PS-1

Kalki – Master storyteller! Maniratnam – Master of visual storytelling!

கதையை பற்றி சொல்லணும்னா நிச்சயம் தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய படம்!

திரைக்கதை… அருமையோ அருமை! மணிரத்னம் பழைய பன்னீர்செல்வமா, பொன்னியின் செல்வன்ல திரும்பி வந்திருக்காரு. ஒவ்வொரு ஸீன்னுக்கும், கண்ண அந்தபக்கம் இந்தபக்கம் திருப்ப முடியல. சோ கிரிப்பிங் ஸ்கிரீன்பிளே! புத்தகம் படிக்காதவங்க கூட சரியாக கதையை புரிந்துகொள்ளும் அளவுக்கு கதை நகர்த்திய விதம் அருமை. தேவையான இடத்துல மட்டும் உபயோகப்படுத்தின கிராபிக்ஸ். ஆனா வந்த இடமெல்லாம் ஹாலிவுட் ரேஞ் தான்! காட்சி அமைப்பு பிரமாண்டம்!
 
அடுத்து இசை… பாட்டெல்லாம் முதலில் கேட்டபோது அவ்வளவு மனசுக்கு பிடிபடல. ஆனா அதுதான் ரஹ்மான்! கேட்க கேட்க நிறுத்தாம கேட்க தூண்டும். இங்கயும் பாட்டு அப்படி தான்… ஆனா பேக்ரவுண்ட் மியூசிக் அதிர வச்சுடார்! ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியமாக நந்தினி வரும் இடங்கள் பின்னிட்டார்! என்ன அலைகடல் பாடல் பாதி தான் வந்தது. சொல் சொல் வராதது கொஞ்சம் வருத்தம். பாடல் வரிகள் எழுதிய பாடலாசிரியர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்!
 
கதாபாத்திரங்கள்… வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை கார்த்தியை தவிர யாராலும் இவ்வளவு குறும்பாக எடுத்துச்செல்ல முடியாதுங்கிற அளவிற்கு இயல்பான, கலக்கலான நடிப்பு. முக்கியமாக பெண்களிடம் அவர் செய்யும் அலப்பறைகள்… சிரிக்க வைத்தது! படம் முழுக்க வந்து மனதை கவர்கிறார். விக்ரம் ஆதித்த கரிகாலனாக வாழ்ந்திருக்கிறார்னு தான் சொல்லணும். காதல், ஏமாற்றம், வெறுப்பு, கோபம்னு ஒவ்வொரு உணர்ச்சியை வெளிக்காட்டியவிதம் அருமை.
 
அழகே உருவான நந்தினியாக ஐஸ்வர்யா ராய் கச்சிதமான கேஸ்டிங்! அமைதியாக அழுத்தமாக செய்யும் சூழ்ச்சிகள்னு கண்ணாலேயே அசத்திட்டார். வானதியாக நடித்த ஷோபிதா, பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு பெரிய ஸ்கோப் இல்லைனாலும் கதைக்கு பொருந்தி இருக்காங்க. அடுத்த பாகத்துல பூங்குழலிக்கு ஸ்கோப் இருக்குமான்னு பார்க்கணும்!
 
ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் வரும் இடங்கள் எல்லாம் சிரிப்பு அலை. சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, ரஹ்மான், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, லால், அஷ்வின், கிஷோர், ரியாஸ்னு அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக நடித்திருந்தார்கள்.
 
என்னடா முக்கியமான இருவர் வரவே இல்லையேனு யோசிக்கறீங்களா! இவங்க ரெண்டுபேரும் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! கேஸ்டிங் விபரங்கள் வந்தபோது யோசனையாகவே இருந்த நடிகர்கள். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி மற்றும் குந்தவையாக த்ரிஷா! ஆனா ஒரு இளவரசனுக்கு பொருத்தமான அந்த உடல் மொழி, உடற்கட்டு, கம்பீரம், கூர்மையான பார்வை, ஷார்ப் டயலாக் டெலிவரினு பக்காவா மனதை வெல்கிறார் ஜெயம் ரவி. த்ரிஷா நடிப்புக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்புனு சொல்லணும். மணிரத்னம் சரியா செலக்ட் பண்ணிருக்கார்னு சொல்ல வைக்கற மாதிரி சூப்பரான ஆக்ட்டிங்!
 
நந்தினி குந்தவை காட்சிகள், வந்தியத்தேவன் அருள்மொழி வர்மன் சண்டைக் காட்சி, போர்க்களம், அலைகடல் சண்டை காட்சி, ஆதித்தன் நந்தினியை பற்றி சொல்லும் காட்சி, தேவராளன் ஆட்டம்  எல்லாம் அற்புதமாக இருந்தது. அந்த கால இயல்பான காட்சியமைப்பு… அரசர்கள் இப்படி கூட இருந்திருக்க வாய்ப்புகள் இருக்குனு தோண வைத்த காஸ்ட்யூம்ஸ். சிக்ஸ் எயிட் பேக்ஸ்னு இல்லாம, ஆனா திடமான வலிமையான அரசர்கள், வீரர்கள்னு காட்டின விதம் நல்லா இருந்தது.
 
ரவிவர்மனின் ஒளிப்பதிவு அபாரம். தோட்டா தாரணியின் செட்ல படம் அந்த காலகட்டத்துக்கே கூட்டிட்டு போன உணர்வு.

 
நெகட்டிவ்னு பெருசா எதுவும் இல்ல. ஆனா சில நடிகர்கள் டயலாக் டெலிவரி மட்டும் லேசாக இடறிய ஃபீல்.
 
அருமையான தரமான படைப்பு! நிச்சயம் தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய படம்!

2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved