marathupo en maname1 – Epilogue

மறந்துபோ என் மனமே(1) – எபிலாக்

மூன்று மாதங்கள் கழித்து:

எப்பொழுதும் போல் ஆபீஸ் முடிந்து ராம் வீட்டிற்கு வர நந்தினி சில சிறுவர் சிறுமியருக்கு நடனம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவனை பார்த்து பத்துநிமிடம் என்பது போல் கையசைக்க அவன் படி ஏறி சென்றான் மேலே.

சிறிது நேரம் கழித்து கீழே வந்தவன் அவள் இன்னும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்க அவன் கிச்சனுக்குள் சென்றான்.

அவன் ஏதோ செய்ய தயாராக, சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தவள் அவனை பார்த்து அவள் வருவதாக செய்கையில் சொல்ல, அவன் பரவாயில்லை என்பது போல் கண்ணசைத்தான்.

அவளுடைய அசைவுகள் அங்கும் இங்கும் பார்க்கும் கண்கள் என அவளை ரசித்தவனை பார்த்து என்ன என்பது போல் கண்களாலேயே அவள் கேட்க. தலையாட்டி ஒன்றும் இல்லை என்பதுபோல் செய்கை செய்தான் புன்னகைத்துக்கொண்டு.

டீ போட்டுகொண்டு மேலே சென்றான் ராம். அவள் அவசரமாக முடித்து அனைவரையும் அனுப்பிய பின் மேலே சென்றவள் “ராம்” என்று கூப்பிட்டுக்கொண்டே அறையினுள் சென்றாள்.

உள் சென்றவள் அவனை தேட அவன் பின் இருந்து அவளை கட்டிக்கொண்டான். “எவளோ நேரம் வெயிட் பண்றது. இன்னும் கொஞ்ச நேரம் கீழ இருந்துருந்தா உன்ன மேலயே தூக்கிட்டு வந்துருப்பேன்” என்றான் அவளை விடாமல்.

“இன்னிக்கி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணவே. அதான்” என்று திரும்பி அவனை பார்த்து ஐ ஹாவ் எ சர்ப்ரைஸ் ஃபோர் யூ” என்றாள் புருவத்தை ஏற்றி இறக்கி புன்னகையுடன்.

என்ன என்பது போல் பார்த்தவனிடம் இருந்து விலகி ஒரு கடிதம் நீட்டினாள். அவள் பிரித்து பார்க்கும் போது “எனக்கு சிகாகோ அகாடமி ஆப் ஆர்ட்ஸ்ல இருந்து ஆஃபர் வந்துருக்கு. டான்ஸ் சொல்லித்தர்ரதுக்கு” என்றாள்.

சந்தோஷமாக “Hooohoooo. சூப்பர். US’ ஓட ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆர்ட்ஸ் அகாடமி” என்று அவளை கட்டிக்கொண்டான். “நீங்க இல்லனா இது எதுவுமே இல்ல” என்று கண்கலங்கி சொல்ல, அவளை விடுவித்தவன் “நான் ஒன்னுமே செய்யல. இது எல்லாமே உன்னோட டாலெண்ட்னால கிடைச்சது” என்றான் அவள் கண்களை துடைத்து.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்து சென்றனர்!

————————-

“க்ரிஷ் எல்லாம் எடுத்து வெச்சுட்டயா? மெயின்னா அந்த ஃபூட் பேக்லாம் (food pack)?” என்று பார்வதி கேட்டுக்கொண்டே க்ரிஷ் அறைக்குள் வந்தார்.

“அதெல்லாம் வேணாம் பாரு. நான் தான் டூ வீக்ஸ் ஒன்ஸ் வரேன்னு சொல்றேன்ல. அஃப்டர்ரால் இங்க இருக்க Philly’கு போறேன். அதுக்கு இவளோ சீன்லாம் வேணாம் பாரு” என்று க்ரிஷ் சொல்ல, மகனின் தலையை செல்லமாக தட்டினார் பார்வதி.

ஃபிளடெல்ஃபியா (Philly) என்பது அமெரிக்காவில் உள்ள இன்னொரு மாகாணம்.

“சரி இந்த வாட்டி பேக் பண்ணிட்டேன் எடுத்துட்டு போ. அந்த Airbnb room எப்படி இருக்குமோ தெரில. தனியா வீடு எடுத்துக்கோன்னாலும் கேக்கபோறதில்ல” என்று பார்வதி புலம்ப ஆரம்பிக்க

“பாரு ப்ளீஸ். நான் உங்ககிட்ட முன்னமே சொன்னமாதிரி என்னோட ஏர்னிங்ல நான் சமாளிக்க கத்துக்கணும்னு தான் இந்த டெசிஷன் எடுத்திருக்கேன்னு” என்று சொல்லும்போது அங்கே வந்த விக்ரம் பார்வதியிடம்

“பாரு. அவனுக்கு தெரியும் என்னை செய்யணும்னு. லீவ் ஹிம்” என்று சொல்ல “தேங்க் யூ டாட். நான் கிளம்பறேன். அம்மா ஐ வில் பி ஒகே. உனக்கு வேணும்னா நான் அடுத்தவாரமே வரேன். இப்போ சிரி” என்று சொல்லி அவன் அம்மாவின் கன்னத்தை கிள்ளி

“லவ் யூ மா. பை டாட். நான் ராம் Nandy’ட்ட சொல்லிட்டு அப்படியே கிளம்பறேன்” என்று புறப்பட்டான் க்ரிஷ்.

ராம் வீட்டிற்கு சென்ற க்ரிஷ் சிறிதுநேரம் பேசிவிட்டு “Nandy டான்ஸ் டான்ஸ்னு ராம்ம மறந்துடாத. பாவம்” என்று சொல்ல

“நல்ல சொல்லுடா. இப்போல்லாம் என்ன மறந்துட்டாங்க மேடம்” என்றான் ராம்.

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் கால வாற ஆரம்பிச்சிட்டிங்க. க்ரிஷ் நீங்க கிளம்புங்க ஃபிலைட்க்கு நேரமாகுதுல” என்று சிரித்துக்கொண்டே நந்தினி சொல்ல, மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்று கொண்டு கிளம்பிய க்ரிஷ் சிறிது நேரத்தில் ஏர்போர்ட் சென்றடைந்தான்.

“நான் எதுக்காக போறேன்னு அம்மாகிட்ட கூட சொல்லல. அம்மா, அப்பா இன்னும் ஆபீஸ்ல என்ன போச்சொல்லிருக்காங்கனு நினைச்சுட்டு இருக்காங்க. பட் இது நானா வேணும்னு கேட்டு போற அஃபீசியல் ட்ரிப் டு மீட் சுஷி”

“எஸ், மத்த எல்லாருக்கும் அவ Sue ஆர் சுஷீலா ஆர் வாட்எவர். எனக்கு எப்பவுமே அவ சுஷி தான். அவள பார்க்கத்தான் இந்த பர்சனல் அண்ட் அஃபீசியல் ட்ரிப்” என்று நினைத்து சிரித்துக்கொண்டே பயணத்தை ஆரம்பித்த்தான்.

*********************************************************

பகுதி 2 :::: கிரிஷ் அண்ட் சுஷி !!!!

*********************************************************

  •  
  •  
Subscribe
Notify of
1 Comment
Inline Feedbacks
View all comments
Pappu Divya
1 month ago

Aahaa sema twisstaaa erukey… krish one side loveraaa sushiku🥰🤩

error: Content is protected !! ©All Rights Reserved
1
0
Would love your thoughts, please comment.x
()
x