என்னோடு நீ உன்னோடு நான் – 19

என்னோடு நீ உன்னோடு நான் – 19

கருணாவிற்கு நினைவு திரும்பிவிட்டது என்ற செய்தி ஆதிக்கு வந்திருந்தது.

“கருணாக்கு கான்ஷியஸ் திரும்பிடுச்சா?” ப்ரித்வி ஆதியிடம் ஆர்வமாகக் கேட்டான்.

“இல்ல ப்ரித்வி, வந்து வந்து போகுது… பட், எப்போவேணா முழுசா திரும்ப வாய்ப்பு இருக்கு. கௌஷிக் அங்க தான் இருக்கான்”

ப்ரித்வி, “அவனுக்கு முழுசா முழிப்பு வர்றதுக்கு முன்னாடி, அந்த ரூம்ல ஒரு செட்டப் வைக்கணும் ஆதி, அங்க நடக்கிற எல்லாத்தையும் பதிவு பண்ற மாதிரி”

“அது பண்ணிடலாம். இங்க வீட்ல கௌஷிக் கேமரா, ட்ரைபாட்’லாம் இருக்கு. ஃபிக்ஸ் பண்ணிடலாம்” என்றான் ஆதி.

“சூப்பர். அங்க போய் அதெல்லாம் பொருத்திட்டு சீக்கிரம் இங்க வந்திடலாம். இவன் வேற இங்க இருக்கான். அதான்” என்று கட்டிப்போட்டிருந்தவனைப் பார்த்து அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தபின், கேமரா மற்றும் சிலவற்றை எடுத்துக்கொண்டு, ஆதியின் ஹாஸ்பிடலுக்கு புறப்பட்டனர்.

சில நிமிடங்களில் ஹாஸ்பிட்டலை அடைந்தவுடன், கருணா வைக்கப்பட்டிருந்த அறையில் அவனுக்கு எதிரே இருந்த ஜன்னலின் திரைக்கு மறைவாக கேமராவை பொருத்தினான் ப்ரித்வி.

பின் கௌஷிக்கிடம், “கம்ப்ளீட்டா மானிட்டர் பண்ண சொல்லுடா. நாளைக்கு முழிப்பு வந்த உடனே, இவன் கண்டிப்பா உண்மைய பேசிடுவான்” நம்பிக்கையுடன் ப்ரித்வி அவனின் வீட்டிற்கு சென்று சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஆதி வீட்டிற்குத் திரும்பினான்.

கருணாவின் வீட்டிலிருந்து எடுத்துவந்த கோப்புகளை ஆதியிடம் தந்த ப்ரித்வி, “ இந்த டாக்குமெண்ட்ஸ் கருணா வீட்ல இருந்துச்சு ஆதி. ஏதாச்சும் புரியுதானு பாரேன்?”

அதைச் சிறிது நேரம் பார்த்த ஆதி, “பெருசா ஒன்னும் புரியல… பட், நிறைய பயோகெமிக்கல் நேம்ஸ் யூஸ் பண்ணியிருக்கு. இதை டீகோட் பண்ணணுமா” 

“யாராச்சும் தெரியுமா? நாளைக்கே சொல்றமாதிரி?” கேட்டான் ப்ரித்வி.

“ஹ்ம்ம்… என் காலேஜ்ல வேலை பார்க்கற Biochemist இருக்கார். அவருகிட்ட கேட்கலாம்” என்ற ஆதி, “சரி… நாளைக்கு கருணா பேசிடுவான்னு சொன்னியே… எப்படி?”

“அவனை இங்க வந்து உன் ஹாஸ்பிடல்ல சேர்க்கறப்ப, அவனோட ஆதார் டீடெயில்ஸ் எடுக்க முடிவு பண்ணேன். பிளஸ், அவனோட வாலட்ல இருந்த கிரெடிட் கார்ட்ஸ் அதோட பில்ஸ். அதெல்லாம் பார்த்தப்ப, அவனோட ஒரு அட்ரஸ் கிடைச்சுது…” என்று சொல்லும்போது…

ஆனந்த் கால் செய்ததைப் பார்த்து “ஒரு நிமிஷம்” என்று அதை அட்டென்ட் செய்தான்.

“சொல்லு ஆனந்த்…… அப்படியா…… நான் சொல்ற அட்ரெஸ்க்கு வந்திடு…… சீக்கிரம்…… பை” போனில் ஆதியின் முகவரியை ஆனந்த்திடம் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் ஆனந்த்தும் வந்தடைய, மூவரும் அடுத்து என்ன என்பதைப் பற்றி ஆலோசித்தனர்.

அடுத்தநாள் விடியற்காலை நிலா ஆதிக்கு போன் செய்து மெடிக்கல் யூனிட் எங்கு அனுப்பவேண்டும் என்ற தகவல் குறித்துப் பேசினாள்.

நிலாவுடன் பேசியபின், ஆதி ப்ரித்வியிடம்… “கௌஷிக் இங்க வந்திடுவான்டா. நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன். கருணா வீட்டில இருந்த டாக்குமெண்ட்ஸ்-அ எடுத்திருக்கேன்.

நான் நேத்து சொன்னேனே அந்த ப்ரொஃபஸ்ஸர் கிட்ட இதை கொடுத்துட்டு, அவரை உன்னை கான்டேக்ட் பண்ண சொல்றேன்” என்று சொல்லிவிட்டு தன் மருத்துவமனைக்கு புறப்பட்டான் ஆதி.

சிறிது நேரத்தில், கௌஷிக்கும் வந்திருக்க… ப்ரித்விக்கு அவனுடைய ஐஜி- யிடம் இருந்து ஒப்புதல் வந்திருந்தது,

இந்த ஒப்புதல் வந்தபின் தான் கடலூரிலிருந்து பிடித்துவந்தவனை விசாரணை செய்ய நினைத்திருந்தான்.

“சொல்லு எதுக்கு என்ன பின்தொடர்ந்த?” ப்ரித்வி கேட்டதற்கு பிடிபட்டவன் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

“உனக்கு காட்ட வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. அத காட்டினா நீயே பேசுவ” என்ற ப்ரித்வி, கௌஷிக்கிடம் திரும்ப, கௌஷிக் தன் போனை கொடுத்தான். அதில் கருணாவின் போட்டோ இருந்தது.

“நீ சொல்லலைனாலும்… இதோ இவன் எங்க பிடியில தான் இருக்கான். அவனோட உண்மையான அட்ரஸ் தெரிஞ்சிடுச்சு. அவன் ஃபேமிலிய வச்சு கேட்டா …அவன் உண்மையை சொல்லிடுவான்.

நீ எதுவுமே பேசாம… எவ்ளோ வருஷம் கம்பி எண்ண போறன்னு பாரு” ப்ரித்வி சொல்லும்போது கட்டப்பட்டிருந்தவன் முகத்தில் சற்று சலனம் ஏற்பட்டது.

“உன் மேல ஒரே ஒரு பெரிய கேஸ் போதும். எப்படினு யோசிக்கறயா? உன்னையும் அந்த கருணா கூட சேர்ந்து தான் பிடிச்சேன். கருணா விஷயத்தை சொல்லிட்டான், ஆனா இவன் எதுவும் சொல்லலைனு சொல்லி உனக்கு தண்டனை என்னால வாங்கித்தர முடியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு ப்ரித்வி வெளியே செல்லும் போது…

“சார்” என அழைத்தான்.

ப்ரித்வி திரும்ப, “நான் சொல்றேன் சார். எனக்கு என்ன விஷயம்னெல்லாம் தெரியாது. ஆனா ஐயா தான் அந்த மலை நடுவுல இருந்த வீட்டை தகர்க்க சொன்னார். நான் செய்தேன். அப்புறம்…” என்று தயங்க “மேல சொல்லு யாரந்த ஐயா?” அவன் கழுத்தை ப்ரித்வி அழுத்தினான்.

“அங்க யாரு வர்றாங்களோ அவங்கள போட்டோ எடுத்து அனுப்ப சொன்னார்” என்றான்.

“யாரு அந்த ஐயா?” மறுபடியும் அவன் முகத்தின் அருகே சென்று ப்ரித்வி கேட்க, சேரில் கட்டப்பட்டிருந்தவன், தன் மண்டையால் ப்ரித்வி மண்டையை வலுவாகத் தாக்கினான்.

ப்ரித்வி சற்று நிலைகுலைந்து பின் தன்னிலைக்கு வர, அடித்தவனின் தலை தொங்கியது.

படம் பிடித்துக்கொண்டிருந்த கௌஷிக் பதறியடித்துக் கொண்டு அருகே வந்தான்.

“ப்ரித்வி ஆர் யூ ஒகே?”

“எனக்கு ஒன்னும் இல்ல கௌஷிக். இவனுக்கு என்ன ஆச்சுனு பாரேன்?” என்றான் தன் தலையில் கைவைத்து.

நாடி பிடித்துப் பார்த்த கௌஷிக், “பல்ஸ்லாம் நல்லா தான் இருக்கு. சாப்பிட்டானா ஏதாச்சும்?”

“அடடா… இந்த பிரச்சனையில நேத்திக்கு நைட்ல இருந்து எதுவுமே கொடுக்கல. ச்ச! எப்போ எந்திரிப்பான் இவன்?”

“பசியோட ஐயா ஸ்டண்ட் பண்ணி, மட்டை ஆகிட்டார். இப்போ பாரு…” கிட்சனுக்குள் சென்ற கௌஷிக் தண்ணீர் எடுத்து வந்தான்.

அதே நேரம் ப்ரித்விக்கு கால் வர, “இருடா பேசிட்டு வந்துடறேன்” மொபைல் சர்வீஸ் ஆபரேட்டர் போன் அழைப்பை வெளியே சென்று அட்டன்ட் செய்தான்.

“சொல்லுங்க… அந்த மலை ஏரியா ஆன்டென்னால இருந்து எந்த கால்ஸ்லாம் ரௌட்(route) ஆச்சுன்னு பார்க்க முடிஞ்சதா?…… சூப்பர்…… ரெண்டு நம்பர்ல இருந்து மட்டும் கருணாக்கு இன்கமிங் வந்திருக்கா?…… யாருனுனு தெரிஞ்சதா?…… வாட்?…… நிச்சயமா சொல்றீங்களா?…… கண்டிப்பா டீடைல்ஸ் அனுப்புங்க…… தேங்க்ஸ்” என்று போன் வைத்தான்.

‘அப்போ இவன் சொன்ன அந்த ஐயா அவன் தானா…!’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ஐஜி-யிடம் இருந்து கால் வந்தது.

“சார்… பெரிய க்ளூ கிடைச்சிருக்கு. வி ஆர் ஆல்மோசட் நியர்…… சார்…… என்ன சொல்றீங்க?… அப்படியெல்லாம் பாதியில கேஸ் விட முடியாது சார்… சார் ப்ளீஸ்…” ப்ரித்வி பேச பேச போன் கட் ஆனது.

கோபத்தின் மிகுதியில், “ச்ச” என்று அவன் அங்கிருந்த சுவரின் மேல் பலமாக தட்டினான்.

அதைப் பார்த்த கௌஷிக், “என்ன ஆச்சுடா?” ப்ரித்வியை கேட்க, “அவங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்க கௌஷிக். இந்த கேஸ்-அ இத்தோட நிறுத்த சொல்றாங்க”

“வாட்? அதெப்படி முடியும்? நீ ஸ்டாப் பண்ண போறயா ப்ரித்வி?”

“இதுக்கெல்லாம் நிறுத்த முடியாது! நான் அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன் கௌஷிக். வி வில் ப்ரொசீட்!” என்றான் கண்களில் கோபத்துடன்.

“தட்ஸ் பெட்டர் டா! அவன் முழிச்சுகிட்டான்” என்றான் கௌஷிக்.

“இப்போ அவன் நமக்கு தேவைப் படமாட்டான் கௌஷிக்! நமக்கு தான் யாருனு தெரிஞ்சிடுச்சே” என்றவன், அது யார் என்று கௌஷிகிடம் சொல்லிவிட்டு, ஆனந்தை அழைத்து அவனிடம் ஒரு வீடியோவை கொடுத்தான்.

பின், அதை கொஞ்சம் மாற்றிக் கொடுக்கவும் சொன்னான். ஆனந்த்தும் அந்த வேலையில் இறங்கினான்.

——

ஹாஸ்பிடல் சென்ற ஆதிக்கு நிலாவிடம் இருந்து மதியத்திற்கு மேல் அழைப்பு வந்தது.

“சொல்லு நிலா” சற்று இறுக்கத்துடன் போன் அட்டென்ட் செய்தான் ஆதி.

“ஆதி என்ன ஆச்சு? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு. ஆர் யூ ஒகே?”

குரலை வைத்தே தன்னை புரிந்துகொள்ளும் அளவிற்கு இருப்பவளிடம் இப்படி நடந்துகொள்வது தொண்டையை அடைத்தது. இருந்தும்… “ஐம் ஒகே. என்ன விஷயம்னு சொல்லு” என்றான் வெடுக்கென!

“ஓ… விஷயம் இருந்தா தான் பேசணுமா ஆதி?”

“அப்படிலாம் இல்ல கொஞ்சம் பிஸி அதான். சொல்லு”

அவன் குரலில் மாற்றத்தை உணர்ந்தாள். இருந்தும் வேலையின் பளு என எண்ணி, “மெடிக்கல் யூனிட் இன்னும் 30 மினிட்ஸ்’ல உன் ஹாஸ்பிடலுக்கு வந்திடும் ஆதி! சில ப்ரொசீஜர்ஸ் அண்ட் பேப்பர்ஸ் தருவாங்க. பார்த்துட்டு சைன் மட்டும் பண்ணிடு” என்றாள்.

“ஹ்ம்ம்” மட்டுமே ஆதியின் பதில்.

“நாளைக்கு அந்த ஊருக்கு போறோம்ல ஆதி?”

“நான் போறது சந்தேகம் தான். முக்கியமான கேஸ் இருக்கு. நான் யாரையாச்சும் அனுப்பி வக்கறேன்”

“ஓ. சரி” 

“வேற?”

ஆதியின் ஒற்றை பதில்கள், அதுவும் தன் பெயரைக் கூட சொல்லாதது நிலாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருந்தும், “ஈவினிங் வேலைல மறந்திடாத ஆதி… வந்திரு. அப்பா வெயிட் பண்ணுவார்”

“ஹ்ம்ம்… பை” போனை கட் செய்தான் ஆதி இறுகிய முகத்துடன்.

‘காலைல கூடநல்லா பேசினான்’ நிலாவுக்கு மனது சஞ்சலமடைந்ததது. ஏற்கனவே ஒருமுறை அவளிடம் இப்படி அவன் நடந்துகொண்டிருந்ததால், ‘ஏதோ வேலை பளு’ என எண்ணி… ‘அவன் எப்படியும் வந்துவிடுவான்’ என முழு நம்பிக்கையுடன் இருந்தாள்.

மாலை நேரம் மெல்ல எட்டிப்பார்க்க, நிலா ஆர்வம், ஆசை, பயம் பதட்டம், நாணம், புன்னகை என பல வித உணர்வுகளுடன் ஆதியின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் தவிப்பைப் பார்த்த அவளின் தங்கை நக்ஷத்ரா, “வருவார்… அதுக்காக வாசல்லயே இருக்கணுமா? உள்ள வா” என்று கிண்டல் செய்தாள். நிலா புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

“உன்ன இப்படி சந்தோஷமா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என்று அவள் அம்மா அவளைப் பார்த்து திருஷ்டி எடுத்தார்.

நேரம் செல்ல செல்ல, ‘ஏதோ சரியில்லை’ என்பதை உணர்ந்து தன் அறைக்குள் சென்றாள்.

வெளியே புன்னகைத்தாலும், அறை உள்ளே சென்றவுடன் கண்களில் கண்ணீர் கோடாக வெளியேறியது!

‘எவ்ளோ டைம் கால் பண்ணிட்டேன். ஏன் ஆதி எடுக்க மாட்டேங்கற?’ கடினப்பட்டு கண்ணீரை அடக்கினாள். 

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இரவும் எட்டிப்பார்த்தது. ஆதி வரவே இல்லை. வாயிலைப் பார்த்துக் காத்திருந்த நிலாவிற்கு ஏமாற்றமும், கண்ணீருமே மிஞ்சியது.

“இவனும் அந்த பிரதீப் மாதிரியே பண்ணிட்டானா? உன் வாழ்க்க மட்டும் ஏன் நிலா இப்படி ஆகுது…” நிலாவின் அம்மா நொந்துகொண்டார்.

அவள் அப்பாவின் பார்வையே ஆயிரம் கேள்வி கேட்பது போல இருந்தது அவளுக்கு. 

“நாளைக்கு ஒரு நாள் டைம் கொடுங்கப்பா. நான் போய் என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்” கண்களில் வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி, தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

‘என்ன ஏமாத்திட்டியா ஆதி? நான் ஏமாந்துட்டேனா?’ அந்த எண்ணமே அவளுக்கு வேதனையுடன் கண்ணீரைத் தந்தது.

போதாததற்கு அவள் அம்மா வேறு சில விஷயங்களை பற்றி பேசி நிலாவை மேலும் சங்கடப்படுத்திவிட்டார்.

———

வெளிறிய முகத்துடன், ஆதி இரவு வீடு திரும்பினான்.

கௌஷிக் அவனைப் பார்த்தவுடன், “என்னடா, பொண்ணு வீட்ல கலக்கிட்டயா? எக்ஸாம்ல பாஸ் தானே?”

“ஹ்ம்ம்” என்ற பதில் தான் கௌஷிக்குக்கு கொடுத்தான் ஆதி.

“சக்கரைப்பொங்கல் கறிக்குழம்பு… செம்ம காம்போ’ல ப்ரித்வி?! உலக வரலாற்றில் முதல் முறையாக!” நிலா மற்றும் ஆதியின் படிப்பையும், வேலையையும் வைத்து, ப்ரித்வியிடம் நக்கலாகச் சிரித்தபடி சொன்னான் கௌஷிக்.

“ஹாஹா! அந்த பொண்ணு கறிக்குழம்பு ஓகே! ஆனா, இவன் சக்கரை பொங்கலா டா!” என ஆதியை வம்பிழுத்தான் ப்ரித்வி.

ஆதியின் காதில் எதுவுமே செல்லவில்லை. “எனக்கு அடிபட்ட இடம் கொஞ்சம் வலிக்குது. நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குச் சென்றான்.

‘என்ன ஆச்சு இவனுக்கு?!’ என்பதுபோல கௌஷிக்கும் ப்ரித்வியும் பார்த்துக்கொண்டார்கள்.

அறைக்குள்ளே சென்ற ஆதி, படுக்கையில் விழுந்தான்.

‘முந்தைய தினம் எவ்வளவு சந்தோஷமாக அவளுடன் பேசினேன். ஆனால் இப்போது அவளுடைய அழைப்பைக்கூட எடுக்க முடியவில்லையே’ என தன்னையே நொந்துகொண்டான்.

அன்றைய இரவு ஆதிக்கும் நிலாவிற்கும் பெருத்த பாரத்தை ஏற்படுத்தியது.

அடுத்த நாள் காலை விடிந்தது.

விடாது வந்த போன் கால் கௌஷிக்கின் தூக்கத்தை கலைத்தது.

‘கருணா முழித்துவிட்டான்’ என்ற செய்தி வந்திருந்தது. உடனே கௌஷிக் ப்ரித்வியிடம் தகவலைச் சொன்னான்.

அதைக் கேட்டு ஆனந்தை எழுப்பிய ப்ரித்வி, “நம்ம கிளம்ப வேண்டிய டைம் வந்திடுச்சு. நான் கேட்டது முடிஞ்சதா ஆனந்த்?”

ஆனந்த்தும் தூக்கக் கலக்கத்திலேயே முடிந்தது என்பது போல் தலையசைத்தான்.

மூவரும் புறப்பட தயார் நிலையில் இருந்தனர்.

“கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே கௌஷிக்கிடம் “ஆதி வரல?” கேட்டான் ப்ரித்வி.

“அவன் தான் காலைலயே அந்த ஊருக்கு கிளம்பிட்டான்ல” என்றான் கௌஷிக்.

“ஓ மறந்துட்டேன்! சரி… நம்ம கிளம்பலாம்” என மூவரும் புறப்படும்போது அங்கே பைரவி வந்திருந்தாள்.

‘இவளா? இங்கே எதற்கு?’ என எண்ணினாலும், கௌஷிக் “வா பைரவி… ஆதி வீட்ல இல்லையே” என்றான்.

“ஓ எப்போ வருவான்?” அவள் கேட்க, “அவன் வர ஈவினிங் ஆகிடும்” என்றான் கௌஷிக்.

வீட்டை நோட்டம் விட்டபடி உள் நுழைந்த பைரவி, “நீ இன்னும் ஆதி கூட தான் சுத்திட்டு இருக்கியா? இப்போ இன்னும் ரெண்டு பேர் வேற போலயே” என அவள் சொன்ன விதமே கௌஷிக்குக்கும் ப்ரித்விக்கும் கடுப்பை கிளப்பியது.

ப்ரித்வி கோபத்தில் பதில் பேச வர, அவனைத் தடுத்தான் கௌஷிக்… ஆதியின் சொந்தம் என்பதால்.

சோபாவில் சட்டமாக உட்கார்ந்தவள், “அம்மா என்னை ட்ராப் பண்ணிட்டு கிளம்பிட்டாங்க. திரும்ப கூட்டிட்டு போக அவங்க வர்ற வரை இங்கயே இருக்கேன்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்ற கௌஷிக், “எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வேலைக்காரன் இங்க இருக்கான். உனக்கு ஏதாச்சும் வேணும்னா அவன்கிட்ட கேளு” சொல்லிவிட்டு மூவரும் புறப்பட்டனர்.

“இன்னும் இந்த பைரவி ஆதியை விடலையா? இவ வந்ததை ஆதிக்கு சொல்லிடு” ப்ரித்வி சொன்னதற்கு,

கௌஷிக், “ஏன்டா! பைரவினு பேரை சொன்னாலே அவன் கடுப்பாவான்! கத்துவான்! எப்படியும் அவன் வர்றதுக்குள்ள இவ கிளம்பிடுவா. ஃபிரீயா விடு” என விட்டுவிட்டான் கௌஷிக்.

———

அதே நேரம், தன் வீட்டிலிருந்து சீக்கிரம் புறப்பட்டாள் நிலா.

“இன்னைக்கு உனக்கு ஆஃபீஸ் லீவ்னு சொன்ன?” அவள் அம்மா கேட்டதற்கு, “புருஷோத்தமன் சார் கூப்பிட்டார். அதான்” என்றாள் நிலா.

“இதெல்லாம் விட்டுடுன்னு சொன்னா நீ கேட்க மாட்டல” எப்போதும் திட்டுவதுபோல அவள் அம்மா திட்ட ஆரம்பிக்க, “அம்மா ப்ளீஸ்! என்னால வீட்லயே இருக்க முடியாது. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிலா.

வீட்டிலிருந்து புறப்பட்ட அவளின் கார் ஆதியின் ஹாஸ்பிடலை வந்தடைந்தது.

‘காலைல பத்து மணிக்கெல்லாம் ஹாஸ்பிடல்ல இருப்பேன்’ என்று எப்போதோ ஆதி சொன்னதை வைத்து அங்கே வந்திருந்தாள்.

உள்ளே நுழைந்தவள், ரிசெப்ஷனிஸ்ட்டிடம்… “டாக்டரை மீட் பண்ணணும்!” என்று கேட்க, “டாக்டர் ஆதித்யாவா? இல்ல டாக்டர் கௌஷிக்கா?” என கேட்டாள் ரிசெப்ஷனிஸ்ட்.

“ஆதித்யா” என்றாள் நிலா.

“அவர் இன்னைக்கு ஆஃப் டியூட்டி (off duty). ஹாஸ்பிடல் வரமாட்டார் மேடம்” என்றாள் அந்த பெண்.

‘இன்னைக்கு கேஸ் இருக்குனு சொன்னானே’ என்று நினைத்த நிலா, “இங்க இல்லாட்டி வேற எங்கேயாவது பார்ப்பாரா?” 

“இல்ல மேடம்… இன்னைக்கு எந்த அப்பாய்ன்ட்மென்ட்’டும் வேண்டாம்னு சொல்லிட்டார். வேணும்னா நீங்க டாக்டர் தீரன்-அ பார்க்கறீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல பரவால்ல” என்று சொல்லிவிட்டு, குழப்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டாள் நிலா.

‘ஏதோ கேஸ் இருக்குன்னு தான சொன்னான்… எங்க இருப்பான்? வீட்டுக்கு போலாமா…’ என்று யோசித்த நிலா, சிறிது நேரத்தில் அவன் வீட்டை சென்றடைந்தாள்.

அங்கே அழைப்புமணியை அடிக்க, கதவைத் திறந்தாள் பைரவி.

“எஸ்” என்ற பைரவியை பார்த்து, ‘ஆதியின் வீடு தானே’ என்று எண்ணியபடி, “ஆதி?” என்றாள் நிலா கேள்வியாக.

அவள் கேள்வி புரிந்த பைரவி, “ஆதி வீடு தான்… நீங்க?” கேட்டாள் நிலாவிடம்.

“ஐம் நிலா” ‘யார் இந்த பெண்?’ என்ற யோசனையுடன் இருந்த நிலாவை, “ஓ ப்ளீஸ்! உள்ள வாங்க” என அழைத்தாள் பைரவி, ஒருவித சிரிப்புடன்.

அவளையே பார்த்த நிலா கொஞ்சம் தயக்கத்துடன் உள்ளே செல்ல, “ஐம் பைரவி. ப்ளீஸ்” என்று சோபாவை காட்டினாள்.

லேசான பதட்டம் இருந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் உட்கார்ந்த நிலா “ஆதியை பார்க்கணும்” என்று கூற, “ஓ ஆதி… ஒரு நிமிஷம்” என்று போன் எடுத்த பைரவி, தன் காதருகே எடுத்துச்சென்று, மறுபடியும் கீழிறக்கி…

“ஆதி நம்பர் கிடைக்கல. ஏதாச்சும் முக்கியமான விஷயம் சொல்லணுமா? சொல்லுங்க. நான் சொல்லிடறேன்” என்றாள்.

‘எங்களுக்கு இடையில் நீ யார்?!’ என்று எண்ணிய நிலா, ஏதோ சரி இல்லை என உணர்ந்து… “தட்ஸ் ஒகே! தேங்க் யூ. நான் கிளம்பறேன்” என்று எழ,

அவளைத் தடுத்த பைரவி, “அவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டா எப்படி? நான் உன்கிட்ட பேசணும்ல” சோபாவில் கால் மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்தாள்.

உட்கார்ந்தவள் நிலாவை கைகளால் உட்காரச்சொல்லி சைகை செய்து, “அப்புறம் சிக்ஸ் டேஸ் வித் மை ஆதி… எலிஜிபிள் பேச்சுலர்! எப்படி இருந்துச்சு அந்த ட்ரிப்” கேட்டாள் திமிராக.

நிலாவின் புருவங்கள் தானாய் முடிச்சிட, “வாட் டூ யூ மீன்?” என்றாள்.

“யூ நோ வாட் ஐ மீன்! இருந்தாலும் சொல்றேன். பார்க்க நல்லா, பாஷ்’ஷா ஒரு ஆம்பள கூடவே இருக்கிறப்ப என்ன தோணுமோ அதை பத்திதான் கேட்கறேன்” நிறுத்தி நிதானமாக ஏளனமாய் பதில் சொன்னாள் பைரவி.

நிலா அவள் பேசுவதைக் கேட்கச் சகிக்காமல் எழ, “இரு இரு. இன்னும் இருக்கு. நீ எதை பார்த்து மயங்கின? ஆள பார்த்தா… இல்ல வசதி பார்த்தா?” என்று தரம் இறங்கிக் கேட்க,

“இது தான் உன் லிமிட்! நான் அவனை தான் பார்க்க வந்தேன்… மை மிஸ்டேக், அவன் இல்லைன்னவுடனே கிளம்பி இருக்கணும். உனக்கு வேணும்னா நீ சொன்னதெல்லாம் பெரிசா இருக்கலாம். பட், எங்க புரிதல் நீ சொல்றதுக்கெல்லாம் மேல”

நிலாவை இடைமறித்த பைரவி… “ஓ தெய்வீக காதல்?! அதெப்படி வெறும் ஆறு நாள்ல? அப்போ உங்களுக்குள்ள காதல், புரிதல், சோ அண்ட் சோ தவிர வேற எதுவுமே நடக்கல… இல்ல? நான்சென்ஸ்!

கூடவே ஒரு பொண்ணு சுத்திட்டு இருக்கிறப்ப… எந்த ஆம்பளையும் தடுமாறுவான். ஆதி மட்டும் விதிவிலக்கா என்ன?” பைரவி வார்த்தைகளால் எல்லையை மீறிக்கொண்டிருந்தாள்.

கடுப்படைந்த நிலா, “ஐ டோன்ட் வாண்ட் டு வேஸ்ட் மை டைம் ஹியர்” எரிச்சலுடன் கிளம்ப எத்தனிக்க…

“ஆதி சொன்ன மாதிரி உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்திருந்தாலும் பரவால்ல. ஐ டோன்ட் கேர்! எல்லாத்தையும் என்னால சரிக்கட்டிட முடியும்” பைரவியின் ‘ஆதி சொன்ன மாதிரி’ என்ற பேச்சு நிலாவை அப்படியே நிறுத்தியது.

“என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஆதிகிட்ட கேட்டப்ப, உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சதுனு சொன்னானே?” அவளை நகர விடாமல் பைரவி இன்னமும் பேச… “வாட்?” என அதிர்ந்தாள் நிலா.

“ஹ்ம்ம்! இரு! நான் அப்போ ஆதிக்கு கால் பண்ணவேயில்ல! ஆனா இப்போ பண்றேன். அவன் எங்க இருக்கான்? உன்ன பத்தி என்ன சொல்றான்னு கேட்போமா…” நக்கலுடன் சொன்னவள் மொபைல் எடுக்க,

நிலா, ‘ஆதி என்ன சொல்லப்போகிறான்?!’ என்ற படபடப்புடன் நின்றாள்.

பைரவி ஆதிக்கு கால் செய்து ஸ்பீக்கர்’ரில் போட்டாள். அவன் கால் அட்டென்ட் செய்தான்.

சட்டெனத் திரும்பிய நிலாவின் மனது சில்லு சில்லாக அந்நொடியே நொறுங்கியது!

‘நேத்துல இருந்து கொஞ்ச நேரம் முன்னாடி வரை நான் போன் பண்ணப்பெல்லாம் எடுக்கவே இல்லையே ஆதி நீ’ கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தியபோது, “சொல்லு” என்றான் ஆதி அந்தப்பக்கம்.

பைரவி: “எங்க இருக்கா ஆதி”

ஆதி: “முக்கியமான வேலையா இருக்கேன். கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாத”

பைரவி: “இல்ல அத்தை தான் நீ எங்கனு கேட்டாங்க”

ஆதி: “அந்த கிராமத்துல தான் இருக்கேன். ஈவினிங் வந்துடறேன்னு சொல்லிடு”

நிலா மனது அரற்றியது! ‘நேத்து என்கிட்ட கேஸ் இருக்கு, அந்த கிராமத்துக்குப் போக முடியாதுன்னு சொன்னியே… அப்போ நான் உன்கூட வர்றது பிடிக்காம பொய் சொன்னியா ஆதி?’ கண்களில் சிறுதுளி கண்ணீர் எட்டிப்பார்க்கக் காத்திருந்தது.

எதிரில் நிற்பவள் முன் வேண்டாம் என்று கட்டுப்படுத்திக்கொண்டாள்.

“ஹ்ம்ம் அப்புறம்…” என இழுத்த பைரவி, “அந்த நிலாவுக்கும் உனக்கும் நிஜமாவே எல்லாம் முடிஞ்சதா?” நிலாவைப் பார்த்தபடி கேட்டாள்.

ஆதி, “ஆர் யு மேட்? எப்பவும் இதையே தான் கேட்டுட்டு இருப்பியா? எப்பவும் சொல்றது தான் இப்பவும். ஆமா எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சது. கடுப்படிக்காம போன் வை” என்று போனை வைத்தான் ஆதி.

நிலாவால் அவள் கேட்டதை நம்பவே முடியவில்லை. ஒரு பெரிய இடி இறங்கியது போல் இருந்தது.

“இது போதுமா இல்ல இன்னும் வேணுமா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எப்படி சரி பண்ணனும்னு எங்களுக்கு தெரியும். அப்புறம், என் அம்மா சொல்றத தான் ஆதி அப்பா கேட்பார். 

அவரே எங்க எங்கேஜ்மெண்ட்ட சீக்கிரம் நாளைக்கே முடிச்சிடலாம்னு சொல்லிட்டார். ஆதியை எப்படி கன்வின்ஸ் பண்ணணும்னு எனக்கு தெரியும்னு கூட சொன்னார்.

அவன் அப்பா பேச்சை மீறி… நீ சொன்ன அந்த ஆறு நாள் தெய்வீக காதல்காக உன்கிட்ட வருவானா என்ன? அந்த ஆறு நாள், ஹி ஜஸ்ட் யூஸ்ட் யூ! ஈஸியா தூக்கியும் எறிஞ்சிடுவான்.

பணத்துக்காக நீ போட்ட ட்ராமா’லாம் போதும். டோட்டல் வேஸ்ட்! சோ, டோன்ட் ஃபாலோவ் ஹிம் யூ b***” குரோதத்துடன் பைரவி முடிக்கும்போது, அவள் கன்னத்தில் கைதடம் பதியும் அளவிற்கு அறைந்திருந்தாள் நிலா.

பைரவிக்கு ஒரு நொடி தலையே சுற்றியது. அவள் முன் ஒற்றை விரல் நீட்டி எச்சரித்த நிலா, “ஹோல்டு யுவர் டங். ஹவ் டேர் யூ டாக் டு மீ லைக் தட்!?

என்னை பத்தி பேச உனக்கு யார் இந்த உரிமையை கொடுத்தா? ஒரு பெரிய குட்பை… உனக்கும் உன் ஆதிக்கும்!’ என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் நிலா.

காரை எடுத்தவள் மனம் தன்னிலையில் இல்லை. ‘என்ன நடந்தது… என்ன செய்ய போகிறோம்’ என்ற குழப்பத்துடன் காரை கடற்கரையில் நிறுத்தினாள்.

‘உன்ன நான் முழுசா நம்பினேனே ஆதி! நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதா? நீயா அதை சொல்ற? நான் உன்கிட்ட ஏமாந்துட்டேனா? அந்த கிராமத்துலயா? அவ சொன்னதுபோல இது காதலே இல்லையா? நான் தான் அவ்ளோ முட்டாளா இருந்திருக்கேனா?’

பைரவி சொன்ன, ‘ஹி ஜஸ்ட் யூஸ்ட் யூ’ ஈட்டியால் குத்துவதுபோல அவளைத் தாக்கிக் கொண்டே இருந்தது.

‘பிரதீப் எந்த அளவுக்கு வலியைத் தந்தானோ, அதை அளவு நீயும் எனக்கு கொடுத்துட்டியே ஆதி…’ கால் போன போக்கில் நடந்தாள்… என்ன செய்வதென்று தெரியாமல்.

———

கருணாவிற்கு நினைவு திரும்பி இருந்தது. ப்ரித்வி கருணாவிடம் பேச ஆரம்பித்தான்.

“என்னை கொஸ்டின் பண்ண உங்ககிட்ட வாரென்ட் இருக்கா?” திமிராகக் கேட்டான் கருணா.

“செய்றதெல்லாம் செய்துட்டு, இதை மட்டும் கரெக்ட்டா கேட்டுடுங்க!” அவனுக்கு ஐஜி அனுப்பி இருந்த அப்ரூவல் லெட்டர் காட்டினான் ப்ரித்வி.

“இது வாரென்ட்’டே இல்ல. என்கிட்ட இருந்து எடுத்த போன்லாம் எங்க? நான் என் வக்கீல்கிட்ட பேசணும்” என்றான் கருணா.

உடனே ஆனந்த், “பார்ரா… சார் அந்த போனை அவன்கிட்ட கொடுங்க… சில ஆப்ஸ்’க்கு பாஸ்வெர்ட் பிரேக் பண்ண முடியல. அப்புறம் அந்த ‘Clash of clans’ கேம்ல இருந்து ஒரே மெசேஜ் உனக்கு” முந்திக்கொண்டு சொன்ன ஆனந்தை பார்த்து முறைத்தான் ப்ரித்வி..

“சார். என்னை ஏன் முறைக்கறீங்க… இவர் பாட்டுக்கு எல்லாத்துக்கும் பாஸ்வெர்ட் வச்சுட்டார். நீங்க வேற டே அண்ட் நைட் என்னை வேலைபார்க்க வச்சுட்டீங்க… நிம்மதியா தூங்க கூட முடியல” சலித்துக்கொண்டு சொன்னான் ஆனந்த்.

அதை கண்டுகொள்ளாத ப்ரித்வி, “போன்லாம் இருக்கட்டும். நீயும் அந்த மினிஸ்டரும் எதுக்காக அந்த ஊர் மக்களை அழிக்கணும்னு நினைச்சீங்க?” கருணாவை நேராகக் கேட்டான்.

“மினிஸ்டரா? யார் அது? எனக்கு ஒன்னும் தெரியாது…” என்றான் சட்டென்று. லேசாக நடுக்கம் அவனிடத்தில்!

“ஓ தெரியாதா…! அப்போ இவனையாவது தெரியுமா?” என்று ஒரு வீடியோவை ப்ளே செய்தான் ப்ரித்வி.

அது ஆதியின் வீட்டில் கட்டப்பட்டிருந்தவனின் வீடியோ. அதைப் பார்த்த கருணா, கண்களில் சிறிய பதட்டத்துடன், “இவன் யாரு? எனக்கு யாருன்னே தெரியாது” என்றான்.

“தெரியாதா… அப்போ இந்த வீடியோ பாரு” என்று மற்றொன்றைக் காட்டினான். அதில் கோவிலில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“கோவிலுக்கு நிறைய பேர் வருவாங்க போவாங்க. அப்போ என்கிட்ட சும்மா பேசியிருப்பான். இதெல்லாம் ஒரு விஷயம்னு என்னை கேள்வி கேட்டுட்டு” என்று நக்கலாகச் சிரித்தான் கருணா.

“என்னை பார்த்தா உனக்கென்ன சிரிப்பா இருக்கா…” அவனின் காலரைப் பிடித்த ப்ரித்வி, “ஒரு டைம் பேசினா பரவால்ல. ஆனா நீ போன மூணு வாரத்துல இவன்கிட்ட மினிமம் ஒரு முப்பது வாட்டி பேசியிருக்க. ரொம்ப அறிவாளி மாதிரி பேசறோம்னு நினைச்சுக்காத” என்று அவனை விடுவித்தான்.

பின், “உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் தரேன். பார்க்கறயா?” என்ற ப்ரித்வி, ஆனந்த் எடிட் செய்த வீடியோவை காட்டினான்.

அதில் ப்ரித்வி பிடித்துவைத்திருந்தவன் பேசினான்.

“எம்எல்ஏ வணங்காமுடி அந்த மலை நடுவுல இருந்த வீட்டை தகர்க்கச் சொன்னார். நான் செஞ்சேன். அப்புறம்…” என்று அவன் இழுக்க, ப்ரித்வி அவனிடம் “மேல சொல்லு” என்க, “அப்புறம், அங்க யாரு வர்றாங்களோ அவங்கள போட்டோ எடுத்து அனுப்பச் சொன்னார்” என்றது அந்த வீடியோ.

ஆனந்த் அந்த வீடியோவில், ‘ஆனா ஐயா தான் அந்த மலை நடுவுல இருந்த வீட்டை தகர்க்க சொன்னார்’ என்று நிஜத்தில் அவன் கூறிய இடத்தில், ‘எம்எல்ஏ வணங்காமுடி அந்த மலை நடுவுல இருந்த வீட்டை தகர்க்க சொன்னாரு’ என எடிட் செய்திருந்தான்.

இதை முகம் வெளிறிப்போய் பார்த்த கருணா, “நான் சொல்லிடறேன். ஆ… ஆமா. அவர் தான்… வணங்காமுடி தான் அந்த ஊருல போய் அவங்க பழக்க வழக்கங்களை தெரிஞ்சுக்க சொன்னார்… அதான் போனேன்” என்றான்.

“அப்போ ஏன் அங்க இருக்கிறவங்களுக்கு ட்ரக் கொடுத்த?” ப்ரித்வி அடுத்த கேள்வியைக் கேட்க,

“அவர் தான் பண்ண சொன்னார். ஆனா எதுக்குன்னு தெரியல… பண்ணலைனா என்னை கொன்னுடுவேன்னு சொன்னார். அதுக்கு பயந்துதான் நான் இதெல்லாம் பண்ணேன்” என்றான் முழித்துக்கொண்டு.

அவன் சொல்வதில் உண்மையில்லை என்று ப்ரித்விக்கு நன்றாகவே புரிந்தது.

அறையை விட்டு வெளியே வந்தவனை கௌஷிக், “ஏன்டா சினிமாலயெல்லாம் போட்டு அடி அடினு அடிச்சு உண்மைய வரவைப்பாங்க. நீ என்னடான்னா அவன்கிட்ட அமைதியா பேசிட்டு இருக்க” என்று கேட்க,

“நான் எப்பவுமே எவிடென்ஸ் வச்சுதான் விசாரிப்பேன் டா. அதெல்லாம் காட்டியும் உண்மை வரலைன்னா, வேற டிரீட்மென்ட் இருக்கு. அதுவும் நான் பண்ண மாட்டேன். எனக்கு அதுல உடன்பாடில்லை” என்று சொன்ன ப்ரித்வி,

“இவன் இதுவரைக்கும் உண்மையே சொல்லல. இவன் அட்ரஸ் பார்த்துட்டு வரேன்னு சொல்லி போன SI போன் ரீச் ஆகல.

இது என்னமோ எம்எல்ஏ வோட முடியுற விஷயம் மாதிரி தெரியல கௌஷிக். அந்த ஆள் போய் எதுக்கு இவனை அங்க ரிசெர்ச் பண்ண சொல்லியிருப்பான்? இவன் வச்சிருந்தது எல்லாம் ரிசெர்ச் டாக்குமெண்ட்ஸ்னு ஆதி சொன்ன கெமிஸ்ட் ப்ரொபசர் சொன்னார்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு போன் வந்தது.

“சொல்லுங்க…… ஏதாவது யூஸ்ஃபுல் இன்பர்மேஷன் கிடைச்சுதா?…… வாட்? வாவ்…… ஒரு மாசம் பில் மட்டுமா?…… தட்ஸ் ஆவ்ஸம்……. கொஞ்சம் அந்த அக்கௌண்ட் நம்பர் அனுப்ப முடியுமா?……. தேங்க் யூ” என்று போனை வைத்த ப்ரித்வி…

“செம்ம டா கௌஷிக்! நான் நினைச்ச மாதிரி இது வெறும் எம்எல்ஏ-வோட நிற்கிற விஷயம் இல்ல! ரொம்ப… ரொம்ப பெரிய ஆட்கள் இன்வால்வ் ஆகியிருக்காங்க” என்றான் சந்தோஷத்தில்!

1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved