Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum-thunaiye-8

தனிப்பெரும் துணையே- 8

புனே’விற்கு மட்டும் தான் இண்டஸ்ட்ரியல் விசிட் பிளான் செய்திருந்தார்கள் அவள் டிபார்ட்மெண்டில். இந்த அவுரங்காபாத் மற்றும் மும்பை சுற்றலா, ப்ரியாவின் ஏற்பாடு.

தன்னுடன் படிக்கும் மாணவர்களின் துணையுடன்… ஒரே போக்குவரத்து செலவில் ட்ரைனிங் மற்றும் ட்ரிப் என பேசியே காலேஜ் நிர்வாகத்தை சம்மதிக்கவைத்தனர்.

நன்றாக படிக்கும் பெண். ஆசிரியர்களுடன் நெருக்கம். ஆகவே அவள் பேச்சு எடுபட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான ஆசிரியர்கள் சுற்றுலா பொறுப்பேற்றுக்கொண்டது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.

இவள் செழியனிடம் ‘வருகிறாயா’ என கேட்க… அவனிடம் பதில் இல்லை.

“ஹலோ லைன்ல இருக்கியா? வர முடியுமா முடியாதா?” என கொஞ்சம் கடுப்புடன் கேட்க… “நான் பவய்’ல இருக்கேன். வரணும்னா எப்படியும் ஒன்னரை டு ரெண்டு மணிநேரமாவது ஆகும். ஐ டோன்ட் ஹவ் எ வெய்கல்” என்றான்.

“ஒரு நிமிஷம் இரு…” என்றவள்… “மேம். நான் சொன்னேனே… அவர் வர டூ அவர்ஸ் ஆகுமாம். நாம எவ்ளோ நேரம் இங்க இருப்போம்” என கேட்டாள்.

“எப்படியும் சாப்பிட்டுட்டு போக டைம் ஆகும். சோ நோ இஷ்யூஸ்” என்றார் அந்த பெண்மணி.

“தேங்க் யு மேம்” என்றவள்… அழைப்பில் இருந்தவனிடம் “நான் இங்க தான் இருப்பேன். இப்போ வர முடியுமா?” என கேட்க… சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு… “ஹ்ம்ம்” என்றான்.

சொன்னதை விட அரை மணிநேரம் முன்னதாக வந்தடைந்தான்.

அவனை பார்த்த ப்ரியா மனதில் சொல்லமுடியாத ஒரு சந்தோஷம். பார்த்து பல பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பக்கம் ரோட்டில் இருந்து கிராஸ் செய்து இவள் இருக்கும் பக்கம் வந்துகொண்டிருந்தான்.

கொஞ்சம் மெதுவாகவும், கொஞ்சம் வேகமாகவும் போக்குவரத்துக்கு ஏற்றாற்போல, கடல் காற்றுக்கு பறக்கும் சிகையை சரிசெய்துகொண்டு அவளை பார்த்ததும் வேகம் குறைத்து நெருங்கினான்.

கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனதில் தோன்றியது ‘எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டான்’ என்பதே.

அவள் எதிரில் வந்து அவன் நிற்க… ப்ரியா புன்னகைத்தாள். கையில் கட்டியிருந்த அவன் கொடுத்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு மறுபடியும் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அதன் பொருள் புரிந்து அவனும் இப்போது புன்னகைத்தான்.

பின், “இன்னைக்கு டிராஃபிக் கம்மி. பிளஸ் டாக்ஸில வந்தேன்” என்றான்.

“தேங்க்ஸ் வந்ததுக்கு” அவள் சொன்னதற்கு… “தேங்க்ஸ் போதும் கிஃபிட் எங்க?” என குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.

ஒரு நொடி அந்த சிரிப்பில் மூழ்கி, திளைத்து வெளிவந்தவள், “நான் உன்ன பார்க்க வந்ததே உனக்கு கிஃபிட் தான்” என்றாள் கண்ணடித்து. இப்போது அவன் போலியாக முறைத்தான்.

“என்ன திடீர்னு மும்பைக்கு?” அவன் கேட்க… “புனே’ல ட்ரைனிங் வந்தோம். அப்படியே ஒரு சின்ன ட்ரிப். சரி உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறயா?” என அன்றயதினத்திற்கான அடுத்த குண்டை போட்டாள்.

அவன் விழிகள் விரித்து பார்க்க… “என்ன” என்றாள் அவனின் செய்கையை பார்த்து.

“ட்ரிப் வந்துட்டு எப்படி விடுவாங்க?” என அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் கேட்க, “அதெல்லாம் அப்பறம் சொல்றேன். கூட்டிட்டு போவியா?” என விடாமல் கேட்டாள்.

“உன் வீட்ல தெரியுமா? உன் அண்ணனுக்கு?” சந்தேகத்துடன் அவன் கேட்க… “சரி நீ கிளம்பு. தேங்க்ஸ் ஃபோர் கமிங்” என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

“நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?” கேள்வியாக அவன் பார்க்க… “நீ என் அண்ணியோட தம்பி. உன் வீட்டுக்கு வர்றதுக்கு நான் எதுக்கு பெர்மிஷன் கேட்கணும்? நான் தப்பு ஒன்னும் பண்ணலையே” என்றாள் நேராக.

அவன் முகமே காட்டியது அவன் அதிர்ச்சியை. அப்போது அவளின் ஆசிரியர் அங்கே வர, அந்த பெண்மணி செழியனை பார்த்தார்.

அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, ப்ரியாவிடம் “அஞ்சு மணிநேரம் தான். வந்துடணும் ப்ரியா. நான் ரிஸ்க் எடுத்து உன்ன அனுப்பறேன். சர்’ர வேற நான் சமாளிக்கணும். ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்”

“கண்டிப்பா மேம். நான் ஈவினிங் நாலு மணிக்கு இங்க இருப்பேன். ஃபோர் அவர்ஸ் போதும். ஐ வில் பி பேக்” என்றாள் திடமாக.

இதை அனைத்தையும் ‘பே’ என பார்த்தான் செழியன்.

மறுபடியும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

“சரி போலாமா?” என ப்ரியா கேட்டவுடன், தன்னிலைக்கு வந்த செழியன் தலையை ஆட்டினான்.

அவளும் புன்னகைத்துக்கொண்டே அவனோடு சென்று டாக்ஸியில் ஏறினாள். பின் சீட்டில் அவள் ஒரு ஜன்னல் பக்கம். அவள் மற்றொரு ஜன்னல் பக்கம்.

“உண்மைய சொல்லு. அவங்க உன்னோட ஸ்டாஃப் ஆஹ்? இல்லே நீயே செட் பண்ண ஆளா?” என்றதுதான் அவன் கேட்ட அடுத்த கேள்வி.

அதற்கு சட்டென சிரித்த ப்ரியா… “அவங்க என்னோட இன்ச்சார்ஜ் தான். என்னை பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும். என்னை விட அண்ணனை பத்தி இன்னமும் தெரியும். உன் அக்காவையும்” என்றாள்.

அவன் புரியாமல் பார்க்க… அவள், “அவங்களும் அண்ணனும் ஒரே பேட்ச். காலேஜ் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் கிளப் மெம்பர்ஸ் ரெண்டு பேரும். மேம் இப்போ எங்க காலேஜ்லயே ப்ரொஃபஸர் ஆகிட்டாங்க. அண்ணனோட ரிசெப்ஷனுக்கு கூட வந்திருந்தாங்க. சோ அண்ணியையும் பார்த்துருக்காங்க. இந்த விளக்கம் போதுமா?” என புருவங்கள் உயர்த்தி கேட்டாள்.

மறுபடியும் திகைத்துப் பார்த்தான் செழியன். ப்ரியா புன்னகைத்தாள்.

‘ அவங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்தன்னு கேட்கறயா நீ? எனக்கு உன்ன பிடிக்கும்ன்னு அவங்களுக்கு தெரியும்… ஆனா உனக்கு??? புரியவே மாட்டேங்குது. ஒரு பொண்ணு இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்துருக்கேன்…. ப்ச். இன்னைக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்’ என நினைத்துக்கொண்டு…

அவன் பேசாமல் வர, “ஆமா ஆஃபீஸ்’க்கு லீவ் போட்டுட்டயா?” ப்ரியா கேட்க… அவன் சற்று தயங்கி ஆம் என்றான்.

‘வாய் திறந்துடாத. முத்து உதிர்ந்திடப்போகுது’ முணுமுணுத்தவாறு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்தில்… கண்கள் சொருகி, தூங்க ஆரம்பிக்க… ஒருநிலையில் இல்லாமல் ஆடிக்கொண்டே தூங்கும்போது, தீடீரென ஓட்டுனர் வேகத்தடையில் பிரேக் போட்டவுடன், அவள் விழாமல் இருக்க, அவள் கையை பற்றிக்கொண்டான்.

தூக்கத்தில் மெதுவாக கண்விழித்த ப்ரியா, அவன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்து, அவன் தோள் மேலே சாய்ந்து, அவன் கையை நன்றாக பற்றிக்கொண்டு உறங்க ஆரம்பிக்க… அவன் அவள் கையை தட்டிக்கொடுத்தான்.

ஏதோ சொர்க்கத்தில் அவனுடன் பயணிப்பதுபோல உணர்ந்தாள். அவள் தட்டிக்கொடுப்பது, முதலில் சுகமாக இருந்தாலும் இப்போது, கொஞ்சம் தட்டிக்கொடுக்கும் அழுத்தம் அதிகாமாக, கூடவே ‘வீடு வந்துடுச்சு’ என்ற குரல்.

கஷ்டப்பட்டு கண்கள் திருந்து பார்க்க… அவன் அவனிடத்தில் தான் இருந்தான். இவள் இவளிடத்தில் தான் இருந்தாள்.

இவள் ஜன்னல் மேல் சாய்ந்து இருக்க, சற்று முன் நடந்தது எதுவுமே நிஜத்தில் நடக்கவில்லை என்று நினைத்தபோது… சட்டென சிரிப்புதான் வந்தது அவளுக்கு.

அவனைப் பார்த்தாள். இவள் சிரிப்பதைப்பார்த்து அவன் குழப்பத்தில் “கனவேதாச்சும் கண்டயா?” என கேட்க, “ஹ்ம்ம்” என்றாள். அதற்கு அவனோ தலையை ஆட்டிவிட்டு இறங்கினான்.

‘அடப்பாவி. என்ன கனவுன்னு கேட்கமாட்டயா டா… இவனையெல்லாம்’ என நினைத்து சலித்துக்கொண்டு அவளும் இறங்கினாள்.

அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. கொஞ்சம் பழையதாக இருந்தாலும் நன்றாகவே பராமரிக்க பட்டிருந்தது. பக்கத்தில் உயர்ரக குடியிருப்புகளும் இருந்தது.

அதை பார்த்தபடியே அவள் அவன் பின்னே சென்றாள். அவன் வீடு ஒன்பதாவது தலத்தில் இருந்தது. வீட்டை அவன் திறந்து உள்ளே அழைக்க… ஒரு கணம் யோசித்தாள். ‘வலது காலா இடது காலா’ என…

பின் தன் நினைப்பை நினைத்து புன்னகைத்துக்கொண்டே உள்ளே சென்றாள். மிகவும் சிறிய ஒன் BHK வீடு. சுத்தமாக இருந்தது.

ஹாலின் ஒரு புறத்தில் பிரென்ச் டைப் பால்கனி அதை ஒட்டியபடி ஒரு சின்ன பெட். ‘ஹாலில் பெட்’டா?’ என நினைக்கும்போது, அவளை உட்காரச்சொன்னான் செழியன்.

அவள் நின்றுகொண்டே சுற்றியும் முற்றியும் பார்க்க… அவன் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதை வாங்கிக்கொண்டு சமையலறை எட்டிப்பார்த்தாள். இரண்டு நபர் மட்டுமே நிற்க முடியும். பின் கண்கள் அங்கிருந்து திரும்ப, அடுத்து தெரிந்தது பெட் ரூம்.

அதை பார்த்த அவள் யோசனையுடன் செழியனை பார்க்க, அவன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆச்சர்யத்துடன் அதிர்ந்தாள்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved