என்னுள் நீ வந்தாய் – 18

என்னுள் நீ வந்தாய் – 18:

அஜய்யை அங்கே பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் கவிதாவிற்கு.

அவளைப் பார்த்த அஜய் அவளுடைய முகத்தை வைத்தே கொஞ்சம் புரிந்துகொண்டான். இருந்தும் அவள் வாயால் உறுதி செய்துகொள்ள நினைத்தான்.

“எப்படி இருக்க அஜய்?” கேட்டுக்கொண்டே அவன் எதிரில் உட்கார்ந்தாள் கவிதா.

“நல்லா இருக்கேன் இ… கவிதா. நீ எப்படி இருக்க” கவனமாக ‘இனி’ என்றழைப்பதைத் தவிர்த்தான்.

அதை புரிந்துகொண்டவள் மெலிதாகப் புன்னகைத்து, “சந்தோஷமா இருக்கேன்” என்றாள் அதே புன்னகையுடன்.

சில நொடிகள் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘அவன் தானே அழைத்தான் அவனே பேசட்டும்’ என்றிருந்தாள் கவிதா. பின் அவனே அந்த மௌனத்தைக் கலைத்தான்.

“அகிலன் எப்படி இருக்காரு?” என கேட்க, நெற்றி சுருங்கப் புன்னகைத்தவள், “பேரெல்லாம் நியாபகம் வச்சுருக்க… ஹ்ம்ம். நல்லா இருக்கார்” என்றாள்.

“உன்ன இப்படி பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கவிதா. உண்மைய சொல்லனும்னா நான் கொஞ்சம் பயந்தேன். பழச மறந்துட்டு இந்த லைஃப் நீ ஏத்துக்ககும்ன்னு. Hope you have moved on” தயங்கி வார்தைகள் வந்தது அவனிடமிருந்து.

அவன் என்ன நினைத்து வந்துள்ளான் என அவளுக்கு தெரியாது, ஆனால் அவன் கண்களில் எப்போதும் தெரியும் அந்த காதல் இன்னமும் இருப்பதை கண்டாள். தன்னுடைய தற்போதய நிலைப்பாட்டைத் தெளிவாக சொல்லவிடவேண்டும் என நினைத்தாள்.

அவனை பார்த்துப் புன்னகைத்து, “ஹ்ம்ம். யு நோ சம்திங் அஜய். ஃப்ர்ஸ்ட் லவ்… யாராலயும் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது. நானும் அப்படித்தான். ஆனா அதவிட நம்மள நேசிக்கறவங்க கிடைக்கும் போது, அந்த ஃப்ர்ஸ்ட் லவ் ஒன்னும் இல்லாம போய்டும்.

இப்போகூட ரொம்ப நாள் கழிச்சு உன்ன பார்த்தப்ப ஒரு இனம் புரியாத சந்தோஷம்… பட்டர்ஃப்ளை எஃபெக்ட்ன்னு (butterfly effect) சொல்வாங்களே அதுபோல. ஒரு க்ரஷ் (crush) நம்மகிட்ட பேசும்போது தோணுமே அதுமாதிரி. பட் இதெல்லாம் ஒரு தற்காலிக ஃபீல்.

நிஜம் என்னன்னா… நம்ம மனசு நிறஞ்சவங்கள, நம்ம உணர்ச்சிகளைப் புரிஞ்சுகிட்டவங்கள… ரொம்ப நாள் கழிச்சு பாக்கறப்ப, இந்த பட்டாம்பூச்சி ஃபீலிங்ஸ்’லாம் வராது.

சந்தோஷத்துல தொண்டை அடைக்கும். அழுக வரும். கோவம் வரும். அந்த ஃபீல்… ப்ச் அது வேற. நீ மொதல்ல துபாய்ல இருந்து வந்தயே ரெண்டு வருஷம் கழிச்சு அப்போ இருந்த மனநிலை இப்போ இல்ல.

இன்னும் தெளிவா சொல்லனும்னா, நீ என்னை அவாய்ட் பண்ணிட்டு போனப்ப, உன்ன சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சேன்… உனக்கே தெரியுமே என் கேரக்டர் பத்தி… உன்ன வெறுத்தேன் ஆனா உன்னோட நினைவுகள் ரொம்பவே வலி தந்துச்சு.

அப்படி இருந்த சமயத்துல தான் எனக்குப் பெரிய சப்போர்ட்’டா அகில் இருந்தான்.

நல்லா படிக்கற பொண்ணு முக்கியமான எக்ஸாம்ல fail ஆயிட்டா அதோட மனநிலை எப்படி இருக்குமோ அதுபோல தான் இருந்தேன். ஒரு நல்ல parents என்ன பண்ணுவாங்கன்னா… ‘நீ fail ஆயிட்ட’னு குத்திகாமிச்சு பேசாம, ‘இதோட வாழ்க்கை முடிஞ்சுடலை’ன்னு சொல்லி அரவணைச்சு பாத்துக்குவாங்க…

அதுபோல என்னை அரவணைச்சு கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துட்டான் அகில்.

நான் கொஞ்சம் கண்கலங்கினா, பதறிடுவான். எதுக்காக ஃபீல் பண்றேன்னு கூட புரிஞ்சுப்பான். இந்த கொஞ்ச காலத்துல என்னோட இன் அண்ட் அவுட் தெரிஞ்சுட்டு, என்கூடவே என்னோட வலியெல்லாம் சேர்ந்து தாங்கிட்டு இருக்கான்.

அப்போ தான் தோணுச்சு நம்ம கண்ணீர்க்கூட நம்மள… நம்ம உணர்வுகளை மதிக்கறவங்களுக்கு தான் சிந்தணும்ன்னு புரிஞ்சப்ப, உன்ன நினச்சு வந்த கண்ணீர் கூட நின்னு போச்சு. அந்த சமயம் உன் நினைவுகளும் மனசுல இருந்து மங்கிப்போச்சு” ‘உணர்வுகளை மதிப்பவர்களுக்கு’ என்று அவள் சொன்னபோது அஜய்யின் மனது வலித்தது. கத்தியாக கிழித்தது. அமைதியாக இருந்தான்.

“இப்போ பழசெல்லாம் நினச்சா, வெறும் ஒரு ஸ்மைல் தான் வரும்… வலி இல்ல. ஏன்னா, நான் கொஞ்சம் மனசு உடைஞ்சு போய் ஃபீல் பண்ணாலும், அகிலும் ஃபீல் பண்ணுவான். சினிமேட்டிக்’கா பேசறமாதிரி இருக்கும். பட் அது தான் உண்மை” என சொல்லும்போது கண்கள் கலங்கியது கவிதாவிற்கு.

அஜய்யின் மனது தவித்தது… அவள் கலங்குவதை பார்த்து. ஆனால் என்ன செய்யமுடியும்? அது ஆனந்தத்தால் வரும் கண்ணீராயிற்றே…

அவள் மெளனமாக, அவன் தொடர்ந்தான். “ஹ்ம்ம் ரொம்ப நல்லவரு. நான் அத அவர்கிட்ட பேசின முதல் நாளே புரிஞ்சுக்கிட்டேன்” என்றான். அவளுக்குப் புரியவில்லை.

“நீ அகில்ட்ட பேசினயா?” கேள்வியாகப் பார்த்தாள் அவனை.

“ஏன் அகிலன் சொல்லலையா?” அஜய் கேட்க இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

‘அதிகமாக சொல்லிவிட்டோமோ’ என்று யோசித்தவன், பின் இதில் மறைக்க ஒன்றும் இல்லை என நினைத்து சொல்ல ஆரம்பித்தான்.

“அன்னைக்கு அகிலன் நம்பர்ல இருந்து கால் வந்து நீ பேச மாட்டேன்னு சொன்னப்ப நான் கொஞ்ச நேரம் கழிச்சு அவருக்கு கால் பண்ணேன்”

“எதுக்கு” புரியாமல் கேட்டாள் கவிதா. அஜய் வெற்றுப்புன்னகையுடன், “உன்ன கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி” என்றான். கவிதா அதிர்ந்தாள்.

அவள் புரியாமல் பார்க்க… அதே உணர்ச்சி அற்றப் புன்னகையுடன் “என்னன்னமோ நடந்துருச்சு கவிதா. உன்கிட்ட சொன்னமாதிரி நான் இந்தியா வந்து எல்லாத்தயும், எல்லாருக்கும் புரிய வக்கலாம்ன்னு நினைச்சுட்டு இந்தியா வந்தேன்.

சென்னைல வந்து இறங்கினவுடனே கால் வந்துச்சு. அம்மாவ ஹாஸ்பிடல்’ல அட்மிட் பண்ணிருக்காங்க. சூசைட் அட்டெம்ப்ட்’னு சொன்னாங்க. தூக்கி வாரிப்போட்டுச்சு.

கவிதா அதை கேட்டு இன்னமும் அதிர்ந்தாள். அவன் தொடர்ந்தான்.

“உனக்கு சர்ப்ரைஸ்’ன்னா பிடிக்கும்ன்னு உன்கிட்ட சொல்லாம இந்தியா வந்தேன். ஆனா இதக்கேட்ட உடனே திருச்சி கிளம்பிட்டேன். அங்க போனப்பறம் தான் தெரிஞ்சுது என்னென்னமோ நடந்துருக்குன்னு.

அனிதாவை கல்யாணம் பேசின இடத்துல, அப்பா பிசினஸ்’க்கு ஹெல்ப் பண்றதா சொன்னாங்களாம். அப்புறம், அவங்க சொந்தகாரப்பொண்ண எனக்கு கல்யாணம் பேச வந்துருக்காங்க. அந்த பொண்ணுகூட என்கிட்டே பேசுச்சு, நான் இந்தியா வர்ரதுக்கு ரெண்டு நாள் முன்னாடி.

அவகிட்ட நான் ‘உன்ன லவ் பண்றதா சொன்னேன்’. அவ அத அவங்க வீட்ல சொல்லி, அது அனிதாக்கு பார்த்த மாப்பிளை வீட்டுக்கு தெரிஞ்சு, கேஸ்ட் மாத்தி கல்யாணம் பண்ணப்போற வீட்ல பொண்ணு வேணாம்ன்னு எங்க வீட்ல சொல்லிட்டாங்களாம்.

அத கேட்டுட்டு அம்மா அந்த முடிவை எடுத்துட்டாங்களாம்” என சொல்லி வெறுமையாக புன்னகைத்தான்.

பின், “அம்மா உடம்பு கொஞ்சம் சரியான உடனே, அனிதாவோட மாப்பிளை வீட்ல இருந்து ஹாஸ்பிடல் வந்தாங்க. அப்போ நானும் அங்க தான் இருந்தேன்.

அனிதா கல்யாணம் நடக்கணும்ன்னா நான் உன்ன மறக்கணும். ஒருவேளை அவ கல்யாணம் முடிஞ்சப்பறம்… நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறத பத்தி யோசிச்சேன்னா, அவளை எங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

இத கேட்டுட்டு அம்மா மறுபடியும் ஹாஸ்பிடல்ல…” அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண்கள் கலங்கியது. தண்ணீர் குடித்து தன்னை சமன் செய்து கொண்டான்.

கவிதா கண்களும் கலங்கியது. “ஆண்ட்டி எப்படி இருக்காங்க?” மனது தாளாமல் கேட்டாள்.

“ஹ்ம்ம் அவங்களுக்கென்ன… நினைச்சதை நடத்திட்டாங்களே” என மறுபடியும் விரக்தியுடன் பேசினான்.

சில நிமிடங்கள் கழித்து, “அந்த ஒரு வாரமா தான் நீ எனக்கு கால் பண்ணிட்டே இருந்த. எனக்கு இத எப்படி எடுத்துட்டு போறதுன்னு தெரியல. அந்த சமயத்துல தான் அகிலன் கால் பண்ணாரு. நீ பேசமாட்டேன்னு சொன்ன.

ஏனோ அவர் மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. உன்ன புரிஞ்சுட்டு உனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி தோணுச்சு. உனக்காக என்கிட்ட பேசற அவரோட… உன் லைஃப் அமைஞ்சதுன்னா கண்டிப்பா உன்ன சந்தோஷமா, நல்லா பார்த்துப்பாருன்னு தோணுச்சு.

கொஞ்ச நேரம் கழிச்சு அவருக்கு கால் பண்ணேன். உன் அப்பா உடம்பு முடியாம இருக்கறதா சொன்னாரு. உன் மனசுல முழுக்க நான் இருக்கேன். நான் வருவேன்னு நீ காத்துட்டு இருக்கன்னு சொன்னாரு.

அப்போ தான் இதெல்லாம் அவர்கிட்ட சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு கேட்டேன்.

மொதல்ல ‘நீ பாவம் எப்படியாவது எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்’ன்னு தான் சொன்னாரு. நான் தான் ‘அதுக்கு வாய்ப்பே இல்ல என் வாழ்க்கை முடிஞ்சது. கவிதா வாழ்க்கையாவது நல்லாயிருக்கணும்’ன்னு சொன்னேன்.

மனுசுல ஏதோ ஒரு மூலைல கொஞ்சம் நெருடல் இருந்துச்சு நீ சந்தோஷமா இருக்கையான்னு. பட் இப்போ உன்ன பார்த்தவுடனே, உன் கூட பேசினவுடனே நிம்மதியா இருக்கு” என ஆத்மார்த்தமாகப் புன்னகைத்தான் அஜய்.

கவிதாவும் புன்னகைத்தாள்.

“ட்ரு அஜய். அகில் தரவ் ஜென்டில்மேன். ஐம் லக்கி டு ஹவ் ஹிம் இன் மை லைஃப் (உண்மை அஜய். அகில் ஒரு பக்கா ஜென்டில்மேன். உண்மையாவே நான் அதிர்ஷ்டசாலி)” என்றாள்.

தன்னை பற்று அனைத்தையும் தெரிந்து கொண்டு, காதலனே திருமணம் செய்துகொள்கிறாயா? என்று கேட்டதைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், திருமணம் செய்துகொண்டவனை நினைத்து மனம் நெகிழ்ந்து.

இப்போதே அவனை பார்த்து ‘நீ போதும் எனக்கு’ என்று சொல்ல ஆசை எழுந்ததது.

சிறிதுநேர மௌனத்திற்கு பின், கவிதா தொடர்ந்தாள்.

“நீயும் உனக்கான வாழ்க்கையை அமச்சுக்கோ அஜய். எல்லாமே டெஸ்டினி (destiny). நம்ம கைல என்னை இருக்குன்னு சொல்லு? எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஆரம்பிக்கறது கஷ்டம் தான். பட் அதுதான் வாழ்க்கை.

நீ சொன்ன மாதிரி… life has to move on. இல்லையா. Waiting to hear good news from you soon” புன்னகைத்தாள் கவிதா.

அஜய்யுடன் பேசி முடித்துவந்தவளின் மனது முழுவதும் அகிலன் மட்டுமே இருந்தான்.

அவனை பார்த்தாகவேண்டும் என்ற ஆசை இன்னமும் அதிகமானது. அப்போது அவள் அறியாதது, அவன் சென்னையில் இல்லை துபாய் சென்று விட்டான் என்று.

மாலையும் அவளை அலுவலகத்தில் இருந்து அழைத்துச்செல்ல அகிலன் வரவில்லை. கார் அனுப்பிவைத்திருந்தான்.

‘எங்கே சென்றான்’ என்று குழப்பத்துடன் வீடு வந்தபோது, அவன் எழுதிவைத்திருந்த லெட்டர் அவள் கண்ணில் பட்டது!

11
3
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved