Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum-thunaiye-10

தனிப்பெரும் துணையே – 10

விரல் விட்டு எண்ணக்கூடிய நொடிகள் தான் அந்த நெருக்கம்… டாக்ஸி இருக்கும் இடத்தை அடைந்தனர்.

‘ச்ச இந்த டாக்ஸி டிரைவர் கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணிட்டு இருக்கக்கூடாதா’ ஓட்டுனரை திட்டத்தான் தோன்றியது அவளுக்கு.

பிரிய மனமே இல்லாமல் விடைபெற்றுக்கொண்டு, சென்னை புறப்பட்டாள் ப்ரியா.

அவன் முகம் கண்முன்னே வந்துகொண்டே இருந்தது. அதுவும் கடைசி சில நொடிகள் இவள் ஸ்டேஷனுள் நுழையும்போது, எப்பொழுதும்போல, சின்னதாக தலையசைத்து புன்னகைத்த அவன் முகம்… அதை நினைக்கையில், பிரிவை நினைக்கையில்… மனதில் ஏதோ அழுத்தம்.

ட்ரெயின் புறப்பட்ட சில நொடிகளில், ‘Had a great time. Thank you for making my day a beautiful one’ என்ற மெசேஜ் அவனிடம் இருந்து. அதைப் பார்த்ததும், ஏனோ கண்களில் கண்ணீர் தேங்கியது.

எதிலும் அதிகம் ஈடுபடாமல் அவன் நினைவுடன் சென்னை வந்தடைந்தாள்.

அன்றைய தினமே அந்த ‘லாங் டிஸ்டன்ஸ் லாம்ப்’ டெஸ்டிங் என சொல்லி அவனை அழைத்தாள்.

“இளா. அந்த லாம்ப்’ப மேல ஜஸ்ட் டச் பண்ணு. உனக்கு ஒரு கலர்ல அது எரியும். அப்போ அதோட சிக்னல் இங்க வருதான்னு நான் பார்த்து சொல்றேன். ஒகே?”

மறுபக்கத்தில் அவன் சரி என்றான்.

அவள் சொன்னதைப்போல அவன் செய்ய… அவன் கொடுத்த சிக்னலால், இங்கே அவளறையில் வைத்திருந்த விளக்கு மற்றொரு நிறத்திற்கு மாறியது. அவள் முகத்தில் புன்னகை.

ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல்… “எனக்கு வரலையே… இன்னொரு டைம் பண்ணேன்” என கேட்க… மறுபடியும் இங்கே விளக்கு நிறம் மாறியது.

“இப்போ வந்துச்சா?” அவன் கேட்க… “ப்ச் இல்ல… சரி விடு. ஜூனியர்ஸ்’ட்ட சொல்லிடறேன். நீ அத யூஸ் பண்ணிக்கோ” என்றாள் புன்னகைத்துக்கொண்டே.

அவ்வளவுதான் அவர்களின் பேச்சு. போனை வைத்துவிட்டான்.

“வாவ்… லாம்ப் ஒர்க் ஆகுது. அவன் வீட்ல ஏற்கனவே ஸ்டடி லாம்ப் இருக்கு. ஒருவேளை அவன் இதை யூஸ் பண்ணுனான்னா கண்டிப்பா என் ஞாபகம் வரும். இல்ல ஒருவேளை என்னை அவனுக்கு பிடிச்சுருக்குன்னா, என் ஞாபகம் வர்றப்ப இதை யூஸ் பண்ணுவான். அப்போ நான் கண்டு பிடிச்சுடுவேன்” தனக்குத்தானே பேசிக்கொண்டாள். காதல் கிறுக்கு தலைக்கேறிவிட்டது.

அதே நிலையில் ஓரிரு நாட்கள் நகர்ந்தது. விளக்கு எரிந்தபாடில்லை.

“அவனை பத்தி தெரிஞ்சே இதெல்லாம் அவனுக்கு குடுத்தயே… உன்ன சொல்லணும்” என திட்டிக்கொண்டாள்.

ஒருநாள் இரவு, அவளிடம் இருந்த விளக்கில் நிறம் மாறியது. அது அவனிடம் இருந்து வந்த சிக்னல். அதை பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

உடனே அவனுக்கு மெசேஜ் அனுப்ப கைபரபரத்தது. பின் கண்டுபிடித்துவிடுவான் என கட்டுப்படுத்திக்கொண்டாள்.

இப்படியாக அவ்வப்போது அந்த விளக்கு நிறம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அவள் அவனுடன் டூயட் பாட சென்றுவிடுவாள்.

முன்பைவிட மெசேஜ் கம்யூனிகேஷன் அதிகமானது. அவள் அவனுக்கு குட் மோர்னிங்’கில் ஆரம்பித்து, காலை உணவு, கல்லூரி, ஆஃபீஸ், பின் இரவு உணவு, என குட் நைட்’டுடன் முடிப்பாள்.

அவனிடமும் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது அவளுக்கு. ஏதாவது அவள் கேட்டால் பதில் வரும், சிலசமயம் அதே கேள்வியை அவளிடம் கேட்பான் அதுவும் அவள் கேட்டபின். அவ்வளவுதான்.

சில நாட்களில், வெண்பாவிற்கு மொட்டை மற்றும் காது குத்தும் நிகழ்வு நடந்தது. அதற்கு செழியன் வந்திருந்தான். அவனை பார்த்தவுடன், அவ்வளவு சந்தோஷம். ஆனால் இம்முறை இருவருக்குமே எப்போதும் கிடைக்கும் தனிமை கிடைக்கவே இல்லை.

அவ்வப்போது இருவரும் பார்வையால் மட்டுமே சந்தித்துக்கொண்டனர்.

செழியன் மடியில் உட்காரவைத்து வெண்பாவிற்கு காது குத்தும்போது, அவள் அழுத அழுகை செழியனையும் கண்கலங்க வைத்தது. கவிதா, வெண்பாவையும் அவனையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ப்ரியாவிற்கு அங்கு நடந்த எதுவமே மனதில் பதியவில்லை. அவன் மட்டுமே தெரிந்தான். ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பார்க்கையில், சரியாக லட்சுமி அவளை அழைத்ததால் போகவேண்டியதாயிற்று.

அவனுக்கும் தேர்வு நடந்துகொண்டிருந்ததால், அன்றைய மதியமே கிளம்பியும் விட்டான்.

நாட்கள் இப்படியே சென்றது. ப்ரியாவும் இறுதியாண்டு படித்துமுடித்தாள்.

படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்தாள்.

சில மாதங்கள் கடந்தது. அவள் எப்போதும் கலகலவென்று இருப்பதால், ஆஃபீஸிலும் அவளை அனைவருக்கும் பிடிக்கும். உடன் பணிபுரிபவர்களை கலாய்ப்பதும், கேலியும் கிண்டலுமாக அவள் இருக்கும் இடம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.

இதுபோன்ற பெண்ணை யாருக்குத் தான் பிடிக்காது? அப்படி அவளை அவளுடைய லீட்’டுக்கு பிடித்துப்போக… அவளிடம் பேசவேண்டும் என பேன்ட்ரி’க்கு அழைத்துச்சென்றான்.

‘அவளுக்கு என்ன பிடிக்கும் எது குடிப்பாள்’ என அவனுக்கு தெரியும். அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.

“என்ன ரிஷி… உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு. என்ன ஏதாச்சும் காரியம் ஆகணுமா?” குறும்புடன் கேட்டாள்.

அவன் புன்னகைத்து… “எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல இசைப்ரியா. நான் சொல்றத கேட்டுட்டு, டோன்ட் கெட் மீ ராங்” என தயங்க… ப்ரியாவிற்கு மூளையில் மணி அடித்துவிட்டது. அவன் என்ன சொல்லப்போகிறேன் என புரிந்துவிட்டது.

அவன் கண்கள் அதை அப்பட்டமாக காட்டியது.

“யு ஆர் அ குட் ஃபிரண்ட் ஆஃப் மைன். பட் மனசு அதுக்கும் மேல ஏதோ இருக்குன்னு சொல்லுது. ஐ திங்க் ஐ லவ் யு” என விஷயத்தை போட்டு உடைக்க… ப்ரியா புன்னகைத்தாள்.

அவளுக்கு பலமுறை உதவியுள்ளான். சிரத்தை எடுத்து அவளுக்கு ஆஃபீஸ் வேலைகளை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறான். ஓரிரு முறை அக்கறை எடுத்து அவளுக்கு சில விஷயங்களில் துணையாக நின்றிருக்கிறான். ப்ரியாவும் அவனுடன் நிறைய பேசியிருக்கிறாள். அவனும் நிறைய பகிர்ந்துள்ளான் அவளிடம்.

மிகவும் கண்ணியமானவன். யாரையும் ஈர்க்கும் தோற்றம். இப்போதுகூட சில பெண்களின் கண்கள் அவனை வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

அவன் டீமில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும். ப்ரியாவிற்கும் அவனை பிடிக்கும். ஆனால் நட்பின் ரீதியாக மட்டுமே.

“ஐம் சாரி ரிஷி. என்னையும் அறியாமை உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் உருவாக நான் காரணமா இருந்துட்டேன். சாரி அகைன்” என நிறுத்தி… “ஐம்… கமிடெட்” என்றாள் நேராக.

அதைக் கேட்டு அவன் அதிர்ந்தான். பின்…

“ஹே என்னை பிடிக்கல இல்ல டைம் வேணும்ன்னு சொல்லு ஒகே… ஐ அக்செப்ட். பட் எதுக்கு கமிடெட்னு பொய் சொல்லணும்” அவனிடம் இதுகுறித்து அவள் எதுவும் சொன்னதில்லை. ஆகவே திடமாக நம்பினான் அவள் பொய் சொல்கிறாள் என.

“இங்க பாருங்க ரிஷி. நீங்க சொன்னதுபோல யு ஆர் ஒன் ஆஃப் மை குட் ஃபிரண்ட்ஸ். அதுனால தான் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி உங்ககிட்ட பொய் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்றாள் பொறுமையாக மற்றும் தெளிவாக.

அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. “ஷோ மீ தி ப்ரூஃப் (Show me the proof)” இருவருக்குள் இருக்கும் நட்பின் உரிமையுடன் கேட்டான்.

ப்ரியா கொஞ்சம் பொறுமை இழக்க ஆரம்பித்தாள். ஆதாரத்துக்கு அவள் எங்கே போவாள்?

“வாட் நான்சென்ஸ்… நான் எதுக்கு ப்ரூவ் பண்ணனும்? சைல்டிஷ்’ஆஹ் பிஹேவ் பண்ணாதீங்க ரிஷி” கொஞ்சம் கோபமாக வார்த்தைகள் வந்தது.

“நான் சொன்ன விஷயத்தை மறந்துடு. ஒரு ஃபிரண்ட்’டா கேட்கறேன்” என அவன் பேச, கைகாட்டி அவனை தடுத்தாள் ப்ரியா.

“ஃபிரண்ட்’டாவே இருந்தாலும் இட்ஸ் மை பர்சனல். ஷேர் பண்ணனும்னு அவசியம் இல்லை” என சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

ரிஷியின் மீது வந்த கோபத்தை விட, செழியன் மீதே அதிகம் கோபம் வந்தது.

இதுபோதாதென்று மதியம் அனுப்பிய மெஸேஜுக்கு அவனிடம் இருந்து பதில் வரவில்லை. அவன் மேல் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.

அவளிடத்திற்கு வந்து உட்கார, சிறிதுநேரத்தில் ரிஷியும் வந்துவிட்டான். அடுத்தடுத்து தான் இருவரின் இருக்கையும்.

செழியன் மீது கோபம், ரிஷியின் மீது கோபம் என அவள் மனம் கனன்றுகொண்டிருக்க… மொபைலில் பீப் சத்தம்.

திரையில் ‘இளா’ என தெரிந்தது. ‘கோபத்தில் ஏதாவது அனுப்பிவிடுவோம்’ என நினைத்து திறந்து கூடப் பார்க்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் பீப். செழியனிடம் இருந்து தான். மொபைலை பார்க்காமல் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்க… இப்போது செழியனிடம் இருந்து கால் வந்தது.

முதலில் கோபம் வந்தாலும்… ஏதாவது அவசரமோ என நினைத்து அட்டண்ட் செய்தவுடன் “ஹ்ம்ம்” என்று மட்டும் தான் சொன்னாள்.

அடுத்த சில நொடிகள் செழியன் சொன்னதைக்கேட்டு முகத்தில் முப்பத்தி ரெண்டு பற்கள் தெரிய புன்னகைத்தாள். மனம் ரெக்கை கட்டிக்கொண்டு காற்றில் பறந்தது. கோபமெல்லாம் அந்த காற்றோடு கண்காணாமல் பறந்து போனது!!!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved