Novels
Online Tamil Novels Ongoing and Completed – Forum
முடிவுற்ற நாவல்களை படிக்க ரெஜிஸ்டர்/லாகின் செய்யவும். என்னுள் நீ வந்தாய் மற்றும் தனிப்பெரும் துணையே தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நன்றி!
என்னுள் நீ வந்தாய் மற்றும் தனிப்பெரும் துணையே – இப்போது புத்தக வடிவில் 🙂 புத்தகங்களை பெற பதிப்பகத்தினரை தொடர்பு கொள்ளவும். பிரியா நிலையம் – 9444462284. நன்றி!
Forum breadcrumbs - You are here:எழுதுகோல்மற்றவை.!: மனம் கவர்ந்த திரைப்படங்கள்பொன்னியின் செல்வன் - I
You need to log in to create posts and topics.
பொன்னியின் செல்வன் - I
Preethi S Karthik@preethi-s-karthik
69 Posts
#1 · October 1, 2022, 6:26 am
Quote from Preethi S Karthik on October 1, 2022, 6:26 amபடம் மற்றும் கதாபாத்திரங்களுக்கான ரிவ்யு! 👇முதல் முயற்சி... Do let me know your feedback 🙂எது படத்தின் வெற்றி? வசூலா? இருக்கலாம்...! ஆனா உண்மையான வெற்றினா என்ன? வாங்க பார்க்கலாம்!பொன்னியின் செல்வன் ட்ரைலர் ரிலீஸ் ஆனபோது ஒரு ஸீன், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ஸீன்...ஆதித்த கரிகாலன் - தஞ்சையில் நான் காலெடுத்து வைக்க மாட்டேன்!குந்தவை - ஏன்? நந்தினியாலா?ஆதித்தன் - இல்லை உன்னால்...ஆதித்தனின் இந்த 'இல்லை உன்னால்' என்ற வாக்கியத்துக்கு பின் வரும் வசனங்களோ காரணமோ தெரியாமல் ... அப்பப்பா! 'இதுபோல ஒரு காட்சி புத்தகத்தில இல்லவே இல்ல. மணி இஷ்டத்துக்கு மாத்திட்டார்'னு ஒரே கொந்தளிப்பு!!!படத்தை பார்த்தப்புறம் இப்போ அந்த சலசலப்பை நினைச்சா சிரிப்பு தான் வருது... படம் பார்த்துட்டு கமென்ட் பண்ணி இருக்கலாம் !**அடுத்து... ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் மூணுபேரும் சேர்ந்து குதிரைல வரும் காட்சி 🤣🤣படத்தை பார்த்துட்டு இதுக்கும் பொங்கி இருக்கலாம்...**நம்ம ஆட்களே படத்தை பார்க்காம ட்ரைலர் டீஸர் மட்டும் பார்த்து என்னென்னமோ பேசுறாங்க. ஒருவேள நதில இருந்து காப்பாற்றப்பட்ட அருள்மொழியை படத்தில விஷ்வலா காட்டினா, கல்கியின் புத்தகமே படிக்காத நிறைய தெலுங்கு ஆடியன்ஸ்... ஹிந்தி ஆடியன்ஸ்... இது பாகுபலி படத்து காபி ஸீன்னு சொல்வாங்களே?! இதை மணி எப்படி ஹேண்டில் பண்ணப்போறார்னு யோசனை இருந்தது.ஆனா அந்த ஸீனை படத்தில் சொன்ன விதம் அருமை... இதுதான் அவரின் கதை சொல்லும் விதத்தின் தனித்துவம்!**கல்கி அவர்கள் கதை எழுதியபோதும் சரி, மணிரத்னம் அக்கதையை படமாக்கியதும் சரி... அவரவர் பாணியில் தந்திருக்காங்க.கதையில சில பகுதிகள் பெரிசா விளக்காததை படத்தில் விஷ்வலைஸ் பண்ணிருப்பாங்க... மக்களுக்கு கதை சுலபமா புரிய சில புதிய காட்சிகளை வச்சிருக்கலாம் (கதைகருவுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில்).கதைல உள்ளதுபோலவே வசனங்கள், காட்சி அமைப்புகள் இருந்திருந்தா அதை வெப் சீரிசாக தான் எடுக்க முடியும் (மணியே சொல்லியிருக்கார்). ரெண்டு பாகத்துல புரியுற மாதிரி படமா எடுக்கிறது கஷ்டம். ஒருவேள அதே மாதிரி வசங்கங்கள் இருந்திருந்தா நம்ம மக்கள் அதையும் நக்கல் அடிப்பாங்க... 'மணி புக்கை அப்படியே காபி அடிச்சிருக்கார்'னு!அதிகமா கதைக்கருவை மாற்றாம, இரண்டு பாகங்களுக்குள்ள எப்படி முழுக்கதையை சொல்ல முடியுமோ அப்படி சொல்லியிருக்கிறார் (பார்ட் 2 இதுபோலவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன்).**அடுத்து... நடிகைகள் தேர்வு சரியே இல்லை. முக்கிய கதாபாத்திரங்களுக்கு அனுஷ்கா நயன்தாரா எடுத்துருக்கலாம் என்ற வாக்குவாதங்கள்.அனுஷ்கா பக்கா மேட்ச் என்றாலும், தேவசேனா சாயல் வந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. நயன்தாரா நல்ல சாய்ஸ் தான் ஆனா, ஐஷ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா அந்தந்த கேரக்டர்ல நல்லாவே பொருந்தி இருந்தாங்க.**கடல் படம், காற்று வெளியடை மாதிரி தான் பொன்னியின் செல்வனும் இருக்க போகுது. மணிக்கு படம் எடுக்க மறந்தே போச்சு. இவர் விளையாட பொன்னியின் செல்வனா கிடைச்சுதுனு வசை பாடினாங்க. ஒருத்தரோட எல்லா படைப்புமே வெற்றி அடையறதில்லை. உதாரணத்துக்கு எழுத்தாளர்கள் எழுதற எல்லா கதையுமே ஹிட் அடிக்கறதில்லை. அதுபோல தான் சில சறுக்கல்கள் இருக்கும். உடனே படம் பார்க்காமலே ஒரு முடிவுக்கு வந்திட கூடாது.ஒரு எபிக் கதையை படமாக்க, இவ்வளவு செலவு பண்ணி, கொரோனா காலத்துல கூட படத்தை எடுக்க முடிவு பண்ணின மணிரத்னம், படம் எல்லாருக்கும் பிடிக்கணும்னு மனசுல வச்சுட்டு தான் எடுத்திருப்பார். ஒவ்வொரு வாசகரின், படம் பார்ப்பவரின், ரசிகனின் எண்ணங்களுக்கு ஏத்த மாதிரி மணிரத்னம் என்ன... ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ஜேம்ஸ் கேமரூன்னால (உதாரணத்துக்கு) கூட படம் எடுக்க முடியாது!**இறுதியாக.... நான் துபாய்ல படம் பார்த்தேன். எவ்ளோ பேர் குடும்பமா படம் பார்த்தாங்க... அவ்ளோ அழகா இருந்தது பார்க்கவே! படம் முடிஞ்சதும், பின்னாடி ஒரு டீனேஜ் பையனின் குரல்... 'அம்மா... I can't wait for part 2. Get me the book. I need to know what happened next' என்று!!!இது போதாதா... இத்தலைமுறையை புத்தகம் படிக்க தூண்டுவதற்கு! வரலாறை அறிய வைப்பதற்கு!படம் ரிலீஸ் என்ற செய்தி வந்த நாள்ல இருந்து, அமேசான் மற்றும் கிண்டில்ல தமிழ் புக்ஸ் பேஜ் எப்போ ஓபன் பண்ணி பார்த்தாலும் பொன்னியின் செல்வன் முதல் பக்கத்தில தான் இருக்கு! அவ்ளோ பேர் படிக்கறாங்க, வங்கறாங்க! கதை தெரிஞ்சுக்க விரும்பறாங்க!இன்னமும் பல மொழிகள்ல படத்தை பார்க்கும் மக்களுக்கு படம் பிடிக்கும் பட்சத்தில் - "PS1 - Based on Kalki's Ponniyin Selvan" அப்படிங்கிற போஸ்டரை பார்க்கும்போது... 'யார் இந்த கல்கி, யார் இந்த பொன்னியின் செல்வன், சோழ வம்சம்... பாண்டிய வம்சம்' அப்படினு தெரிஞ்சுக்க நிச்சயமா ஒரு ஆர்வத்தை தூண்டும்.கல்கியை, தமிழ் வரலாறை அவர்களும் படிக்க வாய்ப்பு உண்டு!இது இது தான் படத்தின் வெற்றி! அதை படமாக எடுக்க நினைத்த மணிரத்தினத்தின் வெற்றி! தமிழ் வரலாறை படிக்க தூண்டிய கல்கியின் வெற்றி!
படம் மற்றும் கதாபாத்திரங்களுக்கான ரிவ்யு! 👇
முதல் முயற்சி... Do let me know your feedback 🙂
எது படத்தின் வெற்றி? வசூலா? இருக்கலாம்...! ஆனா உண்மையான வெற்றினா என்ன? வாங்க பார்க்கலாம்!
பொன்னியின் செல்வன் ட்ரைலர் ரிலீஸ் ஆனபோது ஒரு ஸீன், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ஸீன்...
ஆதித்த கரிகாலன் - தஞ்சையில் நான் காலெடுத்து வைக்க மாட்டேன்!
குந்தவை - ஏன்? நந்தினியாலா?
ஆதித்தன் - இல்லை உன்னால்...
ஆதித்தனின் இந்த 'இல்லை உன்னால்' என்ற வாக்கியத்துக்கு பின் வரும் வசனங்களோ காரணமோ தெரியாமல் ... அப்பப்பா! 'இதுபோல ஒரு காட்சி புத்தகத்தில இல்லவே இல்ல. மணி இஷ்டத்துக்கு மாத்திட்டார்'னு ஒரே கொந்தளிப்பு!!!
படத்தை பார்த்தப்புறம் இப்போ அந்த சலசலப்பை நினைச்சா சிரிப்பு தான் வருது... படம் பார்த்துட்டு கமென்ட் பண்ணி இருக்கலாம் !
**
அடுத்து... ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் மூணுபேரும் சேர்ந்து குதிரைல வரும் காட்சி 🤣🤣
படத்தை பார்த்துட்டு இதுக்கும் பொங்கி இருக்கலாம்...
**
நம்ம ஆட்களே படத்தை பார்க்காம ட்ரைலர் டீஸர் மட்டும் பார்த்து என்னென்னமோ பேசுறாங்க. ஒருவேள நதில இருந்து காப்பாற்றப்பட்ட அருள்மொழியை படத்தில விஷ்வலா காட்டினா, கல்கியின் புத்தகமே படிக்காத நிறைய தெலுங்கு ஆடியன்ஸ்... ஹிந்தி ஆடியன்ஸ்... இது பாகுபலி படத்து காபி ஸீன்னு சொல்வாங்களே?! இதை மணி எப்படி ஹேண்டில் பண்ணப்போறார்னு யோசனை இருந்தது.
ஆனா அந்த ஸீனை படத்தில் சொன்ன விதம் அருமை... இதுதான் அவரின் கதை சொல்லும் விதத்தின் தனித்துவம்!
**
கல்கி அவர்கள் கதை எழுதியபோதும் சரி, மணிரத்னம் அக்கதையை படமாக்கியதும் சரி... அவரவர் பாணியில் தந்திருக்காங்க.
கதையில சில பகுதிகள் பெரிசா விளக்காததை படத்தில் விஷ்வலைஸ் பண்ணிருப்பாங்க... மக்களுக்கு கதை சுலபமா புரிய சில புதிய காட்சிகளை வச்சிருக்கலாம் (கதைகருவுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில்).
கதைல உள்ளதுபோலவே வசனங்கள், காட்சி அமைப்புகள் இருந்திருந்தா அதை வெப் சீரிசாக தான் எடுக்க முடியும் (மணியே சொல்லியிருக்கார்). ரெண்டு பாகத்துல புரியுற மாதிரி படமா எடுக்கிறது கஷ்டம். ஒருவேள அதே மாதிரி வசங்கங்கள் இருந்திருந்தா நம்ம மக்கள் அதையும் நக்கல் அடிப்பாங்க... 'மணி புக்கை அப்படியே காபி அடிச்சிருக்கார்'னு!
அதிகமா கதைக்கருவை மாற்றாம, இரண்டு பாகங்களுக்குள்ள எப்படி முழுக்கதையை சொல்ல முடியுமோ அப்படி சொல்லியிருக்கிறார் (பார்ட் 2 இதுபோலவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன்).
**
அடுத்து... நடிகைகள் தேர்வு சரியே இல்லை. முக்கிய கதாபாத்திரங்களுக்கு அனுஷ்கா நயன்தாரா எடுத்துருக்கலாம் என்ற வாக்குவாதங்கள்.
அனுஷ்கா பக்கா மேட்ச் என்றாலும், தேவசேனா சாயல் வந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. நயன்தாரா நல்ல சாய்ஸ் தான் ஆனா, ஐஷ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா அந்தந்த கேரக்டர்ல நல்லாவே பொருந்தி இருந்தாங்க.
**
கடல் படம், காற்று வெளியடை மாதிரி தான் பொன்னியின் செல்வனும் இருக்க போகுது. மணிக்கு படம் எடுக்க மறந்தே போச்சு. இவர் விளையாட பொன்னியின் செல்வனா கிடைச்சுதுனு வசை பாடினாங்க. ஒருத்தரோட எல்லா படைப்புமே வெற்றி அடையறதில்லை. உதாரணத்துக்கு எழுத்தாளர்கள் எழுதற எல்லா கதையுமே ஹிட் அடிக்கறதில்லை. அதுபோல தான் சில சறுக்கல்கள் இருக்கும். உடனே படம் பார்க்காமலே ஒரு முடிவுக்கு வந்திட கூடாது.
ஒரு எபிக் கதையை படமாக்க, இவ்வளவு செலவு பண்ணி, கொரோனா காலத்துல கூட படத்தை எடுக்க முடிவு பண்ணின மணிரத்னம், படம் எல்லாருக்கும் பிடிக்கணும்னு மனசுல வச்சுட்டு தான் எடுத்திருப்பார். ஒவ்வொரு வாசகரின், படம் பார்ப்பவரின், ரசிகனின் எண்ணங்களுக்கு ஏத்த மாதிரி மணிரத்னம் என்ன... ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ஜேம்ஸ் கேமரூன்னால (உதாரணத்துக்கு) கூட படம் எடுக்க முடியாது!
**
இறுதியாக.... நான் துபாய்ல படம் பார்த்தேன். எவ்ளோ பேர் குடும்பமா படம் பார்த்தாங்க... அவ்ளோ அழகா இருந்தது பார்க்கவே! படம் முடிஞ்சதும், பின்னாடி ஒரு டீனேஜ் பையனின் குரல்... 'அம்மா... I can't wait for part 2. Get me the book. I need to know what happened next' என்று!!!
இது போதாதா... இத்தலைமுறையை புத்தகம் படிக்க தூண்டுவதற்கு! வரலாறை அறிய வைப்பதற்கு!
படம் ரிலீஸ் என்ற செய்தி வந்த நாள்ல இருந்து, அமேசான் மற்றும் கிண்டில்ல தமிழ் புக்ஸ் பேஜ் எப்போ ஓபன் பண்ணி பார்த்தாலும் பொன்னியின் செல்வன் முதல் பக்கத்தில தான் இருக்கு! அவ்ளோ பேர் படிக்கறாங்க, வங்கறாங்க! கதை தெரிஞ்சுக்க விரும்பறாங்க!
இன்னமும் பல மொழிகள்ல படத்தை பார்க்கும் மக்களுக்கு படம் பிடிக்கும் பட்சத்தில் - "PS1 - Based on Kalki's Ponniyin Selvan" அப்படிங்கிற போஸ்டரை பார்க்கும்போது... 'யார் இந்த கல்கி, யார் இந்த பொன்னியின் செல்வன், சோழ வம்சம்... பாண்டிய வம்சம்' அப்படினு தெரிஞ்சுக்க நிச்சயமா ஒரு ஆர்வத்தை தூண்டும்.
கல்கியை, தமிழ் வரலாறை அவர்களும் படிக்க வாய்ப்பு உண்டு!
இது இது தான் படத்தின் வெற்றி! அதை படமாக எடுக்க நினைத்த மணிரத்தினத்தின் வெற்றி! தமிழ் வரலாறை படிக்க தூண்டிய கல்கியின் வெற்றி!
Click for thumbs up.0Click for heart.0
Easy Tamil Online typing – https://tamil.indiatyping.com/
Online Tamil Novels Ongoing and Completed – Forum
17
9
Error happened.