maranthupo en maname11415
மறந்துபோ என் மனமே(1) – 14&15
“ஸாரி என்னால இன்னிக்கி வர முடில” என்று தலை குனிந்துகொண்டு சொல்ல “பரவால்ல முக்கியமான வேல இருந்ததுனால தான நீங்க வரல” உம்மென்று பதில் சொன்னாள். அவன் மனம் நெருடியது.
“யு ஹவ் டான்செட் க்ரேஸ்ஃபுலி (You have danced gracefully) எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ நல்லா டான்ஸ் ஆடுனனு உள்ள வரப்போ ஜேசன் சொன்னான்” “ஆல்மோசட் எல்லாரும் பாத்துட்டாங்க. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்” என்று சொன்னவுடன் நந்தினிக்கு ஒரு சின்ன சந்தோஷம். வரலன்னு கொஞ்சமாவது ஃபீல் செய்றாரே என்று.
“உன் டான்ஸ் வீடியோ தான் இப்போ ஹாட்ட ஸர்க்லேட் ஆகுது இங்க குரூப்ஸ்ல”
“எனக்கு நிறைய பேர் மெசேஜ் பண்ணாங்க. நீ நல்ல ஆடினன்னு. இம் வெரி ஹாப்பி” என்று சொல்ல அவள் முகத்தில் சந்தோஷம் எட்டி பார்த்தது.
“தேங்க் யு” என்றாள் சிறிய புன்னகையுடன். அவன் படி ஏறி செல்ல, திரும்பி “அன்ட் நந்தினி” என்று கூப்பிட்டான். அவளால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை.
“என்ன பிரஸ்ட் டைம் நந்தினினு பேரு சொல்லி கூப்பிட்டுருக்காரு” என்று நினைத்தவளின் சந்தாஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு முறை பெயர் சொன்னதற்கே அவ்வளவு சந்தோஷம்.
“நந்தினி” என்றான் அழுத்தமாக. அவள் தன்னிலைக்கு திரும்பினாள். “அன்ன் சொல்லுங்க”
“அந்த ஜேசன்ட்ட கொஞ்சம் அலர்ட்டா இருந்துக்கோ. ஹி இஸ் ஃபிலிர்ட் (He is a flirt)” என்றான் புன்முறுவலுடன்.
அவள் புன்னைகைத்து கொண்டே தலையாட்டினாள். “அவள் கொஞ்சம் சந்தோஷமா இருக்க இப்போ Sue பத்தி சொல்லி அவளை மூட் அவுட் பண்ண வேணாம்” என்று நினைத்துக்கொண்டு மேலே ஏறினான்.
—–
“தேங்க்ஸ், க்ரிஷ்” என்று ராம் க்ரிஷ்கு மெசேஜ் செய்ய நீ செஞ்சது சுத்தமா சரியில்ல. அன்ஃபேர் (unfair)” என்று பதில் வந்தது.
R: “தெரியும் டா. நான் வரலனு எவ்வளவோ சொன்னேன்.அவ ரொம்ப பிடிவாதமா, இதை கடைசி டைம்னு சொன்ன”
K: “என்னவேனா இருக்கட்டும். இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. Nandy’க்கு உண்மை தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டா??
R: “புரிது. ரொம்ப கஷ்டமா இருக்கும்னு”
K: “அப்போ உன் ஃவைப்’அ ஒழுங்கா நடத்த தெரியணும். நீ அவளை நாளை சிகாகோ கூட்டிட்டு போயிருக்கலாமே?”
R: “நாளைக்கி நந்தினி அப்பாவோட இறந்த நாள். அம்மா நேத்து சொன்னாங்க அவரு தீவாளி முடுஞ்சு ரெண்டு நாள் கழிச்சு இறந்துட்டாருன்னு. அதுதான் அவகூட நாளைக்கி இருக்கலாம்னு”
K: “ஓ ஆல்ரைட். மண்டே நீ அவளை உன் ஆஃபீஸ் ஃபங்க்ஷன்க்கு கூட்டிட்டு போரல்ல”
R: “வேணாம்னு தோணுதுடா. அங்க Sue வருவா. அவ வந்து பேசறப்ப இவளுக்கு கஷ்டமா இருக்கும்.”
K: “புவர் ரீசன். சரி நான் அவளை அப்போ கோவிலுக்கு கூட்டிட்டு போகவா?”
R: “கண்டிப்பா. அவளும் போகணும்னு சொன்னா. நீ வரலையா மண்டே?”
K: “இல்ல. எனக்கு பிடிக்கல வர.?”
R: “ஹ்ம்ம். நீ அவளை கூட்டிட்டு போ கோவிலுக்கு. தேங்க்ஸ் மச்சா”
—–
தலை ரொம்ப வலி எடுக்க கீழே வந்தவன் ஒரு மாத்திரை எடுத்து போட்டுக்கொண்டு அவள் என்ன செய்கிறாள் தூங்கி விட்டாளா என்று பார்த்தான். ரூம் மூடி இருந்ததால் அப்படியே சோபாவில் அமர்ந்து சிந்தைக்குள்ளானான்.
“எனக்கு தெரியும் இது ரொம்ப தப்புனு. ஐம் ஸாரி நந்தினி. நான் உன்ன கஷ்டப்படுத்த செய்யல. Sue கெஞ்சி கேக்கறப்ப முடியாதுனு கட் செய்ய முடியல. என்னால ஒருவகைள அவளும் கஷ்டப்பட்டுருக்கா. அவ ஒரே ஒரு டைம்னு கேக்கறப்ப, என்னால மனசு இறங்காம எப்படி இருக்க முடியும்?
நான் தான் அவளை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போவேன் கல்யாணத்துக்கு முன்னாடி. அப்ரப்ட்டா நிறுத்த கஷ்டமா இருக்கு.
நான் நந்தினிட்ட உண்மைய சொல்லிருக்கணும். ஆனா அவளுக்கு டான்ஸ்னா ரொம்ப இஷ்டம். நான் வரலனு ஆடாம போய்ட்டா என்ன செய்யனு தான் பொய் சொன்னேன்” என்று நினைத்திக்கொண்டிருக்கும் போது
“நீங்க தூங்கலையா. என்னாச்சு?” என்று கேட்டுட்டே நந்தினி வெளியே வந்தாள்.
கண் மூடி இருந்தவன் நினைவிற்கு வந்தான் “இல்ல கொஞ்சம் தல வலி அதான் டேப்லெட்போட வந்தேன்” என்றான்.
“ஓ, இருங்க நான் சூடா காபி போடறேன். யு வில் ஃபீல் பெட்டெர்” என்று சொல்லிட்டு கிச்சன் சென்றவளை “ஹே எதுக்கு உனக்கு கஷ்டம். நான் மாத்தர போட்டுட்டேனே. நீ போய் தூங்கு” என்றான்.
“தட்ஸ் ஒகே. பத்து நிமிஷம் தானே” என்று சொல்லிட்டு காபி போட ஆரம்பித்தாள்.
“எந்த ஒரு பிரதிபலனும் இல்லாம இவளோ நமக்காக செய்றா ஆனா நான் அவகிட்ட பொய் சொல்லிட்டேனே” என்று நினைத்தான் ராம்.
“இந்தாங்க” என்று அவள் கொடுத்தாள். அவனுக்கு குற்ற உணர்ச்சி தலைக்கேற
“ஐம் ஸாரி, உன்கிட்ட நான் ஆஃபீஸ் ஒர்க் இருந்ததால வரலனு பொய் சொல்லிட்டேன்” என்றான்.
“எனக்கு தெரியும்” என்று அவள் சொல்ல அவன் முகம் கேள்விக்குள்ளானது.
Chapter 15:
அவன் ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க “நீங்க ஆஃபீஸ் ஒர்க் இருக்குனு வரல. அவங்கள கூட்டிட்டு சிகாகோ போயிருந்தீங்க. அதானே?” என்று அவள் கேட்க அவன் முகம் இன்னும் வெளிறியது.
“எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கறீங்களா. ஆண்ட்டி என்கிட்ட க்ரிஷ் உண்மையான ரீசன் சொல்லிட்டார்னு நினச்சு அவங்க உண்மைய சொல்லிட்டாங்க” என்று சொல்லும்போது அவன் குருகிப்போனான்.
>
“ஸாரி நந்தினி. நான் தான் அவளை எல்லாஇடத்துக்கும் கூட்டிட்டுப்போவேன் அவ அப்பா அம்மா விட்டுட்டு போனப்பறம். என்னால வர முடியாதுனு எவளோ தடவை சொன்னேன். ஆனா அவ ரொம்ப கெஞ்சினா. ஒரு டைம் மட்டும் கூட்டிட்டுப்போ சொன்னா”
“ஆல் ஆஃப் அ சடன், அவள அவாய்ட் பண்றேனு நினைச்சுட்டு அழ ஆரம்புச்சிட்டா. என்னால தாங்க முடில. அதுனால தான் கூட்டிட்டு போனேன். உன்கிட்ட மறைக்கும்நினைக்கல” என்று சொல்லும்போது அவனுக்கு தொண்டை அடைத்தது.
“நீங்க இத கண்டிப்பா என்கிட்டே மறைக்க மாட்டிங்கனு தெரியும். நீங்க மறைக்கும்னு நினச்சுருந்தா உங்க லவ் பத்தி என்கிட்டே சொல்லியே இருக்கமாட்டிங்க”
“நீங்க அவங்கள இன்னும் லவ் பண்றீங்களானு நான் கேட்டப்போ, நீங்க ஆமா லவ் பண்றேன்னு சொல்லல. மறக்க முடியலனு சொன்னீங்க. அப்போ மறக்க ட்ரை பண்ணுறீங்கனு தானே அர்த்தம்” என்று அவள் சொன்ன போது அவன் கண்களில் சில சொட்டு கண்ணீர்.
அதை பார்த்த அவள் “ஐயோ ப்ளீஸ். உங்கள ஹர்ட் பண்ணனும்னு சொல்லல” என்று பதறினாள்.
“ஐம் ஸாரி நந்தினி. இது நாங்க ரெண்டு பெரும் ரெண்டாவது தடவ மீட் பண்றது கல்யாணத்துக்கப்பறம். உன்கிட்ட பொய் சொல்லணும்னு சொல்லல. நான் வரலைனா நீ டான்ஸ் ஆடமாட்ட. பிளஸ், உனக்கு டான்ஸ் எவளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும்” என்று சொல்லும்போது அவள் கண்களில் எப்படி தெரியும் என்பது போல் பார்த்தாள்.
“உங்களுக்கு எப்படி…?” என்று அவள் கேட்கும்போது “நேத்து நைட் நீ தூங்க போனதுக்கப்பறம் நான் கீழ வந்தேன். லேப்டாப் ON’ல இருந்தது. ஸ்லீப்ல போடலாம்னு வந்தப்போ, உன்னோட டான்ஸ் வீடியோ பாஸ் (pause) ஆயிருந்தது. நீ அதுல டான்ஸ் காஸ்ட்யும்ல இருந்த”
“இன்னொரு போல்டெர் இருந்துச்சு. அதுல உன் டான்ஸ் போட்டோஸ் வீடியோஸ். அப்போ தெரிஞ்சிட்டேன் உனக்கு எவளோ பிடிக்கும்னு. அதுனால தான் என்னால நீ ஆடறது ஸ்டாப் ஆயிடவேணாமேனு பொய் சொன்னேன்” என்று சொல்லும் போது அவள் கண்களில் சிறுதுளி கண்ணீர்.
ஆனால் அவன் தயங்கவில்லை அவளை போல். அவள் கண்களை துடைத்து விட்டு “ஐம் ஸாரி அகைன் நந்தினி” என்றான். “இட்ஸ் ஒகே” என்று சொன்ன அவள்
“ஐயோ நீங்க காபி குடிக்கலயா தலைவலினு சொன்னீங்க, நான் அத மறந்து பேசிட்டே இருந்துட்டேன். இருங்க சூடு பண்றேன்” என்று சொன்னவளை “இருக்கட்டும் எனக்கு இப்போ பாரம் குறைந்தது. இப்படியே குடிச்சுடறேன்” என்று சொல்ல
“ஐயோ நல்லாயிருக்காது குடுங்க” என்று வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றாள். சிறிது நேரம் கழித்து சோபாவில் கண்மூடி இருந்தவனை “ராம் இந்தாங்க பிடிங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. எல்லாம் சரி ஆகிடும்” என்று அவள் சொல்ல
“ஹ்ம்ம் நீ சோர்வா இருப்ப நீ போய் தூங்கு நான் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்” என்று சொன்னான்.
” குட் நைட் ராம்” என்று அவள் புன்முறுவலிட, பதிலுக்கு அவன் குட் நைட் என்றான்.
“என்மேல நீ எவளோ நம்பிக்கை வெச்சுருக்கனு நினைக்கும் போது என்மேல எனக்கே கோவம் வருது. உன்ன சங்கடப்படுத்துனது தவிர வேற ஒன்னும் நான் செய்யல. நான் யாரையுமே ஹர்ட் பண்ணக்கூடாதுனு நினைப்பேன் ஆனா என்னால எல்லாரும் ஹர்ட் ஆகறாங்க இப்போ” கட்டுக்கொள்ளாமல் அவன் கண்கள் கலங்க தோள் சாய தோள் தேடினான்.
அவன் தேடிய தோள் அவனுக்கு கிடைத்தது சில நிமிடம் கழித்து நந்தினியிடம் இருந்து அவன் கனவில். அப்படியே உறங்கிப்போயிருந்தான்.
————
அவள் அப்பாவின் நினைவு நாள். காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே வரும்போது அவன் டைனிங் டேபிளில் அமர்திருந்தான் மொபைல் நோண்டிக்கொண்டு.
அவளை பார்த்தவுடன் “குட் மோர்னிங்” என்றான் புன்முறுவலுடன். அவளும் ” குட் மோர்னிங் ” என்றாள் ஆர்வம் இல்லாமல்.
“நான் காபி ரெண்டுபேருக்கும் போட்டுவெச்சுட்டேன்” என்று சொல்ல அவள் “ஓ தேங்க் யு. நான் போட்டுருப்பேன்ல. உங்க தல வலி எப்படி இருக்கு இப்போ?” என்று கேட்டாள்.
“பரவால்ல” என்று சொல்லிக்கொண்டு அவளுக்கு காபியை க்ளாசில் ஊற்றிக்கொடுத்தான். “தேங்க்ஸ்” என்று அவள் வாங்கி கொண்டாள்.
“நந்தினி நாம வெளிய போகலாமா?” என்று அவன் கேட்க அவள் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஏனெனில் இது தான் முதன்முறை அவன் இப்படி கேட்பது.
