என்னோடு நீ உன்னோடு நான் – 8

என்னோடு நீ உன்னோடு நான் – 8

அவனின் அருகாமை, கூடவே அவனுடைய கண்கள் அவளை ஊடுருவின. அவன் கண்களின் தீண்டலில், அவள் விழி விரித்து அவனை பார்த்த நொடி, அவளின் கட்டுப்பாட்டையும் மீறி… ஒரு நொடி அவளுடல் சிலிர்த்தது.

“ஏதாவது நினச்சுட்டே நடந்தா இப்படி தான் ஸ்லிப் ஆகும். மைண்ட் யுவர் ஸ்டெப். இல்லாட்டி சறுக்கி விட்டுடும்” என்றான் அவளை விடுவித்து.

“நான் எதையும் நினைக்கல” இதழோரம் புன்னகையுடன் அவள் பொய் பேச, பதிலுக்கு புன்முறுவலிட்டு முன் நடந்தான் அவள் கையை விடாமல்.

ஆனால் மனதிலோ சலசலப்பு. அவள் புன்சிரிப்பும், ஆழமான பார்வையும் அவனை ஏதோ செய்தது.

அப்போது திடீர் ஞாபகமாக ‘அவள முன்னாடியே பாத்திருக்கேன்னு இப்போ சொல்லலாமா…’ என்று எண்ணியபடி… “நிலா நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட் நீ தப்பா எடுத்துக்கக்கூடாது” என்றான் சற்று தயக்கத்தோடு.

“என்ன ஒரே சஸ்பென்ஸா இருக்கு?! சொல்லுங்க. நான் நினைக்கறத சொல்றீங்களானு பார்ப்போம்” என்றாள் புன்னகை மாறாமல்.

“ஹே, நீ என்ன நினைக்கற? அத சொல்லு…” நின்று அவளைத்திரும்பிப் பார்த்து கேட்டான்.

“ஹலோ நீங்க தான் ஸ்டார்ட் பண்ணீங்க. சோ, நீங்க சொல்லுங்க” என்றாள் புருவத்தை உயர்த்தி.

அதில் ஒரு நொடி விழுந்து எழுந்து, பின் “ஹ்ம்ம்… உன்ன நான் கோவில்ல மொதல்ல பார்க்கல. அதுக்கு முன்னாடியே உன்ன பார்த்துருக்கேன்” என்றான் அவளைப்பார்த்து அவளின் உணர்வுகளை அறிய.

“ஓ அப்படியா!” என்றாள் சின்ன சிரிப்புடன்.

இப்போது அவள் நடக்க ஆரம்பிக்க… இந்த பதிலை அவளிடம் எதிர்பார்க்காதவன், அவளை இரண்டடியில் நெருங்கி…  “எதுக்கு சிரிக்கிற?  நான் நேத்து உன்ன உதவும் கரங்கள் ஹோம்ல பார்த்தேன்” 

“எனக்கு தெரியும்” என்றாள் தோள்களை குலுக்கியபடி.

அவனோ அதிர்ந்து, நடையை நிறுத்திவிட்டு, “வாட்? உனக்கு எப்படி தெரியும்? பொய் சொல்லாத” என்றான் அவசரமாக.

“வாங்க நடந்துட்டே பேசுவோம்… அண்ட் ஆதி எனக்கு இந்த வாங்க போங்கலாம் செட் ஆகல. உனக்கு ஒகே தானே நான் நார்மலா பேசினா?” கண்சிமிட்டி அவள் கேட்க, “அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு எப்படி தெரியும் அத சொல்லு…” என்றான் படபடப்புடன்.

“நான் அந்த பொண்ணுங்கள ஹோமுக்கு கூட்டிட்டு போறப்ப ஒரு கார் எங்களை பின்தொடர்ந்தது. கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஒருவேளை அந்த கடத்தல்காரர்களோனு தோணுச்சு.

ஹோம் போனதுக்கப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. அவங்க கிட்ட பேசிட்டு திரும்பறப்ப யாரோ கதவு பின்னாடி மறஞ்சுகிட்ட மாதிரி தெரிஞ்சது.

நான் வெளிய வந்தப்புறம்… அந்த மறஞ்சுட்டு இருந்தவர் வெளியே யாரும் பார்க்காத மாதிரி வந்தத பாத்தேன். எப்படியும் ஹோம்ல அவர விசாரிப்பாங்கனு கிளம்பிட்டேன். அந்த அவரு யாரு…” புருவத்தை மேலும் கீழும் ஏற்றி இறக்கி புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

“அப்போ நீ என்னை பார்த்துட்டயா?!” அவன் ஆச்சர்யத்துடன் கேட்க… “ஹ்ம்ம். அதுமட்டும் இல்ல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு ஹோமுக்கு கால் பண்ணேன். உன்ன பத்தி கேட்டேன்.

நீ என்னை தப்பா நினச்சசுட்டு அந்த பொண்ணுங்கள காப்பாத்தணும்னு வந்ததா இன்ச்சர்ஜ் சொன்னாங்க. சோ உன் மேல இருந்த டவுட் அப்போ போச்சு” என்றவுடன், “அப்போ போச்சுன்னா… இப்போ என்மேல டவுட் இருக்கா?” அவள் கண்களை ஊடுருவியபடி கேட்டான்.

சில நொடிகள் மௌனித்த நிலா, “நீ கோவிலுக்கு வந்து என்னை இழுத்துட்டுப் போனப்ப, ஏதோ ப்ளானோட வந்துருக்கயோனு நினச்சசேன். பட் இங்க வந்தப்புறம்… நீ உன்னப்பத்தி கவலைப்படாம, என்னை அவங்ககிட்ட இருந்து காப்பத்தினப்ப சந்தேகம் சுத்தமா போச்சு” என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கலங்கியது,

அதை பார்த்த ஆதி, அவளை சகஜமான நிலைக்கு மாற்ற “அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி, உன்ன தூக்கிட்டு போலாம்னு வந்துருக்கேன். நான் டாக்டர் இல்ல ரவுடி” என்றான் கண்களில் புன்னகையை ஏந்தி.

அதை கேட்டவுடன் சட்டென சிரித்த நிலா “நான் கொஞ்சம் வெயிட் அதிகம். தூக்கிட்டு போறது கஷ்டம்” என்றவள், “கடைசியா சொன்னயே அதுதான் ஃபெர்ஃபெக்ட். நீ ரவுடி மாதிரி தான் இருக்க” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

இருவரும் பேசிக்கொண்டே கொஞ்ச தூரம் செல்ல, திடீரென வானத்தை மேகம் மூடிக்கொண்டது!

சிறிது நேரத்தில் மழை தூர ஆரம்பித்தவுடன், இருவரும் முழுமையாக நனையும்முன் சட்டென சிறிய செடிகள் நிறைந்த புதரில் ஒதுங்கினர்.

“கீழ வெயில் அடிச்சது… இப்போ திடீர்னு மழ பெய்ய ஆரம்பிச்சுடுச்சு” என்றாள் எதிர்பாராத மழையை பார்த்து.

“ஹ்ம்ம்… இனி மேல ஏறுறப்ப கொஞ்சம் கவனமா தான் ஏறணும்” என்றான் மழையை கணித்து.

சிறிது நேரம் கழித்துத்தான் அவள் உணர்ந்தாள் அந்த இடம் எவ்வளவு குறுகிய இடம் என்று. அவளின் மிக அருகில் அவன்… அதாவது அவனின் இதயத்துடிப்பு கேட்கும் தூரத்தில்.

கொஞ்சம் பின் தள்ள முயற்சித்தும், அந்த சின்ன இடத்தில் அவளால் செல்ல முடியாமல் நிற்க… அந்த அருகாமை அவளை ஏதோ செய்தது. அவனை ஏறிட்டாள், அவன் மழையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்போ நிக்கும்னு தெரில” மழையை பார்த்தபடி அவளை பார்த்த போது, சிறிது நடுக்கத்துடன் ஆடை கொஞ்சம் நனைந்திருந்ததையும் பார்த்தான்.

“ஹே யு ஆர் வெட்… இரு” என்று அந்த சிறிய இடத்தில் கஷ்டப்பட்டு அவனுடைய Rucksack கழற்றி அவளிடம்  தந்துவிட்டு, அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டை கழற்ற முயற்சிக்கும் போது… “பரவால்ல ஆதி. ஐம் ஒகே. இப்போ எதுக்கு இவளோ கஷ்டம்” என்றாள்.

அவள் பேசுவதை எதையும் காதில் வாங்காமல், அதை கழற்றி அவளிடம் கொடுத்தான்.

“இன்னும் நம்ப தூரமா போகவேண்டியது இருக்கு நிலா. சிக் ஆயிட்டா என்ன பண்றது” என்றான் மீண்டும் மழையை பார்த்து.

அவளுக்கும் அந்த குளிருக்கு அது தேவையாக  இருந்தது.

சில நிமிடங்களில் மழை கொஞ்சம் நின்றிருந்ததை உணர்ந்தவன், அவளை பார்க்க, அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மூச்சுக்காற்று அவன் இதயத்தை வருடும் நெருக்கத்தில் அவள்.

அவள் கூந்தலின் நறுமணம்… அவளின் சின்ன தீண்டல்… அந்த வானிலை… அவள் முகத்தில் ஆங்காங்கே தெரிந்த சிறு மழை துளிகள்… அங்கும் இங்கும் அலையும் கண்கள்… அந்த திடீர் மழையின் குளிரினால் நடுங்கும் இதழ்கள்… அவள் முகத்தை அப்படியே கைகளால் அள்ளிக்கொள்ள எண்ணியவன் மனதில் இப்போது தடுமாற்றம்.

சட்டென சுதாரித்துக்கொண்ட ஆதி, புதரின் வெளியே சென்று மழை நின்றுவிட்டதை உறுதி செய்துக்கொண்ட பின் “நின்னுடுச்சு… போலாமா?” என்றவுடன் இருவரும் புறப்பட்டனர்.

இருவரும் அருகருகில் நடக்க, “கவனமா ஏறணும் நிலா இனிமே. நீ வேணும்னா என் ஷூஸ் போட்டுக்கறயா?  ஸ்லிப்பர்ஸ் சிலநேரம் தடுக்கி விடும். அதுவும் மழை வேற வந்துருக்கு”

“இப்போ எதுவும் மாத்த வேண்டாம் ஆதி. நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீ அடிக்கடி இப்படி ட்ரெக்கிங் போவியா”

“ப்ரேக் கிடைக்கறப்ப ட்ரெக் பண்ணுவேன். சிட்டி லைப்’ல இருந்து கொஞ்சம் பீஸ்ஃபுல்’லா இருக்கும்”.

“ம்ம்ம்.. ஜென்ரல் ஃபிசிஷியன்?” அவள் கேட்க “ஹும்ஹும்  கார்டியாலஜிஸ்ட்” என்றான்.

“தட்ஸ் க்ரேட்” என்ற நிலா, “உன்னை பார்த்தா சுத்தமா தெரியல. ரௌடி போல இருக்க” என்றாள் கள்ள சிரிப்புடன்.

“உன் பேருக்கும், உனக்கும் கூட தான் சம்மந்தமே இல்ல. நிலானா அமைதியான பெயர்… ஆனா நீ பண்றதெல்லாம் அப்படியே ஆப்போசிட். தப்பு நடந்தா பொங்கிடறயே” என்று நிறுத்தி அவளைப்பார்த்து… “உனக்கு அடாவடி இல்ல பத்திரகாளின்னு பேரு வச்சிருந்தா கரெக்ட்டா இருக்கும்” என்றான் கண்சிமிட்டி.

“ஹாஹாஹா… இது ஜோக்கா. அடுத்த வாட்டி கொஞ்சம் நல்லா ட்ரை பண்ணுங்க ஆதி” என்றாள் அவளும் விடாமல்.

“இன்னொன்னு சொல்லவா. அரிசி மூட்டைங்கிற பேரு கூட ஒகே” சிரிப்பை அடக்க முயற்சித்து சிரித்துவிட்டான்.

பின் அவள் முறைப்பதை பார்த்து… “ஐயோ… பயமா இருக்கு” என்று மறுபடியும் அவளை சீண்டினான்.

அவளுக்கும் இந்த சீண்டல் பிடித்திருந்ததது.

“பட் ஐ மஸ்ட் டெல் திஸ் நிலா. நீ நிஜமாவே கிரேட். உன்னோட வேலை பிளஸ் NGO வேலை. ரெண்டையும் நீ சூப்பரா மேனேஜ் பண்ற” என்று சொல்லிவிட்டு… “இப்போ சிரிக்கலாமே” என்றான் அவளை நிறுத்தி. இப்போது சிரித்தாள்.

பின் “தேங்க்ஸ், வீக் எண்ட் சும்மா தான இருப்போம். அத ப்ரொடக்டிவா (productive) ஸ்பென்ட் பண்ணலாம்னு தான். ஆமா, நீ எப்போவாவது இது போல ஆக்டிவிட்டீஸ்’ல இன்வால்வ் ஆகிருக்கயா? உன்னோட வேலைய தவிர்த்து” அவள் கேட்டபோது தான் அவனுக்கும் தோன்றியது… இதுவரை அப்படி எதுவும் செய்யவில்லை என்று.

தோள்களை குலுக்கியபடி… “பெருசா எதுவும் பண்ணல. பட் நீ சொன்னதுக்கப்புறம் தோணுது… ஏதாச்சும் பண்ணலாமேனு” என்றான்.

“ஹ்ம்ம்… நம்ம நாலெட்ஜ் மத்தவங்களுக்கு யூஸ் ஆகுதுன்னா, அதை ஷேர் பண்றப்ப கிடைக்கற திருப்திய விட வேறென்ன பெருசா கிடைக்கபோகுது”

அவள் சாதாரணமாக சொன்னாள் ஆனால் அவன் உள்மனதை அது அடைந்தது.

அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவனை வெகுவாக தாக்கியது. மேலும் மேலும் அவள் புறம் அவன் மனது சாய்ந்தது. ஈர்ப்பை தாண்டி அவனை ஏதோ ஒன்று ஈர்த்தது.

“ஹ்ம்ம். கண்டிப்பா பண்ணலாம். என் கண்ண திறந்ததுக்கு மிக்க நன்றி” என்றான் புன்முறுவலுடன்.

அவளும் மெல்லிய புன்னகையுடன் “நீ மலையாளியா ஆதி?” என்றவள், “உன் ஸ்லேங் மலையாளி மாதிரி இருக்கு. அதான்” என்றாள் அவனின் கேள்வியான முகத்தை பார்த்து.

“ஹ்ம்ம் அம்மா எர்ணாகுளம். அப்பா சென்னை. லவ் மேரேஜ். சோ ரெண்டு பேரோட லாங்வேஜ் சாயலும் இருக்கும் என்கிட்ட” என்றான்.

இருவரும் பேசியபடி கொஞ்சம் தூரம் ஏறிய பின்… “இங்கெல்லாம் ஈரமாயில்ல ஆதி. ஒகே வா இருக்கு. மழ பெருசா வரல போல” என்றாள்.

“ஹ்ம்ம் பாஸிங் க்ளவுட்ஸ். அந்த பக்கம் கொஞ்ச தூரத்துல பீச் இருக்காமே” என்றான்.

சில மணித்துளிகளுக்குப் பின், ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு மரத்தின் அடியில் தஞ்சம் புகுந்தனர் இருவரும்.

இருவரும் உட்கார நினைத்த போது, அந்த அமைதியான இடத்தில் சருகுகள் மிதிபடும் சத்தம். அதைக்கேட்டு இருவரும் சற்று திடுக்கிட்டனர்!

 

2
1

4 thoughts on “என்னோடு நீ உன்னோடு நான் – 8

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved