Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -3A

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 3A:

கூட்டத்தில் பேசி முடித்த பின்… ராஜீவ், திவ்யா இருக்கும் இடத்திற்கு வந்தான். வந்தவன் அவளை நலம் விசாரித்து, பின் எப்படி தன் நிறுவனத்தில் என்ற கேள்வியை கேட்டான். அதில் மறைமுகமாக ‘ஏன் தன் ப்ராஜெக்ட்டில் சேரவில்லை’ என்ற கேள்வி பொதிந்திருந்தது.

அவன் கேள்வியின் உள் அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்ட திவ்யா, “லாஸ்ட் வீக் தான் இங்க சேர்ந்தேன். ஃபர்ஸ்ட் உங்க ப்ராஜக்ட்ல தான் மேப் பண்றதா சொன்னாங்க. எனக்கு அந்த ப்ரான்ச் கொஞ்சம் தூரம் அதான் அக்ஸப்ட் பண்ணல. 

பட் தென், இந்த லொகேஷன் சேர ஓகேவானு கேட்டப்ப சரினு சொல்லிட்டேன். பை தி வே, தேங்க்ஸ் ஃபார் செலெக்ட்டிங் மீ!” என்றாள் புன்னகையுடன். 

இப்போதும் அவளின் பதில் அவனை ஈர்த்தது! பொதுவாகவே இதற்கு மன்னிப்பையும் சேர்த்து சிலர் கேட்பார்கள். காரணம், அவன் தான் அவளை நேர்காணல் செய்தான். அதுவும் அவன் ப்ராஜெக்ட்டுக்காக தான் என்பதை பகிரக்கூடச் செய்திருந்தான். அன்று அவள் அதற்கு எதுவும் சொல்லவில்லை.

ஆனால் இப்போது, ‘அதை நிராகரித்துவிட்டேன்’ என்பதை தன்னிடமே வெளிப்படையாக சொல்லி, கூடவே நன்றியை சேர்ப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. தன் திறமைக்குத் தான் இந்த வேலை என்பதை சொல்லும்விதமாக இருந்தது அவளின் பதில்!

“நான் எதுவும் செய்யல பாரதி, யூ டிட் ரியலி வெல்!” அவளைப்போலவே புன்னகையுடன் சொன்னவன், “இங்க எந்த ப்ராஜக்ட்?” என கேட்டான்.

இதுவரை அவளை சுற்றி உள்ளர்வர்கள் அனைவருமே அவளை திவ்யா என்றே அழைப்பார்கள். கொஞ்சம் நெருக்கமானவர்கள் திவி என்றழைப்பதுண்டு. ஆனால் தன் வீட்டில் அழைக்கும் பெயரான பாரதியை இவன் ஒவ்வொரு முறையும் அழைக்கும்போது ஒரு இனம்புரியாத உணர்வு. பட்டர்ஃபிலை எஃபெக்ட்!

மனதின் எண்ணத்தை முகத்தில் காட்டாமல், தன் ப்ராஜக்ட்டை சொன்னாள்.

ராஜீவ், “ஓ! ராகேஷ் கிட்ட ரிப்போர்ட் பண்றீங்களா?”  

“யெஸ். உங்களுக்கு அவரை தெரியுமா?” தன் லீட் (lead) குறித்து தெரியுமோ என்ற எண்ணத்தில் திவ்யா கேட்க, “ஒரே டெக்னாலஜி தானே. சோ அதுக்கான செமினார்ஸ் அட்டென்ட் பண்றப்ப மீட் பண்ணிருக்கேன். அவ்ளோதான். பெருசா தெரியாது” என்றான். 

இந்த ராகேஷ் எனும் கதாபாத்திரத்தால் தான் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கப் போகிறது என்பது தெரியாமல் அவனை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். 

“அண்ட் உங்க ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது” திவ்யா பாராட்ட, அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு நன்றி சொன்னான். 

இண்டெரஸ்ட் இருந்தா நீங்களும் க்ளப்ல சேருங்களேன்” என அவனையும் மீறி கேட்டு வைத்தான். அப்படியாவது இருவரும் பேசிக்கொள்ளும் தருணம் அதிகம் அமையுமோ என்ற எண்ணத்தில் கேட்டானோ?

ஆனால் அதற்கும் தடா விதித்ததுபோல, “ஐ விஷ்! பட், இப்போ தான் சேர்ந்திருக்கேன். ப்ராஜக்ட்ல என்னோட ஒர்க், ரோல்ஸ் அண்ட் ரெஸ்பான்சிபிலிடீஸ் நல்லா புரிஞ்சுக்கணும். சோ…” என நாசுக்காக மறுத்தாள். முதலில் வேலை, மற்றதெல்லாம் பிறகே! 

அவனுக்கு புரியவேயில்லை, ஏன் அவள் வெளிப்படையாக சொல்லும் அல்லது மறுக்கும் ஒவ்வொன்றும் தன்னை ஈர்க்கிறது என்று. நிறைய ஆண்கள், அதுவும் உயர் பதவியில் இருப்பவர்கள், இதுபோல குணம் உள்ள பெண்களைக் கொஞ்சம் தலைக்கனம் உள்ளவர்கள் என்றே எண்ணுவார்கள். ஆனால் ராஜீவ்வுக்கு ஆரம்பம் முதலே அவளின் இந்த குணங்கள் தான் அவனை உற்றுப் பார்க்கவைத்தது. 

அவள் சொன்னதற்கு, “நோ இஷ்யூஸ் அட் ஆல் பாரதி!” என்க, அப்போதுதான் திடீரென ஞாபகம் வந்தவளாக திவ்யா, “ஐம் சாரி… பக்கத்துல வச்சுட்டே இன்ட்ரோ தரல” 

லேசாக நாவை கடித்து, தலையில் அடித்துக்கொண்டு பக்கத்திலிருந்த தோழி ஹரிணியிடம் கண்களால் மன்னிப்பை வேண்ட, அவளின் இந்த செயலையும் ரசிக்க வேண்டியதாயிற்று ராஜீவ்வுக்கு.

“ஷி இஸ் ஹரிணி. என்னோட ஃபிரெண்ட், சேர்ந்து டூ மந்த்ஸ் ஆக போகுது” என அறிமுகப்படுத்தினாள்.  

இவ்வளவு நேரம் பக்கத்தில் முறைத்துக்கொண்டிருந்த ஹரிணி, அவன் அவளிடம் பேசியதும், புன்னகைத்ததும் சாந்தமடைந்தாள். 

கண்ணாடியை ஒரு முறை சரிசெய்துகொண்டு, ஹரிணியிடமும் சாதாரணமாக, எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பேசிய ராஜீவ்வை பார்த்திருந்தாள் திவ்யா. 

‘அடுத்த எப்போது வருவான்?! இவனை எப்படி தொடர்பு கொள்வது?’ என்ற அதிதீவிர கேள்விகள் மனதில் எழ, தன் மனம் செல்லும் போக்கை எண்ணி சிரிப்பு தான் வந்தது. 

அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கு சரியான பதில்களுடன் ராஜீவ், “ஓகே பாரதி! நீங்க சாப்பிடுங்க. நானும் கிளம்பறேன். கொஞ்சம் வேலை இருக்கு. ஏதாவது உதவி வேணும்னா, யூ கேன் ஆல்வேஸ் ரீச் அவுட் டு மீ! அடுத்த புதன்கிழமை தான் எங்களுக்கு நெக்ஸ்ட் மீட்டிங். பார்க்க முடிஞ்சா, அன்னைக்கு மீட் பண்ணலாம்” புன்னகையுடன் சொன்னவன், தன் மெஸஞ்சர் IDயை தானாகவே அவளிடம் கொடுத்தான்.  

பின், இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டான். 

பெரும்பாலான பெண்களைப் போல, க்ரஷ் என்று சிலர் திவ்யாவுக்கும் உண்டு! ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த பட்டியலில் ராஜீவ் என எண்ணும்போது மனதில் எழுந்த சிரிப்பு இதழ்களிலும் விரிந்தது. 

அந்த வாரம் இருவருக்கும் மற்றவரை பற்றிய ஞாபகம் அவ்வப்போது வந்தாலும், திவ்யா அவனிடம் பேசுவதற்காகக் காத்திருந்தாள். அடுத்த புதன்கிழமையும் வந்தது. 

காலையிலேயே மெஸஞ்சரில் திவ்யா ராஜீவ்வை தொடர்பு கொண்டாள்.

“ஹலோ ராஜீவ், மதியம் மீட் பண்ண முடியுமா? உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” என கேட்டாள். அதைப் பார்த்ததும் ரக்கை கட்டிக்கொண்டு பறந்தது அவன் மனது!

—— 

அந்த வார வெள்ளிக்கிழமை வந்தது. அன்றைய தினம், அந்த ஆடிட்டர் ஆஃபிஸே மிகவும் பரபரப்பாக இருந்தது. 

சமீரா அவளுக்குத் தந்திருந்த வேலையை செய்துகொண்டிருந்தாள். அப்போது விடாமல் மொபைல் அடித்துக்கொண்டே இருக்க, கோபத்தில் அதை எடுத்தாள்.

“என்ன தீரா! ஒரு தடவை கூப்பிட்டு எடுக்கலைன்னா வேலையா இருப்பேன்னு கூட தெரிய வேண்டாமா?” என கடுகடுவென எடுத்த எடுப்பில் கடிந்தாள்.

“சமி! கொஞ்சம் கீழ வரியா?” அவள் திட்டியதெல்லாம் காதில் விழாததுபோல அவளிடம் தன்மையாக, இன்னமும் சொல்லப்போனால் காதலுடன் பேசினான். 

“என்னடா சொல்ற? இங்க வந்திருக்கயா?” என்றவள் குரல் இப்போது லேசாக கமறியது. அவன் ‘தான் கீழே இருக்கிறேன்’ என்றதுமே, வேலையை அப்படியே விட்டுவிட்டு அவசர அவசரமாக படி இறங்க ஆரம்பித்திருந்தாள். கிட்டத்தட்ட விழும் வேகத்தில்!

கீழே காரின் மேல் சாய்ந்தபடி, தீரன்… திவ்யபாரதியின் அண்ணன், சமீரா வரும் வழித்தடத்தையே பார்த்தபடி நின்றிருந்தான். 

காதிலிருந்து மொபைலை கூட இறக்காமல் அவனை பார்த்திருந்தாள் சமீரா! பலமாதங்கள் ஆகியிருந்தது அவனை பார்த்து. அவனுக்கும் அதுவே! 

முந்தைய தினம் பேசுகையில், ‘உன்ன பார்க்கணும் போல இருக்கு தீரா!’ வலியுடன் கண்களில் கண்ணீர் கோர்க்க அவள் சொன்னதும், அது அவனை ஏதோ செய்ய, இதோ இன்று திருச்சியிலிருந்து கிளம்பி வந்துவிட்டான்.   

இப்போதும் அவள் கண்கள் கலங்க அவன் எதிரில் நின்றாள். பொது இடம் என பாராமல் அவளை அணைத்துத் தேற்ற தோன்றியது, ஆனால் தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டு முன்சீட்டின் கதவை திறந்துவிட்டான்.  

எதுவும் பேசாமல் அமைதியாக ஏறிக்கொண்டாள். அவனும் உள்ளே எரிய அடுத்த நொடி, அவன் தோள்மேல் சாய்ந்து, அவன் கைகளை கட்டிக்கொண்டவள்… “வேலையெல்லாம் விட்டுட்டு எனக்காக வந்தயா தீரா? சாரி டா! என்னமோ தெரியல… ரொம்ப லோன்லியா பீல் பண்ணேன்… அதான் ஏதோ…” என்றவளால் என்ன முயன்றும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

“ஷ்! அழாத சமி” என்றவனின் உடைந்த குரலே அவனின் மனநிலையைக் காட்டியது. இருவரும் அமைதியாக சில நிமிடங்கள் அடுத்தவரின் அருகாமையில் கழித்தனர். 

பின் சமீரா, “பக்கத்துல யாரையாவது மனசு ரொம்ப தேடுச்சு தீரா. இந்த வாரம் பாரதியை வீட்டுக்கு வர சொல்லலாம்னு இருந்தேன்” விசும்பலின் ஊடே சொன்னவள், கலங்கிய கண்களுடன் அவனை விட்டு விலகி, “வரேன்னு ஏன் சொல்லல?” என முறைத்தாள். 

அவன் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், “பசிக்குது சமி. வீட்ல இருந்து காலைல மூணு மணிக்கு கிளம்பினேன்” என்றவன் காரை எடுத்தான். 

பின், “நீயும் சாப்பிட்டிருக்க மாட்டியே!” என்றான் முறைத்தபடி. அவள் முகத்தை கண்ணாடி பக்கம் திருப்பிக்கொண்டாள்.

கோபத்தை, இயலாமையை உணவின் தான் காட்டுவாள் என அறிவனே…

“ஏன்டி இப்படி இருக்க” என கடிந்தவன், நேராக பக்கத்திலிருந்த உணவகத்தில் நிறுத்தினான். அவள் கைகழுவச் சென்ற நேரம், அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்திருந்தான். 

கைகழுவிவிட்டு அவனை பார்த்தபடி வந்தாள். நினைத்துக்கூட பார்க்கவில்லை இப்படி வந்து நிற்பான் என்று. எப்போதும்போல பார்ப்பதற்கு அந்த மிடுக்கான தோற்றம் இருந்தாலும், சில நாட்கள் வெட்டப்படாத தாடி, கேசம் என அவனை பார்க்க உள்ளுக்குள் ஏதோ பிரட்டி, நெஞ்சம் வலித்தது. 

அமைதியாக அவனை பார்த்தவண்ணம் உட்கார்ந்தாள். அவள் தன்னை தான் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து மொபைலில் இருந்து கண்களை பிரித்து அவளை பார்த்தான். 

இத்தனை வருடங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். இப்போது மிக லேசான வயதின் சாயல் அவளின் தோற்றத்தில் தெரிவது போல இருந்தது. அது அவனுடைய பிரமையா என கூட தெரியவில்லை. போதாததற்கு ஆங்காங்கே தெரிந்த நரை முடி வேறு அவனை இம்சித்தது. 

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “சாப்பிட்டப்பறம், ஆஃபீஸ்க்கு லீவ் சொல்லிட்டு வந்துடு சமி. வெளிய போலாம்” என்றதும், அவளுக்கு மன வலியெல்லாம் எங்கோ பறந்தது. சந்தோஷத்தில் அவசர அவசரமாக தலையசைத்தாள். 

இதை பார்க்கத்தானே இவ்வளவு தூரம் வந்தான்! 

அன்றைய தினம் மிகவும் இனிமையாக இருவரும் கழித்தார்கள். அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான். அவளும் அப்படியே!

பிரியும் நேரம் நெருங்க நெருங்க, தொண்டை அடைத்தது… இருவருக்கும். விட்டு விலக மனமே இல்லை. 

அந்த அந்திமாலை நேரம், கடற்கரையில் சலசலப்புடன் கரையைத் தொட்டு மீண்ட அலைகளுக்கு இணையாக, இருவரின் மனமும் சலசலத்தது!

பிரிய மனமே இல்லாமல், உள்ளத்தில் பாரத்தை ஏற்றிவைத்ததுபோல வேதனையுடன் இருவரும் பிரிந்தார்கள். 

தீரன் திவ்யாவுடன் ஊருக்கு கிளம்ப, அவளை அழைக்க சென்றான்!

4 thoughts on “உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -3A

  • பூங்குழலி இராஜன்

    Superb,, 1 lovestory ke polandhu kattuveenga, idhula 3 iruku, so yengluku triple dhamakka❤❤❤❤❤

    • Preethi S KarthikPost author

      Awwe 😍 Yeah, three types of love da 😍 thanks a lot…

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved