என்னோடு நீ உன்னோடு நான் – 18

என்னோடு நீ உன்னோடு நான் – 18

ஆவலாக கால் டீடெயில்ஸ் வந்த ஈமெயில்லை ஓபன் செய்த ப்ரித்வி, அதைப் பார்த்து அதிர்ந்தான். அதில், கடந்த ஒரு மாதமாக எந்த கால் டீடைலும் இல்லை.

‘ஒரு கால் கூட பண்ணாம எப்படி இருக்க முடியும்?’ யோசனையிலிருந்தவனை, அழைப்பு மணியின் சத்தம் நிகழ்விற்குக் கொண்டு வந்தது.

ஆனந்த் வந்திருந்தான். அந்த கிராமத்தில் துப்புத்துலக்க தேவையான சில பொருட்களை எடுத்துக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

போகும் வழியில், “சார், என் US ஃபிரண்ட் கிட்ட பேசினேன். ஆண்ட்ராய்ட் இன்பில்ட் ஆப் (inbuilt app) பாஸ்வெர்ட் பிரேக் பண்றது கஷ்டம். பட் மத்ததெல்லாம் பண்ணலாம்னு சொன்னான்”

ப்ரித்வி, “கிரேட். அப்போ இன்னைக்கு நைட் அத கொஞ்சம் ரீசெட் (reset) பண்ணிடு ஆனந்த்” என்றவன் மேலோட்டமாக கருணாவைப் பற்றிச் சொல்லி,

“இப்போ நாம போகப்போற இடம் மலைல இருக்கு. அவன் இருந்த இடம்… அங்க சிக்னல் நார்மலா கிடைக்காது. பட், அவன் போன் யூஸ் பண்ணிருக்கான்”

“சார், இந்த ஒர்க் முடிஞ்ச உடனே, என்னை அவன்கிட்ட கூட்டிட்டுப்போங்க. பெரிய ஆட்டக்காரனா இருப்பான் போல” ஆனந்த் கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்ல, “அது கஷ்டம். அவன் இப்போ கோமால இருக்கான்” என்றான் ப்ரித்வி.

“அதானே பார்த்தேன்! ஒவ்வொரு ஆப்’கும் பாஸ்வெர்ட் வச்சுக்கிட்டா கோமாக்கு போகாம பின்ன கோவாக்கா போக முடியும்” மொக்கை ஜோக்குடன், “இப்போ தெரியுது சார்… என் ஹெல்ப் உங்களுக்கு ஏன் தேவப்படுதுனு” என்றான் ஆனந்த் நக்கலாக.

அவனைப் பார்த்து முறைத்த ப்ரித்வி, அந்த பேச்சை மேலும் வளரவிடாமல்… “அவன் இருந்த இடத்துக்கு சிக்னல் ரீச் ஆகற மாதிரி செய்திருக்கான்” என்றான்.

“அப்போ சிக்னல் என்ஹான்சர் (enhancer) யூஸ் பண்ணிருக்கானா சார்?” என்று கேட்க, “மே பி! அதை பார்க்க தான் போறோம்” என்றான் ப்ரித்வி.

அப்போது ப்ரித்விக்கு மொபைல் அலர்ட் வந்ததும் எடுத்துப்பார்த்தான்.

கருணாவின் மற்றொரு சிம்’மின் கால் டீடெயில்ஸ் பற்றி ஈமெயில் வந்திருந்தது. அதை பார்த்தபோது, அந்த நம்பர் சேவையில் இல்லை என்றிருந்தது.

“இது தெரியுமா ஆனந்த்… அந்த ரெண்டு சிம்’லயும், அவன் நார்மல் கால்ஸ் பண்ணவே இல்ல. ஒரு நம்பர்ல நோ கால் டீடெயில்ஸ்… இன்னொன்னுல சர்வீஸ் கட் ஆகியிருக்கு”

“சார், அவன் ஒவ்வொரு ஆப்’கே பாஸ்வெர்ட் வச்சிருக்கான். நார்மல் கால்ஸ் பண்ணுவானா?” என்றான் ஆனந்த்.

திடீரென ஏதோ தோன்ற… ப்ரித்வி நேற்று பேசிய அந்த மொபைல் ஆபரேட்டர்க்கு கால் செய்தான்.

“ப்ரித்வி ஹியர்…… நேத்து நான் தந்த நம்பர்ல இருந்து கால் எதுவும் போகவும் இல்ல வரவும் இல்ல…… எனக்கு இப்போ வேற டீடெயில்ஸ் வேணும்…… கேன் யூ சென்ட் மீ டேட்டா யூசேஜ் டீடெயில்ஸ்?… எஸ், ஸ்ப்ளிட் பண்ணி டீடெயில்ஸ் இருந்தா இன்னும் பெட்டர்… தேங்க்ஸ்” என்று போனை வைத்தான்.

இருவரும் பேசிக்கொண்டே மலை அடிவாரம் வந்தடைந்தனர். காரிலிருந்து இறங்கியவுடன் ப்ரித்வி,”நாம இங்கிருந்து நடந்து போகப்போறோம்” அவன் எடுத்துவந்த பையை எடுத்துக்கொண்டான்.

அதிலிருந்து ஒரு டிவைஸ் மட்டும் வெளியே எடுத்த ப்ரித்வி, தன் மொபைலை ஆனந்திடம் காட்டி… “இங்கேயே சிக்னல் ரொம்ப வீக்’கா தான் இருக்கு. பட் அவன் இருந்த இடம் இதுக்கும் மேல. அங்க வரைக்கும் போயிருக்குன்னா இது பூஸ்ட் ஆகியிருக்கு” சொன்னபடி, மேலே ஏற ஆரம்பித்தனர்.

சிறு தூர பயணத்திற்குப் பின், ப்ரித்வி வைத்திருந்த டிவைஸ் ‘பீப்’ என அலறியது. ஆனந்தை எச்சரிக்க, அங்கே தேட ஆரம்பித்தனர்.

கீழே முழுவதும் தேடியும் அவர்கள் நினைத்தது எதுவும் தென்படவில்லை. பின், அங்கிருந்த மரங்களைப் பார்த்தபோது, அங்கே அதனுடன் கட்டப்பட்டிருந்தது அந்த ஆண்டெனா.

அதனருகில் சென்று இருவரும் பார்க்க, ஆனந்த், “சார் ரொம்ப பவர்ஃபுல் ஆண்டெனா! மேட் இன் ஜெர்மனி (Made in Germany)” என்றான். அவன் சொல்லும்போதே ப்ரித்விக்கு மெயில் வந்தது.

“பரவால்ல சார்! செம்ம சிக்னல் ரிசீவர். உங்களுக்கு அலர்ட் வருது”

“இங்க பாரு ஆனந்த். டேட்டா யூசேஜ் ஸ்ப்ளிட் அப்” ப்ரித்வி தன் மெயிலை காட்ட…

“சார்… விபிஎன் (VPN) யூஸ் பண்ணியிருக்கான்! அதான் எந்த ஹிஸ்டரியும் தெரியல. பட்!” ஆனந்த் புன்னகையுடன் ப்ரித்வியை பார்க்க, ப்ரித்வி… “அவன் மொபைல்’ல ஸ்கைப் (Skype) ஆப் இருந்தது! சோ கால்ஸ் அதுல பண்ணியிருக்கலாம்!” என்றான்.

“எக்ஸாக்ட்லி சார்! கால்ஸ் ஸ்கைப்ல பண்ணியிருக்கான்னா ப்ராப்லம் இல்லனு நினைக்கறேன். ஆப்’க்கு பாஸ்வெர்ட் பிரேக் பண்ணக்கூட வேண்டாம். மோஸ்டலி அவனோட மொபைல் நம்பர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணியிருப்பான். வி கேன் ஹேக் ஹிஸ் அக்கௌன்ட்” என்றான் ஆனந்த்.

“சூப்பர்! ஃபாஸ்ட் இம்ப்ரூமென்ட்” என்ற ப்ரித்வி, “இந்த ஆண்டெனா பார்த்தா கமெர்ஷியல் யூஸ்க்கு டிசைன் பண்ண மாதிரி இருக்கு ஆனந்த்” என்றான் சந்தேகத்துடன்.

“அப்போ இந்த இஷ்யூல பெரிய ஆளுங்கலாம் இருப்பாங்க போலயே சார்!”

“மைட் பி! அவ்ளோ ஈசி கிடையாது, டு கெட் திஸ் ஆண்டெனா” என்றான் ப்ரித்வி.

கொஞ்ச தூரம் நடந்தவுடன் ப்ரித்விக்கு கால் வந்தது.

“ஹே ஆதி! சொல்லுடா…… ஓ சாம்பில்ஸ் டெஸ்டிங்’கு கொடுத்துட்டியா…… நான் இப்போ அந்த கருணா தங்கியிருந்த வீட்டுக்கு தான் போய்ட்டு இருக்கேன்……

ஆமா டா. ஏதாச்சும் க்ளூ கிடைக்குமான்னு பார்க்க தான்…… சரி டெஸ்ட் ரிசல்ட் வந்த உடனே சொல்லு…… ஆமா, அந்த மெடிக்கல் யூனிட் ரெடி ஆகிடுச்சா?…… ஒ! ரெடி ஆகிடுச்சா சூப்பர்!……” என்று பேசிவிட்டு வைத்தான்.

முன்பு பார்த்ததுபோல வழியில் இன்னொரு ஆண்டெனாவை பார்த்தவர்கள்… மேலும் ஏறினார்கள். கொஞ்சம் தூரம் நடந்த பின் கருணாவின் வீட்டை அடைய, அதைப் பார்த்த ப்ரித்வி அதிர்ந்தான்.

——————–

“பைரவிகிட்ட  இருந்து காலா? ஓ! அந்த நியூ நம்பர்… நேத்துல இருந்து அவ தான் கால் பண்ணியிருக்கா” ஆதி தன் மொபைலை பார்க்க, “யாரவங்க ஆதி?” கேட்டாள் நிலா.

“என்னோட அத்தை… அப்பாவோட சிஸ்டர் பொண்ணு” என்றான் ஆதி.

நிலா சட்டெனத் திரும்பி அவனைப் பார்க்க, ‘அவள் இன்னமும் தெரிந்துகொள்ள நினைக்கிறாள்’ என்பதை உணர்ந்த ஆதி தொடர்ந்தான்.

“நான் UG முடிச்சப்புறம், எப்படியாவது எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு அத்தைக்கு ஆசை இருந்தது. அப்போ நான், எனக்கு கல்யாணத்துல இண்டெர்ஸ்ட் இல்லன்னு சொன்னேன்” என்ற ஆதி,

“தென், மாஸ்டர்ஸ் பண்ண US போய்ட்டேன். செகண்ட் இயர் பண்ணிட்டு இருக்கிறப்ப, பைரவியும் அங்க வந்தா. அதே காலேஜ். அப்போ நானும் கௌஷிக்கும் ஒன்னா தங்கி, படிச்சிட்டு இருந்தோம். அத்தை இன்ஸிஸ்ட் பண்ணி, அவளும் எங்ககூட ஸ்டே பண்ணா.

ஒரு பாயிண்ட்ல அப்பாவும் கல்யாணத்தை பத்தி பேச, சரி அவ கூட கொஞ்சம் கிளோஸ் ஆஹ் பழகிப்பார்த்து… அப்புறம் கல்யாணத்துக்கு ஒகே சொல்லலாம்னு இருந்தேன்.  

பட், கௌஷிக் எங்களுக்கு நடுவுல தொந்தரவா இருக்கான்னு நினைச்சிட்டு, அவனை அங்கயிருந்து வெளிய அனுப்ப ஒரு கேவலமான ட்ராமா போட்டா. ஐ நோ கௌஷிக் ஃபார் இயர்ஸ்! பக்கா ஜென்டில்மென்! அவனை போய்!” நிலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தவன் முகத்தில் அத்தனை வெறுப்பு.

சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தான் ஆதி.

“கௌஷிக் ரொம்ப அமைதியான கேரெக்டர்னு தெரிஞ்சிட்டு, அபாண்டமா பழி சுமத்தினா! அப்போ கூட கௌஷிக், அவளை எதுவும் சொல்லாம ‘நான் முன்னாடியே போயிருக்கணும். உங்களுக்கு பிரைவசி முக்கியம்’னு சொல்லிட்டு தனியா போய்ட்டான்.

ஆனா, அதோட அவ விடல! என்னை கொஞ்சம் கொஞ்சமா டாமினேட் பண்ணி, அவ சொல்றமாதிரி நடக்கணும்னு நினைச்சா. அப்போதான் இன்னொரு பெரிய வாக்குவாதம் வந்துச்சு.

அவளுக்கு US’ல செட்டில் ஆகணும்… எனக்கு படிச்சு முடிச்சு, இந்தியா திரும்பணும். கண்டிப்பா ரெண்டு பேராலயும் விட்டுக்கொடுக்க முடியாதுனு எனக்கு தோணுச்சு.

அண்ட், அவளோட நேச்சர்… என்கூட கண்டிப்பா ஒத்துப்போகாதுன்னு அங்கயே இதுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு. அவ படிச்சு முடிச்சிட்டு, அங்கேயே செட்டில் ஆகிட்டா. இப்போ வெகேஷனுக்கு வந்திருக்கானு நினைக்கறேன்” என்று முடித்தான்.

“ஓ! அதான் நான் உன் ஃப்ரெண்ட்னு அவங்ககிட்ட சொன்னப்ப, உடனே கால் கட் பண்ணிட்டாங்க போல” புன்னகையுடன் நிலா சொன்னாலும், அது அவள் கண்களில் பிரதிபலிக்கவில்லை.

அதுவும் புரிந்தது ஆதிக்கு.

“ஹ்ம்ம். நீ பைரவி பத்தி ரொம்ப யோசிக்காத நிலா. எப்படியும், இன்னிக்கு வீட்டுக்கு போனவுடனே அம்மாகிட்ட உன்னை பத்தி பேசிடுவேன்” என்றான் புன்னகையுடன்.

அவளும் புன்னகைத்து, “நானும் இன்னைக்கே சொல்லிடுவேன் ஆதி. டூர்’க்கு போகலைங்கிறது, மறைக்கக்கூடிய விஷயம் இல்ல. சொல்லியே ஆகணும். அப்போ நம்ம விஷயத்தையும் சொல்லிடுவேன்.

ஏன்னா, ஆல்ரெடி ஊருக்கு போயிட்டு வந்து கல்யாணத்துக்கு முடிவு சொல்ல சொன்னாங்க” என்றாள் நிலா கார் ஓட்டியபடி.

அவளை ஆதி சமாதானப்படுத்தினாலும்,  மனதில் ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருந்தது.

இருவரும் தாம்பரம் வந்திருக்க, ஆதியின் ஓட்டுநரை ஏற்றிக்கொண்டு அவள் வீட்டை அடைந்தனர்.

“உள்ள வர்றயா ஆதி? வீட்ல யாரும் இல்ல” சம்பிரதாயத்திற்குத் தான் அழைத்தாள். அதனால் தான் வீட்டில் யாரும் இல்லை என்பதையும் சேர்த்துச் சொன்னாள்.

“இப்போவா? சரியா இருக்காது நிலா! நீ வீட்ல இன்னைக்கு பேசு. அப்புறம் நான் எல்லாரும் இருக்கிறப்ப வந்து பேசறேன்” என்றான் புன்னகையுடன்.

சில நொடிகள் மௌனமே நிறைந்திருக்க, இருவரின் கண்களும் சிலநொடிகள் பேசிக்கொண்டது.

“என்னோட ஹாஸ்பிடல் அப்புறம் வீட்டு அட்ரஸ் உனக்கு ஷேர் பண்ணிருக்கேன் நிலா” ஆதி சொன்னதற்கு, தலையசைத்தாள் நிலா!

“சரி, உள்ள போ நிலா! டிரைவ் பண்ண டயர்ட்நெஸ் இருக்கும். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு”

“லவ் யூ ஆதி!” கண்கள் அவனை விட்டு அகற்றாமல் சொன்னாள்.

“வில் மிஸ் யூ நிலா!” அவன் புன்னகைத்தாலும், லேசாக அதில் வருத்தம் இழையோடியது.

இதற்குப் பின் தான் தங்களுக்குள் பிரிவு வரப்போகிறது என்பது தெரியாமல், நிலா வீட்டிற்குள் செல்ல, ஆதி தன் வீட்டிற்கு புறப்பட்டான்.

மாலை பொழுது நெருங்கியபோது, நிலாவின் அம்மா அப்பா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

அவள் அம்மா அவளிடம், ‘இனி இப்படி டூர் எல்லாம் போகவேண்டாம்’ என்று திட்டினார்… அவளைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்ற ஆதங்கத்தில்.

இப்போதே சொல்ல வேண்டாம் என்று எண்ணிய நிலா சிறிது நேரம் கழித்து பேச்சை ஆரம்பித்தாள்.

“அம்மா நான்…. நான்… ஒரு உண்மைய சொல்லணும்….” என்று இழுக்க… “என்ன டி, என்ன பீடிகை போடற?” அவள் அம்மா முறைக்க, அவள் அப்பா அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நான்… நான்  ஆஃபீஸ் ட்ரிப் போகல” என்ற நிலா, அவளுக்கு வந்த க்ராஸ் டாக்கில் ஆரம்பித்து, ஆதி தனக்கு உதவியது வரை சொன்னாள்.

“அடிப்பாவி! உன்னால எப்படி இவ்ளோ பொய் சொல்ல முடிஞ்சது? அதுவும் யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தன் கூட இவ்ளோ நாள் சுத்திட்டு இருந்திருக்க” அவளை அடிக்க கோபத்துடன் சென்றார்.

அப்போது நிலாவின் அப்பா தன் மனைவியைத் தடுத்து, நிலாவிடம்,”மேல சொல்லு” என்றார் இறுகிய முகத்துடன்.

“எனக்கு ஹெல்ப் பண்ண ஆதியை எனக்கு பிடிச்சிருக்கு. அவருக்கும் தான்” எல்லா தெய்வங்களையும் வேண்டி, மனதில் தைரியத்தை வரவழைத்து சொல்லிவிட்டாள்.

“எவ்ளோ திமிரா பேசறா பாருங்க” அவள் அம்மா கத்தியபடி மறுபடியும் அடிக்க செல்ல, அவரை தடுத்த நிலாவின் அப்பா…

“அந்த பையன் உன்ன கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னானா… இல்ல அந்த பிரதீப் மாதிரி” அவர் பாதியில் நிறுத்த, “ஆதி அப்படி இல்லப்பா! நான் நாளைக்கு வந்து பேச சொல்றேன் பா” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

அவள் எதிர்பார்க்கவில்லை அவள் அப்பாவின் எதிர்வினை இப்படி இருக்கும் என்று.

“சரி நாளைக்கு சாயங்காலம் வர சொல்லு… பேசலாம். பையன் நல்ல பையனா இருந்தா, சந்தோஷம் தான்!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அவளுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, அழுகை, ஆனந்தம் என ஒருசேரத் தாக்க, ஆதிக்கு அழைத்து நடந்ததைச் சொன்னாள். இருவரும் அடுத்து திருமணம் தான் என எண்ணி இருக்க, அது அவ்வளவு எளிதாக நடந்துவிடுமா என்ன!

அதேநேரம் ஆதியின் வீட்டில்… “இதுக்குத்தான் இந்த ட்ரெக்கிங் எல்லாம் வேண்டாம்னு சொல்றது. எவ்வளவு பெரிய காயம்னு பாரு?” ஆதியின் காயத்தை ஆராய்ந்த அவன் அம்மா… திட்டிக்கொண்டே அவனுக்குப் பிடித்ததை சமைத்துக்கொண்டிருந்தார்.

மேடை மேல் உட்கார்ந்த ஆதி, “அம்மா, உனக்கே தெரியும் இது அவ்ளோ பெரிய காயம்லாம் இல்லனு. மேனஜபில்!” என்றதும், அவன் அம்மா முறைத்தார்.

“அம்மா, சரி அது இருக்கட்டும். நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”  தன் அம்மாவைப் பார்த்து கூறினான் ஆதி.

“என்ன… பைரவி கூட கல்யாணம் வேண்டாம்னு சொல்ல போற… அதானே! நான் ஒன்னுமே பண்ண முடியாது டா ஆதி. இத்தனை நாளா உங்க அத்தை இங்க இருந்து தொல்ல பண்ணிட்டு இருந்தாங்க… இப்போ அவங்க பொண்ணும். உங்க அப்பாவையும் கைல பிடிக்க முடியல” சலித்துக்கொண்டு சொன்னார்.

“அவளை கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லி, இங்கயே இருந்து அத்தை ரொம்ப டார்ச்சர் பண்ணதால தான்… நான் தனியா போய் இருக்கேன். ஏம்மா… அவங்க அவங்களோட வீட்டுக்கு போகவே மாட்டாங்களா?” எரிந்து விழுந்தான்.

“அமைதியா பேசு ஆதி… உன் அத்தை வந்திட போறாங்க” வெளியே எட்டிப்பார்த்து எச்சரித்தார் அவன் அம்மா.

“ப்ச்! ஐ டோன்ட் கேர்…. சரி மா! சொல்றத கேளு… நான் நிலான்னு ஒரு பொண்ண லவ் பண்றேன். நீ தான் அப்பாகிட்ட சொல்லணும் ப்ளீஸ். எனக்கு பைரவியெல்லாம் செட் ஆகமாட்டா மா” போட்டுடைத்தான் சொல்ல வந்ததை.

“என்னடா இது… இந்த பொம்மை பிடிச்சிருக்குன்னு சொல்றமாதிரி சொல்ற. இது எப்போ இருந்து? யாருடா அந்த பொண்ணு?” ஆவலுடன் கேட்டார்.

அவன் நடந்த அனைத்தையும் சொன்னவுடன், “வாவ்… இப்படி ஒரு பொண்ணா? சூப்பர் டா! அப்போ ஹீரோயிஸம் பண்ணி அடி வாங்கிட்டு வந்திருக்கன்னு சொல்லு” நக்கலடித்தார் அவர்.

“ஹலோ… உன் பையன் அங்கே நிஜமாவே ஹீரோ ஆகிட்டான்” என்றான் சட்டை காலரை உயர்த்தி.

“சரி சரி உன் ஹீரோயிஸம் பத்தி அப்புறம் பேசலாம்… அந்த பொண்ணு தைரியம் சான்ஸே இல்ல…அருமை. ஆனா உங்க அப்பாகிட்ட எப்படி பேசறதாம்…

அந்த பொண்ணு டாக்டர் இல்ல. உன் அப்பா ஃபேமிலி கல்ச்சரை பிரேக் பண்ண போற” என்று சிரித்தார்.

“பெரிய கல்ச்சர்… நாளைக்கு அவ அப்பா வந்து பேச சொல்லியிருக்கார். நான் முதல்ல போயிட்டு வரட்டுமா மா?”

“போயிட்டு வா ஆதி. ஒருவேளை எங்ககிட்டயும் பேசணும்னு சொன்னா சொல்லு… பேசலாம். நான் அப்பாகிட்ட சரியான நேரத்துல காதுல போட்டு வைக்கிறேன்” 

“சரிம்மா… நான் முதல்ல போயிட்டு வரேன்… என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்”

“சரி ஒழுங்கா பேசிட்டு வா! நான் சீக்கிரம் உங்கப்பாவை கன்வின்ஸ் பண்ணிடறேன்” என்றவர், “என் மருமக போட்டோ காட்டுடா” என்று ஆவலாக கேட்க… ஆதி காட்டினான்.

“அழகா இருக்கா… அவ குணம் போலவே! இப்போவாச்சும் கல்யாணம் பண்ணிக்க தோணுச்சே” என்றார் அவன் தலையைச் செல்லமாக தட்டி.

அங்கே சிரிப்பலைகள் நிறைந்திருந்தது!

சிறிது நேரத்துக்குப் பின் நிலாவை அழைத்தான் ஆதி.

“நிலா அம்மாகிட்ட சொல்லியாச்சு! க்ரீன் சிக்னல் கிடைச்சாச்சு! அப்பாவை மட்டும் தான் கன்வின்ஸ் பண்ணனும்” குரலிலேயே மகிழ்ச்சியைத் தேக்கிவைத்து சொன்னான்.

நிலாவிற்கு அளவு கடந்த சந்தோஷம். அதனால் ஏற்பட்ட படபடப்பு. “எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு, பயந்துட்டே இருந்தேன் ஆதி!” என சொல்லும்போது லேசாகத் தொண்டை கரகரத்தது.

அதைப் புரிந்துகொண்ட ஆதி, அவளைச் சீராக்க… “சீக்கிரம் அடுத்த ட்ரிப் ப்ளான் பண்ண வேண்டியதுதான்!” என்றான். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

பின் அவள், “ஆதி புருஷோத்தமன் சார் கால் பண்ணார். லெட்டர் கொடுத்தாச்சாம். மெடிக்கல் வேன் நாளைக்கு ஈவினிங் வந்திடும்னு சொன்னார்” என்றாள் நிலா.

“வாவ் சூப்பர் நிலா! ப்ரித்வி கூட கேட்டான்… வேன் என்ன ஆச்சுன்னு. நான் அவனுக்கு அப்டேட் பண்ணிடறேன்”

“ஹ்ம்ம்… மறக்காம நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு பேச வந்திடு ஆதி” என்னதான் அனைத்தும் சரியாக நடந்தாலும் ஒரு சின்ன பயம் இருந்துகொண்டே தான் இருந்தது அவளுக்கு.

“வராம எங்க போக போறேன்? எப்போ என் நிலா என்கிட்ட வரும்… வந்து என் வாழ்க்கைய இன்னும் பிரைட்டாக்கும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் காதலுடன். அவள் முகத்தில் லேசான நாணம்.

“என்ன சத்தத்த காணோம்? மறுபடியும் அந்த அருவிக்கு போகலாமா நிலா? கொஞ்சம் தான் எக்ஸ்ப்ளோர் பண்ணியிருக்கேன்… இன்னும் பண்ண வேண்டியது நிறைய இருக்கு” கிறக்கமாக மொபைலிலேயே கிசுகிசுத்தான்.

“ச்சி! ஷட்அப் ஆதி!” என்ற அவளின் வார்த்தைகளில் அழுத்தம் இல்லை ஆனால் சன்னமாகவே வெளிவந்தது.

சத்தமாகச் சிரித்த ஆதி, “டெர்ட்டி டார்லிங்! நான் சொன்னது அந்த அருவி அண்ட் சுத்தி இருக்க காட்டை எக்ஸ்ப்ளோர் பண்ணறத பத்தி… நீ வேற ஏதோ நினைச்ச போலயே?!” வேண்டுமென்றே அவளைச் சீண்டினான்.

அவளின் மௌனமே அவளின் மனநிலையின் மென்மையைக் காட்டியது அவனுக்கு. 

சிறிது நேரம் சீண்டலும், காதலுமாக இருவரும் பேசிவிட்டு போனை வைத்தனர்.

——–

கருணாவின் வீடு அங்கே தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அருகே சென்று அதைப்  பார்த்தான் ப்ரித்வி. முற்றிலும் தகர்க்கப்பட்டிருந்தது.

“என்ன சார் இது? ஏதோ வீடு இருக்குன்னு சொன்னீங்க? ஆனா வெறும் குப்பை தான் இருக்கு” கேட்டான் ஆனந்த்.

 “ஒரே நாள்ல இவ்ளோ நடந்திருக்கு. ஹ்ம்ம்… ஐ திங்க் இப்போ கூட இங்க யாராவது நம்மள வாட்ச் பண்ணலாம்… லெட்ஸ் ஸ்டார்ட் ஆனந்த்” என்ற ப்ரித்வி சுற்றி முற்றிப் பார்த்து, ஆனந்தை அழைத்துக்கொண்டு அந்த ஊரை நோக்கி நடந்தான்.

“சார்! இந்த பிளேஸ் ரொம்ப சூப்பரா இருக்கு. இங்க இப்படி ஒரு இடம் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்கல” 

“என் கெஸ்(guess) சரினா, இதுக்கு முன்னாடி இது மாதிரி யாரோ இங்க வந்திருக்காங்க. இந்த இடத்தை ஆக்கிரமிக்கணும்னு நினைச்சு, இங்க இருக்கிறவங்கள எலிமினேட் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருப்பாங்க.

இது வெளி மக்கள் கான்ட்டேக்ட் இல்லாத ரிமோட் வில்லேஜ் அண்ட் ரொம்ப குறைவான மலைவாசிகள் வேற. அது இன்னமும் அட்வான்டேஜ் ஆகிடுச்சு அவங்களுக்கு!”  

“எலிமினேட்? அப்படினா உயிர் சேதம் ஆகியிருக்கா சார்?” அதிர்ச்சியுடன் கேட்டான் ஆனந்த்.

“ஹ்ம்ம்… ஏதோ ட்ரக் கொடுத்திருக்கான்”

“ஓ மை காட்! என்னன்னு கண்டுபிடிச்சாச்சா சார்?”

“வைட்டிங் ஃபார்  ரிஸல்ட்ஸ் ஆனந்த்” இருவரும் பேசிக்கொண்டே ஊரை வந்தடைந்தனர். அவனைப் பார்த்த அங்கிருந்த ஒருவர், “வாங்கய்யா” என்று புன்முறுவலுடன் அழைத்தார்.

“இப்போ இங்க எதுவும் பிரச்சனை இல்லையே?” ப்ரித்வி கேட்க,

“ஒரு பிரச்சனையும் இல்லைய்யா. ஆதி தம்பி நிலா பொண்ணெல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆதி நாளைக்கு இல்லாட்டி நாளை மறுநாள் இங்க வருவான்” என்றான் ப்ரித்வி.

அவருடன் சென்ற ப்ரித்வி, தலைவரைப் பார்த்து பேசிவிட்டு… இருவரும் கருணாவின் வீட்டைக் கடந்து கீழே வந்துகொண்டிருந்தார்கள்.

“ஆனந்த்… உனக்கு செமினார் இருக்குன்னு சொன்னல, நீ கிளம்பு. எனக்கு இங்க கோவில்ல ஒரு வேலை இருக்கு. முடிச்சிட்டு நான் கிளம்பறேன்… உனக்கு டாக்ஸி அரேன்ஞ் பண்ணிடறேன்” என்றான் ப்ரித்வி.

“கண்டிப்பா சார்.  உங்க கிட்ட இருக்க அவனோட போன்ஸ் கொடுங்க. என்னால முடிஞ்ச ஆப்ஸ்(apps) பாஸ்வெர்ட் பிரேக் பண்ணி வைக்கிறேன்” என்றான் ஆனந்த்.

ஆனந்த்திடம் கொடுத்து அவனை அனுப்பி வைத்த ப்ரித்வி, உணவு சாப்பிட உணவகத்துக்குச் சென்றான். அவனை யாரோ பின்தொடர்ந்து வருவதுபோல தோன்றியது.

சாப்பிடும் போது அவனுக்கு ஒரு போன் கால் வந்தது. அவனுடன் வேலை செய்யும் SI அழைத்திருந்தார்.

“சொல்லுங்க…… வெரி நைஸ். கருணா ஆதார் அட்ரஸ் எங்க இருக்கு?…… வேற பில்ஸ் ஏதாச்சும் மேட்ச் ஆகுதா அந்த அட்ரஸ்ல?…… சரி நான் வந்துடறேன்…….” என்று போனை வைத்தான்.

சாப்பிட்டு விட்டு கோவிலை சிறிது நேரத்தில் அடைந்தான் ப்ரித்வி. அங்கே பூசாரி வேலைகளை முடித்துவிட்டு கிளம்பத்தயாரானார். ப்ரித்வியை பார்த்தவுடன் புன்முறுவலிட்டு வரவேற்றார்.

சிறிது நேரம் இருவரும் பேசிய பின்னர், “இங்க ஆஃபீஸ்ல யாரு இருக்கா?” ப்ரித்வி கேட்க, அங்கே அழைத்துச்சென்றார் பூசாரி.

பூசாரி விடைபெற்றுக்கொண்டு செல்ல, ப்ரித்வி அந்த ஆஃபீசரிடம்… “நான் சென்னை கிரைம் ப்ரான்ச் டிஎஸ்பி. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும்?” என்க, “சொல்லுங்க சார்” என்றார் ஆஃபீசர்.

“எனக்கு ஒரு லாஸ்ட் நாலு வாரம் CCTV footage (காட்சிகள்) வேணும். தர முடியுமா?”

“கண்டிப்பா சார்” என்றவர் அந்த வேலையில் இறங்கினார்.

அப்போது ஆதியிடம் இருந்து ப்ரித்விக்கு கால் வர, அதை வெளியே வந்து எடுத்தான் ப்ரித்வி. அப்போதும் யாரோ தன்னை நோட்டம் விடுவதுபோலவே இருந்தது.

“சொல்லுடா ஆதி…… வாவ்… அந்த பசங்க சாம்பில்ஸ் ரிசல்ட் வந்துடுச்சா…… என்னது கோகைன்னா (cocaine)?…… சரி எனக்கு டீடைல்டா சொல்லு… நீ பெசன்ட் நகர் வீட்ல தானே இருக்க?…… நான் சென்னைக்கு ஒரு மூணு மணிநேரத்துல வந்துடறேன். ” என போன் வைத்தான்.

CCTV காட்சிகள் வாங்கிக்கொண்டு ப்ரித்வி புறப்பட இரவு எட்டியிருந்தது. அவன் கோவிலிலிருந்து வெளியே வர முற்படும் போது, யாரோ சட்டென அங்கிருந்த மறைவில் மறைவதுபோல பார்த்த ப்ரித்வி, அவனை பிடிக்க பின்தொடர்ந்து சென்றான்.

அந்த இருட்டில் ப்ரித்வி தன்னை தொடர்வதைக் கவனிக்காத அந்த ஆசாமியை, இருட்டிலேயே பிடித்த ப்ரித்வி… “யார் நீ? இவ்ளோ நேரம் எதுக்கு என்னை ஃபாலோவ் பண்ணிட்டு வந்த? ” அவனின் சட்டையைப் பிடித்தான்.

“ஹலோ… யார் நீங்க? என்னை விடுங்க… நான் சும்மா இந்த பக்கம் வந்தேன்… என்ன போய்… நீங்க யாருன்னே எனக்கு தெரியாது” கொஞ்சம் குரலை உயர்த்தினான்.

“என்னை தெரியாதா… உன்ன… இப்படியெல்லாம் கேட்டா சொல்ல மாட்ட” என்று அவனின் கைகளை பின் கட்டி, தரதரவென காரின் அருகில் இழுத்துச்சென்ற ப்ரித்வி, டிக்கியில் இருந்த கயிற்றை வைத்து அவன் கைகளைக் கட்டினான்.

அவனை பின் சீட்டின் கீழே தள்ளியபின் கால்களையும் கட்டியவுடன், “என்னை எங்க கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க” என்று அவன் பின்னே இருந்து கத்த, அதைக் கண்டுகொள்ளாமல் வண்டியை எடுத்தான்.

‘இவனை இங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போகலாமா இல்ல சென்னைக்கு கூட்டிட்டு போய்டலாமா?” என யோசித்த ப்ரித்வி, பின், ‘நான் இவனை ஹோட்டல்லயே பார்த்த மாதிரி இருந்துச்சு. கண்டிப்பா இவன்கிட்ட ஏதோ விஷயம் இருக்கு.

போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போனா எல்லாம் எக்ஸ்பிலைன் பண்ணணும். ஹ்ம்ம்…சரி இப்போ இவனை கூட்டிட்டு சென்னை போய்டலாம். அங்க வேற கொஞ்ச வேல இருக்கு’ என்றும்  நினைத்துக்கொண்டான்.

சில மணிநேர பயணத்துக்குப் பின் சென்னை வந்தவுடன், முதல் வேலையாக ஐஜி’யை பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றான்.

“என்ன ப்ரித்வி… முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்ன…” ஐஜி அவனிடம் கேட்க, “எஸ் சார்… கொஞ்சம் இம்பார்ட்டண்ட். அதான் வீட்டுக்கே வந்துட்டேன்” என்ற ப்ரித்வி, நடந்ததையெல்லாம் அவரிடம் விவரமாகச் சொன்னான்.

“வாட்? இப்படி ஒரு ஊர் இருக்கா? புதுசா இருக்கே ப்ரித்வி” குழப்பத்துடன் கேட்டார்.

“இருக்கு சார். ட்ரைபல் வில்லேஜ்! ரொம்ப குறைவான மக்கள். அந்த ஊர்காரங்க எந்த ஒரு வெளியாட்களையும் உள்ள வரவிடாம வச்சிருக்காங்க. சில பேருக்கு மட்டும் தான் வெளிய… அதாவது அவங்க ஊரைவிட்டு நடக்கற விஷயம் எல்லாம் தெரியும். மத்தபடி அந்த ஊர்ல ஒரு ப்ரைமரி ஹெல்த் கேர் இல்ல… போலீஸ் ஸ்டேஷன் இல்ல… எதுவும் இல்ல ” என்றான் ப்ரித்வி.

“ஸ்ட்ரேஞ்! சோ… இப்ப யாரோ அந்த ஊர்ல ப்ராப்லம் பண்ண ட்ரை பண்றாங்கனு சொல்ற… ரைட்?”

“எஸ், ரீசன் – ஐம் அல்மோஸ்ட் நியர். பட், யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிச்சிடறேன் சார். நான் உங்களுக்கு ட்ராஃப்ட் டீடெயில்ஸ் (draft details) அனுப்பறேன்… நான் இதை ப்ரொசீட் பண்ண உங்க அப்ரூவல் வேணும்” என்றான்.

“சரி ட்ராஃப்ட் அனுப்பு. அப்ரூவ் பண்றேன். பட், அங்க என்ன நடந்துச்சுன்னு, அந்த ஊர்காரங்க போர்மல் (formal) வாக்குமூலம் கண்டிப்பா கொடுக்கணும். அதை வாங்கிட்டு, அதோட உன்னோட ஃபைண்ட்டிங்ஸ்-அ அதுல (findings) சீக்கிரம் அட்டாச் பண்ணிடு” என்றார்.

நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் ஆதியின் வீட்டிற்கு.

ஆதியின் வீட்டை அடைந்தவுடன், ஆதியை அழைத்தான் ப்ரித்வி. “ஹே ஆதி கொஞ்சம் வெளிய வரியா?” உடனே ஆதியும் வெளியே வந்தான்.

காரின் பின் சீட்டிலிருந்தவனை காட்டி, “இவன் என்னை அங்க ஃபாலோவ் பண்ணிட்டு இருந்தான். அதான் தூக்கி போட்டுட்டு வந்துட்டேன். இவனுக்கும் இந்த கேஸ்க்கும் கண்டிப்பா ஏதோ லிங்க் இருக்குனு தோணுது. நீ கூப்பிட்டன்னு வீட்டுக்கு போகாம இங்க வந்துட்டேன். இவனை இங்க அடச்சுவைக்க முடியுமா இன்னைக்கு நைட்?”

“கண்டிப்பா. ஸ்டோர் ரூம்ல இவனை கட்டிபோட்டுடலாம்” என்று அவனை உள்ளே இழுத்துச் சென்றனர்.

“இவனை இப்போ விசாரிக்க முடியாது ஆதி! நாளைக்கு போர்மல்(formal) ஆர்டர் வந்ததுக்கப்புறம் தான் முடியும்” என்றான் ப்ரித்வி, அவனை அங்கிருந்த ஒரு சேரில் கட்டிவிட்டு.

இருவரும் சோபாவில் அமர்ந்தவாறே பேச்சை ஆரம்பித்தனர்.

“ப்ரித்வி… அந்த கருணாக்கு அனஸ்தீஷியா டோஸேஜ் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு போல. அனஸ்தேடிஸ்ட்(anesthetist) வந்து பார்த்தார். இன்னும் 12 அவர்ஸ்’குள்ள கான்ஷியஸ்க்கு வந்திடுவான்னு சொல்லியிருக்கார்” என்றான் ஆதி.

“நிம்மதி… அவன் முழிச்சிட்டான்னா போதும். அப்புறம் ஆதி… அது என்ன அந்த கோகைன் மேட்டர்?” என்று ப்ரித்வி ஆரம்பித்தான்.

“சொல்றேன்… அந்த பசங்களுக்கு அவன் கோகைன் இஞ்செக்ட் பண்ணியிருக்கான். அதுவும் ஓவர்டோஸ்” என்றான் ஆதி.

“ஓ காட்! சின்ன பசங்களுக்கு! கோகைன் ஓவர்டோஸ் ஹார்ட் அட்டாக் வரைக்கும் எடுத்துட்டு போகுமா?” கேட்டான் ப்ரித்வி.

“நார்மல் க்வான்டிட்டி – பெரிய பசங்க ரெகுலரா எடுத்துட்டாங்கன்னா அதோட சைட் எஃபக்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தான் தெரியும். பட், இங்க என்ன பண்ணியிருக்கான்னா சின்ன பசங்களுக்கு ஓவர்டோஸ் கொடுத்துருக்கான்.

அதுவும் சில பசங்களுக்கு ரெண்டு வாட்டி தந்திருக்கான். சோ அது பிளட்ல கலக்க, அதோட சைடு எஃபக்ட்ஸ் சீக்கிரம் தெரியும். மே பி என்னோட கெஸ் என்னனா… ரெண்டு டைம் கொடுத்த பசங்களுக்கு தான் கார்டியாக் அர்ரெஸ்ட் ஆர் ஸ்ட்ரோக் வந்து இறந்திருக்கணும்”

ஆங்கில பீப் வார்த்தைகளை உபயோகித்த ப்ரித்வி, “எவ்ளோ ஈஸியா டார்கெட் பண்ணியிருக்கான் அந்த கருணா? பட் ஆதி, ஏன் ஃப்ரஸ்ட் டைம் டெஸ்ட் பண்ணப்ப ரிசல்ட்ஸ் வரல… கோகைன் இன்டேக் பத்தி?” 

“யூஷுவலா கோகைன் கன்டென்ட் (cocaine content) … பிளட் இல்ல யூரின்ல இருக்க அதோட ட்ரேஸ்(trace) சீக்கிரம் மறைஞ்சிடும். 12 டு 24 அவர்ஸ் தான் அந்த ட்ரேஸ் இருக்கும். அதுனால தான் பேசிக் டெஸ்டிங்ல வரலை.

பட், கோகைன் எடுத்துட்டதுக்கு அப்புறம் லிவர் அதை ப்ராஸஸ் பண்றப்ப அதிலிருந்து உருவாகிற இரசாயனம் Benzoylecgonine. அது யூரின் சாம்பிள்ல நாலு நாள் இருக்கும். அதை வச்சு கண்டுபிடிச்சிடலாம்.

தென், அந்த சாராயம் சாம்பில். அது இன்னமும் மோசம்! கோகைன் கூடவே ஒபியாய்ட் ட்ரக் ட்ரேஸ் (opioid drug trace) இருக்கு. கருணா ராமசாமி கிட்ட  கொடுத்து கலக்க சொல்லியிருக்கான். சோ இந்த மூணும் ஓவர்டோஸ்.

ஆல்கஹால், ஒபியாய்ட் ட்ரக் ரெண்டும் டிப்ரெஸன்ட்ஸ் (depressants) அதாவது மனச்சோர்வை ஏற்படுத்தும்.  கோகைன் ஸ்டிமுயுலன்ட் (stimulant) அது ஊக்கத்தை அதிகரிக்கும்… சோ, இந்த ரெண்டும் ஆப்போசிட்’டா வேலை பார்க்கும். இந்த மூணு ட்ரக்ஸ் சேர்ந்தா, அது ஒரு பயங்கரமான காம்பினேஷன்.  மோசட்லி சடன் டெத்… ஸ்ட்ரோக், ஹார்ட் ப்ராப்லம்ஸ்… இதுபோல வாய்ப்பு அதிகம்.

அதில்லாம அந்த ஊர்ல சாராயம் ஒரு வழக்கம் அண்ட் நிறைய பேருக்கு முன்னாடியே இந்த கலவையை கருணாவும் ராமசாமியும் கொடுத்திருப்பாங்க போல. ரெகுலர் இன்டேக் எப்போவேனா ரியாக்ட் பண்ணும்” என்றான் ஆதி.

“சோ அவங்க ப்ளான்… அந்த ஊர் திருவிழா முடியறதுக்குள்ள முடிஞ்சவரை கிளோஸ் பண்றது *****” சொல்லும்போதே கொதித்தது ப்ரித்விக்கு.

“ஹ்ம்ம்… அதில்லாம அந்த கருணா போன் பேசினப்ப சொன்னான்… ஏதோ வேற பிளான் வச்சிருந்ததா… அது என்னனு தெரியல” என்ற ஆதி, “சரி நீ அந்த ஊருக்கு போனயே ஏதாச்சும் கிடைச்சுதா?”

“என்ன கிடைச்சது… ஒன்னும் இல்ல ஆதி. அந்த கருணா வீடு சுத்தமா காலி… நம்ம அடுத்த  மூவ் என்னனு கெஸ் பண்ணி, அழிச்சிருக்காங்க. அப்புறம், அவன் வீடு வரைக்கும் எப்படி சிக்னல் கிடைச்சதுன்னு பார்த்தா… கமெர்ஷியல் ஆண்டெனா யூஸ் பண்ணியிருக்காங்க” என்றான் ப்ரித்வி.

“வாட்? கமெர்ஷியல் ஆண்டெனாவா?” என்றான் ஆதி புருவத்தை உயர்த்தி.

“ஹ்ம்ம்… பெரிய ஆளுங்க இன்வால்வ் ஆகிருக்காங்கனு நினைக்கறேன்” என்ற ப்ரித்வி, “அவன் போன்ல எல்லாத்துக்கும் பாஸ்வெர்ட் போட்டு வச்சிருக்கான். அந்த நம்பர்ல ஒரு மாசத்துக்கு மேல கால் எதுவுமே பண்ணல. அந்த கோவில் CCTV காட்சிகள் வாங்கிட்டு வந்திருக்கேன். ஏதாச்சும் க்ளூ கிடைக்குதான்னு பார்க்கலாம்” என்றான் ப்ரித்வி.

“உங்களால போன், ஆப் ஓபன் பண்ண முடியலையா?” ஆதி கேட்க, “ஆனந்த்னு ஒருத்தன் ஹெல்ப் பண்றான். பார்ப்போம்” என்றான் ப்ரித்வி.

“யாரவன்?”

“என்னோட ஃப்ரெண்ட் பிரதர் டா. அவன் அண்ணாக்கு இவன் போலீஸ்ல சேரணும்னு ஆசை. ஆனா இவன் ஒரு Tech Savvy (தொழில்நுட்ப மேதாவி). கிரிப்டோகிராபி, ஹேக்கிங்னு படிச்சிட்டு இருந்தான்.

எங்க ப்ரான்ச்ல கிரிப்டோலஜி டீம் சேர்க்கலாம்னு ஐஜி சொன்னார். சோ இவனை யூஸ் பண்ணிக்கலாம்னு சின்ன சின்ன வேலை கொடுத்துட்டு இருக்கேன்” என்றான் ப்ரித்வி.

“சரி சாப்பிட்டு பேசலாம்” என்று இருவரும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிக்கும்போது, ப்ரித்வியை முன்பு அழைத்த SI வந்திருந்தார், கருணா வீட்டின் முகவரி பற்றிப் பேசுவதற்கு.

ப்ரித்வி அவரிடம் பேசிவிட்டு உள்ளே வந்தான்.

அப்போது ஆதி அந்த CCTV காட்சிகள் பார்த்துக்கொண்டிருக்க, ஓர் இடத்தில் கருணா அந்த கோவிலைவிட்டு வெளியே வரும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக அந்நேரம் ப்ரித்வி உள்ளே வர, அந்த வீடியோவை பார்த்தான். பார்த்தவன் சற்று குழப்பத்தோடு ரீவைண்ட் செய்து, பின் அவ்விடம் வரும்போது நிறுத்த செய்து zoom செய்து பார்த்தான்.

அதில் கருணா போன் பேசிக்கொண்டே வெளியே வருவது ஓடியது. அந்த காட்சியை ஜூம்(zoom) செய்து பார்த்தபோது அவன் கையில் வேறு ஒரு போன் இருந்தது.

“அட! நான் அந்த ரெண்டு போன் மட்டும் தான் யூஸ் பண்ணி இருப்பான்னு ஒரு டிரெக்ஷன்லயே யோசிச்சிட்டு இருந்துட்டேன். ஷிட்” அவசரமாக நெட்ஒர்க் கம்பெனிக்கு கால் செய்தான்.

அதே நேரம், இங்கே ஆதிக்கும் அவனுடைய மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.

“வாட் கருணாக்கு கான்ஷியஸ் வந்திருச்சா?” என்று ஆதி பேசுவதைக் கேட்ட ப்ரித்வி சீக்கிரம் போனை பேசிவிட்டு ஆதியிடம் திரும்பினான்!

1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved