என்னுள் நீ வந்தாய் – 20A

என்னுள் நீ வந்தாய் – 20A

கவிதா எதிரில் வந்து நின்றான் அகிலன். முதலில் அவன் கண்ணில் பட்டது அவள் நெற்றியிலிருந்த காயம்.

கை பரபரத்தது. ஆனாலும் ஒரு வித தயக்கம். முன்பு அவளிடம் நடந்துகொண்டது நினைவிற்கு வர, சங்கடமாக இருந்தது.

வார்த்தை வரமறுக்க, தட்டு தடுமாறி “பேபி” என்றான்.

அவன் அழைத்தது, அதில் இருக்கும் தவிப்பு, காதல், ஆசை… புரிந்தது அவளுக்கு.

அவன் அருகில் சென்று நின்றாள். ஏனோ அவளாலும் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணில் மட்டும் கண்ணீர் நிற்கவே இல்லை. கண்கள் அவனை விட்டு எங்கும் நகலவும் இல்லை.

அதற்கு மேல் கட்டுப்படுத்தமுடியாமல், “அழாத ப்ளீஸ்” என்றவன்… முதல் முறையாக, அவன் கை கொண்டு நெற்றியில் இருந்த காயத்தை வருடி, “ரொம்ப வலிச்சதா?” என கேட்க, எப்போதும் போல் எதிர்மறையாக இல்லை என்று தலையசைத்தவள், பின் ஆம் என்பது போல் தலையசைத்தாள்…

“என்னால தானே விழுந்த? இந்த டைம்’மும் நான் குடுத்த ஸ்ட்ரெஸ்’னால… இல்லையா பேபி?” மிகவும் உடைந்த குரலில் சொன்ன நொடி, ‘இப்போதுகூட அவனை தவறென்கிறானே’ என மனம் தாளாமல், அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

அவளுக்கு அழுகை நிற்கவில்லை. அவள் தோளோடு அணைத்துக்கொண்டு, “அழாத டா! உடம்பு முடியலன்னா என்னை கூப்பிடனும்ல? ஏன் ஹாஸ்பிடல்’க்கு தனியா போன?” குனிந்து அவள் முகம் பார்த்து… “ரொம்ப பயந்துட்டேன் பேபி… நீ இங்கே இல்லன உடனே” கவலை கலந்த கோபத்துடன் சொல்ல…

அவளிடம் இருந்து பதில் வந்தால் தானே. விசும்பல் மட்டும் கேட்டது.

“அன்னைக்கு உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துட்டேன். அதுக்கான பனிஷ்மென்ட் தான் இது எனக்கு. சாரி டா” அவன் மன்னிப்பு கேட்க… அவள் இன்னமும் அவனுள் ஒண்டிக்கொண்டாள்.

“அரவிந்த் சொல்லலனா எனக்கு எதுவுமே தெரிஞ்சிருக்காது. நீ அஜய் கூட அந்த ஹோட்டல்’க்கு வந்தேன்னு நினச்சேன்” என சொன்னதும் தன்னை சட்டென அவனிடமிருந்து விடுவித்து…

“வாட்? அஜய் கூடவா?” கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “ஏன்டா உன்னப்பார்க்க அவ்ளோ ஆசையாவந்தேன்…” என்று சொல்லிக்கொண்டே போக… “என்னது டா வா?” கலங்கிய கண்களுடன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“ஆமாம்! டா தான். என் கண்ணுல இருந்த ஆசை, தவிப்பு அதெல்லாம் உனக்கு தெரியல?”

“பேபி! சத்தியமா கண்ணப்பார்த்து தெருஞ்சிக்கற அளவுக்கு என்கிட்ட சரக்கில்ல” பாவமாக அவன் சொல்ல… அவன் சொன்னதில் அவளுக்கு சிரிப்பு வர, அதைக் காட்டிக்கொள்ளாமல்…

“சரி அது ஓகே ஆனா அன்னைக்கு… நான் சாரீல” என்று திரும்பி கழற்றியெறியப்பட்ட புடவையைப் பார்க்க, அது அங்கில்லாமல், சரியாக மடிக்கத்தெரியாமல் அதை மடித்து, தலையணைப் பக்கத்தில் வைத்திருந்தான் அகிலன்.

அவன் புடவையை கண்டுகொண்டான்… அதை மடித்துவேறு வைத்துள்ளான் என நினைத்தபோது மனம் சில்லென்று இருந்தாலும்., கோபமாக இருப்பதுபோல் அவனைப் பார்க்க, அவன் முகத்தைக் கெஞ்சலாக மாற்றினான்.

“மரமண்ட…!” என அவள் திட்ட ஆரம்பிக்கும்முன், “ஆமா நீ மட்டும் என்னவாம்? அதே மரமண்ட. உன்னையே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். நான் போய் இன்னோரு பொண்ண எப்படி? அப்போ அவ்ளோதான் நீ என்னை புருஞ்சிக்கிட்டது” கொஞ்சம் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அவன் அருகில் சென்று அவன் சட்டைப் பட்டனை திருகியவாறே…

“சாரி! உடம்பு சரியில்லாம, கண்டதையும் யோசிச்சு குழம்பிட்டேன். நேத்து கொஞ்சம் தெளிவானவுடனே தான் புரிஞ்சது” என அவள் சொன்னவுடன், “அவசரம் வேறென்ன” என்றான் அவள் முகம் பாராமல்.

“அட! அவசரத்த பத்தி நீங்க சொல்றீங்களா மிஸ்டர் அகிலன்! நீங்களும் தான் அவசரக்குடுக்கை. ஒழுங்கா நீ துபாய் கிளம்பாம இருந்திருந்தா…” என சொல்லிக்கொண்டிருக்கும் போது, சரியாக தாமஸ்… “உள்ள வரலாமா?” கேட்டுக்கொண்டே வந்தார்.

இருவர் முகத்திலும் சோர்வு, கலங்கிய கண்கள், அதையும் தாண்டி ஒரு புன்னகை தெரிந்தது.

“இந்தாம்மா கவி” காபியை கொடுத்தவர், “ரெண்டு பேரும் ரொம்ப டையர்ட்’டா தெரியறீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் உங்களுக்கு பிரேக் ஃபாஸ்ட் செஞ்சுடறேன்” என்றுவிட்டு சென்றார்.

“நீ குடிச்சாச்சா?”, அவள் கேட்டதற்கு முடிந்தது என்பதை போல் புன்னகைத்துக்கொண்டே தலையசைத்தான். முகத்தில் புன்னகை இருந்தாலும் அதே அளவிற்கு சோர்வாகவும் இருந்தான்.

“நானும் இப்போ தான் பார்க்கறேன். டயர்ட்’டா தெரியுற… நைட் தூங்கலயா?” அவனிடம் அவள் கேட்க, “ப்ச். இல்ல பேபி. எப்போ நீ… ‘என்னனை பார்க்க தான் வந்தே’ன்னு தெரிஞ்சதோ, உன்ன எப்போ பார்ப்போம்னு தான் தோணுச்சு”

அவள் கட்டிலில் உட்கார, அவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே காபியை குடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் கவனித்தான் அவள் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர், IV போடப்பட்ட இடத்தில்.

அவள் கையை மென்மையாகப் பிடித்துக்கொண்டு, “நீ சொன்னமாதிரி எனக்கு அவசரம் பேபி. சாரி டா… என்னால உனக்கு தான் கஷ்டம்”

அதற்கு அவள், “நானும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருக்கலாம். இதெல்லாம் நடக்கணும்ன்னு இருந்திருக்கு. நான் உனக்காக எவ்ளோ காத்துட்டு இருந்தேன் தெரியுமா… உன்கிட்ட மனசு விட்டு பேசணும்ன்னு. ஆனா நீ துபாய் கிளம்பி வந்துட்ட”

“என்ன பேசணும்ன்னு நினைச்ச ஸ்வீட்டி? இப்போ சொல்லேன்” கண்களில் ஆர்வத்துடன் கேட்டான்.

கிளாஸ்’சை டேபிளில் வைத்தவள், கதவைத் தாழிட்டுவிட்டு… “அப்போ இருந்திருந்தா சொல்லியிருப்பேன்… இப்போ முடியாது. நீ கொஞ்ச நேரம் தூங்கு” என்றவள்… படுக்கையை சரி செய்ய…

“சொல்லு பேபி… ப்ளீஸ்! அப்புறம் தூங்கறேன்”

‘இவன் விடமாட்டான். ஏதாவது செய்து தூங்க சொல்லவேண்டும்’ என நினைத்து…

“உஷ்ஷ். உனக்கு வேணாம். எனக்கு தூக்கம் வருது. சோ” என்றவள் படுக்கையைக் காட்டினாள்.

“ஓ ஓ சாரி சாரி. உனக்கு உடம்பு முடியலல்ல. நீ படு. நான் சேர்’ல உட்கார்ந்துக்கறேன்” அவன் எழுந்துகொள்ள,

அவள் மனதில் ‘அப்பா நல்லவனே’ என நினைத்துப் புன்னகைத்துக்கொண்டு, “ரெண்டு பேரும் படுக்கலாம்… படு” என்றுவிட்டு ஒரு பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.

அவன் தயக்கத்துடனே, “கீழ விழுந்துடுவ பேபி நீ…” என கூற,

“நான் பகல்ல டீப் ஸ்லீப் போகமாட்டேன். சோ நீ படு” அவள் அழுத்தமாகச் சொன்னவுடன், தயக்கத்துடனே படுத்தான்.

அசதி ஆட்கொள்ள, படுத்தவுடன் உறங்கியும் விட்டான். தூங்குவது போல் படுத்திருந்தவள், கண்திறந்து அவனைப் பார்த்தாள். முதல் முறை… இப்போது அவனைப் பார்க்கும் போது காதல் துளிர்த்தது.

இவன் தனக்கானவன் என்ற சந்தோஷம்…

“இனி வர காலம் முழுசும் உன்கூட சந்தோஷமான வாழ்க்கை வாழணும் அகில்” என முணுமுணுக்க, திடீரென அவள் பக்கமாக அவன் திரும்பினான்.

“ஐயோ எழுந்துட்டானோ?!” என்று அவசரமாகக் கண்களை அவள் மூட, அவனின் மூச்சு சீராக இருந்ததால் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறான் என்று மெதுவாகக் கண்திறந்தாள்.

ஆழ்த்த உறக்கம்… மறுபடியும் கண்கொட்டாமல் பார்த்தாள்.

அவனின் ஆளுமை… தூக்கத்திலும் தெளிவான முகம். படர்ந்த நெற்றி… அதில் கொஞ்சமே கொஞ்சம் புரண்ட கேசம். மூடியிருந்தாலும் தெரியும் நேர்த்தியான கண்கள்.

இரண்டு மூன்று நாள் வெட்டாமல் அடர்த்தியான ரோமங்கள்… முகத்தின் பக்கத்தில் திடமான புஜம்…

அதில் அவனோடு ஒடுங்கிக்கொள்ள ஆசைப்பட்டது மனது. படாதபாடு பட்டு மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு மெதுவாக எழுந்து வெளியே சென்றாள்.

தாமஸிடம், ‘அவனுக்கு எதுவும் செய்யவேண்டாம்… நன்றாக உறங்குகிறான்’ என சொல்லிவிட்டு லயாவின் அறைக்கு சென்றாள்.

அங்கே லயா, முகத்தில் ஏதோ போட்டுக்கொண்டிருக்க, கவிதாவை பார்த்தவுடன், “ஹே கவிதா. நீங்க தூங்கறீங்கன்னு நினைச்சேன்… என்ன ஆச்சு உடம்புக்கு? ஆர் யு ஓகே நௌவ்”

“ஹ்ம்ம். கொஞ்சம் டிஹைட்ரேட் (dehydrate) ஆயிட்டேன் லயா. அதான் சப்ளிமென்ட்ஸ் எடுத்துட்டு வந்தேன். நீ எப்படி இருக்க?” கேட்டபடி அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“ஹ்ம்ம் எனக்கென்ன. ஹாப்பி’யா இருக்கேன் கவிதா. என்ன… என்னால உங்களுக்குள்ள கொஞ்சம் குழப்பம்”

“நீ என்ன பண்ணுவ. நானே இப்போ தான் புரிஞ்சுக்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன். அகில் எல்லாம்… உனக்கு…” என கவிதா தயங்க…

“தெரியும். எல்லாம் லைஃப்’ல இருக்கிறதுதானே. அப்புறம் என்ன பண்றாரு உங்க ஆளு? நேத்துல இருந்து ஒரே ஃபீலிங்ஸ்” சிரித்தாள் லயா.

“தூங்கியாச்சு” என கவிதா சொல்லிக்கொண்டிருக்கும் போது லயாவின் மொபைல் அடித்தது.

கவிதாவிடம், “ஒரு நிமிஷம் விஜய் தான் கால் பண்றான்”, என்றுவிட்டு அட்டென்ட் செய்து ஸ்பீக்கர்’ரில் போட்டாள். கவிதா அங்கிருந்து எழ நினைக்க, லயா அவள் கை பிடித்து உட்காரச்சொன்னாள்.

விஜய் அத்தியாயம் ஒன்றில் லயாவுடன் வேலைப் பார்ப்பவனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.

“ஹே வாயாடி. குட் மார்னிங்!” அந்த பக்கத்திலிருந்து விஜய் பேச ஆரம்பித்தான்.

ல: “ஹே டுபுக்ஸ். என்ன வீக்எண்ட் அதுவுமா கால் பண்ணிருக்க!?”

வி: “நான் இன்னைக்கு துபாய் வரேன்டி”

ல: “வாட்? சொல்லவே இல்ல…”

வி: “மேடம் எங்க என்கிட்ட பேசுனீங்க. ரெண்டு நாள் ஆச்சு பேசி!”

ல: “சாரி டா! கொஞ்சம் வேற வேலையா இருந்தேன்” தயங்கி சொல்லிவிட்டு, “அப்புறம் என்ன திடீர்னு இங்க?”

வி: “என் கேர்ள் ஃபிரண்ட் பார்க்க வரேன்”

ல: “என்னது கேர்ள் ஃபிரண்ட்’டா? அது யாருடா எனக்கு தெரியாம?” கவிதாவைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே கேட்டாள்.

வி: “நான் வர்றது அவளுக்கே தெரியாதுடி” கவிதாவுக்கு கொஞ்சம் புரிந்தது. அவளும் புன்னகைத்தாள்.

விஜய் தொடர்ந்தான். “அவ பிரேக்அப் ஆன பீலிங்ஸ்ல இருக்கா போல… என்கிட்ட ரெண்டு நாளா பேசல. டெய்லி அவக்கூட பேசி பழகிட்டேனா… ஏதோ மிஸ் பண்றமாதிரி இருந்துச்சு. அதான் அந்த AJ இல்லனா என்ன… இந்த விஜய்’ய கன்சிடர் பண்ணு. மொதல்ல டேட் பண்ணுவோம்… பிடிச்சிருந்தா ப்ரொசீட் பண்ணுவோம்ன்னு சொல்லப்போறேன்”

அதைக் கேட்டு லயா புரிந்தும் புரியாமலும் அதிர்ந்தாள்!

7
4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved