என்னோடு நீ உன்னோடு நான் – 11

என்னோடு நீ உன்னோடு நான் – 11

நிலாவிடம் உண்ண எனர்ஜி பார்ஸை (energy bars) நீட்டிய ஆதி, “போற வழியில ஏதாவது பழங்கள் கிடைக்குதான்னு பார்ப்போம்” என்றான்.

இருவரும் சாப்பிட்டுக்கொண்டே மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், நிலாவினுள் அடுத்த கேள்வி.

“சாப்பாடு சரி. பட் நாம எங்க குளிக்க முடியும் ஆதி? அந்த ஊருக்கு போனப்புறமா இல்ல அங்க இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் தானா?” 

“மலைக்கு அந்தப்பக்கம் கொஞ்சம் தூரம் இறங்கினவுடனே ஒரு அருவி இருக்கிறதா சொன்னாங்க. அங்க முடியுமான்னு பார்க்கலாம்” என்றான்.

“என்னது அருவிலயா?” திடுக்கிட்டுக் கேட்டாள்.

“ஆமா… ஏன் அதுல என்ன இருக்கு?” சாதாரணமாக பதில் கேள்வி கேட்டான்.

“ஒன்னுமில்ல” என்ற பதிலை அவனுக்குத் தந்தாலும், அருவியில், அதுவும் இந்த காட்டில், இவனுடன் தனிமையில்! ஐயோ என்றாகிவிட்டது.

சில நிமிடங்கள் மௌனமாகச் சென்றிருக்கும்… “ஆமா நீ சென்னை தானே?” மௌனத்தை கலைத்தான் ஆதி.

“ஹ்ம்ம் ஆமா. நீ சென்னைல எங்க இருக்க ஆதி?”

“அப்பா அம்மா இருக்கிறது போட் கிளப். நான் பெசன்ட் நகர்ல இருக்கேன். உன் வீடு எங்க இருக்கு?”

“எங்க வீடு தாம்பரம்” என்றதும், “தாம்பரம் உனக்கு சென்னையா…? அது அவுட்ஸ்கர்ட்ஸ்” என்றான் நக்கல் சிரிப்புடன்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு ஆதி? எங்க இருக்கோம்னு முக்கியமில்லை. எவ்ளோ சந்தோஷமா இருக்கோம்னு தான் முக்கியம். வாழ இடமேஇல்லாம எவ்வளவோ பேர் இருக்காங்க” கொஞ்சம் காட்டமாகத் தெரிந்தது அவள் குரல்.

முதலில் அவனுக்குப் புரியவில்லை ஏன் இந்த கோபம் என்று. பின் யோசித்துப்பார்க்கையில் அதன் மற்றொரு கோணம் புரிந்தது.

புரிந்தவுடன், “ஹே நிலா. சோ ஸாரி! ஹானஸ்ட்லி நோ அஃபென்ஸ் இன்டென்டட். ஜஸ்ட் ஒரு ஃபுளோல பேசிட்டேன்” மனதார மன்னிப்பு வேண்டினான்.

அவள் பதில் பேசாமல் நடக்க, அவள் முன் வந்து நின்று “மன்னிப்பாயா ப்ளீஸ்!” கெஞ்சும் கண்களில் அவள் முன் குனிந்து அவளைப் பார்த்து கேட்க, அவன் நின்ற தோரணை புன்னகையைத் தந்தது அவளுக்கு.

அவன் தோள் தட்டி புன்னகையுடன் மீண்டும் நடந்தாள்.

“சரி நீ ஏன் உன் அம்மா அப்பாக்கூட இல்ல? தனி குடித்தனம் போய்ட்டியா?” சிரிப்புடன், பேச்சை மாற்றினாள். கூடவே அவனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, ஆர்வத்துடன் பார்த்தாள்!

“என்னை பார்த்தா கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போன மாதிரியா இருக்கு?” அவள் முன் நின்று இரு கைகளை விரித்து புன்னகையுடன் கேட்டான். 

‘எப்பவுமே நேரா பதில் சொல்ல மாட்டான் போல’ என்று மனதில் கறுவிக்கொண்டு “பார்த்தா எப்படி தெரியும்? ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி, நீ சொன்னாத்தானே தெரியும்” என்றாள் கொஞ்சம் சிடுசிடுவென.

அவளின் சிடுசிடுப்பை ரசித்தவாறே, “சொல்றதுக்கான டைம் வர்றப்ப நானே சொல்றேன்” கண்சிமிட்டி புன்னகையுடன் சொல்லிக்கொண்டே நடந்தான். ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது அவளுக்கு!

நேரம் அழகாக நகர்ந்தது, தூரமும் கூட. சில இடங்களில் அவள் தடுமாறும்போது, அவள் கையை பற்றிக்கொண்டும், மூச்சிரைக்கும்போது அவள் சொல்லாமலேயே சிறிய பிரேக் கொடுப்பதுமாக மேலே ஏறினர்.

அப்போது, “ஹே நிலா இங்க பார். கத்திரிக்கா மாதிரியே இருக்கு” அவன் காட்டிய இடத்தை அவளும் பார்த்தாள்.

“இதை எடுத்துப்போம். ஒருவேளை நல்லா இருந்தா… சுட்டு சாப்பிடலாம்” என்று அதைப் பறித்து வைத்துக்கொண்டான்.

“எப்பவுமே நீ இப்படி தானா? ட்ரெக்கிங் வர்றப்ப எதுவேணா எடுத்து சாப்பிடுவியா? ஏதாச்சும் அலர்ஜி ஆயிடுச்சுன்னா”

“அதான் மெடிசின்ஸ் இருக்கே” என்றவனைப் பார்த்து, “இந்த மாதிரி காய் பழம் மட்டும் தானா… இல்லாட்டி மேன் வெர்சஸ் வைல்ட் பியர் க்ரில்ஸ் மாதிரி வேற ஏதாச்சும்…”  வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“ஹாஹாஹா… எல்லாமே! ஊர்றது, ஓடறது… பறக்கிறது” ஒவ்வொன்றையும் சொல்லும்போது… சைகை செய்து காட்டியவன், அவள் முகம் முன் பறப்பதைப் பிடிப்பதுபோல காட்டி… “டெமோ காட்டவா? செம்ம டேஸ்டா இருக்கும்” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

“யக்” அவள் முகம் காட்டிய அஷ்டகோணத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் ஆதி.  

“என் ஃபிரண்ட் இங்க ஆல்ரெடி வந்திருக்கான். நிறைய பழ வகைகள் இருக்கும்னு சொன்னான். நம்ம கண்ணுக்கு இதுவரைக்கும் நாவல் பழம் அண்ட் இந்த கத்திரிக்கா ப்ரோட்டோடைப் தான் தெரிஞ்சிருக்கு. பார்ப்போம் வேறென்ன கிடைக்குதுனு” பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்.

அவன் சொன்னது போல் நாவல் பழத்தைப் பார்க்க இருவரும் சாப்பிட்டுக்கொண்டே, அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும் சிறிது நேரத்தில் மலை உச்சியை நெருங்கினர்.

அந்த அடர்ந்த காடுகளில் சூரியன் மலைக்கு அவர்கள் வந்தப்பக்கம் தெரிந்தது. மணி என்ன என்று அவன் கடிகாரத்தைப் பார்க்க, அது 2.00 என்று காட்டியது.

அவளால் நடக்க முடியாமல், “ஆதி ரொம்ப முடியல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்”

“கண்டிப்பா. மூனு மணிநேரம் நடந்திருக்கோம். உனக்கு கட்டாயம் ரெஸ்ட் வேணும்” என்று அங்கிருந்த ஒரு இடத்தை சுத்தம் செய்தான்.

அங்கே அவள் கால்களை நீட்டி அமர்ந்தாள். சூரியன் வருவதும், மறைவதுமாக இருந்ததால், உடல் பிசுபிசுவென இருந்தது அவளுக்கு.

“உடம்பெல்லாம் ரொம்ப அழுக்கா இருக்கிற மாதிரி இருக்கு ஆதி. எப்போ குளிப்போம்னு இருக்கு” என்றாள் வேர்வை தாளாமல்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல மலைக்கு அந்தப்பக்கம் போயிடுவோம். அங்க இருக்குற அருவி தான் இப்போ நமக்கு எல்லாமே. வாட்டர் ஸ்டாக் கூட குறைஞ்சுட்டே இருக்கு.

மறுபடியும் பிரட் ஒகேவா? ஓட்ஸ் செய்ய தண்ணி வேணும். ஃபால்ஸ் கிட்ட போனப்புறம் பண்ணிக்கலாம்” அவளின் பதிலுக்காக அவளைப் பார்த்தான்.

“சாமி சாப்பாடு போடுறதே பெருசு… இதுல மெனு வேறயா! எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே” சிரித்தபடி சொன்னாள்.

அவனும் சிரித்தவண்ணம் இருக்க  இருவரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கொண்டனர்.

“எப்படியும் சாயங்காலம் ஆகிடும் அந்த அருவிக்கு போக. அப்புறம், ஊர் பேர் தெரியாத இடத்துக்கு நைட் போறது ரிஸ்க். நைட் அருவிகிட்டயே ஸ்டே பண்ணிட்டு காலைல போலாமா?” அவன் கேட்க, அவளுக்கும் அதுவே சரி எனப் பட்டது. தலையசைத்தாள்.

“ஓகே, இப்போ மேட்டருக்கு வருவோம். நீ கோவில்ல அந்த பூசாரிட்ட என்ன சொன்ன? அவர் எப்படி ரியாக்ட் பண்ணார்னு சொல்லு. ஏதாச்சும் க்ளூ கிடைக்குதானு பார்ப்போம்”

“எஸ், ஜனங்க கூட்டம் கொஞ்சம் குறைஞ்ச உடனே, அந்த பூசாரிட்டப்போய் பூங்கொடி கிராமத்தில ஏதாச்சும் திருவிழா நடக்குதானு கேட்டேன்.

அவர் உடனே, நான் யாரு முதல்லன்னு சொல்ல சொன்னார். நான் சென்னைல இருந்து வரேன்னு சொல்லிட்டு மறுபடியும் திருவிழா பத்தி கேட்டேன். அப்புறம், அந்த திருவிழா நடந்தா ஏதோ ஆபத்து இருக்குனு சொன்னேன்.

அப்போ அந்த பூசாரி முகம் மாறுச்சு. அவர் என்னைப்பார்த்து, ‘முதல்ல உனக்கெப்படி திருவிழா பத்தி தெரியும்னு சொல்லு’னு கேட்டுட்டே இருக்கப்ப… இன்னோருத்தன் வந்தான். என்னாச்சுனு கேட்டுட்டு” என்றாள்.

அவன் அவள் கூறுவதைக் கேட்டுக்கொண்டே அனைத்தையும் பேக் செய்தான். பின், “சரி வா… அப்படியே நடப்போம்” என்று இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“யாரோ வந்தான்னு சொன்னயே நிலா. அவன் பேரு ஏதாச்சும் தெருஞ்சதா”

“பேரு தெரில”

“ஹ்ம்ம் சரி மேல சொல்லு” என்றான்.

“பூசாரி அவன்கிட்ட, ‘திருவிழாப்பத்தி பேசறாங்க. ஏதோ பிரச்சனைன்னு சொல்றாங்க’னு வந்தவன் கிட்ட சொன்னார். உடனே அவன் என்னை முறைச்சு பார்த்துட்டு, ‘என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கியா… மரியாதையா போயிடு’னு திட்டினான். கத்தினான்.

அதுக்குள்ள அங்க கோவிலுக்கு வந்தவங்க கூடி நின்னுக்கிட்டாங்க. அப்போ என்னை திட்டினானே அவன்… பக்கத்துல இருந்த இன்னொருத்தன் கிட்ட ஏதோ காதுல சொல்ல, அதை கேட்டுட்டு அந்த இன்னொருத்தன் கூட்டத்துல இருந்து வெளிய போய்ட்டான்.

அவனை தான் நம்ம மலைக்கு கீழ பார்த்தோம். அடிக்க வந்தானே அவன்!” என்று நிலா சொல்லும்போது, “அவன் தான் கோவில்ல உன்னக்குத்த வந்தான். அப்போ முதல்ல உன்னை திட்டினானே, அவன் தான் ஏதோ சொல்லிருக்கணும்” என்றான் ஆதி.

“ஓ அவன் கூட்டத்துல இருந்து வெளிய போன உடனே, என்னாச்சுனு கேட்டுட்டு வாட்ட சாட்டமா ஒருத்தர் வந்தார். எல்லாரும் விஷ் கூட பண்ணாங்க. அவரை பார்த்தவுடனே பூசாரி அவர் பேர் கூட ஏதோ சொன்னாரே” என்று யோசித்தாள்.

பின் தொடர்ந்து, “மறந்துடுச்சு. யோசிக்கிறேன். அவர் தான் நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க முயற்சி பண்ணார். இன்ஃபேக்ட் அவர் மட்டும் தான் என்னைப் பேச சொன்னதே. நல்லவரா தெரிஞ்சார். ஆனா, அதுக்குள்ள நீ இழுத்துட்டு வந்துட்ட” என்று முடித்தாள்.

“அவர் பேர கொஞ்சம் யோசி. அவரை, இல்லாட்டி அந்த பூசாரியை தான் நாம பார்த்து பேசணும்”

“பூசாரிய பார்த்து பேசறது சரிவருமா ஆதி? அவர் என்னை அவாய்ட் பண்றதுல தான் குறியா இருந்தார்”

“அப்போ நமக்கு இருக்கிற ஒரே வழி அந்த பேரு தெரியாத வாட்ட சாட்டமான ஆசாமி தான்”

“அவர் பேர் ரொம்ப வித்யாசமா இருந்துச்சு” யோசித்தவண்ணம் சொன்னாள்.

அதற்குள், “நிலா … நிலா இங்க பார்!” அவன் அவளைப் பிடித்து நிறுத்தி கை நீட்டிக்காட்ட, அதைப் பார்த்ததும், அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

“வாவ்வ்வ்வ். பியூட்டிஃபுல்” பிரமிப்புடன் சுற்றிப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

மலை உச்சியை இருவரும் அடைந்திருந்தனர். அங்கிருந்து கீழே பார்க்க… அடர்ந்த காடு! முற்றிலும் பசுமை! சுத்தமான சில்லென்ற… நாசியை முட்டும் இதமான காற்று.

சற்று இறக்கத்தில் ஓர் அருவி… அதனுடைய அழகான வளைந்து நெளிந்த பாதை. மலையிலும் இல்லாமல், தரை அளவிலும் இல்லாமல் சின்னதாய் தெரிந்த வீடுகள். சில வீடுகள் அருவி தண்ணீர் போகும் பாதையில் இருந்தது. சில வீடுகள் தண்ணீர் தேங்கியுள்ள ஏரியின் கரை ஓரத்தில்.

சில மைல்கள் தள்ளி, சற்றுத் தொலைவிலே இருந்தது ஒரு கடற்கரை. மலைக்கு இந்தப்பக்கம் நகரம். அந்த பக்கம் ஒரு சின்ன ஊட்டி போல் இருந்தது.

அந்த சுத்தமான காற்றை அவள் ஆழ உள்ளிழுத்து சுவாசித்தபடியே, கைகளைத் தேய்த்து உஷ்ணப்படுத்திக்கொண்டு… அவ்வப்போது குளிருக்காக இறுக கைகளைக் கட்டிக்கொண்டாள்.

“என்னால நம்பவே முடியல… கிழக்கு தொடர்ச்சிமலைல, இவ்ளோ அழகான இடம்! இதுவரை அதிகமா யாரும் எக்ஸ்ப்ளோர் பண்ணாத இடம்!” வியந்தான் ஆதி.

திரும்பி அவளைப் பார்த்தான். அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்த நிலா, அந்த அழகுக்கு ஈடாகத் தெரிந்தாள் அவனுக்கு! அவ்விரண்டையும், அவன் மனப்பெட்டகத்தில் பதித்துக்கொண்டாலும், தன் கேமராவிலும் க்ளிக்கிக்கொள்ள ஆசை வந்தது.

அவள் அருகில் சென்றவன், “நீயும் நானும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” கண்களில் ஆவலை, ஆசையை தேக்கிவைத்துக் கேட்டான்.

அவன் பார்வையில் ஒரு நொடி கட்டுண்டு, “வொய் நாட்? இதை கேட்கணுமா?!” புன்னகையுடன் அவள் சொன்னதும், இருவரும் சில போட்டோஸ் எடுத்துக்கொண்டனர்.

“சரி நிலா. இனி கீழ இறங்க போறோம். இப்போ இன்னும் கவனமா இறங்கணும். ஸ்லிப்பர் வேற போட்டிருக்க…” அவள் கைகளை மறுபடியும் சாதாரணமாகப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அதைப்பார்த்துப் புன்னகைத்துக்கொண்டாள்.

இருவரும் அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

இறங்கும் வழியில், சிற்சில செடிகள் மற்றும் அங்கே பூத்து குலுங்கிய பூக்களைப் பார்த்த நிலா… “இதெல்லாம் சென்னைல எவ்ளோ மிஸ் பண்றோம்? எங்க அம்மாக்கு கார்டனிங்னா ரொம்ப பிடிக்கும். இதெல்லாம் பார்த்தா மாடில செடியா வச்சிடுவாங்க” அங்கிருந்த சில மலர்களை ஆசையாக பறித்துக்கொண்டாள்.

கவனமாக இறங்க வேண்டி, அவள் கையை அவன் விட்டபாடில்லை.

அவளுடைய ஒரு கை அவன் கரத்தினுள், மற்றொரு கையில் பூக்கள்… மனம் முழுவதும் இனம்புரியா ஒரு இன்பமான நல்லுணர்வு!

‘என் மனசோட ஆழமான மூலையில கூட, ஐ ஃபீல் யுவர் ப்ரெசென்ஸ். இவ்ளோ குறுகிய காலத்துல, எப்படி இதெல்லாம்?! வாழ்நாள் முழுசும் உன்னோட இதுபோலவே இருக்க விரும்புறேன். வில் யூ பி வித் மீ ஃபார்எவர்?’

பூக்களையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவளை, “நிலா?” என்ற அவனின் அழைப்பு நிகழ்வுக்குக் கொண்டுவந்தது.

திரும்பி அவனைப் பார்த்தாள்.

“என்ன, என்கிட்டே ப்ரொபோஸ் பண்ண போறயா? பூ புன்னகை?! ஹ்ம்ம்” புருவம் உயர்த்தி, அவனுடைய ட்ரேட்மார்க் சிரிப்புடன் கேட்டான்.

வெளிப்படையாக மாட்டிக்கொள்ளாவிட்டாலும், தன்னுடைய செயல்கள் காட்டிக்கொடுக்கிறதே! தன்னையே மானசீகமாகக் குட்டிக்கொண்டாள்.

உடனே சுதாரித்துக்கொண்ட நிலா,  “இந்த நினைப்பு வேற இருக்கா மிஸ்டர் ஆதி! அழகா இருக்கேனு பறிச்சேன். அவ்ளோ தான்” என்று மழுப்பினாள்.

பதிலுக்கு சத்தமாகச் சிரித்தான்.

‘ஓ காட்! ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். இவன் முன்னாடி ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி பிஹேவ் பண்றேனே’ அசடு வழிந்தது அவள் மனம். 

“ஹே நிலா கேட்குதா… அருவி சத்தம். பக்கத்துல வந்துட்டோம்” மெல்லிய தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

இருவரும் அருவியை நெருங்கும்போது சட்டென அவன், அவள் கையை இறுகப் பிடித்துத் தடுத்தான் கண் முன்னே இருக்கும் எதையோ காட்டியபடி.

அவன் காட்டிய இடத்தில், ஒரு நல்லபாம்பின் வாலும் கட்டுவிரியன் பாம்பின் வாலும் பின்னிக்கொண்டு இருந்தது. அவன் அவளைச் சத்தம் செய்யாமல் அமைதியாக இருக்கச்சொல்லி சைகை செய்தான்.

பாம்புகள் இரண்டுமே, பார்ப்பதற்கு நீளமாக, பயங்கரமாக இருந்தது. 

கொஞ்ச நேரத்தில், பாம்புகள் அதனுடைய மேல்பாகத்தை பின்னிக்கொண்டது. பயத்துடன் இருந்த நிலா அவனின் சட்டையை இறுகப் பற்றி, மார்பில் முகத்தை மறைத்தபடி, சின்னதாகக் கண் திறந்துப்பார்த்தாள்.

அடுத்து, இரு பாம்பும் மேலோங்கியபடி மேல்பாகத்தை தளர்வாகப் பின்னிக்கொள்ள அதன் வால்கள் இறுகப் பின்னிக்கொண்டது.

சில மணித்துளிகளுக்கு பின், பாம்புகள் இரண்டும் இனச்சேர்க்கையை முடித்துவிட்டு அடங்கியபின், அவன் அவளைப்பார்த்தான். கைகளில் நடுக்கத்துடன், அவனுடைய மார்பில் கண்கள் இறுக மூடி சாய்ந்திருந்தாள்.

அவளின் அருகாமை, அவளின் ஸ்பரிசம், அவளின் நடுக்கம் ஏற்படுத்தும் மெல்லிய அதிர்வு, அவனை ஆட்டிவைத்தது. அவனின் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்குவதை உணர்ந்து… கடினப்பட்டு, கட்டுக்குள் கொண்டுவந்தான்.

எதையும் வெளிக்காட்டாமல் அவளை விடுவித்து, தன் வாய்மேல் விரல்வைத்து அமைதியாக வரும்படி அவளுக்குச் சைகை செய்தான்.

இருவரும் எந்த அரவமும் கேட்காமல் மெதுவாகப் பாம்புகளிடம் இருந்து நல்ல இடைவெளிவிட்டு நடந்தனர்.

கொஞ்சதூரம் நடந்த பின்னர், திடீரென அவன் கையைப் பற்றிக்கொண்டு, “இதெல்லாம் எனக்கு புதுசு. ரொம்ப பயந்துட்டேன் ஆதி” லேசான நடுக்கம் இன்னமும் இருந்தாலும், கொஞ்சம் மூச்சு சீரானது அவளுக்கு.

“எதுக்கு பயம் நிலா? நான் இருக்கேன்ல” அவளை தோளோடு அணைத்துக்கொண்ட ஆதி, “பாம்பு ரொம்ப சென்சிடிவ். அதுவும், அதோட மேட்டிங் டைம்ல ஏதாச்சும் இல்ல யாராச்சும் தொந்தரவு பண்ணாங்கன்னா, முடிஞ்சுது கதை” என்றான் நடந்தவாறே.

இருவரும் அருவியின் அருகே வந்தடைத்தனர். பார்ப்பதற்குச் சிறிய ஒரு துணை அருவி போல் காட்சி தந்தது. அருகே நிறைய செடிகள் மற்றும் அதில் பூக்கள் பூத்துக்குலுங்கின.

“சரி நிலா. நைட் நம்ம இங்கயே செட்டில் ஆகிடுவோம். இன்னும் கொஞ்சம் தூரம் தான். காலைல சீக்கிரம் கிளம்பினா அந்த ஊருக்கு போய்டலாம்” என்றான், பையிலிருந்த சில பொருட்களை வெளியே எடுத்தபடி.

“அந்த பாம்பு இங்க வந்திடாதே” பீதியுடன் கேட்டாள் நிலா.

புன்முறுவலுடன் ஆதி, “வரணும்னா எங்க வேணும்னாலும் வரும் நிலா. பாம்புனு இல்ல வேற ஏதாச்சும்கூட வரலாம்” என்றவன் ப்ளாங்கெட்டை எடுத்து விரித்து…

“நீ தைரியமான பொண்ணுன்னு நான் நினைச்சேன்” என்க,

“இந்த க்ரிச்சர்ஸ் பார்த்தாதான் பயமே” சுற்றியும் பார்த்து சொன்னவளிடம்,  “நாம அதை டிஸ்டர்ப் பண்ணாத வரைக்கும், அதுவும் நம்மள டிஸ்டர்ப் பண்ணாது, சோ, பயத்தை விட்டுத்தள்ளு”

அவளை ப்ளாங்க்கெட்டில் உட்கார சொல்லிவிட்டு, “முதல்ல கொஞ்சம் தண்ணிய ஸ்டெர்லைஸ் (sterilize) பண்ணிடலாம். நைட் டின்னெர்க்கு யூஸ் ஆகும்” அவன் எடுத்துவந்த போர்ட்டபில் வாட்டர் ப்யூரிஃபைர்ரில் (portable water purifier) தண்ணீரை நிரப்பி, அதை ஆன் செய்தான்.

அவள் பையை எடுத்து, அதிலிருந்து ஒரு புடவையை அவனிடம் நீட்டினாள்.

“எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு புடவை எடுத்தேன், இதை வேணும்னா மரத்துக்கு மரம் கட்டிடலாமா? டிரஸ் மாத்திக்க, மறைவா இருக்குமே”

சுற்றியும் முற்றியும் பார்த்த ஆதி, “இங்க பெரிய மரம் எதுவும் இல்லை. இருக்கிற இடத்துல மறைவா கட்டிடலாம்” புடவையை வாங்கி இரு சிறிய மரங்களின் குறுக்கே கட்டிவிட்டு வந்தான்.

அங்கிருந்த சில காய்ந்த கட்டைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தபோது “இது எதுக்கு?” அவள் கேட்க, “நைட் குளிரும். சோ கொஞ்சம் வார்ம்மா இருக்க” என்றான்.

கட்டைகளை அடுக்கிய பின்னர், மாற்று உடையை எடுத்து வெளியே வைத்த ஆதி, “சரி நிலா… நான் குளிக்கப்போறேன். நீயும் வர்றியா… இல்ல அப்புறமா குளிக்கறயா?” இதுபோல கொட்டும் அருவியில், குளிக்க அவள் பழக்கப்பட்டிருக்க மாட்டாள் என்றெண்ணிக் கேட்டான்.

‘வாட்? ரெண்டு பேரும் சேர்ந்தா?’ அந்த எண்ணமே பகீர் என்றது அவளுக்கு.

“இல்ல நீ போய் குளி… நான் அப்புறமா குளிச்சிக்கறேன்”

அதுவும் கூட சரி எனப் பட்டது அவனுக்கு. அவளின் நெருக்கம் தன்னை தன்னிலை இழக்கவைக்கக்கூடும் என எண்ணி, அவளிடம் சரி  என்பது போல தலையசைத்தவன், மேலாடையைக் கழற்றிவிட்டு, உள்ளே செல்ல முற்படும் போது… கற்களிலிருந்த பாசியால் சற்று தடுமாறி உள்ளே சென்றான்.

அவன் சென்றது, பின் அருவியின் அடியில் நின்று குளிக்கும் போது என அவள் கண்கள் அவனையே தொடர்ந்தது. ரசித்தது.

அதை பார்த்தவன் புருவத்தை உயர்த்தி ‘என்ன?’ என்பது போல் புன்னகைத்துக்கொண்டு கேட்க ‘ஒன்றும் இல்லை’ என்பதுபோல் தலையசைத்தாள், அவன் மீதிருந்த கண்களைச் சற்றும் அகற்றாமல்.

அவளின் பார்வையே பல ஆயிரம் செய்திகளை அவனுக்குச் சொன்னது. 

இப்போது தேங்கி இருந்த தண்ணீரில் அவன் முங்கி எழுந்தான். அவனின் ஒவ்வொரு செயலும் அவளை வசீகரித்தது.

தன் கவனத்தை வேறுபக்கம் திருப்ப, அவளுக்காக வாங்கிய ஆண்களுக்கான டிஷர்ட் மற்றும் பேண்டை வெளியே எடுத்தாள்.

சில நிமிடங்களில், குளித்து வெளியே வந்தவனைப் பார்த்து திரும்பினாள் நிலா.

அவனுடைய ஈரமான முடி மற்றும் தலையை அசைத்தவாறே வந்தான் அவள் அருகில். அவனிடமிருந்து தெறித்த தண்ணீர் துளிகள் அவள் மேல் பட, அவள் தேகம் சிலிர்த்தது.

“தண்ணி ரொம்ப ஜில்லுனு இருக்கா ஆதி”

“எனக்கு தெரில… பட் உனக்கு இருக்கும்னு நினைக்கறேன்”

“சரி நான் போய் குளிக்கிறேன். அந்தப்பக்கம் பார்க்கக்கூடாது ஹ்ம்ம்?” சாதாரணமாகச் சொல்கிறாளா, மிரட்டுகிறாளா, இல்லை கெஞ்சுகிறாளா? என்று பகுத்தறிய முடியாத குரலில் ஆணையிட்டாள்.

அவனோ சிரித்து, “சரிங்க மேடம் நீங்க போங்க. ஆனா பார்த்து போங்க, அந்த கல்லு வழுக்குது” என்றான் ஒரு பாறையைக் காட்டி.

அதன் அருகே சென்றவள், மெதுவாகக் கால் வைத்தாள்… அது நன்றாக வழுக்கியது. என்ன செய்வது என்று எண்ணிய நிலா, ‘எதுக்கு ரிஸ்க் அவனையே கூப்பிடலாம்’ என்றெண்ணி, “ஆதி கொஞ்சம் ஹெல்ப் பண்றயா உள்ள இறங்க?”

அவள் அருகே வந்த ஆதி, சில நொடிகள் யோசித்த பின், “நான் முதல்ல உள்ள போய்ட்டு… உனக்கு கை குடுக்கறேன், நீ மெதுவா வா” அவன் தண்ணீரில் இறங்கி அவளுக்குக் கைகொடுக்க, அவள் பற்றிக்கொண்டு அந்த கல் மீது கால் வைத்தாள்.

அவள் பயந்தது போலவே நன்றாக வழுக்கியது. கால் தடுமாறி அவன் மேல் சாய்ந்தாள். அதை எதிர்பார்க்காத ஆதியும் தடுமாற, இருவரும் சேர்ந்து தண்ணீரில் விழுந்தனர்.

“பார்த்து நிலா!” மெதுவாக அவன் எழுந்த பின், அவளுக்குக் கைகொடுத்து தூக்கினான்.

“ஐம் ஸாரி ஐம் ஸாரி” என்று சொல்லிக்கொண்டே அவன் உதவியுடன் எழுந்தவள் அவன் இடையைப் பற்றிக்கொண்டாள் மறுபடியும் கீழே விழாமல் இருக்க. 

அவ்வளவுதான். அவளின் நெருக்கம் அவனை மீண்டும் அசைத்துப்பார்த்தது. நிமிர்ந்து அவனை நிலா பார்க்க, அவன் கைகள் தானாக அவளுடைய இடையைச் சுற்றிக்கொண்டது.

அவனுடைய செயலால் முகம் சிவந்தவள்… முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவள் இடையிலிருந்து தன் கையை எடுத்த ஆதி, அவள் முகத்தைத் தான் பார்க்கும்படி திருப்பினான்.

இருவரின் கண்கள் மற்றவரின் பார்வையில் மூழ்கிய நிலையில், அவள் நெற்றியில் படர்ந்திருந்த ஈரமான முடிக்கீற்றை தள்ளி, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனின் பார்வை இப்போது சற்று கீழே இறங்கி அவளுடைய இதழ்களை வந்தடைந்தன. தலைசாய்த்து அவன் நெருங்க… அவள் மறுபடியும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவனிதழ், இலக்கு தவறி அவள் கழுத்தில் தஞ்சம் அடைந்தது.

அவனோ, அங்கிருந்து நகர மறுக்க, அவனைத் தள்ளிவிட்டு, தன்னை விடுவித்துக்கொண்ட நிலா பின்னே நகர்ந்தாள். அவனும் அவளைத் தொடர்ந்தான்.

அவள் அருவியில் போய் முட்டி நிற்க, அவன் இரு கைகளை இரு பக்கமும் வைத்து அவள் தப்பமுடியாமல் சிறை பிடித்தான். இருவரின் மேலும் அருவியின் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

அவளை நெருங்கினான் ஆதி. அவளின் முகம் அவன் இதயத்திற்குச் சற்று மேல இருக்க, அவளின் மூச்சுக்காற்று அவனின் வெற்று உடம்பில் சூடாக இறங்கியது, அந்த அருவியின் குளிர்ந்த நீரையும் மீறி.

அவனுடைய பார்வையின் தீவிரத்தை உணர்ந்த நிலா, “வேண்டாம் ஆதி” என அவளுக்கே கேட்காத குரலில் மறுத்தாலும், அவள் கண்கள் அந்த அருகாமையை எதிர்பார்த்திருந்தது.

அதை உணர்ந்த ஆதி, நொடியும் தாமதிக்காமல்… அவள் கன்னங்களைத் தாங்கி, தன் இதழ்களை அவள் இதழ்களில் மென்மையாக இணைத்தான் இம்முறை தவறாமல்!

இருவரும் மற்றவரை அணைத்தபடி அருவியின் அடியில் தங்களை மறந்து நிற்க, சட்டென நிலைமை உணர்ந்து விலகினாள் நிலா.

ஒரு வித தயக்கம், கோபம் என அவள் முகம் அவள் உணர்வுகளை அப்படியே  படம் காட்டியது. அவளின் நிலையை சரியாக கணித்த ஆதி, அவளை இழுத்து பின்னோடு அணைத்துக்கொண்டான்.

பின், “நீ என்கிட்ட கேட்டல்ல என்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி… எஸ், ஐம் கமிட்டட்”

அதைக் கேட்டவுடன், அவன் பிடியிலிருந்தே, திரும்பி அவனை அவள் பார்க்க, அவனோ கைநீட்டினான்.

அவள், அவன் கைகாட்டும் திசையைப் பார்த்தாள்… அங்கே அழகிய நிலா!

“வில் யூ பி மைன் ஃபார்எவர் நிலா?” கண்களில் காதலைத் தேக்கிவைத்துக் கேட்டான்!

அவள் கேட்க நினைத்தது, அதையே அவனும் கேட்க… மறுப்பின்றி ஆனந்தத்தில் கண்கள் கலங்க அவன் இதயத்தில் தஞ்சம் கொண்டாள் அவனின் நிலா!

4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved