தனிப்பெரும் துணையே – 20B

தனிப்பெரும் துணையே – 20B

“என்ன ஆச்சு இளா?” தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த செழியனை கேட்டாள்.

“ஒன்னுமில்ல இசை” என்றான் நிமிராமல். அவள் மறுபடியும் கேட்க, “அது வந்து… ஷார்ட் டேர்ம் இன்வெஸ்ட்மென்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல பணம் போட்டிருந்தேன். ஹை ரிட்டர்ன்ஸ் வித் ஹை ரிஸ்க். அது… அது வந்து லாஸ் ஆயிடுச்சு” என்றான் வெளிறிய முகத்துடன்.

“என்ன சொல்ற இளா? எப்போ இதெல்லாம் ஸ்டார்ட் பண்ண? எவ்ளோ இன்வெஸ்ட்மென்ட்?” கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டாள்.

அவன் தொகையை சொன்னவுடன் அதிர்ந்தாள்.

அவன் தொடர்ந்தான். “நம்ம மேரேஜ் ஃபிக்ஸ் ஆனப்ப இங்க வந்தேன்ல. அப்போ ஒரு டைம் இன்வெஸ்ட் பண்ணேன். ரிட்டர்ன்ஸ் அதிகமா வந்துச்சு. அதை வச்சுதான் கல்யாண செலவு, வீடு எல்லாம் ரெடி பண்ணேன்” என்றவன் சற்று நிறுத்தி,

“ரிட்டர்ன்ஸ் அதிகமா வரவும், அவசரத் தேவைக்கு சேவிங்ஸ்ல இருந்த பணத்தை இன்வெஸ்ட் பண்ணேன். எப்படியும் இந்த இன்வெஸ்ட்மென்ட்ல ரிட்டர்ன்ஸ் வரும்னு நெனச்சு, சேவிங்ஸ்ல மிச்சம் இருந்ததைதான் நேத்து பார்ட்டிக்கு ஸ்பென்ட் பண்ணேன். இப்போ கைல ரொம்ப கம்மியாதான் பணமிருக்கு” என்றான் தலை முடியை பிடித்து விட்டத்தைப் பார்த்து.

ப்ரியாவிற்கு அதிர்ச்சி. ‘அவ்வளவு தூரம் சொன்னேனே. பண விரயம் செய்ய வேண்டாம் என்று, எது சொல்லியும் கேட்காமல் எதெதுவோ வாங்கினானே’ என்பது மனதில் தோன்றினாலும், அவனின் இப்போதைய நிலை கவலையாக இருந்தது.

“அப்போவே குமார் அண்ணா சொன்னாரு. ஃபூலிஷ் டெசிஷன்னு. நான்தான் கேட்காம இன்வெஸ்ட் பண்ணேன்” அவனைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது அவளுக்கு.

“சரி விடு இளா. இனி கவனமா இருப்போம். நானும் சின்ன சின்ன வேல எடுத்து உனக்கு சப்போர்ட் பண்றேன்” என்றதும் சட்டென இருக்கையில் இருந்து எழுந்தான்.

அவன் கோபத்தில் ப்ரியா அதிர, “என்ன சொன்ன? நீ வேல பார்க்க போறியா? எதுக்கு? ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு. அப்புறம் வேலையெல்லாம் பார்த்துக்கலாம். நான் நினச்சா மூனு நாலு ப்ராஜெக்ட் ஒன்னு ரெண்டு மாசம். அவ்ளோதான். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு, “சீக்கிரம் ரெடியாகு காலேஜ்கு” என்றவன் கிளம்ப தயாரானான்.

ப்ரியாவிற்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு இந்த கோபம் என.

இருந்தும், ‘அவன் மனநிலையில் யாராக இருந்தாலும், பண இழப்பு, கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும். அவசர தேவை என்றால் வீட்டில் தந்த எஃப்டி உபயோகித்துக் கொள்ளலாம்’ என முடிவெடுத்து கல்லூரிக்குக் கிளம்பினாள்.

அன்றைய தினம் கல்லூரியில் கழித்தபின், இருவரும் சேர்ந்தே கிளம்பினார்கள்.

இதற்கு முன் பல சமயங்களில் இருவரும் பவய் ஏரிக்கரையின் நடைபாதையில் நடந்துள்ளனர். இன்று மிகவும் மாறுபட்ட உணர்வு இருவருக்குள். செழியனுக்கு காலை நிகழ்வு மனதுக்கு வருத்தமாக இருந்தாலும், ப்ரியாவுடன் இருப்பது அனைத்தையும் மறக்கச் செய்தது.

முன்பு, இருவருக்கும் இடையில் ஒருவர் நடந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்கும், இப்போது, காற்றுப்புகாத அளவிற்கு அவன் கைகளை பற்றிக்கொண்டு நடந்தாள் ப்ரியா.

எப்பொழுதும் அவள் பேசுவாள். ஆனால் இப்போதெல்லாம் அவன்தான் அதிகம் பேசுகிறான். அதுவும் தன் உடன் படிப்பவர்களைப் பற்றி, அவன் வேலையைப் பற்றி, ஆராய்ச்சி பற்றி என எதையெதையோ பேசிக்கொண்டே வந்தான்.

‘இவன் பேசவே மாட்டானா?’ என்று நினைத்த ப்ரியா, இப்போது அவன் பேசுவதை ரசித்துக்கொண்டே நடந்தாள்.

அன்று இரவு உணவுக்கு பின் அவன் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு படிக்கும் அறைக்குச் சென்றுவிட, ப்ரியாவிற்கு கொஞ்சம் வருத்தம். இருந்தும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து தூங்கிவிட்டாள்.

இதுவே அடுத்த ஓரிரு நாட்களுக்கு நடந்தது.

அதுவும் இரவு அவள் எழும்போதெல்லாம் அவன் தூங்காமல் எதையோ செய்துகொண்டே இருந்தான். விடிய விடிய வேலை பார்த்தாலும், துளியும் சோர்வு தெரியாமல் பகல் வேளையில் அவளுடன் நன்றாக இருந்தான்.

அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ‘பணம் இழந்ததால் இப்படி வேலை செய்கிறான். இதற்கு முடிவு என்ன?’ என நினைத்தாள்.

ஒரு நாள் இரவு உணவிற்கு பின், அவன் படிக்க உள்ளறைக்குச் சென்றுவிட, அவள் படுத்திருந்தாள்.

இந்த சில நாட்களாக தனியாக இருப்பது மிகவும் அலுப்பாகிப்போக, அவளும் உள்ளறைக்குச் சென்று, அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டே புத்தகத்தை எடுத்து கணினி முன் உட்கார்ந்தாள்.

அவள் வந்ததை பார்த்த செழியன், “என்ன பண்ற?” என கேட்க, “பார்த்தா தெரியல?” வேண்டுமென்றே கீபோர்ட்டை தட்டிக்காட்டினாள்.

அவனுக்கு சிரிப்பு. சில நிமிடங்கள் கழித்து அவளைப் பார்க்க, படிக்காமலும், எதுவும் செய்யாமலும் உட்கார்ந்திருந்தாள்.

“போய் படுக்கலாம்ல” அவன் கேட்க, “தனியா படுக்க போர் அடிக்குது” என்றாள் சலிப்புடன்.

அதை சொல்லிவிட்டாலும் அவள் மனதில், ‘இத்தன நாள் தனியாதானே படுத்த… இப்போ படுக்க என்னன்னு கேட்டா என்ன சொல்ல…’ என்று யோசிக்க, “சரி வா. நீ தூங்கறவர அங்க இருக்கேன்” என்று அவளை அழைத்துச்சென்றான்.

அவன் படுக்கையில் அவன் உட்கார்ந்து, ஸ்டடி லாம்ப் உதவியுடன் படிக்க, அதைப் பார்த்து கோபத்துடன், ‘இதுக்கு இவன் உள்ளயே படிக்கலாம்’ என நினைத்து ‘உச்’ கொட்டிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்தாள்.

அவன் மறுபடியும் என்ன ஆயிற்று என கேட்க, “நான் என்ன பண்ணா உனக்கென்ன? உள்ளயே போய் படி போ” சம்மந்தமே இல்லாமல் எரிந்து விழுந்தாள் ப்ரியா.

அவனுக்கு பின்புறம் காட்டி அவள் படுத்திருக்க, அவள் பின்னால் வந்து படுத்தான் செழியன். அவள் சந்தோஷத்துடன் திரும்பிப்பார்த்தாள்.

“வர வர உன் அக்கப்போர் தாங்க முடியல. எனக்கு தூக்கம் வரலன்னு படிச்சா… அதுக்கு கோபப்படற” என்று அவன் முறைக்க, அவள் அவன் புறம் திரும்பினாள்.

“எனக்கும்தான் தூக்கம் வரல. ஆனா படிக்கவும் தோனலயே” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. அதன் பொருள் புரிந்து அவன் சிரித்தான்.

“சிரிக்காத. எல்லாம் உன்னாலதான். சும்மா இல்லாம கண்டதையும் சொல்லி…” சற்று நிறுத்தி, “ஏதேதோ செய்து என் மைண்ட்ட ஸ்பாயில் பண்ணிட்ட” என்றாள் முறைத்துக்கொண்டு.

அவன் இன்னமும் சிரிக்க, “சிரிக்காத டா இடியட்” என்றதும் “என்னது டா வா?” இப்போது அவன் புன்னகைத்துக்கொண்டே முறைத்தான்.

“ஆமா வேணும்னா நீயும் டி சொல்லிக்கோ”

“டி யா? அதெல்லாம் எனக்கு வராது. நான் யாரையும் கூப்பிட்டதில்ல” என்றான்.

“ஹலோ உனக்கு என்னை மட்டும்தான் டின்னு கூப்பிட ரைட்ஸ் இருக்கு. நானும் இதுவரை, யாரையும் டி சொல்ல விட்டதில்லை. சரி அது இருக்கட்டும், இப்போ என்னை டி சொல்லு” என்றாள் மிரட்டும் தொனியில்.

“அதெல்லாம் வராது இசை” அவன் மறுக்க, அவளும் விடவில்லை. “ஐயோ எனக்கு வரல” என நிறுத்தி, “டி” என்றான். அவள் பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

“அவ்ளோதான், ‘எனக்கு வரலடி’ சேர்த்து சொன்னா முடிஞ்சது” என்றாள் கண்களில் குறும்பு மின்ன. அவன் போலியாக முறைத்தான்.

“சரி, இனி நான் டா சொல்றப்பெல்லாம் நீ டி சொல்லணும் ஒகே. நெக்ஸ்ட் லெஸன். நைட் ப்ரியாக்குட்டிக்கு தூக்கம் வர்றப்ப நீயும் வந்து அவக்கூட படுக்கணும். பாவம்ல ப்ரியா” அவள் முடிக்கும்முன்,

“யாரு குட்டி, நீயா?” அவன் இப்போது குறும்பாக கேட்டான்.

“குட்… நீயே நெக்ஸ்ட் பாயிண்ட் எடுத்து குடுத்துட்ட. என் அண்ணன் உன் அக்காவை பேபின்னு கூப்பிடுவார். நீ என்னை எப்படி கூப்பிடப்போற?” அவள் கேட்க, உடனே அவன், “இசை” என்றதும், “அது என் பேரு, பட் பெட் நேம்?” கேள்வியாக நிறுத்தினாள்.

அவன் அவள் கண்களை பார்த்து, அதில் மூழ்கி, “கண்ணழகி” என்றான் கண்கள் துளியும் அவளைவிட்டு அகலாமல்.

ப்ரியா ஒரு நொடி அவன் பதிலில் திகைத்து, பின் புன்னகையுடன், “ஹ்ம்ம் நல்லா இருக்கு ஆனா பெருசா இருக்கே. வேற?” வேண்டுமென்ற கேட்டாள் அவன் மனதில் இன்னமும் என்ன இருக்கிறது… என்ன சொல்லப்போகிறான் என்ற ஆவலுடன்.

இப்போது அவள் இதழ்களை பார்த்து, “வாயாடி” என்றான் குறும்புடன். அவள் சுட்டெரிக்கும் பார்வையால் அவனைப் பார்த்தாள்.

வேண்டுமென்றே அவளை சீண்ட, “வேற கொஸ்டின், இல்ல லெஸன் இருக்கா மேம்?” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டி.

“ஒன்னும் இல்ல நீ போ. வாயாடின்னு சொல்லிட்டல்ல. நான் இனி பேசவே மாட்டேன்” அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, “கண்டிப்பா போகணுமா?” அவன் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை.

“போயே ஆகணுமா இசை” அவன் குரலில் மாற்றம். மௌனமே பதில் அவளிடம்.

“ப்ச் சரி போறேன்” சலித்துக்கொண்டு அவன் திரும்ப, அவன் கையை பற்றி தடுத்தாள். அவன் முகத்தில் புன்னகை.

“என்னை கிண்டல் பண்ணல்ல, சமாதானம் பண்ணிட்டு போ” என்றாள் கோபமாக இருப்பது போல, ஆனால் மனதில் ‘என்ன செய்வான்’ என்ற ஆசையுடன்.

“எனக்குத் தெரிஞ்ச மாதிரி சமாதானம் செய்யவா இசை?” கண்கள் மின்ன கேட்டுக்கொண்டே, அவள் பதிலுக்காக காத்திருக்காமல், அவளை நெருங்கி அவள் நெற்றியில் சின்ன முத்தத்தை பதித்து, “இசை, இன்னும் நீ சமாதானம் ஆகலல்ல…” கேட்டவன் குரலில் அத்தனை குழைவு. அவள் முகத்தில் புன்னகை.

“இன்னும் சமாதானம் செய்யவா?” என்றவன் கண்கள் இப்போது அவள் இதழ்களை நோக்க, அவள் கண்களில் ஆசை அப்பட்டமாக தெரிந்தது. அது அவனுக்கும் புரிந்தது.

மெதுவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு, காதருகில், “இசை, ப்ரொடெக்ஷன்னோட ப்ரோசீட் பண்ணலாமா?” கேட்டான் ஆசையும் காதலும் கலந்த குரலுடன்.

முதலில் அந்த கேள்வி புரியாமல் அவள் யோசிக்க, பின் அது புரிந்ததும்… ‘ஹ்ம்ம்’ சொல்ல முற்பட்டாள். ஆனால் சத்தம் சுத்தமாக வரவில்லை.

அவள் மௌனத்தைப் பார்த்து, “சரி வேணாம்” கொஞ்சம் ஏமாற்றத்துடன் அவன் சொல்ல, “நாளைக்கு டேப்லெட் வாங்கிக்கறேன்” என்றாள் மெதுவாக.

“எதுக்கு டேப்லெட்? அதெல்லாம் வேணாம். நான் கூகுள் பண்ணி பார்த்தேன். டேப்லெட்ல நிறைய சைட் எஃபெக்ட்ஸ் இருக்கு. உன் உடம்பு ஸ்பாயில் ஆயிடும். நான் பார்த்துக்கறேன். நீ எதுவும் பண்ண வேணாம்.” என்றான் உடனே.

‘இதை கூகுள் வேறு செய்து பார்த்துள்ளானா?’ அவளுக்கு முதலில் தோன்றினாலும், அவன் கூறிய அடுத்த விஷயம் நெகிழச்செய்தது.

அவளுக்குத் தெரிந்து அவளின் தோழிகள் மாத்திரை எடுத்து பார்த்திருக்கிறாள். அதுவும் அவர்களுடைய பார்ட்னர்ஸ் எடுக்கச்சொன்னதாகக்கூட சொல்லியிருக்கிறார்கள் அவளிடம். அதை வைத்துத்தான் மாத்திரை போட்டுக்கொள்கிறேன் என்றாள் செழியனிடம்.

இதிலும் செழியன் வித்தியாசமாக தெரிந்தான் அவளுக்கு.

அவனை இறுகக்கட்டிக்கொண்டு, “லெட்ஸ் மேக் அவுட் டுமாரோ” என்றாள் கொஞ்சம் வெட்கத்துடன் அவன் முகம் பாராமல். அவன் முகத்தில் புன்னகை.

இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவர்கள் அறியாமல் உறங்கிப்போயிருந்தனர்.

அடுத்தநாள், இரவு நெருங்கும் போது, இருவரும் வீடு வந்து சேர, ப்ரியா உணவு தயார் செய்தாள். செழியன் வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.

அவள் மொபைல் பார்த்துக்கொண்டே சமையலில் ஈடுபட்டிருக்க, அதில் வந்த செய்தியை பார்த்து செழியனிடம் வந்தாள்.

“இளா. சிவா இருக்கான்ல. அவனோட கம்பெனி பெரிய கேமிங் கம்பெனி கூட டை அப் பண்ணிருக்காங்களாம். சூப்பர்ல. சான்ஸ்ஸே இல்ல” சந்தோஷத்துடன் அவள் பகிர்ந்துகொள்ள, அடுத்து அங்கு நடந்ததை பார்த்து, அதிர்ந்து நின்றாள் ப்ரியா.

4
1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved