maranthupo en maname1-262728

மறந்துபோ என் மனமே(1) – 26,27,28(Final)

அவ்வப்போது அவள் தடுத்தாலும் அவளுக்கு அது தேவைப்படுகிறது என்பதை உணர்ந்த ராம், அவள் காலருகே சென்றான்.

அவள் கால்களை மெதுவாக தேய்த்துவிட, அதை சற்றும் எதிர்பார்க்காத அவள் விறுக்கென்று கால்களை இழுத்தவாறே “ஐயோ ப்ளீஸ் நீங்க இதெல்லாம் பண்ணாதீங்க. என்கால போய் புடிச்சிட்டு” என்று சொல்ல “இதுல என்ன இருக்கு. கால காட்டு” என்றான்.

“இல்ல ஐம் ஒகே” என்று பற்கள் நடுங்கிக்கொண்டே சொல்ல “பாரு இன்னும் உனக்கு நடுக்கம் இருக்கு” என்று வலுக்கட்டாயமாக அவள் கால்களை பிடித்தான். அவனுடைய மென்மையான கைகளால் அவள் கால்களை சூடேற்ற, அவள் உடல் முழுக்க சூடேறியது.

உடலில் ஒருவகையான ரசாயன மாற்றத்தை உணர்ந்தவள், மனதில் ஏதேதோ தோன்ற “ஐம் ஒகே. ஹீட்டர் ஒர்க் ஆகா ஸ்டேட் ஆயிடுச்சுனு நினைக்கறேன்” என்றாள் கால்களை இழுத்தவாறே. அவளுடைய தயக்கத்தை உணர்த்த அவன் “ஹ்ம்ம் குட்” என்று அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டான்.

அவள் மறுபுறம் திரும்பி படுத்துகொண்டாள். அடிக்கடி அவளை பார்த்தவண்ணம் அவனுடைய சேரில் சாய்ந்து கண்மூடி பாடல் கேட்டுக்கொண்டு இருந்தான். சி

றிது நேரத்தில் அவள் எழ, அவன் கண்மூடியிருப்பதை பார்த்து தூங்கிவிட்டானோ என்று “ராம்” என எழுப்ப அவன் “என்னாச்சு? ஏதாச்சு வேணுமா” என்றான்.

“இப்படியே தூங்க போறீங்களா? நான் வேணா கீழ போய்டறேன் நீங்க படுத்துகோங்க. நாளைக்கி ஆபீஸ் வேற” என்றாள்.

“திரும்பவும் நீ நடுங்கிட்டு இருக்கவா? பக்கத்துல நான் இருந்தாலாவது” என்று விஷமத்துடன் கேட்க “சரி நான் இங்க படுத்துகிறேன் நீங்க போய் கீழ படுத்துகோங்க” என்றாள்.

“ஓ அப்படி… ஹ்ம்ம்… அப்போ உனக்கு உதவி வேணும்னா கீழ வருவியா” என்றான் மறுபடியும் அவளையே பார்த்துக்கொண்டு. என்ன சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு.

“இங்கயே படுத்துகோங்கனு சொன்னா தப்பா எடுத்துப்பாரோ” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது “மேடம் நான் இப்படியே தூங்கறேன் நீங்க படுங்க. திரும்ப நடுங்குது உங்களுக்கு” என்றான் நக்கலாக.

“இப்போகூட இங்க வந்து படுத்துகோங்கனு சொல்ல மாட்டேங்கறாளே” என்று நினைத்துக்கொண்டு மனதில் சிரித்துக்கொண்டான்.

“சரி… உங்களுக்கு ப்ரோப்லேம் இல்லனா இங்கயே படுத்துகோங்களேன்” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல “வேணாம் இது ரொம்ப சின்ன பெட். உனக்கு வசதியா இருக்குமான்னு தெரியல” என்றான்.

திரும்பவும் அவள் நடுங்க ப்ளாங்கெட் எடுத்து போர்த்திக்கொண்டு “பரவால்ல இங்கயே படுத்துகோங்க” என்று நடுங்கிக்கொண்டு சொன்னாள். “ஓகே உனக்கு பிரச்சனை இல்லனா எனக்கு ஒண்ணுமில்ல” என்று மற்றொரு ஓரத்தில் ஏறிக்கொண்டான் டேப் இயர் செட்டுடன்.

சிறிது நேரம் பாட்டு கேட்டுவிட்டு ஏதோ டேப்பில் (Tab) வீடியோ பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அந்தப்பக்கமாக படுத்திருந்தாள். திரும்பி படுத்தவள், அவன் டேப்பில்(tab) ஏதோ பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்தாள்.

அவள் அரவம் கேட்டு படுத்திருந்த அவனும் திரும்ப “ஏதாவது வேணுமா?” என்று கேட்டான். “நீங்க தூங்கலையா?”

“இன்னும் இல்ல, நீ தூங்கலாயா?” என்று அவன் கேட்க “தூக்கம் டிஸ்டர்ப் ஆயிடுச்சு. அதான். ஸ்லீப்பிங் பிள்(sleeping pill) போட்டுக்கறேனே” என்று சொல்ல “ஒன்னும் வேணாம் மூவி பாக்கறயா. தூக்கம் வந்துடும் சீக்கரம்” என்று அவன் கேட்டான்.

“என் போன் கீழ இருக்கு. பரவால்ல இருக்கட்டும்.” என்றாள். “நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று அவன் எழ முயற்சிக்க “இல்ல வேணாம் பரவால்ல” என்றாள்.

“சரி ஹொறர் மூவி (horror movie) ஒகே வா? அதான் நான் பாத்துட்டு இருக்கேன்” என்று சொல்ல “இல்ல வேண்டாம்” என்றாள் சட்டென. “என்ன பயமா?” என்று நக்கலாக கேட்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றாள் அவள் கண்களை உருட்டிக்கொண்டு.

“அப்போ பாரு” என்று அவன் சீண்ட “பயம்லாம் ஒன்னும் இல்ல. நானும் பாக்கறேன்” என்று ப்ளாங்கெட்டை நன்றாக போர்த்திக்கொண்டாள். அவன் ஒரு பக்க இயர் போன் அவளுக்கு கொடுத்து, சற்று அவள் அருகில் நெருங்கி வந்தான் அவள் பார்ப்பதற்கு.

அவளுக்கு கூச்சமாக இருந்தாலும் படம் பார்ப்பதற்காக ஒன்னும் சொல்ல வில்லை. படம் சற்று விறுவிறுப்புடன் செல்ல அவளுக்குள் பயம் எட்டிப்பார்த்தும் பயம் இல்லாதது போல் காட்டிக்கொண்டாள்.

ஒரு இடத்தில திடீரென ஏதோ பயங்கரமான காட்சி வர அவள் பயந்துகொண்டு அவன் கைக்கடியில் தலையை மறைத்துக்கொண்டாள்.

பாஸ் (Pause) போட்ட அவன் “ஹே பயந்துட்டயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, அவள் தலைநிமிர்ந்து “பயமா? எனக்கா? பயமெல்லாம் இல்ல தூக்கம் வந்துச்சு அதான்” என்று மழுப்பினாள்.

“சரி அப்போ தூங்கலாம்” என்று விளையாட்டாக அவன் சொல்ல “இல்ல இல்ல பாக்கலாம்” என்று திரும்ப தயாரானாள். சிரித்துக்கொண்டே ப்லே செய்தான். அவர்களின் நெருக்கம் அவர்கள் உணர்ந்தும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

திரும்ப ஒரு இடத்தில அவள் பயப்பட “இன்னைக்கு இந்த படம் வேணாம். உனக்கு ஆல்ரெடி முடியல. வேற நாள் பாக்கலாம்” என்று திரும்பி சொல்ல, அவள் அவன் மிக அருகில் இருந்தாள்.

அவனுடைய ஸ்பரிசம் அவள் மேல் பட, அவள் மூச்சில் தடுமாற்றம். அவள் அவன் கண்களையே பார்க்க அவன் கிரங்கிபோனான். மெதுவாக அவள் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்க அவள் கன்னங்கள் சிவந்தன.

Chapter 27::

வெட்கத்தில் தலை குனிந்தவளின் கன்னத்தை பற்றிக்கொண்டு ஒரு விரலால் வருடினான். அவள் நாணத்தில் கண்களை மூட அவன் கண்களில் முத்தமிட்டான். இருவரும் ஒன்றாகினர். அந்த இரவு அவளுக்கு குளிரை மறக்க செய்தது.

இருவரும் விடிந்தும் எழவில்லை. அவனுடைய போன் அடித்தவுடன், அவன் தூக்கம் களைந்து கண் விழித்தான். அவள் அவனருகில் ஒரே போர்வையில் அவனின் கையில் படுத்திருந்தாள்.

தூங்கும் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு, யார் போன் செய்தார்கள் என்று எடுத்து பார்க்க, மணி 10 காட்டியது. கூப்பிட்டது அவனுடைய மேனேஜர்.

மறுபடியும் அவரை அழைத்து அவன் இன்று விடுப்பு எடுத்துக்கொள்வதாக சொல்லிக்கொண்டிருக்கும் போது அவளும் அவன் பேசும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

அவன் அருகில் இருப்பதை பார்த்துவிட்டு சற்று விலக அவன் போன் வைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.

விலகும் அவளை இழுத்து கட்டிக்கொண்டு “இப்போ போச்சா குளிரெல்லாம்” என்று நமட்டு சிரிப்புடன் கேட்க “இப்போதைக்கு இல்ல” என்றாள் சிரித்துக்கொண்டே.

“திரும்ப எப்போ வரும்? உனக்கு வரல… எனக்கு வந்துடும்” என்றான் உள்அர்த்தத்துடன் அவளை பார்த்தவாறே. அவன் பிடியில் இருந்தவள் “வரும் வரும் அதையும் தான் பாப்போம்” என்று பிடியில் இருந்து விலகி எழுந்துகொண்டாள்.

அவன் அவளையே பார்க்க “டைம் ரொம்ப ஆச்சோ? லீவு போட்டுடீங்கபோல” என்று அவள் பேச்சு கொடுத்து அவன் பார்ப்பதை தடுக்க முயன்றாள்.

“அது ஒகே. உனக்கு எப்படி இருக்கு இப்போ?” என்று வைத்த கண் வாங்காமல் கேட்டான். “அப்படி பாக்காதீங்க இப்போ தான் உடம்பு கொஞ்சம் ஒகே வா இருக்கு” என்று அவள் நக்கலாக சொல்ல “அது பரவால்ல. ஐ நோ ஹொவ் டு ட்ரீட் யூ” என்று கண்ணடித்தபடி சொன்னான்.

“பார்ரா பெரிய டாக்டர் இவரு” என்று கிண்டலடித்துக்கொண்டு “நான் போய் ஃபிரெஷ் ஆயிடுறேன்” என்று எழுந்தாள். “ஹ்ம்ம் இன்னிக்கி உன் திங்ஸ் இங்க ஷிஃபிட் பண்ணிடலாம்” என்று அவன் சொல்ல சரி என்பதுபோல் தலையாடிகொண்டு அவள் வெளியே சென்றாள்.

அன்றைய பொழுது இருவரும் சந்தோஷமாக வீட்டில் கழித்தனர். அவள் உடலும் தேறியது.

——

அடுத்த நாள் காலை அவன் எப்பொழுதும் போல் கிளம்பி சென்றான் மதியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு. அவள் வேலைகளை முடித்துவிட்டு மொபைலில் நோண்டிக்கொண்டிருக்கும் போது காலிங் பெல் அடித்தது.

இன்னிக்கு சீக்கரம் வந்துட்டாரோ என்று நினைத்துக்கொண்டு கதவை திறந்தாள். வெளியில் ஒருவர் கையில் லெட்டர் கவர் வைத்துக்கொண்டு நின்றிருந்தார்.

“ஹலோ யூ காட் எ மெயில். ப்ளீஸ்” என்று அவளிடம் கொடுக்க அவள் பெற்றுக்கொண்டு அவர் காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டு உள்ளே வந்தாள்.

யாரு அனுப்பியிருப்பார்கள் என்று பார்க்க டு அட்ரஸில் அவள் பெயர். திருப்பி ஃபிரம் அட்ரஸ் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்தன!!!

Chapter 28::

அவள் ஃபிரம் அட்ரஸ் “சிகாகோ தமிழர் சங்கம்” என்று பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை திறந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுடைய டான்ஸ் பெர்ஃபோர்மென்ஸ்க்காக அழைப்பு வந்திருந்தது.

“க்ரிஷ் சொன்னாரு பட் இவளோ சீக்கிரம் நடக்கும்னு நினைக்கல” என்று சந்தோஷத்துடன் இருந்தவள் கதவை கூட பூட்ட வில்லை.

“ஹே பொண்டாட்டி கதவக்கூட மூடாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டுட்டே ராம் உள்ளே வந்தான்.

“ராம்ம்ம்ம்” என்று ஓடி போய் அவனை கட்டிக்கொள்ள “என்ன இப்போவே ஒரு மூட்ல இருக்க. திரும்ப நடுங்குதா? நான் வேணும்னா பாதி நாள் லீவு எடுத்துக்கவா?” என்று நக்கலாக கேட்க

“ஆமா வந்துட்டாலும். அதவிடுங்க. சி திஸ்” என்று லெட்டர் காட்டியவுடன் “வாவ்வ்வ்வ்” என்று அவன் அவளை தூக்கிக்கொண்டு சுத்தினான்.

“ஐயோ விடுங்க. வயசான காலத்துல மூச்சு புடிச்சுக்க போகுது” என்று அவள் கிண்டல் செய்தாள்.

“என்னது வயசாச்சா? எனக்கா? உன்ன…” என்று இறக்கி விட்டவன் இறுக கட்டிக்கொண்டான்.

“ஐயோ விடுங்க” என்று அவள் திமிர “மாட்டேன்” என்று இன்னும் கட்டி கொண்டான். “அப்போ இன்னிக்கும் ஃஹாப் டே லீவ் தான்” என்று நம்மட்டு சிரிப்புடன் கேட்க ஐம் ஒகே எனக்கு ட்ரீட் இப்போவே வேணும்” என்று கேட்டான்.

“ட்ரீட் லாம் இல்ல” என்று சிரித்துக்கொண்டே சொல்ல “நீ என்ன தர்றது நானே குடுத்துக்கறேன்” என்று அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டான்.

“பொண்டாட்டி எனக்கு ரொம்ப குளுருது மேல போலாமா” என்று அவன் கொஞ்சலாக கேட்க “எல்லாம் நைட்தான். வாங்க சாப்பிடலாம்” என்று அவள் சிரித்துக்கொண்டே அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்டாள்.

கிச்சனில் சாதம் எடுக்க சென்றவள் “க்ரிஷ் தமிழர் சங்கம்ல பேசறேன்னு சொன்னாரு பட் இவளோ சீக்கரம் நடக்கும்னு நினைக்கல” என்றாள். பதிலுக்கு “சூப்பர்ல” என்றான் அவளை பின்னே கட்டிக்கொண்டவாறே.

“பட் EAD வேணும்னு சொன்னாரு. இதெப்படி” என்று கேட்க “நீ இதுல எதுவும் எர்ன் பண்ணலல. ஜஸ்ட் யூ ஆர் கோயிங் டு பெர்ஃபோர்ம் அவங்களோட நிகழ்ச்சில. அதுனால இருக்கும்” என்றான்.

“அச்சோ விடுங்க” என்று அவன் பிடியினுள்ளே இருந்தவாறே திரும்ப “ட்ரீட்” என்றான் கண்ணடித்துக்கொண்டு. “விடமாட்டீங்களே” என்று அவள் கால்களை சற்று உயர்த்தி, அவன் இதழோடு அவள் இதழ் பதித்து முத்தமிட்டாள்.

அவன் அவளை விடுவார்போல் தெரியவில்லை. அவளே விடுவித்துக்கொண்டு “இப்போவாது வாங்க சாப்பிடுவோம்” என்று அவள் சொல்ல ஹ்ம்ம் என்று சலித்துக்கொண்டே சென்றான்.

இருவரும் சாப்பிட ஆரம்பிக்க சீக்கரம் உன்னோட சம்மதத்தை மெயில்ல அனுப்பிட்டு. யூ ஹாவ் காட் வெரி லெஸ் டைம். அன்ட் நீ ரெண்டு பெர்ஃபோர்மென்ஸ் பண்ணனும்னு போட்டுருக்கு. ப்ரூவ் யுவர்ஸெல்ப்(Prove yourself)” என்றான் பெருமிதமாக. அவள் ஒகே என்பது போல் புன்னகைத்தாள்.

——

“தேங்க் யூ சோ மச் க்ரிஷ்” என்றாள் அவனின் வீட்டிற்கு சென்று. “ஃபோர் வாட் Nandy?” என்று யோசனையாக அவன் கேட்க அவள் அந்த லெட்டரை நீட்டினாள்.

“ஹே நான் அவங்ககிட்ட சொன்னேன் அவ்ளோதான். பட் இவளோ சீக்கரம் ரியாக்ட் பண்ணுவாங்கனு நினைக்கல. மே பி உன்னோட டான்ஸ் பாத்திருப்பாங்க. ஆவ்ஸம்” என்று கைக்குலுக்கி கொண்டு சொன்னான்.

“நான் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள். “டோன்ட் மென்ஷன். யூ டிசெர்வ் திஸ். ஹாப்பி ஃபோர் யூ அன்ட் ராம்” என்றான் சிரித்துக்கொண்டே. ஆண்ட்டியிடம் காட்டி சந்தோஷப்பட்டாள் நந்தினி.

——-

சில தினங்கள் கழித்து அவள் பெர்ஃபோர்ம் பண்ணும் நாள் வந்தது. ஒரு ஞாயிறு காலை பொழுது.

காலையில் எப்போதும் போல் அவன் ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிரே அவள் அமர்ந்திருந்தாள்.

“ஒரே படபடப்பா இருக்கு. அங்க எவளோ பேர் வருவாங்க” என்று யோசித்துக்கொண்டே கேட்க “எதுக்கு நெர்வஸ்? எவளோ பேர் வந்தாலும் எனக்கு தெரியும் நீ நல்லா ஆடுவான்னு” என்றவன் அவளை பார்க்க சிறிது பயத்துடன் இருந்தாள்.

அவன் இறங்கி வந்து “டார்லிங் எதுக்கு இந்த பயம் உனக்கு? நான் இருக்கேன் உன்கூட. லாஸ்ட் டைம் மாதிரி இல்ல. ஒகே” என்றான். சிறியதாக புன்னகைத்தாள் தலைகுனிந்தவாறே.

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. நீ டான்ஸ் பண்ண உடனே தெரிஞ்சிப்ப” என்றான் அவள் முகத்தை தூக்கி அவள் கண்களை பார்த்து.

“என்ன சர்ப்ரைஸ்?” என்று அவள் கேட்க “இப்போ சொன்னா அதெப்படி சர்ப்ரைஸ் ஆகும். சாயங்காலம் தெரிஞ்சுடும்” என்றான். “போங்க” என்றாள் போலியாக சலித்துக்கொண்டு.

——-

அனைவரும் எதிர்பார்த்த அந்த மாலை. நந்தினி அவளுடைய டான்ஸ் காஸ்ட்யூம்யில் இருந்தாள் ராம் பரிசளித்த சலங்கை அணிந்துகொண்டு. பார்க்க கோவிலில் இருக்கும் சிலை போல இருந்தாள்.

அவள் ரெடி ஆனதை பார்த்த ராம் அவள் அருகில் வந்தான். கேசுவல் ஆக டிரஸ் செய்திருந்தான். டிஷர்ட் ஜாக்ஸ்ட் என்று சிம்பிள்ளாக.

“இன்னைக்கு எவளோ பேர் உன்னழகுல மயங்கி ப்ரொபோஸ் பண்ணப்போறாங்களோ” என்று கண்ணடித்துக்கொண்டு சொல்ல “இதுவேறயா?” என்றவள் கொஞ்சம் படபடப்புடன் இருந்தாள்.

“பொண்டாட்டி எதுக்கு இவளோ பதட்டம்?” என்று அவளை கட்டிக்கொள்ள “தெரில ராம் கொஞ்சம் பயமா இருக்கு எப்படி பண்ணப்போறேன் இவளோ பேர் முன்னாடி” னு சொன்ன அவளை விடுவித்து

“நான் இங்கயே உன்முன்னாடி தான் இருப்பேன். சோ, நோ பயம் ஒகே” என்று சொல்ல அவள் தலையசைத்தாள்.

அங்கு வந்த க்ரிஷ், “என்ன ஆச்சு? ஏன் Nandy ரொம்ப டல்லா இருக்கா?” என்று கேட்க “பயமா இருக்காம் டா” என்று ராம் சொல்ல

“ஹே Nandy, நாங்கெல்லாம் உன்னோட டான்ஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீர் அப் சீர் அப்” என்றான். அவள் “ஹ்ம்ம்” என்றாள்.

அவளுடைய பெர்ஃபோர்மென்ஸ் என்று சொன்னவுடன் அவள் மேடைக்கு சென்றாள். ராம் அவள் முன் நின்றிருந்தான்.

விக்ரம், பார்வதி, க்ரிஷ் என்று எல்லோரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். அரங்கத்தில் ஒரு 200 பேர் இருந்திருப்பார்கள்.

அவள் பாடல் வர நலினத்துடன் ஆடினாள். அவள் ஆட ஆட அரங்கமே மெய்சிலிர்த்து போய் பார்த்தது.

அவள் ஆடி முடிக்கும் போது பெரிய அப்லாஸ். அவள் ஆடி முடித்துவிட்டு பேக் ஸ்டேஜ் வரும்போது ராம் ஓடி வந்து அவளை கட்டி அணைத்தான் “சூப்பர் டார்லிங்” என்றவுடன் “நல்ல ஆடினேனா?” என்று அவள் கேட்க “வாட்? செம்ம அப்லாஸ். கேக்கல?” என்று அவளை விடுவித்துக்கொண்டு சொல்ல அவள் நிம்மதியானாள்.

க்ரிஷும் ஆண்ட்டியும் அங்கு வந்தவர்கள் “Nandy ரொம்ப அழகா டான்ஸ் ஆடின” என்று க்ரிஷ் சொல்ல “ஆமாடி. அன்னைக்கு ஆடுனதை விட இன்னைக்கு இன்னும் சூப்பர்” என்றார்.

“ஆமாம். ராம் இருக்கான்ல” என்றான் க்ரிஷ் கண்ணடித்துக்கொண்டு. முகம் சிவந்தவள்

“தேங்க்ஸ் ஆண்ட்டி தேங்க்ஸ் க்ரிஷ்” என்றாள். அப்போது ராம் மொபைல் அடித்தது. அவன் பார்த்துவிட்டு அவளிடம் நீட்ட யாரு என்பது போல் கண்களால் கேட்க “இந்தா” என்று குடுத்தான்.

போன் லைன்னில் அவள் அம்மா. அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் மிகவும் நேர்த்தியாக ஆடியதை சொல்லி பெருமிதப்பட்டு கொண்டார். அவள் கண்கள் கலங்க “தேங்க்ஸ் மா” என்று சொல்லும்போது ராமை பார்த்து தேங்க்ஸ் என்பது போல் கண்கலங்கினாள்.

அவன் அழக்கூடாது என்பதுபோல் செய்கை காட்டி அவளை ஆசுவாசப்படுத்தினான்.

போன் வைத்துவிட்டு, “நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று கண்கலங்க கம் ஆன். அழாத. இன்னொரு பெர்ஃபோர்மென்ஸ் இருக்கு. சீர் அப்” என்றான்.

அதை பார்த்த ஆண்ட்டி “உங்க ரெண்டுபேத்தயும் இப்படி பாக்க சந்தோஷமா இருக்கு” என்றார் மனத்திருப்தியுடன்.

அருகில் க்ரிஷ் சிரித்தவண்ணம் ஆமோதித்தான். ராமும் நந்தினியும் பதிலுக்கு புன்னைகையை உதிர்த்தனர்.

—-

அடுத்த சில மணிநேரத்தில் மற்றொரு நடனம் ஆடினாள். அவள் முடித்த பின் அவளிடம் நிறைய பேர் வந்து பாராட்டினர். அதில் ஒருவர் சிகாகோ தமிழர் சங்கத்தின் பொருளாளர்.

“யூ டான்ஸ்ட் சோ வெல்” என்று பாராட்ட அவள் அன்றி தெரிவித்தாள். “And ராம் ரொம்ப சிரத்தை எடுத்து இதுக்கு அர்ரேன்ஜ் பண்ணினான். அவன் பேசலனா இது நடந்திருக்குமான்னு தெரில” என்றார்.

அவள் கேட்டதை அவளால் நம்ப முடியவில்லை. “இதெல்லாம் அவர் செய்தாரா. ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே” என்று கண் கலங்க, அவர் தொடர்ந்தார் “உங்களுக்கு EAD கிடைச்சப்பறம், நீங்க ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலாம்” என்றவுடன் “தேங்க்ஸ் சர்” என்றாள்.

அவள் மனஓட்டத்தில் ராம்மை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் விடைபெற்று கொண்டு சென்றவுடன் அவள் ராம் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

அவன் வேறுஒருவருடன் பேசிக்கொண்டிருக்க இவளை பார்த்தவுடன் “எக்ஸ்க்யூஸ் மீ” கேட்டுவிட்டு இவளிடம் வந்தான். “பொண்டாட்டி ஹாப்பி?” என்று கேட்க

“நீங்க இந்த சர்ப்ரைஸ் பத்தி சொல்லவே இல்ல என்கிட்டே” என்று அவன் கண்களை பார்த்து சொல்ல, அவன் என்னவென்பது போல் பார்த்தான்.

“இந்த அரேஞ்மென்ட்ஸ்லாம் நீங்க தான் பண்ணீங்க” என்று சொல்ல

“ஓ அதுவா. யாரு பண்ணா என்ன. எண்ட் ஆஃப் தி டே என் பொண்டாட்டி ஹாப்பி. அவ்ளோதான்” என்று பதில் சொன்னான்.

அவள் அவனை பார்த்து கண்கலங்கி அணைத்துக்கொண்டாள் அருகில் இருப்பவர்களை பொருட்படுத்தாமல்!!!

**********பார்ட் 1 இத்துடன் நிறைவு பெற்றது. அடுத்து முடிவுரை 🙂 அதற்கு அடுத்து பார்ட் 2 ‘வில் பார்ப்போம் 🙂 ***************

  •  
  •  
Subscribe
Notify of
1 Comment
Inline Feedbacks
View all comments
Pappu Divya
1 month ago

Super duper romanceoda ending kalakkal preethi🤗

error: Content is protected !! ©All Rights Reserved
1
0
Would love your thoughts, please comment.x
()
x