என்னுள் நீ வந்தாய் – 11

என்னுள் நீ வந்தாய் – 11

கவிதா நினைத்தது போல லயா அகிலனுடனே இருந்தாள்.

“உன்கூட வெர்க் பண்றாங்களே கவிதாயினி… அவ என்னோட மனைவி. அவக்கூட வந்திருந்தாரே அஜய், அவரத்தான் அவ லவ் பண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி”

“அவ முகத்த அவளோ பிரைட்’டா நான் பாத்ததே இல்ல தெரியுமா? அஜய் அவளோட இருந்ததுனாலயான்னு தெரியல… என்கூட இருக்கப்ப எப்பவும் சிடுசிடுன்னு கோபம், இல்ல வெறுப்பு, இல்ல சோகம்… எப்பவாச்சும் கொஞ்சமே கொஞ்சம் சிரிப்பா. அவ்ளோதான்”

“முன்னெல்லாம் எப்படியாச்சும் அவளுக்கு என்ன பிடிச்சுடும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா… அவ சந்தோஷம் என்கிட்ட இல்ல, அஜய்கிட்ட தானோன்னு… அஜய் கூட அவளைப் பாத்தப்ப தோணுச்சு” என எதிரில் இருந்த லயாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அகிலன்.

லயாவின் மனதில் முந்தைய தினம் கவிதாவை அஜயுடன் பார்த்தது… மற்றும் அகிலன் தன்னிடம் கவிதா சென்ற பின் பேசியது நினைவிற்கு வந்தது.

************

கவிதாவைப் பார்ட்டியில் பார்த்த பின், லயாவிடம் பேசிக்கொண்டிருந்தான் அகிலன்.

“நீ கொஞ்ச நாளா என்ன பாக்கற பார்வை, பேசற விதம், வேற மாதிரி இருக்கோன்னு தோணுச்சு லயா. சோ அத க்ளாரிஃபை (clarify) பண்ணிடலாம்ன்னு தான் உன்ன இன்னைக்கு இன்வைட் பண்ணேன் இந்தப் பார்ட்டிக்கு” என்றான் அகிலன் லயாவிடம்.

“அப்ப்பா. உன்கிட்ட எப்படி ஓபன் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். பட் நீயே கண்டுபிடிச்சுட்ட. க்ளவர்” என அவன் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள் லயா.

அவன் அதைப் பொருட்படுத்தாமல் “இதுக்கு முன்னாடி உன்ன காஃபி ஷாப்க்கு எதுக்குக் கூப்பிட்டேன்னு தெரியுமா?” அவளிடம் கேட்க “பர்த்டே விஷ் பண்ணத்தானே” என்றாள் சாதாரணமாக.

“அன்னைக்கு உன் பர்த்டே’னே நீ சொன்னதுக்கப்புறம் தான் எனக்குத் தெரியும். என்னோட ஸ்டாண்ட் இதுல என்னனு உனக்குப் புரியவைக்கத் தான் உன்ன வரச்சொன்னேன். பட்… உன் பர்த்டே தெரிஞ்சவுடனே உன்ன டிஸப்பாய்ண்ட் பண்ணவேணாம்ன்னு சொல்லல” என்றவுடன் லயாவின் முகம் மாறியது.

“டிஸப்பாய்ண்ட்… புரில” என நெற்றிசுருங்கக் கேட்க “ஹ்ம்ம்…” என சில நொடிகள் யோசித்தான்.

‘இப்போ வந்தாலே கவிதா… அவ என் மனைவி’ என்று சொன்னால் எங்கே இந்தப் பெண் கவிதாவிடம் போய் ஏதாவது பேசிவைத்தால் என்ன செய்வது என்றேண்ணியவன்

“லயா… ஐம் மேரிட் (I’m married). இதுக்கு முன்னாடி இத சொல்றதுக்கான டைம் அமையல. பட் இப்போ கண்டிப்பா சொல்லியே ஆகணும்ன்னு தோணுச்சு”

“எனக்கு தெரிஞ்சு I maintained distance. பட்… ஐம் சாரி. எனக்கு தெரியாம உனக்கு நான் ஏதாவது ஹோப் குடுத்துருந்தா…” என பொறுமையாகப் பேசினான் அகிலன்.

அவனுடனான அவளின் பேச்சு நண்பன் என்ற எல்லையை மீறிப் போகிறதோ என்றெண்ணி அவளிடம் பேசிவிடவேண்டும் என நினைத்தான் அகிலன். பேசியும் விட்டான்.

அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டாள். அவளால் அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அவனைப் பார்த்துச் சிலநாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. யாரையும் கவரும் ஆளுமையே, அவளை அவனிடம் தானாகச் சென்று பேசவைத்தது.

‘ஒரு பெண் தானாக வந்து பேசிப்பழகும்போது, கொஞ்சம் எல்லையை மீறினால் தவறென்ன’ என்றெண்ணும் பெரும்பாலான ஆண்களின் மத்தியில், அவனுடைய கண்ணியமான பேச்சு அவளை ஈர்த்தது.

அவன் பொழுபோக்குக்காக பேஸ்கெட் பால், ஷட்டில், டேபிள் டென்னிஸ் விளையாட வரும்போதெல்லாம் அவனைச் சென்று பார்க்க ஆரம்பித்தாள். ‘எதற்காக’ என்று அவன் கேட்டபோது…

“யாரையும் தெரியாத இந்த இடத்துல எனக்கு தெரிஞ்ச ஒரே ஆள் நீதான். மத்த டைம்லாம் ஒரே போர். நீயும் எப்போ வருவன்னு சொல்லமாட்டேங்கற… அதுதான்” என்பாள் சின்னப் பெண்ணைப்போல்.

இதுவரை மீறிப்போனால் ஒரு ஐந்து ஆறுமுறைப் பார்த்திருப்பாள் அவனை. அதற்குள் காதல். அது காதலா என்று யோசிக்கக்கூட இல்லை அவள். அவனைப் பிடிக்கும் அவ்வளவுதான்.

அவன் ‘தனக்குத் திருமணம் முடிந்தது’ என்று சொன்னதும்கூட, ‘அவன் வேண்டாம்’ என்று நினைக்கவில்லை. ‘உண்மை சொல்கிறானா இல்லை பொய் சொல்கிறானா?’ என்றே யோசித்தாள். அதைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டாள்.

அதற்காவே அகிலனை மறுபடியும் அழைத்தாள் பேசுவர்தற்கு. அவனும் ‘இதை வளரவிடவேண்டாம்’ என நினைத்து அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.

இதோ இப்போது லயா முன் அகிலன்… கவிதா அஐய்யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறான்…

“ஹ்ம்ம். சோ இன்னும் அஜயதான் கவிதா விரும்பறாங்கனு நினைக்கறயா?” லயா அகிலனைக் கேட்க…

“தெரியல. அவ முகத்துல தெரிஞ்ச அந்தத் தெளிவு… ஒரு கம்ப்ளீட்நெஸ் (completeness)… நான் இதுவர பாத்ததில்லை. ஒருவேளை அது அஜய் இருந்ததால இருந்துருக்கும். என்ன அந்த இடத்துல எதிர்பாக்கல போல. அதான் உடனே போய்ட்டா” என்றான் வருத்தமான குரலில்.

“அப்போ ஏன் இன்னமும் அவங்க நினைப்பாவே இருக்க? அவங்கள மறந்துட்டு Why don’t you move on?” எதார்த்தமாகக் கேட்டாள்.

அவன் முகத்தில் புன்னகை. “என் லைஃப்ல மொத வந்த பொண்ணும் அவ தான். கடைசியும் அவதான்”

“அவள மறக்க முடியும்னு தோணல. ஏன் அவளோ பிடிக்கும் கேட்டா என்கிட்டே பதில் இல்ல. சில விஷயங்கள் ஏன் நமக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனா சொல்லத்தெரியாத அளவுக்குப் பிடிக்கும். அதுபோலத் தான் அவளும்” முகத்தில் புன்னகையுடன் சொன்னான்.

“ஹாஹாஹா. டயலாக் அதர பழசு” என அவளும் சிரித்தாள்.

இதுதான் லயா. ஒருவன் தன்னை வேண்டாம் என்றால் ‘போடா. உனக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவு தான்’ என தட்டிவிட்டு போய்விடுவாள். ஃப்ரீ ஸ்பிரிடட் (free spirited) என்பார்களே அதுபோல்.

காதல் தோல்வி… அதனால் மனமுடைந்து… அழுகை, டிப்ரெஷன் என்றெல்லாம் அவள் அகராதியிலே கிடையாது. அதுபோலவே அகிலனின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும், அது இப்போது முடிந்ததும்… பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

திரிஷா இல்லைனா நயன்தாரா என்பது ஆண்களுக்கு மட்டுமா என்ன??? AJ இல்லைனா வேற RJ. அதுபோலத்தான் லயா.

“உன்கிட்ட அவளப்பத்தி எதுவும் சொல்லவேணாம்ன்னு நினச்சேன். நீ ஏதாச்சும் அவகிட்ட கேட்டுட்டா … அவ ஃபீல் பண்ணுவா. சோ ப்ளீஸ். அவகிட்ட இதப் பத்தி பேசாத… அவ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான்” லயாவிடம் கோரிக்கை வைத்தான்.

“ஹ்ம்ம். நானா எதுவும் அவங்கள கேட்க மாட்டேன். மத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறது எனக்கு பிடிக்காது. சோ டோன்ட் ஒரி”

“அப்புறம் ஒருவேளை அவங்க அஜய்’ன்னு போய்ட்டா அண்ட் உனக்கு என்மேல ஏதாச்சும் இன்டெரஸ்ட் வந்துச்சுன்னா சொல்லு… நான் அப்போ ஃபரீ’யா இருந்தா உன்ன கன்சிடர் பண்றேன்” என்றாள் விஷமமான புன்னகையுடன்.

சத்தமாகச் சிரித்தான் அகிலன்.

‘இப்படிச் சிரிச்சே கவுத்துடுவான். லயா உஷாரு’ என்று நினைத்தவள் “ஆல்ரைட். ரொம்ப லேட் ஆச்சு. நான் கிளம்பறேன். சீ யு” என்று அவனிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள் லயா…

அவள் சென்ற பின் தனது காரில் ஏறிய அகிலனுக்குக் கவிதாவின் ஞாபகங்கள் அலைமோதியது… அவளுடன் சென்ற கார் மற்றும் பைக் பயணங்கள்… அதை நினைக்கையில் எப்பொழுதும் போல ஒரு புன்னகை அவன் முகத்தில்…

———அன்று———

கல்யாணம் முடிந்து சில நாட்கள் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் கவிதாவும் அவனும் ஆஃபீஸுக்கு புறப்பட்டுக் கிளம்பும் நேரத்தில், அவன் அப்பா ஜெயராமன்…

“அகில். என் கார் ரெண்டு வாரமா ப்ராப்லம் பண்ணிட்டே இருந்துச்சு. சர்வீஸுக்கு விட்டுருக்கேன். நானும் அம்மாவும் இன்னைக்கு ஒரு கல்யாணத்துக்கு போகணும். உன் கார வெச்சுட்டு… நீங்க ரெண்டு பேரும் பைக்ல போய்டுங்க” என்றார்.

கவிதாவின் கண்கள் பீதியைக் காட்ட, அகிலன் கொஞ்சம் சந்தோஷப்பட்டாலும், அவளின் நிலைமையை நினைத்து “அப்பா. பைக்ல எப்படிப்பா… நான் வேணும்னா டாக்ஸி அரேன்ஞ் பண்றேன் உங்களுக்கு” என தயங்கி சொல்ல…

“ஏன்டா புருஷன் பொண்டாட்டி பைக்ல போறதுக்கு என்ன? அதுவும் எவ்ளோ பைக் வெச்சுருக்க… ஏன்மா நீ பைக்லலாம் போயிருக்கல்ல?” கொஞ்சம் கிண்டலாகக் கேட்டார் கவிதாவை பார்த்து.

அவள் என்ன சொல்லமுடியும். ‘போயிருக்கேன்’ என்பது போல் தலையசைத்தாள். “அப்புறம் என்னடா. கூட்டிட்டுப் போ” கட்டளையிட்டு முடித்தார்.

அவள் மனதில் ‘இவனோடவா பைக்ல???’ என்று தோன்ற… அவன் மனதில் ‘முதல் கார் பயணம் படு தோல்வி… டெய்லி காருக்கே பணம் குடுத்தா. இன்னைக்கு பைக். என்ன நடக்கப்போகுதோ…” என்று எண்ணினாலும்…

திருமணத்திற்குப் பிறகு அவளுடனான நெருக்கமானப் பயணம் என்று நினைத்து குதூகலமானது…

7
5
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved