என்னோடு நீ உன்னோடு நான் – Final 2

என்னோடு நீ உன்னோடு நான் – 21 (Final 2)

 

‘இந்நேரம் அவங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கும்ல? நான் உன்கூட எப்படியெல்லாம் இருக்கப்போறேன்னு கனவு கண்டேன் ஆதி! எல்லாம் முடிஞ்சு போச்சு’ அழுது கொண்டே இருந்ததால் கண்கள் வீங்கி இருந்தது.

‘என்ன பிரச்சனையா இருந்தாலும், ஒரு வாட்டி நீ என்கூட பேசி இருக்கலாம் ஆதி. என்னை கம்ப்ளீட்டா அவாய்ட் பண்ணிட்டல்ல.

அப்போ பைரவி சொன்ன மாதிரி, நீ சும்மா அங்க இருந்த டைம்க்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டியா? என்னால அப்படி நினைச்சு கூட பார்க்கமுடியலயே ஆதி… எனக்காக தானே நீ அந்த ஊருக்கே வந்த! எனக்காக உன் உயிரைப் பணயம் வச்சியே!

நீ கண்டிப்பா அந்த பிரதீப் மாதிரி இல்ல. அது நல்லாவே எனக்கு தெரியும். ஆனா… எதுக்காக இப்படி பண்ண ஆதி?

உன் அப்பாவாலயா? இல்ல ஒருவேளை இதெல்லாம் அந்த பைரவி வேலையா இருக்குமோ?’ இப்போது தான் கொஞ்சம் தெளிவாக யோசித்தாள் நிலா.

‘நீயும் கௌஷிக்கும் ஒரே ஹாஸ்பிடல்ல தானே இருப்பீங்க… அந்த ஹாஸ்பிடல்க்கு கால் பண்ணி அவர்கிட்ட கேட்கலாமா’ என்று யோசித்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்.

பெங்களூருவில் இருக்கும் அவளின் தோழி நான்சி வீட்டிற்கு வந்திருந்தாள் நிலா.

டிவி பார்த்துக்கொண்டிருந்த நான்சியிடம், “உன் போன் தர முடியுமா நான்சி? நான் ஒரு கால் பண்ணிக்கறேன்” அவளிடம் வாங்கிக்கொண்டு மறுபடியும் அறைக்குள் சென்றாள்.

பின், ஆதியின் ஹாஸ்பிடலுக்கு அழைத்தாள். மறுபக்கம் கால் அட்டென்ட் ஆனவுடன் “டாக்டர் கௌஷிக் இருக்காரா?” நிலா கேட்க, “இல்ல மேடம். இன்னைக்கு வர மாட்டார். நாளைக்கு வருவார். அப்பாய்ன்ட்மென்ட் புக் பண்ணணுமா?” அந்தப்பக்கம் இருந்து கேள்வி வர, நிலா சட்டென கட் செய்தாள்.

‘ஐயோ! ஆதி இருக்கிறானான்னு கேட்டிருக்கலாமோ? அவன் அங்க இல்லைனா எங்கேஜ்மெண்ட்ல தான் கண்டிப்பா இருப்பான். ஒருவேளை அவன் ஹாஸ்பிடல்ல இருந்தா?’ யோசித்தவள் மறுபடியும் டயல் செய்தாள்.

“ஹலோ டாக்டர் ஆதி இருக்காரா?” கேட்டாள் நிலா.

“நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க? கொஞ்சம் நேரம் முன்னாடி டாக்டர் கௌஷிக் இருக்காரான்னு கேட்டது நீங்க தானே?” மறுமுனையில் கேட்க, நிலா மறுபடியும் கட் செய்தாள்.

கேட்ட கேள்விகளில் கடுப்பானவள் ‘ச்ச! நான் எதுக்கு இப்போ இப்படி பண்றேன். எங்க என்ன நடந்தா எனக்கென்ன?’ போனை நான்சியிடம் கொடுத்துவிட்டு அறையினுள் நுழைந்துகொண்டாள்.

ஆதி தனக்கு இல்லை என்ற எண்ணமே அவள் மனதை வருத்தியது.

அவன் எண்ணங்கள் சூழ, கண்ணீர் சிந்தியபடி, எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

காலை சூரிய ஒளிபட்டு, விழித்தெழுந்து, ஃபிரெஷ் ஆகி வெளியே வந்தவள்… நான்சி யாருடனோ பேசிக்கொண்டிருந்ததை  பார்க்க, வந்திருந்தவனும் திரும்பிப் பார்த்தான்.

அந்தநொடி அப்படியே உறைந்து நின்றாள் நிலா!

அங்கே ஆதியை பார்த்த நிலாவிற்கு ‘இது கனவா? இல்லை நனவா?’ என கண்களைத் தேய்த்து உணரும்முன் அவள் அருகே வந்து நின்றான் ஆதி.

ஆதி, அவளை எதுவும் பேச, செய்ய விடாமல் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு, நான்சியின்  அபார்ட்மெண்ட் கீழ் தளத்திலிருந்த கம்யூனிட்டி ஹாலுக்கு அழைத்துச்சென்றான்.

ஒன்றும் புரியாமல், என்ன பேச என்று கூட தெரியாமல்… நிலா அவனையே பார்க்க, அந்த ஹாலில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

“என்னப்பா பொண்ணை தூங்கி எந்திரிச்ச உடனே கூட்டிட்டு வந்துட்டியா? ஏதோ நீ என் நண்பனோட பையன்னால பிரைவேட்டா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு வந்திருக்கேன். சரி விட்னஸ்-அ வரச்சொல்லுங்க” என்றார் அந்த நபர்.

“என்னது… ரெஜிஸ்டர் மேரேஜா?” அதிர்ந்தாள் நிலா.

ஆம் எனச் சிரித்துக்கொண்டே தலையசைத்த ஆதி, “இன்னும் கொஞ்ச நேரத்துல யூ ஆர் மை அஃபீஷியல் பொஞ்சாதி!” கண்ணடித்து, அவளின் தோள் சுற்றி இறுக அணைத்துக்கொண்டான்.

ஏனோ நிலாவால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

“விடு ஆதி! ரெண்டு பேரோட அப்பா அம்மா இல்லாம… அதுவும் நீயா என்னை அவாய்ட் பண்ணுவ… அப்புறம் திடீர்ன்னு வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லுவ. என்னை என்னன்னு நினைச்ச…” இரண்டு நாட்கள் அவள் அடைந்த மன உளைச்சலின் வெளிப்பாடாக வார்த்தைகள் வெளி வந்தன..

அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக்கொண்டாள்.

“நிலா! நான் சொல்றத கொஞ்சம்…” ஆதி அவளைச் சமாதானம் செய்வதற்குள்,

“அம்மாடி எல்லாம் என்னால தான் மா!” என்ற குரல் கேட்டு மறுபடியும் அதிர்ந்து திரும்பினாள் நிலா.

“அப்பா! அம்மா!” சந்தோஷமாக ஓடிச் சென்று அவர்களை கட்டி அணைத்துக்கொண்டாள்.

“என்ன மன்னிச்சுடுமா!” என்ற நிலாவின் அப்பா, நடந்த அனைத்தையும் மகளுக்குச் சுருக்கமாக சொல்ல, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி நிலாவிற்கு.

அவர் மேலும் ஏதோ சொல்ல வர “அதெல்லாம் அப்புறம் பேசிக்கோங்க. முதல்ல இதை முடிங்க. எனக்கும் வேல இருக்கு” ரெஜிஸ்டரெர் சொன்னவுடன், மகளை ஆதியின் பக்கத்தில் நிற்க வைத்தார் அவள் அம்மா.

“நடந்த எல்லாத்துக்கும் ஸாரி நிலா. இப்போ கல்யாணம் பண்ணிப்பியா ப்ளீஸ்?!” கெஞ்சலாக ஆதி கேட்டான். அனைத்தும் ஒரு மாயை போல் இருந்தது அவளுக்கு.

அவனின் இந்த கேள்வியால், ‘ஆதியை தவறாக புரிந்துகொண்டோமே’ என்று கண்கள் கலங்கியது.

ஆதியின் அந்த பக்கம் அவனின் அப்பா அம்மா நின்றிருக்க, நிலா கண்களில் கண்ணீரைப் பார்த்தவுடன், ஆதியின் அம்மா நிலாவிடம் வந்து, “என் மருமக இனி எதுக்கும் அழுகக்கூடாது” என்று கண்களைத் துடைத்துவிட்டார்.

இருவரின் திருமணம் இனிதே நடந்தது!

இன்னமும் அந்த மாயை விலகாமல் நிலா நின்றிருக்க, “சரி சரி! நீங்க பேச வேண்டியது நிறைய இருக்கும். நாங்க எதுக்கு நந்தி மாதிரி!” ஆதியின் அப்பா சொன்னவுடன், அனைவரும் அங்கிருந்து செல்ல முற்படும் பொழுது…

ஆதி, “உங்களுக்கு அந்த கஷ்டமே வேண்டாம்! நாங்க போறோம். என்ன நிலா சரி தானே!” நிலா ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க, அவளை நான்சியின் வீட்டை நோக்கி இழுத்துச் சென்றான் ஆதி.

“டேய் ஆதி பார்த்து!” சிரித்துக்கொண்டே அவன் அம்மா சொன்னது அவன் காதில் விழுந்தால் தானே!

“என்ன நடக்குது இங்க? எனக்கு ஒன்னுமே புரியல!” நிலா கேட்டதைப் பொருட்படுத்தாமல், கதவை அடைத்தான் ஆதி.

“ஆதி!” அவள் குரல் மாறுபட்டிருந்ததைக் கவனிக்காமல், அதற்கு மேல் அவளைப் பேசவும் விடாமல், அவளை தன் கைகளுக்குள் கொண்டுவந்தவன், “சும்மா சும்மா பேசினா, பேசுற இந்த உதட்டை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”

ஒற்றை விரலால் அவள் இதழை அவன் வருட… சொற்களால் அவன் சொன்னதை, அவனிதழில் நிலா செயலால் செய்திருந்தாள்!

இந்த இரண்டு நாட்களின் போராட்டம் மூடிய கண்களுக்குள் நீரைத் தேக்கினாலும், இந்த தருணத்தை  முழுவதுமாக தனதாக்கிக்கொண்டாள்!

அவன் அவளுள் கரைந்து, அவள் ஆரம்பித்ததை, பின் தன்வசமாக்கிக்கொண்டான்!

நொடிகள் செல்ல செல்ல, சட்டென ஏதோ தோன்றியவனாய், அவளிடம் இருந்து விலகினான் ஆதி. அவள் புரியாமல் பார்க்க, ஹாலிற்கு சென்ற ஆதி, திரும்பி வரும்போது ஒரு கவருடன் வந்தான்.

நிலா என்னவென்று பார்க்க… “சீக்கிரம் இந்த டிரஸ் போட்டுட்டுவா நிலா! டைம் ஆச்சு… இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்று அவசரப்படுத்தினான் .

‘அதென்ன இவனே அனைத்தையும் முடிவெடுப்பது?!’ என்பதுபோல அவள் கைகளைக் கட்டி நிற்க, அவனும் கைகளைக் கட்டிக்கொண்டு, “இப்போ நீ ரெடி ஆகலன்னா, இந்த ரூம்ல இருந்து நாளைக்கு காலைல தான் நீ வெளிய போக முடியும்! காலை மதியம் நைட்னு ஒரே ஐட்டம் தான்! அப்புறம் எல்லாரும் உன்ன தான் கிண்டல் பண்ணுவாங்க!” 

அவன் சொன்னது தான் தாமதம், அதை எண்ணிப்பார்த்து தன்னையே குலுக்கிக்கொண்ட நிலா, ‘ஐயோ!’ என தலையில் அடித்துக்கொண்டு, அவன் கையிலிருந்த கவரை வாங்கி, உடை மாற்றி வந்தாள்.

அவள் வந்தவுடன், அவளை பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான் ஆதி.

நிலா ஒன்றும் புரியாமல் பார்க்க, தன் கைகளை இடது புறம் சொடுக்கிட்டு காட்டினான். அங்கே நின்றது அவனுடைய ஹார்லே டேவிட்சன்.

“ட்ரிப்பா?” விழிகள் விரித்து நிலா கேட்க, பதிலுக்கு புன்னகைத்து ஆமோதித்தான் ஆதி. அடுத்த சில நிமிடங்களில், வண்டி டாப் கியர்ரில் பறந்தது!

————–

அனைத்து செய்தி சேனல்களிலும் ஒரே செய்தி ஓடிக்கொண்டிருந்தது. ப்ரித்வி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தான்.

ப்ரித்வி: “நிலானு ஒரு பொண்ணு… அவங்களுக்கு வந்த கிராஸ் டாக் வச்சுட்டு, அவங்களும் அவங்களுடைய ஃப்ரெண்ட் ஆதியும் அந்த கிராமத்துக்கு போய்… அங்க இருக்கிறவங்கள காப்பாத்திட்டாங்க.

அந்த கிராமம் அதோட சுத்தி இருக்கிற இடத்துல நிறைய மருத்துவ குணங்கள் நிறைஞ்ச மூலிகைகள் இருக்கு. அந்த மலைல கொட்டற அருவி தண்ணியோட அந்த மூலிகைகளை சேர்த்தா… பல விதமான நோய்களுக்கு எளிமையான மருந்து கிடைச்சுடும்.

இப்போ அலோபதிக்கு செலவு பண்றத விட ரொம்பவே கம்மியான விலைல ஆயுர்வேத மருந்து தயாரிக்க முடியும். இதுபோல பாரம்பரியமா ஆயுர்வேதம் பயிற்சி செய்ற, பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் இன்னமும் நிறைய பேர் இருக்காங்க.

ஆனா, இப்போ… புதுசா சில MNCs இதுல நுழைய ஆரம்பிச்சிருக்காங்க. த்ரிலோக் ஆயுர்வேத் அதுல ஒன்னு.

அந்த கிராமத்தை அழிச்சா… அங்க ஈஸியா அவங்க வேலைய பண்ணலாம்ன்னு நினைச்சாங்க. இதுவரைக்கும் உயிர் சேதமும் ஆகியிருக்கு. நிறைய பேருக்கு டெட்லி ட்ரக்ஸ் (deadly drugs) கொடுத்திருக்காங்க!

ரிப்போர்ட்டர்: “ஸார். இப்போ அந்த ஊர்ல இருக்கிறவங்க உடம்புக்கு ஒன்னும் இல்லையே?”

பி: “சிலபேருக்கு ட்ரக் கன்டென்ட் இன்னமும் இருக்கு. அவங்களுக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கோம்” 

ரி: “ஸார் அந்த இன்னொரு மலைக்கு ஏதாச்சும் பிரச்சனை இருக்கா?” 

பி: “வரகுமலைக்கு அவங்க ஆளுங்க இன்னும் போகல. சோ, இப்போ எந்த பிரச்சனையும் இல்ல”

ரி: “த்ரிலோக் ஆயுர்வேத் மேல என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க?

பி: “அவங்க CEO, MD மேல கேஸ் ஃபைல் பண்ணியிருக்கோம். லெட்ஸ் சி”

ரி: “இதுனால அவங்க விற்கிற பொருட்களுக்கு ஏதாச்சும் தடை விதிச்சிருக்காங்களா?”

பி: “அவங்க OTC டிவிசனுக்கு மட்டும் ப்ரோஸஸ் ஸ்டாப் பண்ண சொல்லியிருக்கோம்”

ரி: “அந்த கிராமத்துக்கு ப்ரொடெக்ஷன் கொடுத்திருக்கீங்களா?”

பி: “அங்க சீக்கிரம் ஒரு போலீஸ் ஸ்டேஷன் ஃபார்ம் பண்ண ஆர்டர் பாஸ் பண்ணிருக்காங்க”

ரி: “அமைச்சர் வணங்காமுடி?”

பி: “அவர் மேலையும் கேஸ் ஃபைல் ஆகியிருக்கு. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். Hope Justice will be served! தேங்க்ஸ்!

புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டான் ப்ரித்வி!

————–

வண்டியை மிகவும் மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் ஆதி.

அவனை பின்னோடு கட்டி அணைத்துக்கொண்ட நிலா, அவன் தோளில் முகம் வைத்து, “இப்போவாவது சொல்லேன். என்ன நடந்தது? எப்படி இங்க வந்தன்னு?” என்று கேட்டாள்.

“சொன்னா என்ன தருவ நிலா?!” தன் கன்னத்தை அவள் முகத்தின் அருகே வைத்துக் கேட்டான்.

“கன்னத்துல நாலு அடி வேணா தரேன்” என்று சொன்னாலும், அவசர இதழொற்றலை பரிசளித்தாள்!

அவள் தலையோடு தலைமுட்டி, “நீ என் ஹாஸ்பிடல்க்கு போன் பண்ண இல்லையா… ரிசெப்ஷனிஸ்ட் உடனே எனக்கு கால் பண்ணாங்க.

‘இதுமாதிரி ஒரு நம்பர்ல இருந்து கால் வந்துச்சு. முதல்ல டாக்டர் கௌஷிக் இருக்காரான்னு கேட்டாங்க. இல்லன்னு சொன்ன உடனே எதுவும் பேசாம கட் பண்ணிட்டாங்க. திரும்பவும் அதே நம்பர்ல இருந்து கால் வந்துச்சு… அப்போ டாக்டர் ஆதி இருக்காரான்னு கேட்டாங்க. உங்கள எல்லாரும் ஆதித்யான்னு தானே கூப்பிடுவாங்க. ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது… அதான் கால் பண்ணேன் டாக்டர்’னு சொன்னாங்க” என்றவன் நிறுத்தி…

“அப்போவே நினைச்சேன்… அது என் நிலா லூசா தான் இருக்கும்னு” அவன் சொல்ல, “ஆமாம்! உன்ன லூசு பொண்ணுங்க தான லவ் பண்ண முடியும்” என்றாள் தலையில் குட்டி.

“வலிக்கிது லூசு” என்று சிரித்த ஆதி, “அப்புறம் அவங்ககிட்ட இருந்து நீ கால் பண்ண நம்பரை வாங்கினேன். டயல் பண்ணப்ப, பெங்களூருன்னு காட்டுச்சு. ட்ரு காலர்(true caller) நான்சின்னு காட்டுச்சு.

போன் பண்ணி நிலா இருக்காளான்னு கேட்டேன். உன் ஃப்ரெண்ட் நான்சி, ‘நிலாவா அது யாரு?’ அப்படினு கேட்காம, ‘நீங்க யாரு’னு என்னை கேட்டாங்க. சோ, நீ அவங்க கூட தான் இருக்கன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டேன். அவங்ககிட்ட எல்லாத்தையும் சொன்னேன். நான் கிளம்பி வர்றேன்னு சொன்னேன்.

உன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்ணும் சொன்னேன். அவ்ளோ தான். உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் இந்த கல்யாணம்!” என்றான் தன்னை கட்டியிருந்த அவளின் கையை பற்றி… அதில் முத்தமிட்டு.

“அப்புறம் ஏன் என்ன அவாய்ட் பண்ண ஆதி?” கேட்ட நிலாவின் குரலிலும் முகத்திலும் அவ்வளவு வருத்தம். நடந்த கதை அனைத்தையும் அவளிடம் சொன்ன ஆதி, “நீ வீட்டுக்கு வந்ததை வேலைக்காரன் சொன்னான். உன்கிட்ட பைரவி என்னலாம் பேசினான்னு சொன்னான்” என்றவனிடம்…

“நீ அவங்ககிட்ட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுதுன்னு சொன்ன” நிலா கேட்க, “அவகிட்ட இருந்து தப்பிக்க, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது. சோ நிலா தான் எனக்கு எல்லாம்ன்ற அர்த்தத்துல சொன்னேன்! அவ அதை அப்பிடியே ட்விஸ்ட் பண்ணிட்டா.

அன்னிக்கு எதுவுமே நடக்கல ஆனா இன்னிக்கி கண்டிப்பா நடக்கும்! நடந்தே தீரும்!” சபதம் எடுக்காத குறையாக, ஸ்டிரிக்ட்டாக சொன்ன ஆதியை பார்த்து, “அப்படியா! பார்க்கலாம்!” நமட்டு சிரிப்போடு சொன்னாள் நிலா.

“அப்படியா…!” என்று அவன் வண்டியை முறுக்கினான். அது வேகமாகப் பறந்தது.

சில நிமிடங்கள் கழித்து, “ஆதி எனக்கு டீ வேணும்” அவள் கேட்க, இருவரும் ஒரு கடையில் டீயை குடித்தனர்.

“எங்க போறோம் ஆதி!”

“அதுவும் சர்ப்ரைஸ் டார்லிங்” கண்ணடித்துச் சொன்னான்.

இருவரும் புறப்பட, “இப்போ போறப்ப, ஷல் ஐ டிரைவ்?”  கண்களை விரித்து கேட்டாள்.

“வொய் நாட்? பட் இது ஹெவியா இருக்குமே” என்று அவன் சொல்ல, “நான் புல்லட் ஓட்டியிருக்கேன். சோ பிரச்சனை இல்ல” என்று அவள் வண்டியை எடுக்க, அவன் பின்னே உட்கார்ந்து இருவரும் மறுபடியும் புறப்பட்டனர்.

*********

பூங்கொடி போல் ஒரு அழகான மலை மற்றும் அதனுடன் ஒட்டிய அருவிக்குக் கூட்டிச் சென்றான் ஆதி. அங்கே போடப்பட்டிருந்த டென்ட் மற்றும் கேம்ப் ஃபயர் அருகே இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர்.

அந்தி மாலை, இதமான காற்று, கொட்டும் அருவியின் சாரல், நெருப்பு மூட்டத்தின் கதகதப்பு, இயற்கையின் அழகு, பூச்சிகளின் ரீங்காரம், ஈர மண்ணின் வாசம்… பக்கத்தில் நெருக்கமாக தன் மனம் விரும்பியவள் என அவன் அந்த தருணத்தை ரசிக்க, அவன் கையை சுரண்டினாள் நிலா.

“எனக்கு ஒன்னு கேட்கணும்!” அவன் காதில் கிசுகிசுத்தாள்.

அவளை இறுக்கி தன்னோடு அணைத்துக்கொண்டு… “ஒன்னென்ன எவ்ளோ வேணா கேளு நிலா! என்னவேணா செய்வேன்! உனக்கில்லாததா…” இருபொருள் கொண்டு அவன் பேச, அவன் கையில் நன்றாகக் கிள்ளினாள்.

“ஆஹ்” என்று அலறிய ஆதியைக் கண்டுகொள்ளாமல், “உண்மையை சொல்லு ஆதி… அந்த நிலா இரவு அன்னைக்கு எதுவும் நடக்கலையா?”

அவள் கேட்ட விதத்தில், அவன் சத்தமாகச் சிரித்தான்.

அவள் சற்று தள்ளிச் சென்று அவனைப் பார்த்து முறைக்க… “ஹாஹா சொல்றேன் சொல்றேன்! அன்னைக்கு நான் அந்த குடில் உள்ள இருந்தப்ப, நீ வந்த.

யூ வேர் டேம் ஹாட் இன் தட் சாரீ! அண்ட் இந்த குட்டி இடுப்பை காட்டிட்டு!!” என்றவன் அவள் இடையைச் சுட்டிக் காட்டி, அவள் தன்னை கிள்ளியதற்குப் பழிதீர்த்துக்கொள்ள, இப்போது கத்துவது அவள் முறை ஆனது.

“வலிக்குதா?! ட்ரீட்மெண்ட் பண்ணவா நிலா?!” கைகளை அவள் அருகில் எடுத்துச்சென்று, மீண்டும் வம்பிழுத்தான்.

அவன் கையை தட்டிவிட்ட நிலா, “ஐயோ! ஒன்னும் வேணாம்… நீ மேல சொல்லு!” என்றாள். அவளின் ஒவ்வொரு செயலும் அழகாகத் தெரிந்தது அவனுக்கு!

“ஹ்ம்ம். உன்ன பார்த்தப்புறம் நான் அல்மோஸ்ட் ஃபிளாட்! நீ வந்து பக்கத்துல உட்கார்ந்தவுடனே, என்னை கண்ட்ரோல் பண்ணிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… இதோ இதுபோல” என்றவன் இருவரின் இடையிலிருந்த கொஞ்ச இடைவெளியைக் காட்டி சொன்னான்.

அவள் முறைக்க முயன்று முடியாமல் புன்னகைத்தாள்.  மறுபடியும் அவளை நெருங்கி உட்கார்ந்த பின், அவன் தொடர்ந்தான்…

“அப்போ நீ… தாகமா இருக்குன்னு சொல்லி, அவங்க கொடுத்த பானகத்தை குடிச்ச. அதை குடிச்சிட்டு நீ பண்ணதெல்லாம் நினைச்சா… இப்பவும் எனக்கு சிரிப்பு தான் வருது” என்று சிரித்தவனிடம், “என்ன பண்ணினேன்?” நிலா சந்தேகத்துடன் கேட்டாள்.

“ஒரு ஃபுல் அடிச்சமாதிரி, செம்ம போதை ஆகிட்ட! என்னை நீ அந்த கட்டில்ல தள்ளிவிட்டு… யூ ட்ரைட் டு அப்ரோச்!

அப்போ தான் அந்த ஜூஸ்ல ஏதாவது கலந்திருப்பாங்களோனு தோணுச்சு. நிலா நைட்! புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குனு அவங்க சொன்னதுனு எல்லாமே கன்னெக்ட் ஆச்சு. சோ, நீ செட்டில் ஆகி தூங்கறவரை வெயிட் பண்ணேன்.

கீழ தான் படுக்கலாம்னு நினைச்சேன். பட் ஒரே ஈரம். அதுனால, நீ தூங்கினதுக்கு அப்புறம், அதே கட்டில்ல நானும் தூங்கிட்டேன். காலைல எழுந்தப்ப, நீ என் கைமேல படுத்திருந்த… நான் உன்ன கட்டிட்டு படுத்திருந்தேன்.

அண்ட் ஒரே கட்டில்! சோ, அது வேற மாதிரி தெரிஞ்சுது. அதான் உனக்கு ஒரே சந்தேகம்!” அவன் நகைக்க, அவள் நம்பாமல் முறைத்துப் பார்த்தாள்.

“டார்லிங் ப்ராமிஸ்!” அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.

அவன் கையை தன் கையுடன் கோர்த்துக்கொண்டு “ஐ மிஸ்ட் யு சோ மச் ஆதி! இந்த ரெண்டு நாள் என்னோட வாழ்க்கையில ரொம்ப கடினமான நாட்கள்” என்றாள் நிலா.

“ஹ்ம்ம்… ரொம்ப மோசமான நாட்கள்னு சொல்லு! ஸாரி நிலா. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஆனா இனிமே உன்ன விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்” கோர்த்திருந்த அவள் கைகளில் இதழ் பதித்துச் சொன்னான் ஆதி.

“அப்போ உனக்கு மெடிக்கல் கான்ஃபெரென்ஸ்லாம் போணும்னா?”

“உன்னையும் கூட்டிட்டு போவேன்”

“எனக்கு ஏதாச்சும் பிஸ்னஸ் மீட் இருந்துச்சுன்னா?”

“நானும் வந்திடுவேன்… சிம்பிள்! முக்கிய வேலைக்கு நடுவுல அதை ஜாலி ட்ரிப் ஆஹ் மாத்த நமக்கு தெரியாதா என்ன?! முன் அனுபவம் வேற இருக்கே!” என்று சொல்லி, அவளிடம் இலவசமாக இரண்டு கொட்டுக்கள், சில அடிகள் கூடவே இன்னமும் சிலதை கேட்டு வாங்கிக்கொண்டான்.

பின், அவள் முகத்தை தன் புறம் திருப்பிய ஆதி, அவள் கன்னத்தில் விழுந்த முடிக்கீற்றை ஒதுக்கி… “ரொம்ப நேரம் பேசிட்டோம் நிலா. லெட் தி சைலென்ஸ் ஸ்பீக்!” கிறக்கத்துடன் சொன்னான்.

அவளோ ஹஸ்கி குரலில், “ஹ்ம்ம்… ஆமாம். டிரைவ் பண்ணி ரொம்ப களைப்பா  இருக்கு. தூங்கலாம் ஆதி”

“அப்படியா… எப்படி நீ தூங்கறன்னு பார்ப்போம் நிலா!” என்றது தான் அந்த இரவு அவன் பேசிய கடைசி முற்றுப் பெற்ற வாக்கியம்!

அந்த அழகான… ரம்மியமான இடத்தில் தங்களை மறந்து இருவரும் ஒன்றாகக் கலந்தனர்!

அந்த அழகான அந்தி சிவந்த வேளையில் அதற்கு போட்டியாக தன் மனையாளையும் சிவக்க வைக்கும் வேலையில் செவ்வனே இறங்கினான் ஆதி. இருவரும் ஈருடல் ஓருயிராய் இணையும் அந்த தருணத்தை காண வெட்கப்பட்டு சூரியனும் சென்று ஒளிந்து கொண்டது…

******** முற்றும் *******

3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved