர்வுகள் மனதை கனக்க செய்தது!!!… திக் திக் நிமிடங்கள் கதை என்பதை மறந்து அவர்களுக்காக கடவுளிடம் வேண்டவும் வைத்தது!!!.. இருவரின் வலிகளையும், வாழ்வின் நிலையையும் பகிர்ந்து கொண்ட காட்சிகள்!!.. இன்னும் அந்த காட்சிகள் கண்முன் நிற்பது போன்ற உணர்வு!!!.. அவர்களின் வாழ்வில் ஒரு நாள் என்பதே எவ்வளவு போராட்டம், ஏக்கம் என்பதை சொல்லும் வரிகள் அபாரம்!!!… சத்யாவின் கடல் நீரில் கால் நனைக்கும் ஏக்கம் சொன்ன இடம் கண்ணீரை தடுக்க முடியவில்லை!!!… செந்தில் போன்ற மனிதர்களின் செயல்கள், சொற்கள், பார்க்கில் குழந்தையின் தாயின் வார்த்தைகள், டெலிபோன் பூத் அருகே நின்ற மனிதர்கள் கிண்டல்கள், துணிக்கடைக்கு சென்ற போது பார்த்த பார்வைகள் என அனைத்தும் நமக்கு சாதாரணமாக தெரியலாம்!!!.. அவர்களை பார்த்துவிட்டு, சொல்லிவிட்டு நாம் கடந்து சென்றுவிடலாம்!!.. மறந்தும் விடலாம்!!!.. அதன் பின்னான அவர்களின் உணர்வுகள், விரக்திகள், வாழ்வையே வெறுக்கும் நிலை என அனைத்தும் உணர்த்திய விதம் சொல்ல வார்த்தைகளே இல்லை!!!.. தனக்கு வரும் மாற்றங்களை நினைத்து அவர்களே குழம்பி இருந்த நிலையில் அவர்களுக்கு நடந்த துன்பங்களும், துயரங்களும் எத்துனை கொடூரமானவை!!!! அதுவும் அந்த மருத்துவரை நினைத்து சிரிப்பதா??.. அழுவதா???… கோவம் கொள்வதா தெரியவில்லை!!!… அந்த புரோக்கர் போன்ற மனிதர்கள் வாழவே தகுதியற்றவர்கள்!!!.. இவர்களை போன்றவர்களுக்கு மஞ்சுமாவின் பாதுகாப்பும், ரூபினியின் உறுதுணையும், அருண் போன்ற ஆத்மார்த்த நட்புகளும் கிடைப்பது வரமே!!!.. ரூபினியின் சேலை வாங்கி கொடுக்கும் அன்பு, சத்யா மீதான உரிமையான கோவங்கள் அழகு!!!.. மஞ்சுமாவின் அன்பும் அசத்தல்!!!!… எந்நிலையிலும் விட்டுப் போகாத அருணின் நட்பு பிரமிக்க வைத்தது!!!… எத்துணை போராட்டங்களிலும், துயரங்களிலும், மனம் தளர்ந்த போதிலும் அவர்களின் விடாமுயற்சியும், மன உறுதியும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. அவர்களின் பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அவர்களை பற்றிய, அவர்களுக்கான பல தகவல்கள், சமூகத்திற்கான பல விழிப்புணர்வையும், மருத்துவ, அறிவியல் ரீதியான தகவல்களையும் கதையின் போக்கில் சொல்லிய விதத்தில் எங்கும், எதிலும் கதையின் போக்கும், சுவாரஸ்யமும் குறையவில்லை!!!.. கனமான விஷயங்களையும் விடாமல் ஆர்வத்தோடு படிக்க வைக்கும் உங்களின் எழுத்து நடை அபாரம்!!!… உணர்வுகளை சொல்லும் பல வரிகள் அபாரமாக இருந்தது!!!.. அதுவும் நிதர்சனத்தை சொல்லும் வரிகள் அசத்தல்!!!.. இப்படி ஒரு கதைக்கருவை எவ்வித தொய்வும் இன்றி ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்டு சென்ற விதம் கதையோடு ஒன்று வைத்து கதைமாந்தர்களோடு வாழவும் வைத்தது!!!…கடைசிக் காட்சி அவர்கள் வாழ்வில் மட்டுமில்லாது அவர்களை போல் ஏங்கும் அனைவரின் வாழ்விலும் நினைவாகவே ஆசை!!!.. உணர்ந்தவை அனைத்தையும் சொல்ல முடியலை!!!.. ஆனால் கதையின் என்றும் நினைவில் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!… இக்கதையை படித்த பின் எனக்கு தோன்றியது, கொடுப்பதனால் நாம் பெரியவர்களும் இல்லை, வாங்குவதால் அவர்கள் சிறியவர்களும் இல்லை!!!.. அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழவிடாமல் பார்வைகளாலும், சொல்லாலும், செயலாலும் செய்யும் பாவத்திற்க்கான பிராயச்சித்தமே அவை(இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)!!!. இன்னும் இதுபோன்ற பல அருமையான படைப்புகள் படைக்க வாழ்த்துகள் கா💖

——————————————————

Murugesan Laxmi

தப்பிப் பிறந்தவர்கள்தான்
தவறானவர்கள் அல்ல
திருநங்கை(நம்பி)கள்.
கணமான கதை, மிகவும் அழுத்தமான கதை என பலரால் சொல்ல கேட்டு, படிக்க தயங்கி கதை ஆனால் படிக்க படிக்க இந்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது போலான எழுத்து. வாவ்,

வாழ்த்துகள்

சகோதரி. எனக்கு தெரிந்த வகையில் தமிழில் திருநம்பி, திருநங்கையை ஹீரோ – ஹீரோயினாக எழுதிய முதல் கதை என நினைக்கிறேன். ( வேறு கதைகள் உண்டா? )

இந்த துணிச்சலுக்கே பாராட்ட வேண்டும். இவர்களை பற்றி எண்ணம் வரும் போதே, ஒருவித லஜ்ஜை உணர்வு வரும். அது இந்த சமுதாயம் செய்த தவறு. நமக்கு சொல்லி கொடுக்க மறந்த மரியாதை. இப்படிபட்ட எழுத்துகளை படித்து ஆதரிப்பதன் மூலம் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க நம் மனதில் எண்ணம் தோன்றும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளார் சகோதரி ப்ரீத்தி S. கார்த்திக். அவரின் அகம் புறம் நாவல்.
இது காதல் கதை என்றால் ஆம் என்பேன். ஆழுத்தமான கதை என்றால் ஆம் என்பேன். சமுதாய சிந்தனை உள்ள கதை என்றாலும் ஆம் என்பேன். படிப்பவரை பதற வைத்து, பண்பு கொள்ள வைக்கிறது (ஆம், பண்பு கொள்ளவே வைக்கிறது.) அவர்களை போல் உள்ளவரை அடுத்த முறை பார்க்கும் போது, கண்டிப்பாக நம் விழிகளில் ஏராளமான பார்வை தோன்றாது. அவர்களின் வலியும், வேதனையும் தெரியும். ஒரு கடுகளவுக்காவது நம் உள்ளம் வேதனைப்படும். அப்படி தூண்டக்கூடிய எழுத்தில் மிளிருகிறார் சகோதரி அவர்கள்.
என் நட்புகளுக்கு நான் சொல்லும் ஒரே வார்தை, ” இந்த கதையை படிங்கள், யார் என்ன சொன்னாலும் அதனை கடந்து”.
ஆண் பாதியில் பெண்ணாக
பெண் பாதியில் ஆணாக
இவர்கள் யார்?
ஆண்டவன் படைத்த படைப்பு
சரிசெய்ய முடியா பிழைகள்
படைத்தவன் செய்த தவறிது!!!
உணர்வுகளில் மாற்றம்
உடலிலும் ஏதோ மாற்றம்
ஹார்மோன் செய்யும் மாற்றம்தான் இது
உள்ளத்து ஆசைகளை உணரா உலகமிது!!
உணர்வுகளை மதியாமல் வசைபாடும் உலகமிது!!
ஏளனப்பேச்சுக்கள் ஒருபுறம்
எடுத்தெறிந்து பேசும் வார்த்தைகள் மறுபுறம்………
கண்கள் தேடுவது என்னவோ?
கருணையோடு ஒரு பார்வை!!
பார்வையில் தான் இழந்த பாசம்!!
உறவுகளை பிரிந்த இவர்களை
உறவாக எண்ணுவோம்!!
ஆசையாய் புன்னகைக்கும் போது சிறு புன்னகை கொடுப்போம்!!
ஒரு அன்னை ஈன்றெடுத்த உயிர்தான் இவர்களும்…..
புது அடையாளம் இவர்கள்!!!
புது நம்பிக்கை கொடுப்போம்!!!
– இணைய கவிதைகள் –

சகோதரி ப்ரீத்தி S.கார்த்திக் அவர்களுக்கு,
திட்டம் இரண்டு, அகம் புறம் இரண்டிலும் ஒற்றமை உள்ளதாக சில நண்பர்கள் சொன்னார்கள் என்ற தன்னிலை விளக்க பதிவு ஒன்று போட்டு இருந்தீர்கள். ஒரு விளக்கம் தரனும் என நினைக்கிறேன்.
நண்பர்கள் எப்படி அப்படி சொன்னார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் இரண்டு படைப்பையும் சரியாக கவனிக்கவில்லையோ என்ற கவலை வருகிறது. முதலில் திட்டம் இரண்டில் படைப்பாளியின் தோல்வியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கதாநாயகியின் மேல் தோழமையாக இருந்தவள், அவள் மேல் திடீர் என காதல் கொண்டு, அவளை அடைய ஆணாக மாறுகிறாள். அங்கே அவளுடைய உணர்வை படிபடியாக சொல்ல தவறியுள்ளார் இயக்குநர். அதேபோல் திடீர் என திருநம்பி உணர்வு வராது. பிறப்பில் இருந்து வளர வளரவே அந்த உணர்வு பலப்படும். படத்தில் திடீர் என உணர்வு வருவது, இயக்குநரின் புரிதல் இன்மையை காட்டுகிறது. படத்தின் முடிவை சரியாக சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, முடிவு அதில் நாம் தலையிட கூடாது என ஜால்ஜாப்பு முடிவை தந்து இருப்பார். அங்கே ஹீரோயின் மார்க்கெட், படத்தின் வெற்றி, தயாரிப்பாளரின் வற்புறுதல் என எதோ குறிக்கிட்டு உள்ளது. ஆனால் உங்களின் அகம் புறம் நாவல் வேற விதம். முடிவை மிகவும் தெளிவாக சொல்லி விதத்தில் உங்கள் படைப்பின் மேல் இருந்த நம்பிக்கை மற்றும் புரிதல், அதற்கான தேடல் என உங்கள் உழைப்பை பாராட்டவேண்டும். மற்றபடி இரண்டு விஷயத்தில் கொஞ்சமே ஒற்றுபோகிறது. 1. நாவலின் துணை பாத்திரங்களான அருண் – ரூபிணி திருமணத்தை முடித்து இருக்கலாம். அவர்களின் தனிப்பட்ட முடிவு என சொல்லியுள்ளீர்கள் ( ஒருவேளை இவர்களை தனி நாவலாக எழுத எண்ணமா? சகோ). மற்றபடி டிரிமெண்ட் சற்றேசற்று ஒற்று போகிறது. ( உலக முழுவதும் இதானே டிரிமெண்ட் வரும். அங்கேயும் உங்கள் விளக்கம் அருமையே). மற்றபடி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் சகோதரி. படைப்பாளியின் முழுபுரிதலோடு படைக்கப்பட்ட நாவல் அகம்புறம் நாவல் என்பதை தெளிவாக சொல்லமுடியும். ஆகையால் எந்த கலக்கமும் தேவையில்லை என்பதே என்(ங்களின்) எண்ணம்.
வாழ்த்துகள்
சகோதரி.

——————————————————
Jacqueline Mary
To tell the fact I came to know more about thirunambi only through your story. Heart rendering end.. Congratulations for your attempt
———————————————————
Kamini Sampath
இந்த கதைக்கு நீங்கள் போட்ட உழைப்புக்கு மிக பெரிய பாராட்டுக்கள்.. மேலும் இது போல நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்
..👏🏻👏🏻👏🏻💐💐
மனதை மிகவும் பாதித்த கதை.. வெளியே வரமுடியவில்லை..
—————————————————–
Tharani:
அகம் புறம்
Romba nalla irunthuchu sis story.vithyasamana kathai kalam miga arumai.solla varthaigal ilai . Preethi அவர்கள் எழுதிய கதை. வித்தியாசமான கதை களம். மனதை தொட்ட கதை. Pl try it friends.
——————————————————-
Viji:
மொத்தத்தில நான் அவ்ளவா விமர்சனம் பன்றதில்ல..
ஏனா டைப்பன்றதில நான் ஒரு சோம்பேறி….
ஆனா சில கதைகளை படிச்சதோட மட்டும் இல்லாம நிறைய விஷயங்களை நிறைய பேர் தெரிஞ்சுக்கனும்னு தோனும்…
அதுக்காகவே இந்த விமர்சனம்.
Preethi S Karthik இவங்களோட கதை #அகம்புறம்
அகமும் புறமும் வேற வேறயா அமைஞ்ச இரண்டு பேரோட கதை தான் இது….
அவங்களோட அகத்தை மாதிரியே அவங்க புறத்தையும் மாத்திக்கிட்டாங்க
எதிர்பாக்காத கதைக்களம் எதிர்பாக்காத தகவல்கள் ….
மோஸ்ட்லி எல்லாருக்குமே திருநங்கைகள் பத்தி தெரியும். ஆனா திருநம்பிகளைப் பத்தி தெரியுமானு தெரியல. ஏனா எனக்குத் தெரியாது.
இங்க ஒரு திருநங்கையும் திருநம்பியும் அவங்க எப்பிடி அந்த மாதிரி மாறுனாங்க. அதால என்ன பிரச்சினைகள் சந்திச்சாங்க அதில இருந்து எப்டி மீண்டாங்க தென் முக்கியமான ஒன்னு அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை எப்டி அமைச்சுக்கிட்டாங்கனு அழகா தெளிவா எல்லாருக்கும் புரிற மாதிரி சொல்லிருக்கீங்க… அதுக்கே பெரிய

வாழ்த்துகள்

👏👏👏👏👏👏👏

எனக்கு நிஜமாவே பாலாவோட அன்பு பிரமிக்க வச்சிருச்சு..அந்த யூட்ரஸ் ஸ்பெர்ம் பத்தி சொல்லும்போது நிஜமாலே ரொம்ப கிரேட்டா தெரிஞ்சான்.
இந்த மாதிரி நிஜ வாழ்க்கைல ஒவ்வொரு சத்யாவுக்கும் ஒவ்வொரு பாலா கிடைச்சா நம்மளை விட அவங்க லைஃப் தான் டாப்ல இருக்கும்…
இன்னும் இது மாதிரி நீங்க நிறைய நிறைய எழுதனும்

வாழ்த்துகள்

💐💐💐💐💐💐💐💐💐💐

————————————————–

Saranya Geetha

கதை பெயர்: அகம் புறம்
நாவலாசிரியர்: Preethi S Karthik

(இந்த கதையை படிக்க தூண்டியது Jeya Lakshmi Karthik அக்கா review தான்.. ரொம்ப நன்றி கா😍😍😍)

முதலில் இப்படியொரு அருமையான படைப்பை எழுதியதற்கு நன்றிகள் அக்கா😘😘😘😘. கதையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. ❤️❤️❤️❤️அவ்ளோ உண்ரவுபூர்வமான கதை. திருநங்கைகள் (ம) திருநம்பிகளுக்கு இந்த சமூதாயத்தில எவ்ளோ வலியோடு வாழ்க்கையை கடந்து வராங்க அப்படினு பல உண்மை தகவல்களை வைச்சு சொல்லி இருந்தீங்க‌‌.. படிக்க படிக்க எதோ ஒரு வலி..💔💔💔💔ஏன் சமூதாயம் இப்படி இருக்குனு ஒரு பிம்பம்..😣😣 இந்த கடவுள் ஏன் இப்படி படைத்தாருனு ஒரு அதங்கம்🥺🥺🥺🥺 எனக்கு இருந்தது.

சத்யா, பாலா கதாபாத்திரம் வழியே அவர்களின் உணர்வுகள்..☺️அவர்கள் கடந்த வலிகள்..😣அவர்களுக்கு ஒரு வாழ்வு வேண்டும் என்ற கருத்தை🤩 என அனைத்தும் அழகாக வெளிபடுத்தி இருக்கிங்க..🥰🥰🥰🥰

அருண்😎 அந்த கேர்கடர் ரொம்ப பிடிச்சிருந்தது. பாலாவுக்காக அவன் செய்த உதவிகள்😀.. அவ என்னவென்று புரியாமல் தவிக்கும் போது பக்கபலமாக இருந்தது🙂🙂.. எல்லாம் அருமை..😘😘😘

அப்புறம் ரூப்ஸ்(ரூபினி)😍😍 இந்த கேரக்டரால தான் கொஞ்சம் என் அழுகை மட்டுபட்டதுனு சொல்வேன்😁😁😁.. அவ படபடப்பு பேச்சா இருக்கட்டும்.. அருணோடு சண்டை போடுறது எல்லாம் ரொம்ப பிடித்தது.😚😚😚😚😚

கௌதம்🧒 நீங்க சொன்ன மாதிரி அவன் நல்லவனும் இல்வை கெட்டவனும் இல்லை.‌.😏 அவனின் நிலை அப்படி அவனை செய்ய தூண்டியது☹️☹️. அவன் பாலவின் மருத்துவ கனவை மீண்டும் நினைவபடுத்தியது அருமை👍👍👍👍..

இந்த கதை படிக்கிறவங்க ஒவ்வொரு மனசுலேயும் ஒருவித தாக்கத்தை கண்டிப்பா ஏற்படுத்தும்னு நம்புறேன் 😊😊😊😊.. மிக மிக உணர்வுபூர்வமான சமூக கதை😎😍😍😍😍.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்அக்கா..❤️❤️❤️❤️❤️ இன்னும் இது போன்று பல படைப்புகளை தொடர்ந்து எழுதுங்கள்.. 💕💕💕💕💕💕
(முடிந்தால் கதையை வாசிச்சு பாருங்க அருமையான படைப்பு..🤗🤗)
நன்றி
சரண்யாகீதா❤️.

—————————————–

Chellam Zarina
செம யான கதை வித்தியாசமான கரு /தளமும் கூட Info வேற லெவல்.
Thank u ma.

பிரியா செல்வன்
Super sissy.. Indha story ku matum evlo research pannirupinga.. Nama mentality ah neraya mathikanum avanga feelings ah ela adhe unarvoda solirukinga over all super story sis. Next story ku waiting 😍

 

Bamini Arunachala Kani
அருமை..
கனவா…? நிஜமா…? என்று கேட்டு… முடிவு வாசகர் மனம் போல….என்பதற்கு வாசகியாய் எனது கருத்து….. (மருத்துவ முறைகள்) சாத்தியமெனில் அது நடக்கட்டும். நாமும் அதை நிஜம் என்றே நம்புவோம். ஆம்…அது நிஜம் தான்…நிஜமே தான்

இதில் எங்கே சமுதாய சீர்கேடு….சீர் என்று கூட சொல்லலாம். அவர்கள் குடும்பம் குழந்தை குட்டி என்று இயற்கையான், இயல்பான வாழ்க்கை வாழ்ந்து சமுதாயம் சீர் அமைய செய்வார்கள்.

 

Devi Raj
திருநங்கைகளை பற்றி கதைகளில் படித்து தான் தெரியும் அதன் பின்பு என் பார்வை மாறி விட்டது இப்ப திருநம்பி பற்றி உன் கதை மூலம் தான் தெரியும் வாழ்வில் அவர்கள் படும் துயரம், போராட்டம் மனதுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு இந்த பிறப்பில் அவர்கள் மீது என்ன தப்பு நாம் வாழ்த்தாவிட்டாலும் ஏசாமல் இருக்கலாமே இவர்களுக்கு உதவ எனக்கு சான்ஸ் கிடைத்தால் கட்டாயம் செய்வேன் இது மட்டுமே என்னால் முடிந்தது

Thadsajini
வாழ்க்கையில் போராட்டங்களை சந்திப்பவர்கள் மத்தியில் போராட்டமே என்பதையே வாழ்கையாக வாழ்பவர்களை இந்தச் சமூகத்தில் இருக்கும் நாம் இன்னும் இன்னும் அவமானத்தையும் வலியையும் பட்டினியையும்தான் கல்வி மறுப்பையும் இப்படிப்பட்டவையைதான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.யாராக இருந்தாலும் பட்டறிவு இருந்தாலும் கல்வியறிவு மிகமிக முக்கியம் .அது எப்போதுமே மூன்றாவது கையாக கூட வரும் வந்து அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவும்.என்னை பொறுத்தவரை மூன்றாவது பாலினம் என்பதே கிடையாது மனிதர்களாக பிறந்துவிட்டால் அவர்கள் ஆண் அல்லது பெண் பாலினம் தான்.சில உடற்கோளாறால் உடலில் மாற்றம் வந்தாலும் அவர்கள் இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் வருகிறார்கள்தானே பிறகு ஏன் அவர்களை மூன்றாவது பாலினம் என்று சொல்லிப்பிரித்து ஒதுக்கவேண்டும்.மாற்றங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.பிறப்பில் யாரும் யாரையும் விட உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது அவர்களின் நடத்தைகளே அதனை தீர்மானிக்கும்.இந்நாவலில் அழகான கதை மாந்தர்கள் அழகு என்பதைவிட மனிதர்களை புரிந்தகொள்ளக்கூடிய நபர்கள் அருண் சத்யா பாலா பாலா அம்மா அத்தை ரூபிணி போன்றோர் இருக்கிறார்கள் .இப்படிப்பட்ட மனிதர்களைக்கொண்ட ஆரோக்கியமான சமூகம் உருவாகவேண்டும் என்பது என்னுடைய ஏன் பலருடைய அவவாக இருக்கும் என்று நம்புகிறேன்.மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் சமூகம் வேண்டும் அங்கே அவரவர்க்கேற்ப பணம் காசு பொருட்கள் இருந்தாலும் மற்றவரிடம் அன்பு புரிதல் இருந்தால் அழகான சமூகம் இருக்கும்.கதையின் முடிவில் கதைமாந்தர்களின் சந்தோசம் நிம்மதிபோல் எல்லோருக்கும் கிடைக்கணும் இது கனவாகவோ நினைவாகவோ இருந்துவிடக்கூடாது உண்மையில் இப்படி நடக்கவேண்டும் அதற்கு இந்தச்சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரும் முதலில் தங்களை தாங்கள் திருத்திக் கொண்டு வாழப்பழகவேண்டும்.ஒருத்தருக்கு உதவிசெய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் புதைகுழியில் தள்ளாமல் இருந்தாலே போதும் உலகம் உய்யும்.சமூக உணர்வை தூண்டக்கூடிய நாவல் அது இன்னும் உங்கள் எழுத்து நடையில் இன்னும் மெருகேற்றி அழகாக படைத்திருந்தீர்கள்.வாழ்த்துகள்
.

Mareeshvishal
Akka.. Super. Nerya vishayangala therijikiten thirunambikal pathi.. Itha elutha nenga evlo effort potrupenga really Hats off to you akka… Epavume unga stories ena romba rasikavaikudhu akka..

 

Radha Saraswathi
இது ஏன் கனவா இருக்கணும். நிஜமாவே இருக்கட்டும் இவர்கள் மாதிரி சேர்வதால் சமுதாயம் ஒன்னும் கெட்டுப்போயிராது. ஏற்கனவே இங்க நல்லா இருக்குற மனிதர்களாலயே சமுதாய சீர்க்கெட்டுதான் போயிருக்கு. இவங்களால ஒன்னும்ஆயிடாது.

 

VinithaPriya
Wowwwww..samma finishing sis..Last la sonathu kanavaga illama nijamagavae irukatum sis..Vaani character pola nijathulayum neraya peru irukanga sis..Status paathu pazhagura kootam,status ah pakum bothu avangaluku kurai nirailam oru matter eh illa… Arumaya mudichiteenga kadhaya..Ithukaga neenga panina researches and hardwork ku kudos👍👍👍..

Poornima Kannan
Excellent baby❤️❤️❤️ Indha thadava en mudivu Sathya pakarathu nijama mattum irukanum apdingarathuthan da coz ithu aanukkum ponnukkum vara Udal sarndha uravu apdingaratha thandi oru extraordinary relationship itha samoogam accept panuthu panala athu vera but ithu oru azhagana Kadhal indha story ipdi mudinjathan ivanga relationship indha society ku oru nalla example ah iruku

Kayalvizhi Ravi
பாலா சொல்வது தான் புறம் கூறுபவர்களை ஒதிக்கி வைத்து நமக்காக நாம் வாழ்ந்தால் உண்டு. சத்யா தாய்மை மனதை புரிந்து அவளுக்காக தன்ஆன்மையை விட்டு கொடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது நிஜமாக இருந்தால் தான் சமுதாயத்தில் அவர்களும் ஒர் அங்கம். நல்வாழ்த்துகள் பா!👍👍👍👏👏👏💐💐💐💐💐

Dharanibai Sainathan
இது உண்மை, மனது, இதயம் எல்லோருக்கும் ஒன்று தான். சிந்தனை தான் வேறு. ஆனால் உன்சிந்தனை சமுதாயபுரட்சியை தூண்டுகிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்
. எனக்கும் ஒரு ஆசை கால் ஊனமுற்றாலும் உலகையே வலம் வரவேண்டும், மகாசமுத்திரங்களில் கால் நனைக்க வேண்டும். ஓரளவு நிறைவேறுகிறது. சென்ற வருடம் பசிபிக், இந்த வருடம் அட்லாண்டிக். நம் இந்து மகா சமுத்திரம் நினைக்கும் போது கன்யாகுமரி சென்று வருவேன். கடவுள் கருணை உள்ளவர். காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved