Ennodu Nee Unnodu naan – 2

என்னோடு நீ உன்னோடு நான் – 2:

கடந்தகால நினைவுகள் சூழ்திருந்தவளை, லெப்டாபின் ஸ்கைப் கால் நிகழ்விற்கு கொண்டுவந்தது.

அவள் அலுவலகத்திலிருந்து மேனேஜர் அழைத்திருந்தார்.

நிலா: “ஹலோ ஷிவ்”

மேனேஜர்: “ஹே நிலா. உன் மொபைல்’ல ரீச் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா ஆஃப் ஆகியிருக்கு, என்ன ஆச்சு?”

நி: (மொபைல் சுவிட்ச் ஆப் செய்தது நினைவிற்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு) “ஓ சாரி ஷிவ். பேட்டரி முடுஞ்சது, சார்ஜ் போட்டுருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமா?”

மே: “ஐ ஹேவ் எ குட் நியூஸ். கூர்க் ஊட்டி ட்ரிப்’கு ஒரு வாரம் நம்ம டீம்’ம அனுப்ப மேனேஜ்மென்ட் முடிவு பண்ணிருக்கு”

நி: “ஓ வாவ்! சூப்பர் ஷிவ். என்ஜாய் பண்றோம். அவர் டீம் டிசெர்வ் இட்”

மே: “எஸ், உங்களோட குயிக் ட்ர்ன்அரௌண்ட் (quick turnaround) தான் காரணம். உங்க டீம் வர்க் சூப்பர். அதுனாலதான் கஸ்டமர்ஸ்’ட்ட இருந்து ரிகால் பண்ண கார்ஸ்… சீக்கிரம் ரெடி பண்ணி திருப்பி அனுப்பமுடிஞ்சது”

நி: “நீங்க டீம்’க்கு அப்ரிஷியேட் பண்ணி மெயில் பண்றீங்களா? அவங்க சந்தோஷ படுவாங்க”

மே: “கண்டிப்பா. ட்ரிப் பத்தியும் அனுப்பிடறேன். அப்பறம்… மொபைல் ஸ்விச் ஆன் பண்ண மறந்துடாத. உன் பாய் ஃபிரண்ட் கோவிச்சிக்க போறாரு” (பலத்த சிரிப்புடன்)

நி: “கண்டிப்பா ஷிவ்” என்றாள் முகத்தை சுளித்தபடி. 

‘அவன் போன் பண்ணதால தானே ஸ்விச் ஆஃப் பண்ணேன்’ என்று நினைத்துக்கொண்டு, அதை ஆன் செய்தவுடன்… ‘எட்டு மிஸ்ட் கால்ஸ் அவனிடம் இருந்து’ என்று காட்டியது. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

நம்பர் பிளாக் செய்யலாம் என்று பல முறை நினைத்தவள், அவன் வேறு புது புது எண்ணில் இருந்து அழைக்க நேரிடும்… அது இன்னமும் தொல்லை என்று அந்த எண்ணத்தை தவிர்த்தாள்.  

சில மணிநேரம் கழித்து… அவள் அம்மாவும் அப்பாவும் வேலை முடித்து திரும்பியிருந்தார்கள்.

அவர்களுக்கு கதவை திறந்துவிட்டு உள்ளே செல்ல நினைக்க, அவள் தந்தை “கொஞ்சம் அவளை இருக்க சொல்லு” மனைவியை பார்த்து சொன்னவுடன், நிலா நடையை நிறுத்திவிட்டு நின்றாள்… அவர் முகம் பாராமல்.

“இதுக்கு முன்னாடி பார்த்த இடத்துல திரும்பவும் அவங்க இறங்கி வந்து கேட்டுருக்காங்க. எனக்கென்னமோ இது தான் பொருத்தமான இடமோனு தோணுது” என்றவர்…

“நக்ஷத்ராவிற்கும் 25 வயசாயிடுச்சு. கொஞ்சம் உன் பொண்ண இந்த சம்மந்தத்துக்கு ஒத்துக்க சொல்லு. இல்லாட்டி நக்ஷத்ராவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான்” அவர் கோபமாக சொன்னவுடன், நிலாவும் கோபமாக ரூமிற்குள் சென்றாள்.

“என்னங்க இப்படி பேசறீங்க? அக்கா இருக்கப்ப தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?” என்று மனைவி கேட்க… “இப்படி பேசினாவாவது அவ கல்யாணத்த பண்ணிப்பான்னு தான் சொன்னேன். எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான். இவளால அவளும் காத்துட்டிருக்க வேண்டியதாயிருக்கு” என்றார் இறுக்கத்துடன்.

அவள் அம்மா, யாருக்கு பேசுவது என்று தெரியாமல் இதுபோல திண்டாடுவதே வழக்கம்.

“எனக்கு இந்த கல்யாணத்துலயெல்லாம் விருப்பமே போச்சு. அவளுக்கு பண்ணுனும்னா பண்ணுங்க”  என்றாள் நிலா அறைக்குள் வந்த தன் அம்மாவிடம்.

“ஏன்டி இப்படி பேசி நீயும் என்ன கஷ்டப்படுத்தற? உங்கப்பா ஒரு பக்கம் மூஞ்சதூக்கி வச்சுக்கறாரு நீ ஒரு பக்கம் இப்படி பேசற” என்று குறைபட்டுக்கொண்ட அம்மாவிடம்… 

“இங்க பாருமா… எது நடக்கணுமோ அது அந்தந்த நேரத்துல சரியா நடக்கும். ஒருவேளை அவளுக்கு அப்பறம் தான் எனக்கு கல்யாணம்னா அப்படியே நடக்கட்டும்” என்று நிறுத்திய நிலா, 

“அப்புறம் உன்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். எங்க ஆஃபீஸ்ல கூர்க் டூர் போறாங்க. என்னையும் வர சொல்லிருக்காங்க. ஒரு வாரத்துல வந்துடுவேன். நாளைக்கி கிளம்பறேன். அப்பாட்ட நான் பேசல. நீயே சொல்லிடு” என்று சொன்னவளிடம்,

“அப்பா அந்த சம்மந்தம் பத்தி கேட்டார்னா?” அவள் அம்மா இழுத்தார்.

“நான் வந்து முடிவை சொல்லிடறேனே மா ப்ளீஸ்” என்றாள் நிலா அப்போது அதில் இருந்து தப்பிக்க.

அவள் அம்மா வெளியே சென்றவுடன் ஷிவ்’க்கு கால் செய்தாள். “ஹாய் ஷிவ்” என்று ஆரம்பித்தவள் “நம்ம டூர் போறோம்ல” என்று சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

நிலாவின் அப்பாவும் ‘நிலா ஊருக்குப் போய்விட்டு வந்து முடிவு சொல்வாள்’ என்று அவளை அனுப்ப மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள்!

நைட் ஷிபிட் முடிந்து காலையில் வீடு வந்தாள் நிலாவின் தங்கை நக்ஷத்திரா.

“இங்க பாரு நிலா. அங்க போனப்புறம் கால் பண்ணு. ஒழுங்கா சாப்பிடு. நல்லா சந்தோஷமா இருந்துட்டு வா. ராவும் பகலுமா வேல பார்த்திருக்க. நிம்மதியா இருந்துட்டு வா” அவள் அம்மா அவளுக்கு அறிவுரை கூற…

“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் அது ஏதோ ஹில் ஸ்டேஷன் ரிசார்ட். மொபைல் சிக்னல்’லாம் எப்படி இருக்கும்னு தெரில. போன் பண்ணலைன்னா பதறாத. நாங்க டீமா தான் போறோம். சோ கவலைப்படாத” என்றாள் அவள் அம்மாவிடம்.

“எல்லாம் எடுத்து வச்சுட்டயா. எதுவும் மறக்கலயே” அவள் அம்மா அவளுடைய பைகளை பார்த்து கேட்க ” எஸ் மா எல்லாம் எடுத்துட்டேன். அப்பா வந்தா சொல்லிடு” என்றவள் தங்கையிடம்… “திரா பார்த்துக்கோடி. நான் வந்துடறேன் ஒரு வாரத்துல” என்றாள்.

“சரி நிலா. பார்த்து போய்ட்டு வா. ஆமா எப்படி போறீங்க?” என்று தங்கை கேட்க “இங்கேயிருந்து மைசூர்க்கு ஃபிலைட்ல. அங்கேயிருந்து குர்க்கு ரோட் ட்ரிப். நான் ட்ரெயின் பிடிச்சு ஏர்போர்ட் போய்டறேன். சரி வரேன் மா. பை திரா” என்று அம்மாவிடம் தங்கையிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.

ஒருவழியாக அப்பாவின் பேச்சில் இருந்து தப்பித்தது போல் இருந்தது அவளுக்கு. ஷிவ்வுக்கு போன் செய்து அப்டேட் செய்தாள்.

பல எண்ணங்களுடன் அந்த பயணத்தை தொடர்ந்தாள்.

சில மணி நேரத்தில் சென்றடைந்தவுடன், ஹோட்டலில் செக் இன் செய்த கையோடு  அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.

“அம்மா நான் வந்துட்டேன். வந்தது களைப்பா இருக்கு. நான் அப்புறமா கூப்பிடறேன்” என்று தகவலை சொல்லிவிட்டு போனை வைத்தாள்!

——

“டேய் கௌஷிக் நீ கொஞ்ச நேரம் ஃபிரியா?” என்று போனில் ஆதி கௌஷிக்கை அழைத்துப் பேச…  “சொல்லுடா” என்றான் கௌஷிக்.

“நான் ஒரு ட்ரிப் போலாம்னு இருக்கேன். ஒரு சின்ன பிரேக். அங்க எமர்ஜன்சி கேஸ் ஏதாச்சும்னா தீரன் கிட்ட உதவி கேளுங்க. அவன் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கான்” என்றான் தயங்கியவாறே.

“ஹ்ம்ம் பைரவி வரானு நீ கெளம்புறயா?” கேட்டான் கௌஷிக் கேள்வியுடன்.

“அதுவும் ஒரு காரணம். ஆனா எனக்கு வேலைல இருந்து ஒரு சின்ன பிரேக் கிடைச்சா நல்லா இருக்கும்னு இருக்கு. தொடர்ந்து வேல பார்க்கற மாதிரி தோணுது அதான்” என்றான் ஆதி.

“சரி எங்க போக பிளான் பண்ணிருக்க?” கௌஷிக் கேட்டதற்கு,

“நம்ம ட்ராவல் என்சைக்ளோபீடியா கிட்ட பேசணும். அவன் போன மாசம் ட்ரிப் போனேன்னு சொன்னான்” ஆதி சொல்ல… “சரி எப்போ கிளம்பர?” கேட்டான் கௌஷிக்.

“நாளைக்கு காலைல. நீ நைட் வரமாட்டல்ல… அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு கால் பண்ணேன்” என்றான்.

அதற்கு கௌஷிக், “ஆமாடா. ஜி கே கே ஹாஸ்பிடல்ல இன்னிக்கி நைட் ஆப்ரேஷன் இருக்கு. நாளைக்கி மதியம் வரைக்கும் அங்க தான் இருப்பேன். சரி… நீ எதையும் யோசிக்காம நிம்மதியா இருந்துட்டு வா” பேசிமுடித்து இருவரும் போனை வைத்தனர்.

கௌஷிக், ஜீவன் மற்றும் ப்ரித்வி ஆதியின் நண்பர்கள். ஜீவன் பல இடங்களுக்கு பயணம் செய்பவன். அவனை ட்ராவல் என்சைக்ளோபீடியா என்றே ஆதி அழைப்பான்.

கௌஷிகிடம் பேசியவுடன், ஆதி ஜீவனை அழைத்தான். ஜீவன்னிடம் எங்கு செல்லலாம் என்பதை தெரிந்துகொண்ட பின், அம்மாவிடம் ஊருக்கு போவதை மெசேஜ் மட்டும் செய்தான்.

அடுத்த நாள்!

எப்பொழுதும் ஷார்ட் ட்ரிப் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டான்.

அவனுடைய ரக் சேக்’கில் (rucksack) அனைத்தையும், அதன் இடங்களில் பேக் செய்து ஒருவழியாக தேவைப்பட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானான். 

அவன் அம்மாவிற்கு போன் செய்து கிளம்புவதை தெரியப்படுத்திய பின், அவனுக்கு தற்சமயம் மிகவும் தேவைப்படும் அந்த பயணத்தை தொடங்கினான் அவனுடைய ரேஞ் ரோவெரில்.

சில மைல் தூர பயணத்துக்கு பின் அவன் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு வந்தடைந்தான். ஃபிரெஷ் ஆகிட்டு சாப்பிட போகலாம் என்று இருந்தவனை கௌஷிக் அழைத்தான்.

“என்னடா ஆதி  ரீச் அயிட்டயா” – கௌஷிக் 

“எஸ் மேன். இப்போ தான்” – ஆதி 

“சரி பைரவி உன்ன கேட்ட என்ன சொல்றது?” – கௌஷிக் 

“டேய் அவளை பத்தி பேசி ஏன் கடுப்பேத்தற? ட்ரிப் போயிருக்கேன் வந்துடுவேன்னு சொல்லு. அவகிட்ட என் நம்பர் குடுத்துடாத… குடுத்த முடுஞ்ச நீ” என்றான் எரிச்சலாக.

“சரி சரி கோவப்படாத. நான் சமாளிக்கறேன்” என்று போனை கட் செய்தான் கௌஷிக்.

கொஞ்ச நேரத்தில் தயாரான ஆதி, ‘உள்ளூர் உணவு ட்ரை செய்யலாம்’ என நினைத்து, மொபைலை பார்த்தபடி, அவன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்ற பின்… ஒரு சிக்னல்லில் அவன் கார் நிற்க, கார் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தான்.

ஒரு 10 முதல் 13 வயது வரை இருக்கும் இரு சிறுமிகள். 

“அண்ணா ச்சால ஆகிளி. கொஞ்சம் ரூபா ஈவண்டி” என்று கேட்டனர். அவனுக்கு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று புரிந்தது ஆனால் என்ன சொன்னார்கள் என்று புரியவில்லை.

அவன் என்ன என்பதுபோல் சைகையில் கேட்க… அவர்கள் இருவரும் வயற்றில் கையை தேய்த்தார்கள் பசி என்பதுபோல்.

அவர்களை பார்க்க பாவமாக தோன்ற, வால்ட்’டில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

கொடுத்த பணத்தை அவர்கள் வாங்கிக்கொண்டு வராத புன்னகையை வரவழைத்து… புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு சென்றனர். 

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. சிறுமியர் இருவரும் ரோட்டோரம் சென்று அவர்களைப்போல் இன்னும் சில சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டனர்.

சிக்னல் திறக்கப்பட்டது கூட தெரியாமல் அவர்களையே பார்த்தபடி இருக்க… பின்னே இருந்த வண்டிகள் தந்த ஹார்ன் சத்தத்தில் நினைவுக்கு வந்தவன், வண்டியை கிளப்பினான்.

சிறிது தூரம் சென்றவனுக்கு அந்தக் காட்சி நெருடலாகவே இருந்தது. 

‘சின்ன சிறுமிகள். இந்த ஊர் போல தெரியவில்லை. வேறெங்கிருந்தோ வந்திருக்கிறார்கள். ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?’ என்று அவனுக்கு மனதில்பட்ட அடுத்த  நொடி, அடுத்த சிக்னலில் யூ டர்ன் எடுத்து காரை திருப்பினான்.

மறு பக்க ரோட்டிலிருந்து அந்தப்பக்கமிருந்த சிறுமிகளை பார்த்தவன், அங்கு நடப்பதை பார்த்து சற்று பதட்டமடைந்தான்.

அந்த சிறுமிகளை யாரோ சுமோ காரில் ஏற்றிக்கொண்டு, அந்த இடத்திலிருந்து புறப்பட இருந்தனர்.

ஆதி கண்களை ஆராய விட, அந்த சுமோ’வின் ஜன்னலினுள் ஒரு நடுத்தர வயது  பெண்மணி இருக்கையில் உட்கார்ந்திருக்க, முன்னே டிரைவர் ஒரு சிவப்பு கலர் சட்டை அணிந்திருந்தான்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி, அவன் காரை சீக்கிரம் திருப்பிக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தான்.

அவனால் காப்பற்ற முடியுமா??!!??

  •  
  •  
Subscribe
Notify of
10 Comments
Inline Feedbacks
View all comments
Padmini Vijayan
4 months ago

Super dear 😍 interesting da

Agatha Banu Thomas
4 months ago

Semmaya poguthu

Yogapriya Nagarajan
4 months ago

😲😲😲😲 semma

Priyanka Tamilarasan
4 months ago

Next epo

Abirami Praveen
3 months ago

Very nicely written 👏🏻👏🏻

error: Content is protected !! ©All Rights Reserved
10
0
Would love your thoughts, please comment.x
()
x