maranthupo en maname1-16

மறந்துபோ என் மனமே(1) – 16

R: “நந்தினி நாம வெளிய போலாமா?”

N: “ஓ நேத்து வராததுக்கு என்னை சமாதானப்படுத்த, இல்லையா?”

R: “அப்படி கூட வெச்சுக்கலாம்” என்று சிறிதாய் சிரிக்க

N: “ஐம் ஆல்ரைட். இதுக்காக வெளிய போனும்னு இல்ல. உங்களுக்கு இன்னைக்கு மட்டும் தான் ரெஸ்ட் எடுக்க முடியும்.”

“ஹ்ம்ம் எனக்கு எந்த ப்ரோப்லேமும் இல்ல. உன்ன எங்கயும் கூட்டிட்டு போகவும் இல்ல இதுவரைக்கும். போ ரெடி ஆகிட்டு வா. நானும் ரெடி ஆயிட்டு வரேன்” என்று சொல்லிட்டு அவன் எழுந்து செல்ல, திரும்பி “கம் அன் சீக்கரம்” என்றான்.

“பிரேக் ஃபாஸ்ட்?” என்றாள் “மொதல்ல நீ ரெடி ஆகிட்டு வா” என்று சொல்லிவிட்டு அவன் மேலே சென்றான்.

இன்னைக்கு ஏன் மூடே சரியில்ல. அப்பாவோட திதி. மனசுக்கு கஷ்டமா இருக்கு பட் இவரு கூப்பிடறாரு. சொல்லிடலாமா அவர்கிட்ட. ஆனா பிரஸ்ட் டைம் கூப்பிடறாரு போக வேணாம்னு சொன்னா தப்பா எடுத்துப்பாரோனு நினைத்துக்கொண்டிருக்கும் போது

“நீ ரெடி ஆக போலகயா?” என்று கேட்டுக்கொண்டே அவன் படி இறங்கினான்.

அவனை பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்தது. ரொம்ப கேஷுவலாக டிரஸ் செய்திருந்தான். வைட் ஃபுல் ஆர்ம் ஷர்ட் அதை மடித்துவிட்டு விட்டுட்டு, மெலிதாக எட்டிப்பார்த்த தாடி (stubble), முகத்தில் ஒரு பிரகாசத்துடன் அவளை நோக்கி வந்தான்.

“டெய்லியும் பாக்கறதுதான் ஆனா இன்னைக்கு வேற மாதிரி தெரியறாரே” என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போது

“இன்னும் ரெடியாகலயா? என்ன நீ. எந்திரி… சீக்கரம்” என்றான். அவளும் எழுந்தாள்.

இதுவரை இவ்வளவு புத்துணர்ச்சியுடன் அவளிடம் பேசியதில்லை. அதனால்தான் என்னவோ அவளும் பதில் பேசாமல் சென்றாள். திரும்ப வந்து “எங்க போறோம் அதுக்கு ஏத்த மாறி டிரஸ் பண்ணுவேன்” என்று கேட்க அதுமாதிரியெல்லாம் எதுவும் இல்ல. உனக்கு எது ஒகேவோ அது போட்டுட்டு வா” என்றான்.

அடுத்த பதினைத்து நிமிடம். நந்தினி வந்தாள். சிம்பிள்ளாக ஜேக்கின் பிளஸ் பிங்க் குர்தி கூடவே ஒரு ஓவர்கோட். ஓபன் ஹேர் மற்றும் ஒரு சின்ன போட்டு. அவன் ஒரு க்ஷணம் அவளிடம் வீழ்ந்து எழுந்தான்.

வெளியே வந்தவள் நுகர்ந்தபடி “ஏதாச்சும் செஞ்சீங்களா?” என்று கேட்க “ஹ்ம்ம் வா லைட்டா சாப்பிடலாம்” என்று பிரட் சான்ட்விச்சை இரு தட்டில் பரிமாறினான்.

“நான் பண்ணிருப்பேன்ல. எதுக்கு இவளோ அவசரம்” என்று சொல்லிக்கொண்டு அவள் அவனை பார்த்தவாறு அமர்ந்தாள். “நீ வரதுக்குள்ள செய்யணும்” என்று தான் என்றான் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு.

அவளும் சிரித்தவாறே சாப்பிட, இருவரும் சாப்பிட்டனர். அவள் தட்டைப்போட செல்ல அங்கே கட்டிங் போர்டில் மெல்லிய ரத்த சுவடு. பதறிய அவள் அவனை கேட்க திரும்ப, அவனும் பிளேட் போட வந்தான்.

“என்ன ஆச்சு? கைய வெட்டிடீங்களா?” என்று பதறியவாறே கேட்க “ஒன்னும் இல்லையே, ஏன்?” என்றான் அவன்.

“பொய் சொல்லாதீங்க. இங்க பாருங்க” என்று அவள் அந்த போர்டை காட்ட “ஆஹ் இதை கிளீன் பண்ண மறந்துட்டேனா. ஒன்னும் இல்லை அவசரமா வெங்காயம் கட் பண்ணும்போது லைட்டா கட் ஆயிடுச்சு. பெருசா ஒன்னும் இல்ல” என்றான்.

பதற்றத்துடன் அவள் “ச்ச பாத்து செய்ய மாட்டிங்களா?” என்று முணுகியவாறே “இருங்க பிரஸ்ட் எயிட் பாக்ஸ் (first aid box) எடுத்துட்டு வரேன்” என்று அவனை கடந்து செய்து செல்ல முயற்சித்தாள்.

“ஹே நில்லு. ஒன்னும் இல்லனு சொல்றேன்ல. சின்ன கட் தான் பதறாத” என்றவன் அவள் செல்லும்போது வேண்டாம் என்பது போல் அவள் கையை பிடித்து தடுக்கும் போது “அவ்ச்” என்று கையை உதறினான்.

அவன் கைகளில் இருந்து சில சொட்டு ரத்தம் சொட்ட “ஐயோ ரத்தம்” என்று இன்னும் பதறிக்கொண்டு கிச்சன் உள்ளே சென்றாள்.

“எதுக்கு நீங்க செஞ்சீங்க. நான் பிரிப்பர் பண்ணிருப்பேன்ல” என்று சொல்லிக்கொண்டு மஞ்சள் டப்பா எடுத்தாள்.

அவன் சிரித்துக்கொண்டு “இது சின்ன வெட்டு தான். ஏன் இவளோ பதற்ற? எனக்கு போன ரெண்டு வருஷமா இதைவிட பெருசாலாம் ஆகியிருக்கு” என்று சொல்ல

“இருக்கட்டும் அதுக்காக அப்படியே விட்டுடறதா, கைய குடுங்க” என்று அவள் அவன் கைபிடித்து இழுத்து கிச்சன் சிங்க்கில் பைப் தண்ணியில் கழுவினாள். பின் மஞ்சள் தூள் வைத்து நன்றாக அழுத்த, அவன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

“பாருங்க சின்னதுனு சொன்னீங்க. இன்னும் நிக்கல” என்று சொல்ல அவன் பதிலுக்கு “ஹ்ம்ம்” என்றான் புன்முறுவலுடன் அவளையே பார்த்துக்கொண்டு.

அவளோ அவன் கையை பார்த்தவாறு “இப்போ தான் கொஞ்சமா ஸ்டாப் ஆகுது” என்று சொல்ல மறுபடியும் “ஹ்ம்ம்” என்றான் அவளை பார்த்துக்கொண்டு.

“அவள் என் கண்களில் நிறைத்திருந்தாள். அவள் முடி லேசாக ஃபேன் காற்றில் பறக்க அது என் முகத்தை மெல்ல வருடியது. அதைவிட அவள் என்மேல் கரிசனம் காட்டியது என்கண்களில் மட்டும் இல்லை என் இதயத்திலும் வந்துவிட்டாளோ” என்று அவன் மனதில் தோன்ற

“ச்ச வலிக்குதா ரொம்ப?” என்று கேட்டுக்கொண்டு அவனை பார்க்க, அவன் “ஹ்ம்ம் ஹ்ம்ம்” இல்லை என்பதுபோல் சிறிய புன்னகையுடன் அவளை பார்த்து சொல்ல அப்போது தான் உணர்ந்தாள் இருவரின் நெருக்கத்தை. அவனின் இதயத்துடிப்பு கேட்கும் தூரத்தில்.

இவ்வளவு அருகாமையில் அவனை பார்த்ததில்லை. அவனின் பார்வையின் தீவிரம், அவனின் ஸ்வாசக்காற்று அவள் மேல் வருடுவதில் சிலிர்த்து போய் சற்று விலகி,

“இருங்க நான் போய் first aid box எடுத்துட்டு வரேன் நீங்க இத பிடிங்க” என்று சென்றாள்.

அவன் அவள் போவதையே பார்த்தவாறு இருந்தான். இனம் புரியாத ஒரு பதட்டத்துடன் பாக்ஸ் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து காயத்திற்கு மருந்திட்டாள்.

“தேங்க் யு” என்றான் அவன் இதயத்திலிருந்து அவள் கண்களை பார்த்து. அவள் “இன்னும் வலிக்குதா?” என்று கேட்க “இதெல்லாம் ஒரு காயமா. ஐ கேன் மேனேஜ். சரி நம்ம கிளம்பலாம்” என்றான்.

“என்ன இந்த காயத்தோடவேவா. நோ வே.. இன்னோரு நாள் போக்கலாம்” என்று சொல்ல “ஹே எஸ்கேப் ஆக ட்ரை பண்ணாத. இப்போ நம்ம கிளம்பறோம்” என்று சொல்லிக்கொண்டு கார் சாவியை எடுத்தான்.

“கம் ஆன் கம் ஆன்” என்று சொல்லிக்கொண்டு அவளை தள்ளிக்கொண்டே சென்றான். அவளுக்கு அவன் இப்படி இயல்பாக இருப்பது மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

அவன் கார் எடுத்துக்கொண்டு முன்னே வர, அவள் ஏறிக்கொண்டாள். இருவரும் புறப்பட்டனர்!!!

  •  
  •  
Subscribe
Notify of
2 Comments
Inline Feedbacks
View all comments
Pappu Divya
1 month ago

Super ram mokka herolernthu herova promoto aagura episodenu neneiakiren..enomey romance parakkum next next episodesula🤩🤩🤩

error: Content is protected !! ©All Rights Reserved
2
0
Would love your thoughts, please comment.x
()
x